
மெய்யடியார்களும் சூக்குமக் கற்பமும்
குரு வாழ்க குருவே துணை குருவே சரணம். எல்லாம் வல்ல எம் சற்குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் பொன்னடி திருவடிகளை தொட்டு வணங்கி, இப்பேச்சுரையை ஆரம்பிக்கின்றோம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் ! திருச்சிற்றம்பலம் !! திருச்சிற்றம்பலம் !!!
எல்லாம் வல்ல சித்தனாகிய சற்குருநாதன் சடபேதம், கர்ம பேதம் என்பவைகளுக்கு ஏற்ப விதிக்கும் சாதகங்களை – வேதாகம கட்டங்களை வழுவறத் தாங்கி ஒழுகிப் படியேற்றம் பெறுதலே மெய்யடியார்களின் இயல்பான குணமாகும். அதுவே மெய்யடியார்களின் அடிப்படை இலக்கணமுமாகும். குருநாதன் விதிக்கும் சாதக யோக விதிகளைப் பக்குவ சீவர்கள் வழுவறத் தாங்கி நின்று ஒழுகுவதுதான் அரிதினும் அரிதானச் செயலாகும். சீவன்முத்தராவதற்கு ஏற்ற பக்குவம் உடையார்களைத்தான் அளவில்லாத கர்மங்கள் சங்கேதமாய்த் திரண்டு இடையீடின்றி அலைக்கும் என்பது சத்தியம்.
உலகத்தில் அக்கர்மங்கள் அவர்களை எவ்வளவாக இழிவுபடுத்த வேண்டுமோ அவ்வளவாக இழிவுபடுத்தும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் அவ்வளவு துன்பங்களையும் குருவருளால் அனுபவித்துத் தொலைத்து பிராரத்த தனுவாகிய மாயா தனு (உடம்பு) மாறப் பெற்றப்பின், அவர்கள் அமல வடிவமானது பார்ப்பவர் கண்களுக்குத் தூலமாகவே தோன்றினும், அவர்கள் அவித்தை என்னும் மாயையை அடிமை கொண்டவர்களாதலால் நித்தியானந்தர்களாய் வருவார்கள்.
உலக குரவராய்ப் பல அருட்புதுமைகளால் உண்மையை நிலைநாட்டி அமலமடைந்து சூக்குமமான அவ் ஓ வடிவமும் காலக்கிரமத்தில் கரைய உலகு கண்டு போற்ற மறைந்து உண்மை முத்தியடைவார்கள். எத்தனையோ சென்மங்களுக்கு வித்தாயுள்ள கர்மங்களையெல்லாம் ஒரே சென்மத்தில் முற்றாக அனுபவித்துத் தொலைப்பது என்றால் முடியுமா? ஆதலால் குருநாதன் விதிப்படி வழுவற ஒழுகுங்கால் அவ்வினைகள் லேசமான அனுபவமாய் வந்து வந்து கழியும். அனுபவிக்காமல் குருவருளால் – குருவால் விதிக்கப்படும் பல கிரியைகளை வழுவற உஞற்றுவதால் நீக்கப்படுவனவும் உண்டு.
மெய்யடியாரென வந்த எம்பெருமக்களுள்ளே ஆற்றொணாத் துன்பம் அடையாமல் அடிமை அடைந்தவர் உண்டோ என்றால், இல்லை, இல்லை, இல்லை என்றுதான் சொல்ல முடியும். அம்மெய்யடியார்களைக் கண்டால் நாட்டார் நகைப்பார்கள் ; “இவன் ஓர் உன்மத்தன், நயவஞ்சகன், திருடன், தடியன், சூதன், சோம்பேறி, பிழைக்கும் வழியறியா மடையன்” எனவும் பிறவுமாகப் பலப்பல இழிந்த பேச்சுரைகளால் வசைபாடி நிற்பார்கள். அத்தகைய நாட்டார் அனைவரும் அவர்களது முட்டை அறிவுக்கு ஏற்பவே காரணம் கற்பித்துக் கொண்டு எவ் எவ்வகையால் இவனுக்குத் துன்பம் விளைக்க முடியுமோ, அவ் அவ்வகைகள் எல்லாவற்றாலும் கேடு விளைவிப்பார்கள். இவை அனைத்தையும் திருவருட் செயலெனக் கண்டு, பணி செய்து கிடத்தலே தலையாய அறம் எனத் துணிந்து இகலுக்கு எதிர்சாயும் இவன் பண்பைக் கண்டு மனம் சகியாதவராய் – பொறாமை மேலீட்டினால் இவனைக் குடைந்து குடைச்சல் தருவார்கள். இவ்வாறு அறியாமை மலிந்த மாக்களால் மெய்யடியார்கள் அடைந்த துன்பங்களை யாராலும் அளவிட முடியும்? இதை பிரமஞானியான மாணிக்கவாசகரின் திருவாயால் மலர்ந்த போற்றித் திருவகவலில் கேட்கலாம் வாருங்கள்.
ஆறு கோடி மாயா சத்திகள் (44)
வேறு வேறு தம் மாயைகள் தொடங்கின
ஆத்தம் ஆனார் அயலவர் கூடி
நாத்திகம் பேசி நாத்தழும்பு ஏறினர்
சுற்றம் என்னும் தொல்பசுக் குழாங்கள்
பற்றி அழைத்துப் பதறினர் பெருகவும்
விரதமே பரம் ஆக வேதியரும் (50)
சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்
சமய வாதிகள் தம்தம் மதங்களே
அமைவது ஆக அரற்றி மலைந்தனர்
மிண்டிய மாயா வாதம் என்னும்
சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து
உலோகாயதன் எனும் ஒள் திறல்பாம்பின்
கலா பேதத்த கடுவிடம் எய்தி
அதில் பெருமாயை எனைப்பல சூழவும்
தப்பாமே தாம் பிடித்தது சலியாத்
தழலது கண்ட மெழுகு அது போலத் (60)
தொழுது உளம் உருகி அழுது உடல் கம்பித்து
ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்
கொடிறும் பேதையும் கொண்டது விடாதுஎனும்
படியே ஆகி நல் இடைஅறா அன்பின்
பசுமரத்து ஆணி அறைந்தால் போலக்
கசிவது பெருகிக் கடல் என மறுகி
அகம் குழைந்து அனுகுலமாய் மெய் விதிர்த்துச்
சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப
நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை
பூண் அது ஆகக் கோணுதல் இன்றிச் (70)
சதிர் இழந்து அறிமால் கொண்டு சாரும்
கதியது பரமா அதிசயம் ஆகக்
கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்
மற்று ஓர் தெய்வம் கனவிலும் நினையாது
அருபரத்து ஒருவன் அவனியில் வந்து
குருபரன் ஆகி அருளிய பெருமையைச்
சிறுமை என்று இகழாதே திருவடி இணையை (77)
(திருவாசகம் – போற்றித் திருவகவல் 44-77)
இப்பாடலுக்கான மெய்ப்பொருள் விளக்கத்தைப் பார்க்கலாம் வாருங்கள். நன்றாக உள்வாங்கிக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இன்று மெய்ஞ்ஞானத்தை அறிந்து கொள்ளாத பலர் பொய்யையே மெய்யாகவும் இறையாகவும் கருதிக் கொண்டு அவர்களுக்கு இதுவரை என்னென்ன தெரியுமோ, அவைகளைத்தான் உண்மை ஞானம் என்று கூறிக் கொள்வதோடு மட்டுமல்லாமல், நம் கையையும் பற்றி அவர்கள்பக்கம் இழுத்துக் கொண்டு பொய்யையே மெய்யாகப் போதிக்கிறார்கள், சொல்கிறார்கள்.
அஞ்ஞானம் என்பது இருட்டு. மெய்ஞ்ஞானம் என்பது வெளிச்சம். வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவதைப் போலத்தான் இதைப் போன்ற மனிதர்களின் செயல்பாடுகள் இருக்கின்றன. நம் தேகத்தில் உயிர் எங்கே இருக்கிறது என்று சொல்லத் தெரியவில்லை. உயிரை அடைய என்ன தடைகள் உள்ளன என்பதைச் சொல்லத் தெரியவில்லை. உயிரை அடையவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் சத்திகள் எதுவென்று சொல்லத் தெரியவில்லை. உயிருக்கு என்ன தேவை என்பது தெரிந்திருக்கவில்லை. உடலுக்கு உணவு கொடுத்து உடலை வளர்க்கும் மனிதன் உயிருக்கு உணவு கொடுக்க முடியவில்லை. உயிருக்கான உணவு எதுவென்றாவது அவனுக்குத் தெரிந்திருக்கிறதா என்றால், அதுவும் சுத்தமாகத் தெரியவில்லை.
நம் ஜீவனை மறைப்பதும் விபரீத அறிவை உண்டாக்குதலும் அறிவைக் கெடுக்கும் செயல்பாடுகளும் பொய்க்கல்வியே மெய்யென்று போதிக்கும் தன்மையும் இதுதான் மதம், இதுதான் சாத்திரம், இதுதான் தந்திரம், இதுதான் ஞானம் என்று கானல் நீரைக் கண்டு தாகம் தீர்க்கும் நீர் என்று விளம்பிக் கொண்டிருப்பதும் இன்று எவ்வளவோ மலிந்துபோய் இருக்கின்றன.
மதங்களாலும் சாத்திரங்களாலும் தந்திரங்களாலும் புராணங்களினாலும் இதிகாசங்களினாலும் காண முடியாத பிரமஞானத்தை ஒரு ஞான சற்குரு ஒரு நொடியிலே தொட்டுக் காட்டி, மெய்யுணர்வை அனுபவமாக்கிக் கொடுத்து விடுவார். குருவிடம் பிரமஞானத்தைக் கற்கும்போது, சாதகன் இவைகளை உண்மை என்று சொல்லாமலே விளங்கிக் கொள்வான்.
பிரமஞானத்தை அனைத்து வேதங்களும் சொல்கிறது ; உபநிடதங்களும் சொல்கிறது ; ஞான நூல்களும் சொல்கிறது ; மதங்கள், சாத்திரங்கள் போன்றவை யெல்லாம் ஆதி முதல் இன்றுவரை சொல்லிக் கொண்டுதான் உள்ளது. ஆனால், மனிதனால் அவைகளை நேரடியாக உணர்ந்து கொள்ளவே முடியவில்லை. ஏன், என்ன காரணம்? அவை கூறும் விசயங்கள் மனிதனுக்கு அனுபவப்படாததே காரணம்.
அனுபவப்பட்டிருந்தால் தனக்குள்ளே தானே இறைவனைக் கண்டிருப்பான் ; தன்னை அறிந்திருப்பான் ; மெய்யைப் பிடித்திருப்பான். ஆனால், அவ்வாறு ஏதும் நடக்கவில்லையே.
கண்ணை மூடிக்கொண்டு இறைவனை வணங்குவது, பலிபீடத்தைத் தொட்டு வணங்குவது, கொடிக்கம்பத்தின் முன்னே சாஷ்டாங்கமாய் விழுந்து வணங்குவது, கற்பூரத் தீபத்தை கண்ணில் ஒற்றிக் கொள்வது, ஹடயோகப் பயிற்சிகளால் இறைவனை அடைந்துவிடலாம் என்று சொல்வதெல்லாம் எதற்காக என்று என்றைக்காவது நாம் சிந்தித்திருக்கிறோமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கிறது.
மடையனவன் சலத்தில்உள்ளே இருந்தேன் என்பான்
மாடுநிற்கும் யோகம்அல்ல வித்தையாச்சு
சடைவளர்த்தால் ஆவது என்ன கண்ணை மூடிச்
சாம்பவிஎன்றே உரைப்பார் தவம் இல்லார்கள் (அகத்தியர் ஞானச்சுருக்கம்)
தண்ணீருக்குள் யோக வித்தைகளைச் செய்பவர்களும் ஹடயோகங்களைச் செய்வோர்களும் செய்வதெல்லாம் யோகமில்லை, அது வித்தையும் இல்லை. மாடுகூட சதா நின்றுகொண்டேதான் இருக்கிறது, குதிரையும்தான். மாடும் குதிரையும் யோகம் செய்கிறதா? தலையில் சடாமுடி வளர்ப்பதும் கண்ணை மூடிக் கொண்டு சாம்பவி முத்திரை செய்கிறேன் என்று சொல்வதெல்லாம் தவமில்லை, அது வெளிவேடம், யோகத்திற்கு ஆகாது, வித்தையும் ஆகாது என்கிறார் அகத்தியச் சித்தர்.
இன்று உலகம் அப்படித்தானே இருக்கிறது. பொய்களுக்கும் வீண் விளம்பரங்களுக்கும் கேளிக்கைகளுக்கும் படாடோபங்களுக்கும் ஆடம்பரங்களுக்கும் ஆணவங்களுக்கும் மோகங்களுக்கும் மாயா வலைகளுக்கும்தான் இன்று கூட்டம் நிரம்பி வழிகிறது. இதையெல்லாம் பார்க்கும்போது, திருமூலர் சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது – குருடும் குருடும் சேர்ந்து குருட்டாட்டம் ஆடி குழியினில் விழுமாறே என்றது.
பல வேடங்களைத் தரித்துக் கொண்டு கண்ணை மூடி எவன் யோகம் செய்கிறேன், தியானம் செய்கிறேன், தவம் செய்கிறேன் என்று சொல்கிறானோ நிச்சயமாய் உணர்ந்து கொள்ளுங்கள், அவன் புலித்தோல் போர்த்திய பசு.
கண்ணை மூடினால் உள்ளே என்ன தெரியும், இருட்டு மட்டும்தான். கண்ணை மூடி நீங்கள் எதை செய்தாலும் அது செத்தவனுக்கு ஒப்பாகும் செயலன்றி வேறில்லை.
அதனால்தான் வள்ளற்பெருமான், “கலையுரைத்த கற்பனை எல்லாம் நிலை என கொண்டாடும் கண் மூடி பழக்கம் எல்லாம் மண் மூடி போக” எனத் தெளிவாக கூறிவிட்டார்.
இப்போது பல துறவிகள் என்போரும் தவசிகள் என்போரும் சாமியார்களும் தியானம், யோகம், தவம் கற்றுக் கொடுக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு, பெரிய அரசியல்வாதிகள், நடிகர், நடிகைகள், முக்கிய நபர்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு சாம்பவி யோகம், கேசரி யோகம், தன்னிலை மறக்கும் சிவராஜயோகம், நெற்றிக்கண் திறக்கும் யோகம், குண்டலினி யோகம் போன்ற கணக்கற்ற யோக, தியான முறைகளை சொல்லிக் கொடுத்து வருகிறார்கள். கற்றுக் கொள்ளும் ஒருவராவது ஞானம் அடைந்திருக்கிறார்களா என்று ஆய்வு செய்து பாருங்கள்.
சிவராத்திரியன்று விடிய விடிய ஆட்டம் வேறு போடுகிறார்கள். கேட்டால் ‘சிவனே சிவராத்திரி அன்று உமையவளோடு ஆனந்த நடனம் செய்து கொண்டிருக்கிறார். நாமும் அவ்வாறு ஆடினால் சிவத்தின் கருணையை, ஆசிர்வாதத்தை, அருளைப் பெறலாம்’ என்கிறார்கள். இங்குதான் லட்சக்கணக்கில் கூட்டம் அலை மோதிக் கொண்டு ஆட்டமா, பாட்டமா என்று கூத்தடித்துக் கொண்டு, சிவத்தை இவ்வுலகத்தை விட்டே ஓட ஓட விரட்டியடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிவன் ஆடல்வல்லான்தான். ஆனால், ஏன் அவர் சதா தவத்திலேயே இருந்து கொண்டிருக்கிறார்? பிரமஞானத் தவத்தில் தன்னை கரைத்துக் கொண்டு, எப்பொழுதும் தவமே தன் மூச்சு என்பதைப் போல அமர்ந்திருக்கிறாரே அதற்கு என்ன பொருள்? தான் சிவமாக வேண்டும் ; சிவத்தோடு கலக்க வேண்டும் ; சிவலோகம் செல்ல வேண்டும் ; சிவப்பதவி அடைய வேண்டும் என்றெல்லாம் சொல்கிறேமோ, அதற்கு இப்படி ஐம்புலன்களும் கதறக் கதற ஆடுவதுதான் அழகா? சொல்லுங்கள் பார்க்கலாம்.
சிவம் எப்படி, எங்கே இருக்கிறார்? இதுதான் கேள்வி. சிவம் ஒளியாக நம் உயிரொளிக்குள்ளே அமர்ந்திருக்கிறார், இதுதான் பதில். சிவம் ஒளியாக இருப்பதாக மாமறைகளும் பிரம ஞானிகளும் ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் சிவகணங்களும் தேவகணங்களும் சத்தியமிட்டு உரைக்கின்றார்களே. இதை நாமும் ஏற்றுக் கொண்டுள்ளோம். இறைவன் ஒளியாகத்தான் இருக்கிறார். ஆனால், அந்த இறை ஒளி நமக்குள்ளே நம் உயிருக்குள் இருப்பதை ஏன் அறியாமல் இதுவரை வாழ்ந்து வருகிறோம்?
சிவம் ஒளியாக இருக்கின்றார் என்றால், நாமும் ஒளியாகத்தானே இருக்க வேண்டும். சிவத்தின் குழந்தைகள்தானே அனைத்து உயிர்களும். தந்தையின் மரபணு அதன் குழந்தையிடம் கண்டிப்பாக இருந்துதானே ஆக வேண்டும். அப்படியென்றால், சிவத்தின் மரபணு நம் உடலில் இல்லாமல் போய்விடுமா? கண்டிப்பாக இருந்தேதான் தீரும்.
சிவம் ஒளி என்றால், நாமும் ஒளிதானே. ஒளியின் வடிவம்தானே. சிவத்தின் ஒளியைப் பிடிக்க வேண்டுமென்றால், நம் ஒளியைத்தானே பயன்படுத்திச் செல்ல வேண்டும். ஒரு ஒளியால்தான் மற்றொரு ஒளியினைத் தூண்டிப் பிரகாசிக்க வைக்க முடியும். என்றால் நம் ஒளி எது? அதுதான் நம் உயிர் ஒளி. அந்த உயிர் எங்கே இருக்கிறது? அதற்கான வழி எது? என்பதைத் தெரிந்து கொள்ளாமல், புறவுலகில் உடலசைவுகளால் நடனம் ஆடிக் கொண்டும், பாடிக் கொண்டும் இருந்தால் சிவயொளியை அடைந்திட முடியுமா, சொல்லுங்கள். கூடுவிட்டு ஆவி போய்விட்டால், கூடவே எதுதான் வரும் சொல்லுங்கள் அன்பர்களே. ஒன்றுமே வராது அல்லவா.
அமைதியின் வடிவம் சிவம் ; மௌனத்தின் வடிவம் சிவம் ; மோனத்தின் ரூபம் சிவம் ; ஒளியின் பிரவாகம் சிவம் ; ஒளியின் உயிர் சிவம் ; உயிரின் மூலம் சிவம் ; மூலத்தின் மூலம் சிவம் ; தவத்தின் மறுவுருவம் சிவம் ; ஞானத்தின் உச்சம் சிவம் ; பிரமத்தின் சத்தி சிவம் ; பிரமஞானத்தின் மூச்சு சிவம் ; நாதத்தின் பிறப்பிடம் சிவம் ; விந்துவின் இருப்பிடம் சிவம் ; நாதவிந்துவாக இருப்பதும் சிவம் ; பரப்பிரமமாக இருப்பதும் சிவம்.
இந்த உலகில் எது பிரமமில்லை? சிவமில்லை? எல்லாமே பிரமம்தான் ; சிவம்தான். சிவம் அல்லாத ஒரு பொருள், ஒரு உயிர் இவ்வுலகில் இதுவரை படைக்கப்படவே இல்லை. என்றால், நீங்களும் சிவம்தான் ; நாமும் சிவம்தான். மண்ணும் சிவம்தான் ; நீரும் சிவம்தான் ; காற்றும் சிவம்தான் ; நெருப்பும் சிவம்தான் ; ஆகாயமும் சிவம்தான் ; பஞ்சபூதங்களே சிவம்தான். வேறென்ன சொல்ல. இவ்வளவு மகிமைகளும் பெருமைகளும் இறைத் தன்மைகளும் கொண்ட சிவத்தை எப்படி நாம் கொண்டாட வேண்டும்?
அதனால்தான் திருமூலர் சிவத்தை எப்படிச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறார் பாருங்கள்.
சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார்இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே (தி.ம.05)
அவனை ஒழிய அமரரும் இல்லை
அவனன்றிச் செய்யும் அருந்தவம் இல்லை
அவனன்றி மூவரால் ஆவதும் ஒன்றில்லை
அவனன்றி ஊர்புகு மாறு அறியேனே (தி.ம.06)
மாணிக்கவாசகப் பெருமானும் திருவாசகத்தில்,
யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே. (திருவாசகம்)
சிவமே, எம் இறைவா, நானே பொய்யாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். என் இதயம்கூட பொய்யாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. என்னுடைய அன்புகூட பொய்யாகத்தான் உள்ளது. கர்மவினைகளால் பீடிக்கப்பட்டுள்ள நான் உன்னை நோக்கி அன்பு செலுத்தி, பத்தி செலுத்தி உள்ளுணர்வால் என் மனதை திருப்பிவிட்டு, இரு திருவடிகளில் உனைக் காண பெருவேட்கை கொண்டு மெய்யுணர்வில் நின்று அழ ஆரம்பித்துவிட்டால், எனக்குள்ளே உன்னை நான் பெற்றுவிடுவேனே. எம் இறைவா, சிவநேசா, என் தேனே, என் உயிரில் ஊறும் அமுதே, என் தித்திக்கும் கரும்பே, என் ஞானத் தெளிவே, என் தித்திக்கும் மானே, அருளே வடிவானவனே, அடியேனாகிய நான் உனை வந்து உன்னோடு கலந்து விடவேண்டுமே.
இதற்கு மேலும் சிவத்தை நோக்கி அன்பு பாராட்டி அழ முடியுமா நம்மால்? மாணிக்கவாசகர் மெய்யுணர்வால் அழுதார். சிவத்தைப் பெற்றார். சிவத்தை திருவாசகம் எழுதும்படி செய்தார். இல்லையில்லை, மாணிக்கவாசகரின் பிரமஞானம் கண்டு சிவமே, ‘வாதவூரா, நீ பாட, யாம் எழுத” என்று அமர்ந்து திருவாசகத்தை இறைவனே, சிவமே எழுதியதோடு மட்டுமல்லாமல் தான்தான் எழுதினோம் என்பதை பின்வரும் காலங்களில் உலக உயிர்கள் நம்பவேண்டும் என்பதற்காக, ‘அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று எழுதி கையொப்பமும் போட்டிருக்கிறார். இதைவிட வேறென்ன பெருமை திருவாசகத்திற்கு வேண்டும், சொல்லுங்கள். இப்பெருமை உலகில் உள்ள எந்த மொழிக்கும் கிடைக்காத பெருமை, சிறப்பு நம் தாய்த் தமிழுக்கு கிடைத்துள்ளது. இதிலிருந்து உலக மொழிகளுக்கெல்லாம் தாயும் தந்தையும் ஆன மொழி தமிழ்மொழி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ.
இதை ஏன் இங்கு சொல்ல வந்தோமென்றால், பத்தி, அன்பு, வழிபாடு என்பது இப்படி இருக்க வேண்டும். இறைவனை மெய்யுணர்வால் வழிபட வேண்டும். புற ஆட்டங்களால் அல்ல. புறத்தே நாம் செல்லச் செல்ல இறைவன் வெகு தொலைவில் போய்விடுவான். எப்படியென்றால், நமக்குள் இருக்கும் இறைவனைக் காணாமல், வெளியே எங்கோ தேடும்போது, நமக்கும் நாம் சென்றிருக்கும் தொலைவுக்கும் உள்ள தூரம் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொலைதூரமாக அமைந்து விடும். இதனால்தான் அனைத்துச் சித்தர்களும் ஞானிகளும் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் இறைவனைத் தேடாதீர்கள் என்றார்கள்.
சிவத்தை அடைய பிரமஞானத் தவம் ஒன்றுதான் மிக எளிமையான, வலிமையான, ஆத்மார்த்தமான ஞான வழி. மற்ற வழிகள் எல்லாம் தொலைதூர சுற்று வழிகள். இருக்கும் இடத்திலேயே இறைவனைக் காணலாம். நம் உயிருக்கும் இடத்திலேயே சிவத்தைக் காணலாம். உயிரைத் தேடி கண்டடைந்தால், சிவத்தைக் காண்பது எளிது. உயிரைக் காணாது சிவத்தைக் காணவே இயலாது. உயிரும் சிவமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்றன. உயிரிலிருந்து சிவத்தையோ, சிவத்திலிருந்து உயிரையோ யாராலும் பிரித்தறிய முடியாது. இரண்டுமே ஒன்றுதான், அது சிவம்தான்.
இந்த சிவத்தை மெய்யுணர்வால் வழிபட வேண்டுமே ஒழிய, புறவழி ஆட்டங்களால் அல்ல என்பதைத்தான் இங்கு நாம் சொல்ல வந்தது. சிவம் நடனம் ஆடுகின்றார் என்பது உண்மைதான். அது என்ன சிவநடனம் என்றால், மெய்யுணர்வுகளை திருவடிகளின் வழியாக அமுதக்காற்றின்மூலம் மெய்ப்பொருளாகிய கண்மணியின் ஊடாக அனுப்ப வேண்டும். ஆனால், அங்கிருக்கும் மூன்று கோட்டைகள் அமுதக்காற்றின் மூலம் வரும் மெய்யுணர்வுகளை தடுத்து நிறுத்திவிடும். இந்த கோட்டைகளை சுடராழித் தவத்தின் ஆயுதம்கொண்டு கடுமையாகத் தாக்க வேண்டும். அப்போதும் இந்தக் கோட்டைகள் அசைந்து கொடுக்காது. அப்போது சிவத்தின் அருளால் நமக்குள் ஒரு யுக்தி ஒன்று உருவாகும். அதுதான் முருகப்பெருமானின் யுத்த யுக்தி.
சுடராழித் தவத்தில் நாம் இரண்டு திருவடிகளில் இருக்கும் ஆயுதத்தைக் கொண்டு அக்கோட்டைகளைத் தாக்கிக் கொண்டிருப்போம். கோட்டை அசைந்து கொடுக்காது. அப்போது முருகப்பெருமானின் வேல் நமக்கு ஆயுதமாகக் கிடைக்கும். அதை அருள்வதும் சிவமே. நம் ஞானப் போருக்கு முருகனே முன்நின்று துணைபுரிவார். முருகப்பெருமானின் அருளால் அவர் கொடுத்த ஞான வேலான மூன்றாம் திருவடிகயைக் கொண்டு தாக்க முனைவோம். அப்போது முக்கோட்டைகளும் தனித்தனியாக வல்லமைகொண்டு நமக்கு போக்குக் காட்டிக் கொண்டிருக்கும்.
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று கோட்டைகளும் தனித்தனியாக இருக்கும்வரை இவைகளை அழிக்கவே முடியாது. இவை மூன்றும் பிரபஞ்ச இயக்கத்தின் காரணமாக ஒரு கோணப் புள்ளியில் ஒரே நேர்க்கோட்டில் அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக சேர்ந்திருக்கும் சூழல் வரும். அந்த சூழலை கண்ணும் கருத்துமாகக் காத்திருந்தால் உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தோமென்றால், அந்த ஒருசேர் நேர்க்கோட்டுப் புள்ளியை நம்மால் கண்டறிந்துவிட முடியும். அப்போதும் முருகப்பெருமான் நமக்கு கொடுத்த ஞான வேலை, அக்கோட்டைகளின் கண் இருக்கும் இலக்கை நோக்கி எறிந்துத் தாக்க வேண்டும்.
ஏனென்றால், அக்கோட்டைகளின் உயிர் அதன் கண்களில்தான் அமைந்திருக்கும். அக்கோட்டைகளின் கண்ணைத் தாக்கி அழிக்கும்போது, அங்கே ஞானத்திற்கு தடையாக இருக்கும் திரைகள் மளமளவென்று விலக ஆரம்பிக்கும். அந்த ஒவ்வொரு விலகலின்போது, திரைக்குப் பின்னால் இருக்கும் உயிரின் ஒளியையும் அதற்குள் இருக்கும் சிவத்தின் ஒளியையும் கண்ணாரக் காண முடியும். அவ்வாறு திரை விலகலின்போது, பார்க்கப்படும் ஒளியானது விலகல் பெரிதாக, பெரிதாக அந்த ஒளியும் பெரிதாகிக் கொண்டே வருவதைக் காண முடியும்.
அப்போது அந்த உயிரொளியானது அமுதக்காற்று படப்பட அசைந்து கொடுத்து அழகாக வளைந்து கொண்டு காட்சியளிக்கும். இதைப் பார்ப்பதற்கு யாரோ ஒளிதேகத்தோடு ஆடுவதைப் போல இருக்கும். சிவம் எப்போதும் செம்மை நிறத்தோடுதான் இருப்பார். காரணம் அவர் ஒளியாக இருப்பதினால். ஒளியின் நிறம் செம்மை என்பதால், சிவமும் செம்மேனியாகத் தான் காட்சியளிப்பார். இந்த சிவயொளியோடு அமுதக்காற்று ஒன்றிணையும்போது, சிவயொளி மேலும் மேலும் வளைந்து, நெளிந்து, கீழ் மேலாக ஆடிக் கொண்டே இருக்கும்.
இதைத்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானிகளும் ரிஷிகளும் முனிவர்களும் கண்டு, கண்டு பேரின்பத்தில் திளைக்க ஆரம்பித்தார்கள். இந்த சிவயொளியை கண்ணாரப் பார்க்கும்போது, பேரின்ப மெய்யுணர்வுகள் நம் தேகத்தை – ஐம்புலன்களை உச்சக்கட்ட மயிர்க்கூச்செறியும் பரவசத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும். இதை எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ சொல்லிவிட முடியாது. இந்த சிவானுபவ மெய்யுணர்வுகளை அனுபவத்தால் மட்டுமே உள்ளது உள்ளபடி உணர்ந்திட முடியும். எம் பிரமஞானப் பொற்சபை மாணவர்கள் இதை நித்தமும் அனுபவித்துக் கொண்டு தவத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்த ஒளியின் அசைவுகள்தான் நடனம், செவ்வொளி அசைவுகள்தான் சிவநடனம். இவ்வாறு பிரமஞானத் தவத்தால் சுடராழி யுக்தியைக் கொண்டு சிவத்தைக் கண்டு மெய்யுணர்வுகளால் உயிருக்குள் ஆடித் திளைக்க வேண்டுமே தவிர, புறவெளியில் புறவழிபாட்டில் ஆடி தேகத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. இது சிவனை வழிபடும் முறையல்ல, இதுவெல்லாம் புறமார்க்கம். அக மார்க்கம் ஒன்றே அகத்தில் இருக்கும் ஈசனைக் காண வழி. அகத்தில் ஈசன் இருப்பதால்தான் அவனுக்கு அகத்தீசன் என்று பெயர். புறஈசன் என்று இறைவன் அழைக்கப்படுவதில்லை.
எந்தவித உணர்வுகளையும் மெய்யால் உணரப்பட வேண்டும் என்பதுதான் ஞானத்தை அடைவதற்காக சத்திய வழி. மெய் என்பது உடலல்ல, அது நம் உயிர். உயிர்தான் மெய். மற்றெல்லாம் பொய். உயிராகிய மெய் இருப்பதால்தான் இந்த உடலுக்கு மெய்யுடம்பு என்ற பெயர். உடலை விட்டு உயிர் போன பின்பு, இது பொய்யுடம்பு என்ற பெயரெடுக்கிறது. இதிலிருந்தே மெய் எது? பொய் எது? என்பதை நாம் பகுத்துணர வேண்டும்.
எனவே, இனிவரும் ஒவ்வொரு சிவராத்திரி காலங்களில் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானிகளும் மாணிக்கவாசகரும் சொன்னதைப் போல, நாம் அனைவரும் பிரமஞானத் தவத்தை சிவத்தைப் போல செய்து, திருவடிகளின் மெய்ப்பொருளால் சிவப் பரம்பொருளைக் கண்டடைந்து பரிபூரண பிரமஞானம் பெற்று சிவத்தோடு ஒளியாக கலந்துவிட வேண்டும் என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொள்கின்றேன்.
பிரமஞானத் தவம் என்பது எமக்கோ ஒரு சாராருக்கோ உரிமையுடைத்து அல்ல. நம் தமிழ்இனங்கள் அனைவருக்கும் சொந்தமான, உரிமையுடையதான நம் முப்பாட்டன்களின் சொத்துதான் இந்த பிரமஞானத் தவம். அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள். பரிபூரண பிரம ஞானத்தை அடைந்திடுங்கள். சிவமாகவே மாறிடுங்கள். இதுவல்லால் யாம் வேறொன்றும் உங்களிடம் யாசிக்கவில்லை. நம் தமிழ் இறைநெறி இதுவொன்றே. நம் தமிழைக் காக்க, தமிழ் நெறியைக் காட்ட, இத் தவநெறியை உலகெங்கும் பறைசாற்ற நீங்கள் எல்லோரும் இத்தவத்திற்குள் வரவேண்டும் என்றும் வெற்றிநிலையைப் பெறவேண்டும் என்றும் உலக மக்களுக்கு சிறந்த ஞான வழிகாட்டியாக இருக்க வேண்டும் இங்கே உங்கள்முன் சிரந்தாழ்த்தி திருவடிகளால் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றோம். குருவருளும் திருவருளும் இதற்கு துணைபுரிவதாக !
பொய்யான வழிகளைத்தான் மெய் என்றும் சத்தியம் என்றும் பொய்யை மெய்யைப் போல சாத்திரங்களில் காட்டி வருகிறார்கள். ஞான நூல்களை குருமுகாந்திரம் கற்றுக் கொண்டு வரும்போது, இதன் உண்மையை நீங்கள் கண்டுணரலாம். பிரமஞானத் தவத்தின் முதல்நிலையைக் கடந்து விட்டவர்கள் சாத்திரங்களின் பொய் முகத்தை நன்றாக கண்டுவிடுவார்கள். இதைத்தான், “சரதம் ஆகவே சாத்திரம் காட்டினர்” என்றார்.
உங்களுக்குள் ஞான அனுபவங்கள் உண்டாகாவிட்டால், நூல்கள் சொல்லும் ஞான ரகசியங்கள் பிடிபடாது போய்விடும். இதன் காரணமாக மெய்யை அறிந்திடாது பொய்யை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவீர்கள். இன்றைய கோயில் திருவிழாக்கள் அனைத்தும் இதைத்தான் காட்டுகின்றன. மெய்யை காட்டுவதற்காக உவமைகளை உதாரணமாகச் சொல்லி வைத்தார்கள் நம் ஞானிகள். அதன் மெய்யை உணர்ந்திடாமல், உவமைகளையே மெய்யென்று நம்பிக்கொண்டு மெய்ப்பொருளை விட்டுவிட்டு உவமைக் கதைகளுக்காக விழா நடத்துகிறார்கள், இன்றைய சமயவாதிகளும் மதவாதிகளும். இதில் அவர்களுக்குள் தம் சமயம்தான் பெரிது, தன் மதம்தான் பெரிது என்று கூச்சலிட்டுச் சண்டையிட்டுக் கொள்கிறார்கள். இதைத்தான், “சமய வாதிகள் தம்தம் தங்களே, அமைவது ஆக அரற்றி மலைந்தனர்” என்றார்.
மேலும், பெரும் வாய்க்கொழுப்பினால் மதவாதிகளுக்கும் சமயவாதிகளுக்கும் இடையில் மிகப்பெரும் இருட்டானது சூறாவளிக் காற்றாக சுழன்று, சுழன்று அடித்து சுத்தப் பிரமத்தை மாயை எனும் திரை மறைத்துவிடுகிறது. மனிதம் பிரமஞானத்தைப் பெற்று மாயா மலங்களைத் தாண்டி இறை ஆன்மாவோடு பரிபூரணமாக கலந்துவிட வேண்டும். இதைத்தான், “மிண்டிய மாயா வாதம் என்னும் சண்ட மாருதம் சுழிந்து அடித்துத் தாஅர்த்து” என்றார்.
இங்கு மாணிக்கவாசகர் உலோகாயதம் என்ற மதத்தை கொடி நஞ்சுள்ள பாம்பாகக் கூறுகிறார். யாரெல்லாம் உலோகாயதத்தின்கீழ் வருவார்கள் என்றால், இறைவனை மறுத்து, ஆன்மாவை வெறுத்து, கன்மத்தை ஒழித்து பெண்களிடம் கிடைக்கும் இன்பம்தான் வேதம், பரமசுகம் என்று சொல்லிக் கொண்டு அரற்றித் திரிபவர்கள். இவர்கள் எல்லாம் கொடிய பாம்பினும் மோசமானவர்கள். பாம்புக்கு பால் வார்த்தால், அது நஞ்சை கக்காமல், கொத்தாமல் போய்விடுமா என்ன, சொல்லுங்கள். இதைத்தான், “உலோகாயதம் எனும் ஒள்திறப்பாம்பின் கலா பேதத்த கடுவிடம் எய்தி” என்றார்.
இப்படிப்பட்ட மோசமான மதவாதிகளாலும் சமயவாதிகளாலும் தான் இப்பிரபஞ்சத்தில் பெருமாயையானது மனித உயிர்களை முற்றாகச் சூழ்ந்து கொண்டு அதிலிருந்து தப்பவிடாமல் நெருப்பில் மாட்டிக் கொண்டாக மெழுகுகாக மனித குலம் தினம்தினம் செத்துக் கொண்டிருக்கிறது என்பதைத்தான், “அதில் பெருமாயை எனைப்பல சூழவும், தப்பாமே தாம் பிடித்தது சலியாத், தழலது கண்ட மெழுகு அதுபோல” என்றார்.
தொழுது என்றால் வணங்குதல் என்று பொருள். இறைவனைக் காண தொழுகை என்ற பிரார்த்தனை நமது இஸ்லாமிய சகோதரர்கள் தினம் ஐவேளைகளில் செய்து வருகிறார்கள். அந்த தொழுவதில் உள்ளம் உருகியிருக்க வேண்டும், கண்ணீர் பெருகி அழுதிருக்க வேண்டும். உடல் விருவிருத்து பரவசம் அடைந்திருக்க வேண்டும். பிரமஞானத் தவத்தால் இறைவனை தொழும்போது, கண்களிலிருந்து கண்ணீராக ஊற்றாகப் பெருகி உடம்பையே நனைத்துவிடும். உள்ளம் அழுவதினால் பரவசம் கொள்வதினால் கண்ணீர் பெருகிவரும் செயல் நடைபெற ஆரம்பிக்கும். கண்ணீர் பெருகும்போது உடல் பரவச நிலையை அடையும். அப்போது மூன்றாவது கண் உங்களுக்குள் விழிப்புநிலை அடைந்து கொண்டு சில ஞானக் காட்சிகளைக் காட்டிக் கொண்டிருக்கும். இதைக் காணும் சாதகன் பேரின்பப் பரவத்தால் ஆடுவான், கூச்சலிடுவான், தசவித நாதங்களை எழுப்புவான், அங்கும் இங்கும் ஓடி பிராண, அபானக் கலைகளை உடலெங்கும் வியாபிக்கச் செய்து கொண்டிருப்பான் என்பதைத்தான், “தொழுது உளமுருகி அழுது உடல் கம்பித்து, ஆடியும் அலறியும் பாடியும் பரவியும்” என்றார்.
குறடும் மூடனும் அவர்கள் பிடித்ததை விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதைப் போல, பிரமஞானத் தவத்தில் இருப்போரும் விடாமல் இறைவன்மீது கொண்ட வற்றாத இறையன்பில் மூழ்கி, இத்தவத்தில் இடைவிடாமல் வரும் தைலதாரையைப் போல ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதைத்தான், “கொடிறும் பேதையும் கொண்டது விடாதென, படியே ஆகி நல் இடையறா அன்பில்” என்றார். கொடிறு என்றால் குறடு ; பேதை என்றால் மூடன்.
அந்த இறைவன்மீது கொண்ட அன்பு எப்படியிருக்க வேண்டுமென்றால், ஒரு பச்சை மரத்தில் ஆணி அடித்தால் எப்படி அந்த ஆணி அம்மரத்தில் ஆழமாகப் பதிந்திருக்கமோ அப்படி ஆழமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் பிரமஞானத் தவத்தின் மிகுதியால் திருவடிகளிலிருந்து கண்ணீரானது பெருகி கடலலை போல ஊற்றாக ஓடிவந்து உடலையே நனைத்துவிடும் என்பதைத்தான், “பசுமரத்தாணி அறைந்தாற் போலக், கசிவது பெருகிக் கடல் என மறுகி” என்றார்.
ஊன்ஊறல் பாயும் உயர்வரை உச்சிமேல்
வான்ஊறல் பாயும் வகைஅறிவார் இல்லை
வான்ஊறல் பாயும் வகைஅறி வாளர்க்குத்
தேன்ஊறல் உண்டு தெளியலும் ஆமே (தி.ம.804)
இந்த இடத்தில் திருஞானசம்மந்தப் பெருமானின் இறுதிநாட்களில் நடந்த ஞான நிகழ்வுகளைச் சொன்னால் நலமாக இருக்கும் என்று எண்ணுகின்றோம்.
ஈசன் சிவலோக தியாகேசராக எழுந்தருளியிருக்கும் திருக்கோயிலில் அன்று கூட்டம் கூடியது. காரணம் அங்கு திருஅடியார் கூட்டம் எழுந்தருளியிருந்ததும் அன்று திருஞான சம்பந்தப் பெருமானுக்குத் திருக்கல்யாணம் நடைபெறுவதாய் நிச்சயித்திருந்ததும்தான். சீர்காழிக்கரையில் சின்னஞ்சிறு பாலகனாய் உமையம்மை வாரியணைத்துப் பாலூட்டிய நாளிலிருந்து அன்றுவரை ஞானசம்பந்தர் இறைச் சம்பந்தம் தவிர வேறு ஒன்றை நினைக்கவேயில்லை. நாடெல்லாம் நடந்து தரிசனம் செய்தார். தலங்கள் தோறும் பதிகங்கள் பாடினார். அவர் பாடிய பதிகங்களால் நோய்கள் தீர்ந்தன. மயிலாப்பூர் சிவநேசச் செட்டியாரின் மகள் பூம்பாவையை பாம்பு தீண்டி இறக்க, அவளது எலும்பைக் குடத்தில் சேமித்து வைத்தார் சிவநேசர். அதனை அறிந்த ஞானசம்பந்தர் திருக்கோயில் முன் அக்குடத்தை கொணர்வித்து “மட்டிட்ட புன்னை” என்ற பதிகம் பாடி உயிர்ப்பித்தார். எலும்பும் சாம்பலுமான பெண் உயிர்பெற்றாள். திருமறைக்காட்டின் திருக்கோயில் கதவுகள் மூடவும் மீண்டும் திறக்கவும் செய்தன. நாள்களும் கோள்களும் அடியார்களுக்கு நல்லன ஆகின. அப்படிப்பட்ட அருளாளருக்கு அவரின் தந்தை மணம் முடித்திட விரும்பினார். நமச்சிவாய நாமத்தை நாள்தோறும் சொல்லிவந்த பூரணாம்பிகை என்னும் பெண்ணைப் பேசி முடித்தனர். திருமண ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்தன.
திருஞானசம்பந்தர் திருக்கல்யாணம்
திருமண வேள்வி செய்ய வேதியர் வேண்டுமே. திருநீலநக்கர் என்னும் அடியவர் முன்வந்தார். சிவனடியார் சேவையும் சிவ பூஜையையுமே தன் வாழ்வின் நோக்கமாகக் கொண்டவர் நீலநக்கர். ஒருநாள் ஆலயம் ஒன்றில் சிவபூஜை செய்யும்போது சிவ லிங்கத்தின்மீது சிலந்தி ஒன்று விழுந்துவிட இதைக் கண்டு பதறி அவரின் மனைவி உடனடியாக அந்தச் சிலந்தியை ஊதித் தள்ளினார். அப்போது சிறிது எச்சில் லிங்கத்தின் மீதுபட அதை சிவ அபராதம் என்று நினைத்தார் நீலநக்கர். மனைவியைக் கடிந்து கொண்டு அங்கேயே விட்டுப் பிரிந்து வீடுவந்து சேர்ந்தார். இரவு கனவில் சிவனார் தோன்றினர். நீலநக்கரிடம் தன் திருமேனியைக் காட்டினார். நீல நக்கர் பதறிப்போனார். சிவனின் உடலெங்கும் சிலந்தி தீண்டியதால் உண்டான கொப்புளங்கள். ஓரிடத்தில் மட்டும் அவ்வாறு இல்லாமல் பொன்னிற மேனி பிரதிபலித்தது. சிவனார், ‘அதுதான் உம் இல்லாள் அன்போடு ஊதித் தள்ளியபோது எச்சில் பட்ட இடம்’ என்று சொன்னார். நீல நக்கருக்குத் தன் பிழை புரியவும் கனவு கலையவும் சரியாக இருந்தது. ஓடிச் சென்று மனைவியிடம் மன்னிப்புக் கோரினார். சிவ பூஜையில் அன்புதான் பிரதானம் என்பதை உணர்ந்துகொண்டதாகச் சொன்னார்.
திருஞான சம்பந்தர், நீலகண்ட யாழ்ப்பாணரோடு திருநல்லூர் வந்தார். நீல கண்ட யாழ்ப்பாணரோ வீணை இசைப்பதில் வல்லவர். ஆலயங்கள் தோறும் சென்று வாசலில் நின்று சிவனைப் போற்றிப்பாடுபவர். உள்ளே செல்ல அவருக்கு விருப்பம்தான் சிவனுக்கும் விருப்பம்தான். ஆனால் அவர் பிறந்த பாணர் குலம் பிரச்னையாக இருந்தது. ஆனால் தன் சந்நிதியில் எல்லோரும் சமம் என்பதை உணர்த்த விரும்பினார் சிவன். மன்னரின் கனவிலும் சிவாச்சார்யர்கள் கனவிலும் தோன்றி யாழ்ப்பாணரை ஆலயத்தின் உள்ளே அழைத்துவந்து மனைப்பலகையிட்டு அமரவைத்துப் பாடச் சொல்லுமாறு கட்டளையிட்டார். மறுநாள் யாழ்ப்பாணர் மதுரையம்பதி சொக்கநாதர் ஆலய வாசலுக்குச் சென்றபோது அனைவரும் சிவனின் கட்டளையைச் சொல்லி அவரை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். பின்னாளில் திருஞான சம்பந்தரை தரிசனம் செய்தபின்னால் நீலகண்ட யாழ்ப்பாணரும் அவரோடு பிரயாணம் செய்தார். திருநல்லூர் வந்தபோது நீலநக்கர் தம் இல்லத்தில் தங்குமாறு ஞானசம்பந்தரை வேண்டிக்கொண்டார்.
திருஞானசம்பந்தர் தன்னுடன் வந்திருந்த நீலகண்ட யாழ்ப்பாணரும் தம்மோடு தங்க வேண்டும் என்று கேட்டார். இது ஒருவகையில் நீலநக்கருக்கு வைக்கப்பட்ட சோதனை. அன்பே சிவம் என்று அறிந்துகொண்டாரா அல்லது இன்னும் அவருள் சாதிய அழுக்குகள் மறைந்து கிடக்கிறதா என்பதை அறிய விரும்பிய சோதனை. நீலநக்கரோ ஒரு கணம்கூட யோசிக்கவில்லை. நீலகண்டரை வரவேற்றுத் தன் வீட்டில் வேள்விக்குண்டம் பக்கத்திலேயே தங்கும்படி வேண்டினார். கனிந்த அவர் மனம் கண்டு சம்பந்தர் மட்டும் மனம் குளிரவில்லை, ஈசனும் வேள்விகுண்டத்தில் நெருப்பாகத் தோன்றி வலமாகச் சுழன்று தன் ஆசிகளைக் கூறினார்.
திருமணம் என்றால் மாலைகள் வேண்டாமா. சிவனுக்கு வேதங்களால் பாமாலைகள் சூட்டுபவர்கள் நடுவே பூமாலை சூட்ட விரும்பித் தன்னை அதற்காக அர்ப்பணித்துக்கொண்டவர் முருக நாயனார். அதிகாலையில் எழுந்து நீராடி வண்டுகளின் எச்சில் படாத கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ ஆகிய மலர்களை சிவநாமம் சொன்னபடியே கொய்து சிவனுக்குரிய ஆறுகால பூஜைகளுக்கும் கோவை, இண்டை, தாமம், மாலை, கண்ணி, பிணையல், தொடையல் என்னும் ஆறுவிதமான மலர் அலங்காரங்கள் செய்து தருபவர். ஒவ்வொரு நாளும் அவரின் மலர் அலங்காரத்தை அந்த மலையரசனே ரசித்தான். அந்த முருக நாயனார் திருஞான சம்பந்தரை தரிசித்து அவருக்குத் திருமணம் என்றதும் தன் திருக்கரத்தால் மாலைகள் கட்டுவதாகச் சொல்லி கண்கவர் மாலைகளைக் கட்டுவார்.
இப்படி அடியவர்கள் ஒருங்கே கூட அவர்களை தரிசனம் செய்ய பத்தர்கள் அனைவரும் கூடினர். திருக்கல்யாணம் நடந்தது. பெற்றவரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்தார் சம்பந்தர். திருமணச் சடங்குகளில் மனைவியின் திருவடி பற்றும் சடங்கு வந்தது. அந்த ஈசனின் திருவடியைப் பற்றிவிட்டேன் இனி எப்படி மனைவியின் கால்களைப் பற்றுவேன் என்று சொல்லி ஞான சம்பந்தர் பூரணாம்பிகையைப் பார்த்தார். அவளோ இறைவனின் திருநாமத்தை உச்சரித்தபடியிருந்தார். அவள் பூரணமாக இறைச்சிந்தையில் மூழ்கிய ஆன்மா என்பதை அறிந்து மகிழ்ந்தார். அவளுக்குத் திருமணப் பரிசாக ஈசனின் திருவடி நிழலையே பரிசாகத் தரவிரும்பினார். இனி நாள்களைக் கடத்துவது வீண் என்று தீர்மானித்து, திருப்பதிகம் ஒன்றைப் பாட ஆரம்பித்தார்.
காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தமை நன்நெறிக்கு உய்ப்பது
வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
தொடர்ந்து 10 பாடல்கள் பாட அங்கு கூடியிருந்த அனைவரும் சிவானந்தத்தில் திளைத்தனர். பாலகனாய் இருக்கும்போதே அவரின் குரல்கேட்டு ஓடிவந்தவள் உமையம்மை. பால் கொடுத்துப் பாட வைத்த அன்னை இப்போது பால் வெண்ணீறு தந்து அதை முடித்துவைக்க சித்தம்கொண்டாள். அன்னை அங்கு பிரசன்னமாகி அனைவருக்கும் திருநீறு வழங்கினார். திருநீற்றைப் பூசிக்கொண்டாலே தீவினைகள் அழியும். அதுவும் அன்னையே வழங்கினாள் என்றால் அதன் பாக்கியம் எப்பேர்ப்பட்டது. சிவன் அங்கு ஜோதிரூபமாகத் தோன்றினார். அதைக் கண்டதும் அடியவர்கள் மெய் சிலிர்த்து, சிவானுபவத்தில் மூழ்கி ஆனந்தப் பரவசத்தில் திளைக்க ஆரம்பித்தினர்.
திருநல்லூர் பெருமணம்
ஞானசம்பந்தர் அதை வணங்கி பூரணாம்பிகையின் கரம் பிடித்து முதலாவதாக அந்த பெரும்ஜோதிக்குள் பிரவேசித்தார். அவரைத் தொடர்ந்து நீலநக்கர், நீலகண்ட யாழ்ப்பாணர், முருக நாயனார் மற்றும் அடியார்கள் பலரும் அந்த ஜோதியுள் புகுந்தனர். சிவானுபவத்தில் பக்குவப்பட்ட ஆன்மாக்கள் உட்புகுந்து கொண்டதும் அப்பெருஞ்ஜோதி மறைந்தது. மக்கள் அதைக் கண்டு சிவ சிவ சிவ சிவ சிவாய நமஓம் என்று சிவநாமம் சொல்லித் துதித்தனர்.
அப்படிப்பட்ட மகிமை நிறைந்த பெருமணம் நிகழ்ந்த தினம் வைகாசி மூலம். இந்த நாளில் ஆச்சாள்புரத்தில் ஞானசம்பந்தர் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
இறைவன்மீது அன்பும் பத்தியும் காதலும் திருஞானசம்மந்தரைப் போல நமக்கும் இருந்தால், நாமும் சிவயொளியில் கலந்து இன்புறலாம்.
மனம் உருகுவதைத்தான் அகம் குழைந்து என்றார் மாணிக்கவாசகர். அகம் என்றால் திருவடி. குழைந்து என்றால் தவத்தால் இளக வைப்பது. பிரமஞானத் தவமே மனத்தின்மீதுதான் நடத்தப்படுகிறது. அதனால் திருவடி தவத்தால் ஞானாக்னி உண்டாகும்போது, அங்கே திரையாக சவ்வாக இருக்கும் மனமானது உருகாமலா போய்விடும். ஞானாக்னியால் மனம் உருகும்போது, தேகத்தில் ஒருவித சொல்ல முடியாத பரவச உணர்வுகள் தோன்றி உடலே சிலிர்த்துப்போய் திளைத்திருக்கும் என்பதைத்தான், “அகங்குழைந்து அனுகுலமாய் மெய்விதிர்த்து” என்றார்.
பிரமஞானத் தவத்தில் இருக்கும் சாதகர்களையும் தவசிகளையும் இந்த உலகத்தார்கள் அவர்களின் உடல் செயல்பாடுகள், மனச் செயல்பாடுகளைக் கண்டு சாதாரண மனிதர்களைப் போலல்லாது இருப்பதால், இவர்களை பேய் என்றும் பைத்தியம் என்றும் பழித்துரைப்பார்கள். இதை எவ்விதக் கோணலும் இல்லாமல் பிரமஞானச் சாதகர்கள் ஏற்றுக்கொண்டு இறைவனே கதியென்று சிவகதியோடு சிவ ஒளியோடு தவத்தில் ஆழ்ந்து போய்க்கொண்டிருப்பார்கள் என்பதைத்தான், “சகம் பேய் என்று தம்மைச் சிரிப்ப, நாண் அது ஒழிந்து நாடவர் பழித்துரை, பூண் அது ஆகக் கோணுதல் இன்றி” என்றார்.
தமது திறமைகள் எல்லாம் ஒழிந்து எல்லாம் இழந்ததுபோல் காட்டியதையே, “சதுர் இழந்து” என்றார்.
தாம் அறிந்திருக்கும் தத்போதத்தின் கதியானது இறை சம்மந்தமான அதிசயமாக இருப்பதைக் கண்டு, “அறிமால் கொண்டு சாருங்கதியது பரமா அதிசயமாக” என்றார்.
கற்றா மனம் என்பது கன்று+ஆ, அதாவது கன்றினையுடைய பசு என்று பொருள். தன்னுடைய பிள்ளையாகிய கன்றுக்குட்டியை நினைத்துப் பார்க்கும் தாய்ப் பசுவைப் போல கதறியும் துடித்தும் என்பதை, “கற்றா மனம் எனக் கதறியும் பதறியும்” என்றார்.
வேறு எந்தவொரு தெய்வத்தையும் கனவில்கூட நினைக்கமாட்டேன் என்பதை, “மற்றோர் தெய்வம் கனவிலும் நினையாது” என்றார்.
ஆசாரியன் என்பது ஆ+சாரியன் எனப் பிரிந்து நிற்கும். ஆ என்றால் ஆத்மா அல்லது சிவம். சாரியன் என்றால் சார்ந்திருப்பவன் எனப் பொருள். ஆத்மா அல்லது சிவத்தைச் சார்ந்திருப்பவரே ஆசாரியன் ஆவார். மனிதனுக்குள் இருக்கும் அஞ்ஞானமாக இருட்டை நீக்கி ஞானமாகிய ஒளியை ஏற்றி வைப்பவரே குரு அல்லது ஆசாரியன் ஆவார். குருமார்களில் இருவகை உண்டு. 1. காரிய குரு, 2.காரண குரு. காரிய குரு மனிதனின் கர்மத்தைச் சொல்லுகின்றவர்களாக இருப்பார்கள். காரண குரு இறைவனே மனித உருவமாக வந்து பிரமஞான அருட்கலைகளை அவன்மீது பொழிந்து அவனை சிவமயமாக்கிக் கொண்டு பரத்தின் ஞானக் கலைகளை காட்டிக் கொண்டு நிற்பவராவார்.
அருபரம் என்பது அருமையான பரம் அல்லது இறை என்று பொருளாகிறது. அப்படி இறைவனே ஆசாரியனாக இப்பூமிக்கு வந்திறங்கி இறைப் பெருமையை சொல்லி ஆட்கொண்டதால், “அருபரத்து ஒருவன் அவனியில் வந்து குருபரனாகி அருளிய பெருமையை” என்றார்.
இவ்வாறு ஆசாரியன் வடிவத்தில் இறைவன் வந்து பிரமஞானத்தைப் போதித்துவிட்டார். அந்த பிரமஞானத் தவத்தைச் செய்துவரும் காலங்களில் சாதகனுக்கு பலவாறு இன்னல்கள் தோன்றிக் கொண்டுதான் இருக்கும். தவம் கற்கும்முன் அவன் வாழ்ந்த வாழ்க்கை வேறு ; இப்போது தவம் கற்றபின் அவன் வாழும் வாழ்க்கை வேறு. இரண்டையும் சமப்படுத்த முடியாததால் அங்கும் இங்கும் அலைவதால் சாதகன் சிறிது துன்பங்களை அனுபவிக்கத்தான் வேண்டியிருக்கிறது என்பதைத்தான், “சிறுமை என்று இகழாதே” என்றார்.
சரியான ஞான சற்குரு சாதகனுக்குக் கிடைத்துவிட்டால், அவர் மாணவனுக்கு போதித்து அருளுவது பிரமஞானத் தவத்தைத்தான். காரணம் இத்தவத்தைப் பின்பற்றும்போது இறைவனைக் காண்பதும் உயிரைக் காண்பதும் உயிரின் ஒளியைக் காண்பதும் ஆன்மாவைக் காண்பதும் சிவ ஒளியைக் காண்பதும் எளிமையாகவும் மிகச் சரியான மெய்வழியாகவும் இருக்கிறது. சற்குரு முதலில் மாணவனுக்கு இறைவன் எங்கே இருக்கிறான்? அவனை எவ்வாறு காண வேண்டும்? அதற்கான வழிகள், பாதைகள் என்ன? என்பதை, மாணவனின் தேகத்தை வைத்துக் கொண்டு ஒவ்வொரு ஞானப் பொருள்களையும் தொட்டுக் காட்டியும், இட்டுக் காட்டியும், காணக் காட்டியும் உணர்வுறக் காட்டியும் உயிருறக் காட்டியும் பிரமஞானத் தீக்கை அளிப்பார்.
அடுத்து திருமாலிடம் இருக்கும் சங்கையும் சக்கரத்தையும் மாணவனின் தேகத்திற்குள் காட்டிக் கொடுப்பார். அப்போது மாணவன் சங்கும் சக்கரமும் தனக்குள் இருப்பதைக் கண்டு தான் ஒரு இறைஅம்சம் கொண்ட பிறப்பாளன் என்பதை உணர ஆரம்பிப்பான். திருமால் பாற்கடலில்தான் பள்ளி கொண்டிருப்பார். ஆனால், சாதகனின் தேகத்தில் திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதை சற்குரு காட்டிக் கொடுப்பார்.
அதுமட்டுமல்ல சிவனின் கையில் உள்ள மான், மழுவையும் மாணவனின் தேகத்தில் சற்குரு காட்டிக் கொடுப்பார். சிவனிடமும் சத்தியிடமும் உள்ள திரிசூலத்தையும் முருகனுக்கு கொடுத்த ஞான வேலையும் அவன் தேகத்திற்குள் சற்குரு காட்டிக் கொடுப்பார். இப்படி ஞானச் சாதனைகளை கணக்கில்லாமல் சொல்லிக் கொண்டே போகலாம். எல்லாமே மனித தேகத்திற்குள் நித்தியமாய் ஓரிடத்திலேயே அதுவும் மெய்ப்பொருள் அமைந்திருக்கும் திருவடிகளிலேயே இருப்பதை மாணவன் கண்டு அப்படியே விக்கித்துப் போயிருப்பான். எல்லா ஞானச் செல்வங்களும் மனிதனின் தேகத்தில் நித்திய ஜீவனாக அமைந்துள்ளது. எல்லா இறை சத்திகளும் மனிதனிடம் நீக்கமற முழுமையாக அமைந்துள்ளது.
மனிதனுக்கு மோட்சத்தையும் ஜீவன் முக்தியையும் ஜீவசமாதியையும் பிரணவ தேகத்தையும் ஒளி தேகத்தையும் ஞான தேகத்தையும் அருள் தேகத்தையும் அருளக்கூடிய அத்தனை ஞானத் தந்திரங்களையும் இறைவன் மனிதனின் தேகத்தில் அதுவும் திருவடிகளில் உள்ள மெய்ப்பொருளில் கட்டமைத்து மிகமிக பாதுகாப்பாக முக்கோட்டைகளையும் கட்டி வைத்துள்ளான். மனிதன் பிரமஞானத்தை அடைய வேண்டுமென்றால் இந்த இரு திருவடிகளையும் ஒன்றோடு ஒன்று சேர்க்கும் பிரமஞானத் தவத்தைச் செய்யவேண்டும் என்பதைத்தான், “திருவடி இணையை” என்றார்.
கேட்டாயோ தோழி கிறிசெய்த வாறுஒருவன்
தீட்டார் மதில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான்
காட்டாதன எல்லாம் காட்டிச் சிவம்காட்டித்
தாள்தாமரை காட்டித் தன்கருணைத் தேன்காட்டி
நாட்டார் நகைசெய்ய நாம்மேலை வீடுஎய்த
ஆள்தான்கொண்டு ஆண்டவா பாடுதுங்காண் அம்மானாய்.
(திருஅம்மானை-6)
ஞான மெய்ப்பொருளுரை : கிறி = வழி, நெறி. தீட்டு = தீட்டிய சுதை. ‘காட்டாதன எல்லாம் காட்டித் தாள் தாமரை காட்டித் தன் கருணைத் தேன் காட்டி, சிவம் காட்டி’ என மாற்றிப் படித்துக் கொள்க.
கிறி என்றால் வழி. நமக்கு அஞ்ஞானத்தை நீக்கி ஞானத் தத்துவங்களைத் தொட்டிக் காட்டி வழிகாட்டுபவர்தான் குருவாவார். அவரைத்தான், “கிறி செய்த வாறொருவன்” என்றார்.
பெண்ணிடம் பேசுவதைப் போலத்தான் மனதிடம் பேசுவதாக உருவகப்படுத்திக் கொண்டு, “கேட்டாயோ தோழி” என்றார்.
மும்மலங்கள் திருவடிகளின் நான்கு புறங்களிலும் மதில்களைப் போல சூழ்ந்து கொண்டு, அங்கிருக்கும் இருதயக் குகைக்குள் பரவிந்து சொரூபனான சிவம் வீற்றிருக்கிறார் என்பதைத்தான், “தீட்டார் மதில் புடைசூழ் தென்னன் பெருந்துறையான்” என்றார்.
மதில்களைச் சுற்றி எப்படி அகழிகள் இருக்கமோ, அதைப்போல திருவடிகளின் நான்கு பக்கங்களைச் சுற்றி நாதவிந்துக் கலைகள் ஒளியாக அமைந்திருக்கின்றன என்பதைத்தான், “காட்டாதன எல்லாங் காட்டி” என்றார்.
மனமற்ற இடம் எதுவோ, அதுவே சிவம் இருக்குமிடமாகும். மனம் எங்கிருக்கிறதோ, அங்கே சிவம் இருப்பதில்லை. அஞ்ஞானம் இருக்கும் இடத்தில் ஞானம் இருப்பதில்லை என்பதைப் போல. ஆனால், ஞானமும் அஞ்ஞானமும் ஒரே புள்ளியில்தான் நிலைத்திருக்கின்றன. ஞானத்தை ஒரு திரையாக சவ்வாக அஞ்ஞானத் தத்துவங்கள் மூடிக் கொண்டிருக்கும். இத்திரையை நீக்கினால், உள்ளே இருக்கும் ஞானச் செல்வங்கள் தெரிய வரும். அப்போதுதான் சிவம் வெளிப்படும் என்பது தோன்ற, “சிவங் காட்டி” என்றார்.
மலர்தல் என்பது அனைத்துப் பூக்களுக்கும் இருந்தாலும், ஞானத்திற்கு தாமரை மலர்களைத்தான் உதாரணமாகவும் உவமானமாகவும் நம் முன்னோர்கள் காட்டியிருக்கிறார்கள். தாமரை இதழ்கள் விரிந்து சுருங்குவதைப் போல, கண்மலர்களும் விரிந்து சுருங்கும் தன்மையுடையது. தாமரை மலரின் நடுப்பகுதியில் வட்ட வடிவில் மகரந்தத் தண்டுப்பகுதி அமைந்திருக்கும். அதில் புள்ளி, புள்ளியாக சில மொட்டுப் பகுதிகள் அமைந்திருக்கும். இதைப்போலத்தான், கண்மலரின் நடுப்பகுதியில் வட்ட வடிவில் கருவிழியும் அதன் மத்தியில் கண்மணிப் பாவையும் அமைந்திருக்கிறது. மற்ற பூக்களில் இவ்வாறான அமைப்பு இல்லாத காரணத்தால், அனைத்து ஞானத் தத்துவங்களுக்கும் உவமானமாகத் தாமரை மலரினை வைத்தார்கள். இத்தாமரை மலரில் வெண்மை நிறமும் செந்நிறமும் இருப்பதைப் போலத்தான், நமது கண்களும் இருப்பதால், “தாள் தாமரை காட்டி” என்றார்.
சுடராழித் தவம் செய்யும்போது பிரணவ உச்சிக்குத் தென்கிழக்கு மூலையில் இருக்கும் நாதக் கலையின் பார்வை சத்தியானது சிவக்கலையோடு சேர்க்கும் தந்திரத்தை குரு காட்டி அருளினார் என்பதைத்தான், “தன் கருணைத் தேன் காட்டி” என்றார். நாத சத்திதான் தேன் ஆகும்.
அஞ்ஞானக் கூட்டங்கள் நிறைந்திருக்கும் இவ்வுலகில் ஞானம் என்றும், பிரமஞானம் என்றும் நாம் பல ஞானக் கருத்துக்களைச் சொன்னால், இவ்வுலகம் அதை ஏற்றுக் கொள்ளாமலும், அங்கீகரிக்காமலும் அக்கருத்துகளை ஏளனம் செய்து சிரிக்கத்தான் செய்கிறது. இது தேவாரக் காலத்திலிருந்தே இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்வாகத்தான் இருக்கிறது. இதைத்தான், “நாட்டார் நகை செய்ய” என்றார்.
ஆண்டான் அடியவ ரார்க்கும் விரோதிகள்
ஆண்டான் அடியவர் ஐயம்ஏற்று உண்பவர்
ஆண்டான் அடியாரை வேண்டாது பேசினார்
தாந்தாம் விழுவது தாழ்நரகு ஆமே (தி.ம.537)
என்ற திருமந்திரம், இறைவனின் அடியார்களை தாழ்ந்து பேசினால் அவர்கள் மிகவும் மோசமாக நரகத்தைத்தான் அடைவார்கள் என்று விளக்குகிறது. இறைவனின் அடியார்கள் என்போர் பிரமஞானத் தவசிகள் ஆவார்கள்.
வாசல் திறக்காமல் காற்று உள்ளே வராது. மும்மலங்கள் அழியாமல் விழி வாசல் திறவாது. விழிவாசல் திறவாது ஞானம் உள்ளே வராது. ஞானம் வராது சிவம் வெளிப்படாது. நல்ல வாசலைத் திறந்து ஞான வாசலில் ஊடோடிப் போனால், சிவம் வெளிப்படாமல் இருக்க இயலாது என்பதைத்தான், “நாம் மேலை வீடு எய்த – சிவம் காட்டி” என்றார்.
இவ்வளவு ஞான அனுபவங்களும் ஒரு ஞான சற்குரு காட்டிக் கொடுக்காமல் சாதகனுக்கு வராது ; சித்தியும் ஆகாது. குரு வந்து ஆட்கொள்ளும்பட்சத்தில்தான், “ஆள்தான்கொண்டு ஆண்டவா பாடுதும்” என்றார். ஆள்தான் – ஆட்கொண்டான்.
சூடகம் தோள்வளை ஆர்ப்பஆர்ப்பத்
தொண்டர் குழாம்எழுந்து ஆர்ப்பஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்பஆர்ப்ப
பாடக மெல்லடி ஆர்க்கும்மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்னகோவுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்தும்நாமே. (7)
ஞான மெய்ப்பொருளுரை : சூடகம் = கைவளை. தோள்வளை = புயவளை, ஆர்த்தல் = ஒலித்தல், ஆரவாரம் செய்தல், பேசி நகையாடல், பாடகம் = காலணி வகையிலொன்று. பராபரம் = மேலான கடவுள், பரம், அபரம் என்னும் இரண்டிற்கும் முதல்வன் என்றும் சொல்லலாம். பொன் மேனியன் என்பதால், ‘ஆடக மாமலையன்ன’ என்றார்.
கண்களாகிய சடையைத்தான், “சூடகம்” என்றார். சூடகம் என்றால் அது கண்களாகும்.
நம் இரு தோள்களில் திருவடிகளைச் சேர்க்க வேண்டுமென்பதைத்தான், “தோள்வளை” என்றார்.
தோள்களிலிருந்து வெளிப்படும் ஒலியைத்தான், “ஆர்ப்ப” என்றார்.
மேற்படி ஒலிகள் தோள்களிலிருந்து வெளிப்படும்போது சாதகனுக்கு ஆனந்தமும் புன்சிரிப்பும் மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதைத்தான், “தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப” என்றார். ஆர்ப்ப = நுட்பமான சிரிப்பு மற்றும் மகிழ்ச்சி.
பிரமஞானிகளுக்கு உலகோர் செய்யும் அஞ்ஞானச் செயல்களைப் பார்க்கும்போது, பெரும் மனவேதனைகளைக் கொடுப்பதோடு, உலகோரை வெறுக்கும் தன்மையும் உண்டாகிவிடும் என்பதைத்தான், “நாடவர் நந்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப நாமும் அவர் தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப” என்றார்.
திருவடிகள் ஒளியை மட்டும் உள்வாங்குவதில்லை. ஒலியையும் சேர்த்தே உள்வாங்குகின்றன. திருவடிகளில் ஒலிகளைச் சேர்க்காமல் மும்மலங்களை ஒன்றுமே செய்ய இயலாது. நாத ஒலியிலிருந்து பிரணவம் பிறக்கிறது. பிரணவத்திலிருந்தே இந்த அண்ட சராசரங்களும் உற்பத்தியாயின. பிரபஞ்சத்தின் ஒவ்வொரு அணுவிலும் இந்த பிரணவத்தின் நாத ஒலிகளே நிறைந்திருக்கின்றன. நாமும் பிரமஞானத் தவத்தில் பிரணவ நாதத்தைத் தொட்டணைத்துக் கொண்டால் மட்டுமே, பொற்சுண்ணத்தை நம்மால் சரியாக இடிக்க முடியும். இங்கே உரல் என்பது கண்மணியாகும் ; உலக்கை என்பது பிரணவ ஒலியாகும். பிரணவத்தின் ஒலிக்கு அமுதக்காற்றின் உதவி கண்டிப்பாகத் தேவை. பிரணவத்தின் சத்தியே அமுதக்காற்றுதான். இவையெல்லாம் ஞான சற்குருவிடம் தீக்கைப் பெறும்போது தொட்டுக் காட்டி உணர்த்தப்படும் ஞானத் தந்திரங்களாகும். இதைத்தான், “பாடக மெல்லடி யார்க்கு” என்றார். சிவநடம் என்பது நாதப்பிரமம் என்பார் திருமூலர்.
பார்வை சத்திக்கு தன் தேகத்தில் இடம் கொடுத்ததால், “மங்கை பங்கினன்” என்றார்.
பரவித்தைக்கும், அபர வித்தைக்கும் சிவமே தலைவன் என்பதால், “எங்கள் பராபரன்” என்றார்.
சிவம் அரசனாகி பொன்மலையைப் போலிருப்பதால், “ஆடக மாமலை அன்ன கோ” என்றார்.
அமுதக்காற்று பிரபஞ்சத்திற்கு வந்து சேரும் காலத்தில் சிவத்தின் அருட்கலைகள் அதிகளவில் சாதகனின் தேகத்தில் வீசிக் கொண்டிருக்கும். இதற்கு நாம் சுடராழித் தவத்தால் மெய்ப்பொருளில் இடித்து அருட்கலைகளை வெளிப்படுத்தும் ஞானத் தந்திரத்தை செய்ய வேண்டும் என்பதைத்தான், “ஆடற் பொற்சுண்ணம் இடித்து நாமே” என்றார்.
எம்பெருமான் மெய்யடியார்களை அடிமை கொள்வது என்பதன் பொருள் என்ன தெரியுமா? அன்பு செய்பவர்க்குரிய அவவினை என்னும் மாயையை அகற்றியே எம்பெருமான் அடிமை கொள்வாரேயன்றி, வேறென்ன இருக்க முடியும்? ஆதலால் அவரவர் வினையை அருளால் கிலேசமாய் அனுபவிக்கச் செய்தும் அனுபவிக்காமல் நீக்கத் தக்கவற்றை நீக்கியுமே எம்பெருமான் மெய்யடியார்களை அடிமை கொள்ள வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். மாயை என்பது என்ன? அது விதியைக் குறிக்கிறதல்லவா. அது ஊழ் அல்லவா? எனவே, அம்மாயையுடன் சேர்ந்தே அம்மாயையை எந்த எந்த சமயத்தில் எந்த எந்தவிதமாய் அதனுடன் கலந்து அதனுள் புகுந்து அதனைத் தனக்குள் சிக்கச் செய்வதுதான் “மாயையை அடிமை கொள்வது” என்பதன் பொருளாகும். இதைப் பின்வரும் திருவாசகத்தில் நாம் அறிந்து கொள்ளலாம்.
அருளார் அமுதப் பெருங்கடல்வாய்
அடியார் எல்லாம் புக்குஅழுந்த
இருளார் ஆக்கைஇது பொறுத்தே
எய்த்தேன் கண்டாய் எம்மானே
மருளார் மனத்தோர் உன்மத்தன்
வருமால் என்று இங்குஎனைக் கண்டார்
வெருளா வண்ணம் மெய்அன்பை
உடையாய் பெறநான் வேண்டுமே. (பிரார்த்தனைப் பத்து-3)
ஞான மெய்ப்பொருளுரை : வருமால் என்பதில் ஆல் அசை. வெருளுதல் = மருளுதல்; அஞ்சுதல்.
அமுதத்தின் ஊற்றானது அருளின் வசமே உள்ளது. அவன் அருள் இல்லாமல் அமுதமானது பொங்கி வெளியே வராது. அமுதத்தின் ஊற்று அது அருளின் ஊற்றாகும் என்பதால் அமுதமும் அருளும் ஒன்றே என்பது இதனால் நன்கு விளங்கும். இதுதான் பரவிந்துவின் கலையாகும். அருளும் அமுதமும் ஒன்று என்பதைத்தான், “அருளாரமுதம்” என்றார் மாணிக்கவாசகர்.
அமுதம் ஒன்று இருக்கிறதென்றால், அதற்கென்று ஒரு இருப்பிடம் இருக்க வேண்டுமல்லவா. அந்த இருப்பிடம்தான் பிரணவத்தின் குகைப்பகுதியாகும். பிரணவத்தின் குகையில்தான் அமுத வெள்ளத்தின் வாயிற்பகுதி (நுழைவாயில்) தங்கியிருப்பதைத்தான், “பெருங்கடல் வாய்” என்றார். பிரணவக் குகை என்பது மெய்ப்பொருள் இருக்கும் கண்மணித் துவாரமாகும்.
பிரமஞானத் தவத்தைச் செய்யும் மெய்யடியார்கள், பிரமஞானச் சாதகர்கள் அனைவரும் இந்த பிரணவத்தின் குகையான கண்மணியை நோக்கித்தான் பிரமஞானத் தவச் சாதனைகளைச் செய்து வருகிறார்கள். மேலும், அந்த பிரணவத்தின் குகையில் சதா அசைவற்று நின்றுகொண்டு தவத்தை ஆற்றுவார்கள். இதைத்தான், “அடியார் எல்லாம் புக்கழுந்த” என்றார்.
மனித தேகமானது மாயாமலங்களால் நிறைந்து அஞ்ஞானத்தில் திளைத்திருப்பதால், ஞானம் என்ற வெளிச்சம் காணாமல் இருளிலேயே எப்போதும் நம் தேகமானது சூழ்ந்திருக்கிறது என்பதைத்தான், “இருளார் ஆக்கை” என்றார்.
இறைவனைக் கண்டறியும் பிரமஞானத்தை இந்த மக்கள் இதுவரை அறிந்திராமல் இருக்கின்ற மாயா மயக்க நிலைகளைத்தான், “மருளார் மனத்தோர்” என்றார்.
அனைத்து மக்களும் தன்னைக் கண்டு பயத்தை ஒழித்து, அச்சமில்லாமல் நிற்கும் நிலையைத் தான் அடைய வேண்டும் என்பதைத்தான், “எனைக்கண்டார் வெருளா வண்ணம் மெய்யன்பைப் பெற வேண்டும்” என்றார்.
முன்னிலையாகிய மாயையை உறவு செய்வதற்கு அன்பே சிறந்த சாதனம் என்பது இதனால் நாம் நன்றாக புரிந்து கொள்ள முடியும்.
மெய்யடியார்களின் அவவினையை எவ்வண்ணம் நடத்தி அகற்ற வேண்டுமோ அவ்வண்ணம் நடத்தி அகற்றி ஆட்கொள்வதுதான் இறைவன் அருள் என்பது. எனவே, மாயையை வசப்படுத்த அறியாது அதனை வெறுத்து ஒருபால் ஒதுங்குவோர் மெய்யடியாராவதற்கு தகுதியானவரா? அவரை மெய்யடியார் என்று சொல்லலாகுமா? அவர்களை மெய்யடியார் என்று சொல்லலாகாது. கர்மப் போராட்டங்களால் துன்பம் அடைந்த மெய்யடியார்களெல்லாம் தங்களைப் பாவிகள் என்று இழித்துக் கூறி வலிமை இழந்து, இழந்து இரங்கிப்போய் இருக்கின்றார்கள். இதற்கு ஆதாரம் திருவாசகப் பதிகமான உயிருண்ணிப் பத்தில் வரும் இப்பாடல்.
வான்பாவிய உலகத்தவர் தவமே செயஅவமே
ஊன்பாவிய உடலைச்சுமந்து அடவிமரம் ஆனேன்
தேன் பாய்மலர்க் கொன்றைமன்னு திருப்பெருந்துறை உறைவாய்
நான்பாவியன் ஆனால்உனை நல்காய் எனலாமே. (உயிருண்ணிப்பத்து-10)
ஞான மெய்ப்பொருளுரை : வான்பாவிய உலகத்தவர் = விண்ணவர். உலகத்தவர் தவமே செய எனப் பாடியிருப்பதால், இவ்வுலகில் பிறப்பெடுத்த அனைவரும் தவத்தைச் செய்து வருகிறார்கள் என்பது அர்த்தமல்ல. இந்த இடத்தில் ஒரு சிறந்த ஞான சற்குருவிடம் குருகுலக் கல்வியில் சேர்ந்து பிரமஞானத் தவத்தைக் கற்றுக் கொண்ட பிரமஞானச் சாதகர்கள்தான் இவ்வாறு தினமும் தவத்தைச் செய்து வருகிறார்கள் என்றே பொருள் கொள்ள வேண்டும். மேலும், பிரமஞானிகள் அனைவரும் நித்தமும் தவத்தில்தான் வாழ்ந்து வருகிறார்கள். அதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை.
வனங்களில் காணப்படும் பழ மரங்களால் யாருக்கும் பயன் இல்லை. ஒருவேளை காட்டில் தவம் செய்து கொண்டிருக்கும் ஞானிகளுக்கும், சித்தர்களுக்கும், முனிவர்களுக்கும். ரிஷிகளுக்கும் வேண்டுமானால் ஒருவேளை பயன்தரக்கூடும். ஆனால், அந்த வன மரங்களின் இலைகள், பூக்கள், காய்கள், பழங்கள் ஆகிய அனைத்துமே மண்ணில் விழுந்து வீணாகத்தான் போய்க் கொண்டிருக்கும். அதனால் மனித உயிர்களுக்கு எந்த பயன்பாடும் இல்லாமல்தான் இன்றுவரை இருந்து வருகிறது. வனங்களில் இருக்கும் மரங்களால் எப்படி யாருக்கும் எந்தப் பயனும் இல்லாது போகிறதோ, அவ்வாறுதான் அஞ்ஞானக் காடுகளால் அறியாமையில் ஆழ அழுந்திக் கிடக்கும் மனிதர்களால் இவ்வுலகிற்கு எந்தவித நன்மையும் இல்லாமல் போய்விடுகிறது என்பதைத்தான், “அவமே ஊன்பாவிய உடலைச் சுமந்து அடவி மரம் ஆனேன்” என்றார் மாணிக்கவாசகப் பெருமான்.
கொன்றை மலர்கள் பார்ப்பதற்கு பரவிந்து, பரநாதங்களை வெளிப்படுத்துவதைப் போலவே விளங்கி, அவைகள் நமது திருவடிகளில் (கண்மலர்களில்) பொருந்தி அழகான பிரணவத்தின் குகையில் பரவிந்து சொரூபமாக பரமேசுவரனே விளங்குகிறான் என்பதைத்தான், “தேன்பாய் மலர்க்கொன்றை மன்னு திருப்பெருந்துறை உறைவாய்” என்றார்.
நீ கொடுக்கும் அருட்கலைகளை கர்மவினைப் பதிவுகளால் பாவியாக இருக்கும் என்னால் அக்கலைகளை பெற்றுக் கொள்ள இயலாது இருக்கின்றது என்றும் அதனால் பார்ப்பதற்கு நீ எனக்கு அருட்கலைகளைக் கொடுக்காததுபோலவே இருக்கிறது என்பதைத்தான், “நான் பாவியன் ஆனால் உனை நல்காய் எனலாமே” என்றார். உன்னை என்றது இறைவனின் அருட்கலைகள் என்பதைக் குறிக்கிறது.
இப்பாசுரங்கள் அனைத்திலும் இறைவன் எவ்வாறு தன்னை ஆட்கொண்டு அவனின் அருட்கலைகளை வாரி, வாரி அருளினான் என்பதையும் அதனால் தான் பெற்ற சிவானந்தத்தின் அருமை, பெருமைகளையும் இவ்வுலகிற்குத் தெரிய வேண்டும் என்று வெளிச்சம் போட்டு காட்டியருளியிருக்கிறார், மாணிக்கவாசகப் பெருமான் அவர்கள்.
ஒருவன் தன்னைப் பாவி என்றும் படிற்றொழுக்கம் உடையவன் என்றும் உணர்வதற்கே பல சென்ம புண்ணியம் வேண்டும். சீவர்கள் தங்களைப் பாவிகளென்று உணர்வது முடியாத காரியம். தங்களை வினைரூபங்கள் என்று அறிய மாட்டார்கள் ; மற்றபடி எல்லாம் உணர்ந்தவர்கள் என்றும், பூரண அறிவாற்றல் உடையவர்கள் என்றும் துணிந்து வாழ்பவர்களாகவே இருக்கிறார்கள். “வினைப் போகமே உறுதேகம் கண்டாய்” என்பது பட்டினத்தாரின் திருவாக்கு. பலர் தம்மை வினைரூபம் என்று பிறர் கூறினால் சீற்றம் கொள்வார்கள். இதற்கு அவர்களின் அறியாமைதான் காரணம். சீவர்கள் தாம் எடுத்தப் பிறப்பில் அனுபவிக்கும் கர்மங்களைக் கொண்டே தமது புண்ணிய பாவங்களை மதிக்கிறார்கள். அடுத்த சென்மத்துக்குரிய வினை வித்து இது என அறிய மாட்டார்கள். ஆகாமிய இயல்பையும் அதன் விளைவையும் அறியார்கள்.
புண்ணியம் இவை, பாவம் இவை என்பதும் அறியார்கள். எடுத்தப் பிறப்பில் உழலும் சில நடைநொடிகளால் – செயல்களால் இறந்தவுடன் மோட்சம் அடைவது திண்ணம் என உறுதிகொண்டு அகம்பிரமிகளாய்ச் சாதலை எதிர்நோக்கியே வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இதனால்தான் சில நூல்களைப் படிப்பதாலும், சில சரியை, கிரியை, உபாசனை, யோகம் இவைகளை செய்வதாலும் இறந்தபின் எளிதாக முத்தியடைந்து விடலாம் – சாலோக, சாமீப, சாரூப, சாயுச்சிய நிலைகளை அடைந்துவிடலாம் என வாய்க்கிழியப் பேசி, அவற்றின் இலக்கணம் இன்னதென்றுகூட அறியமாட்டாது, எண்ணிலி கோடி பேர்கள் காலன்வசம் ஆட்பட்டு மரணத்தை எதிர்பார்த்தே வாழ்ந்து வருகிறார்கள்.
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய நூல்கள் எல்லாம் உடலும் உயிரும் ஒழிவற ஒன்றித் தோன்றிய முறையே ஒடுங்குவதே வீடுபேறு என்பதை நன்றாக வலியுறுத்துகின்றன. இதற்கு ஆதாரமாக தைத்திரிய உபநிஷத்தில் பிருகுவல்லி படலத்தை ஆராய்ந்து பார்க்க வேண்டுகிறேன்.
தைத்திரீய உபநிஷத்தின் சாரம் – பிருகு வல்லி:
அறிமுகம்:
இந்த பகுதி தைத்திரிய உபநிஷத்தின் மூன்றாவது அத்தியாயமான பிருகு வல்லி என்று அழைக்கப்படுகிறது. இது பத்து அனுவாகங்கள் (10 பிரிவுகள்)
தைத்திரீய உபநிஷத் கிருஷ்ண யஜுர் வேதத்தின் ஒரு பகுதியாகும் , மேலும் பத்து முக்கிய உபநிடதங்களின் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. உபநிடதத்திற்கு மூன்று அத்தியாயங்கள் உள்ளன. உபநிடதத்தின் முதல் அத்தியாயம் ஷீக்ஷா வல்லி , இது வேதத்தின் கர்ம காண்டத்தின் சாரம், ஒழுக்கங்கள், சடங்குகள், தியானங்கள், மதிப்புகள், அன்றாட வாழ்க்கைக்கான நடத்தை விதிகள் என இரண்டு பகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. ஷீக்ஷா வல்லி: பகுதி-1A மற்றும் ஷீக்ஷா வல்லி: பகுதி-1B.
இரண்டாவது அத்தியாயம் ”பிரம்மானந்த வல்லி 1) நமது உண்மையான சாரத்தைச் சுற்றியுள்ள ஐந்து உறைகளைப் பற்றி , பாரம்பரிய அத்வைத வேதாந்தத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி, நமது உண்மையான இயல்பைப் பற்றி விரிவாகக் கற்பிக்கிறார் , இது நமது உண்மையான இயல்பை மறைக்கும் அடையாளத்தின் அடுத்தடுத்த அடுக்குகளை விளக்குவதற்கு ஒரு மாதிரியைப் பயன்படுத்துகிறது. மற்றும் 2) ” பேரின்பம் என்றால் என்ன” (உண்மையான மகிழ்ச்சி). இது இரண்டு பாகங்களாக வெளிவந்துள்ளது. பிரம்மானந்த வல்லி: பகுதி 1-A மற்றும் பிரம்மானந்த வல்லி: பகுதி-1-B
பிருகு வல்லிக்கு 10 அனுவாகங்கள் உள்ளன: பிருகு முனிவரின் ஞானம் இந்த உரையில் சிறப்பிக்கப்படுகிறது. பிருகு வருண முனிவரின் மகன்.
கிருஷ்ண யஜுர் வேதத்திலிருந்து அமைதி அழைப்பு:
“பிருகு நம் இருவரையும் காக்கட்டும். அவர் நம் இருவரில் மகிழ்ச்சி அடையட்டும். நாம் ஒன்றாக தைரியத்தை காட்டலாம். ஆன்மிக அறிவு நம் முன் பிரகாசிக்கட்டும். நாம் ஒருவரையொருவர் ஒருபோதும் வெறுக்கக்கூடாது. எங்கும் அமைதியும் அமைதியும் அமைதியும் நிலவட்டும்.
அனுவகா-1:
3.1 பிருகு, தன் தந்தை வருணனைத் தேடி, “இறைவா! தயவு செய்து எனக்கு பிரம்மம் என்றால் என்ன என்று கற்றுக் கொடுங்கள்”. வருணன் பதிலளித்தான்: “உணவு, பிராணன், கண்கள், காதுகள், மனம் மற்றும் பேச்சு. இவை அனைத்தும் பிரம்மம்” பிரம்மனிடமிருந்து எல்லாப் பொருட்களும் பிறக்கின்றன, யாரால் வாழ்கின்றன, யாரை நோக்கி நகர்கின்றன, யாரிடம் திரும்புகின்றன. அதை நன்கு அறிய ஆசை.
அனுவகா-2: பிருகு மேலும் பலவற்றிற்குத் திரும்புகிறார்:
பிருகு பின்னர் சிக்கனத்துடன் தியானம் செய்தார் (தபஸ் என்பது ஒரு துறவு, ஒரு சுத்திகரிப்பு செயல்) மற்றும் உணவே பிரம்மம் என்பதை புரிந்து கொண்டார்.
அதை அறிந்த பிருகு தன் தந்தையிடம் திரும்பி வந்து கூறினார்: “இறைவா! பிரம்மனைப் பற்றி மேலும் கூறுங்கள்” வருணன் கூறினான்: “ஆழ்ந்த சிந்தனையால் (தபஸ்) நீ பிரம்மத்தை அறிய முயல்க. தபஸ் என்பது பிரம்மன்” .
அனுவாக -3 : பிராணன் என்பது பிரம்மன்.
3 .3:பிருகு தியானம் செய்து பிராணன் பிரம்மம் என்று கண்டுபிடித்தார், ஏனென்றால் இவை அனைத்தும் பிராணனிடமிருந்து மட்டுமே பிறக்கின்றன, பிராணனால் அவை வாழ்கின்றன, பிராணனை நோக்கி நகர்கின்றன, அவை இறக்கும் போது பிராணனுக்குள் திரும்புகின்றன.
அதை அறிந்த பிருகு தன் தந்தையிடம் திரும்பி வந்து கூறினார்: “இறைவா! பிரம்மனைப் பற்றி மேலும் கூறுங்கள்” ” வருணன் சொன்னான்: “ஆழ்ந்த சிந்தனையால் (தபஸ்) பிரம்மத்தை அறிய நீ தேடு. தபஸ் என்பது பிரம்மன்” .
அனுவாக-4: மனமே பிரம்மம்.
பிருகு தியானம் செய்து மனமே பிரம்மம் என்பதை புரிந்து கொண்டார். ஏனெனில் இவை அனைத்தும் மனதில் இருந்து மட்டுமே பிறக்கின்றன, மனத்தால் அவை வாழ்கின்றன, தொடர்ந்து மனதில் வாழ்கின்றன, அவை இறக்கும் போது திரும்புகின்றன.
அதை அறிந்த பிருகு தன் தந்தையிடம் திரும்பி வந்து கூறினார்: “இறைவா! பிரம்மனைப் பற்றி மேலும் கூறுங்கள்” வருணன் சொன்னான்: “ஆழ்ந்த சிந்தனையால் (தபஸ்) பிரம்மத்தை அறிய நீ தேடு. தபஸ் என்பது பிரம்மன்” .
அனுவாக-5: அறிவே பிரம்மம்.
பிருகு தியானம் செய்து, அறிவே பிரம்மம் என்பதை புரிந்து கொண்டார். ஏனெனில் இவை அனைத்தும் அறிவில் இருந்து மட்டுமே பிறக்கின்றன, அறிவால் அவை வாழ்கின்றன, தொடர்ந்து வாழ்கின்றன, மேலும் அவை இறக்கும் போது அறிவுக்குத் திரும்புகின்றன.
அதை அறிந்த பிருகு தன் தந்தையிடம் திரும்பி வந்து கூறினார்: “இறைவா! பிரம்மனைப் பற்றி மேலும் கூறுங்கள்” வருணன் சொன்னான்: “ஆழ்ந்த சிந்தனையால் (தபஸ்) பிரம்மத்தை அறிய நீ தேடு. தபஸ் என்பது பிரம்மன்” .
அனுவாக-6: பேரின்பம் (ஆனந்த) பிரம்மன்.
பிருகு தியானம் செய்து ஆனந்தம் (ஆனந்தம்) பிரம்மம் என்பதை புரிந்து கொண்டார். பேரின்பத்திலிருந்து மட்டுமே இவை அனைத்தும் பிறக்கின்றன, பேரின்பத்தால் அவை வாழ்கின்றன, தொடர்ந்து வாழ்கின்றன, இறக்கும்போது அவை மீண்டும் பேரின்பத்திற்குத் திரும்புகின்றன.
அதை அறிந்த பிருகு தன் தந்தையிடம் திரும்பி வந்து கூறினார்: “இறைவா! பிரம்மனைப் பற்றி மேலும் கூறுங்கள்” வருணன் சொன்னான்: “ஆழ்ந்த சிந்தனையால் (தபஸ்) பிரம்மத்தை அறிய நீ தேடு. தபஸ் என்பது பிரம்மன்” .
தபஸின் சிறப்பு:
அவ்வாறு அறிந்தவன் பரம புண்ணிய பிரம்மத்தில் நன்கு நிலைத்திருப்பான். அவர் உணவை உடையவராகவும் உண்பவராகவும் மாறுகிறார். அவர் சந்ததி, கால்நடைகள் ஆகியவற்றில் பணக்காரராகி, உண்மையான பிராமண பேட்டையின் சிறப்பைப் பெறுகிறார். உண்மையில் அவர் பெரிய ஆன்மீக மற்றும் பொருள் செழுமையாக மாறுகிறார்.
தபஸ் முழுமையான பேரின்பத்தில் முடிகிறது:
இந்த அறிவு பிருகுவால் கற்றுக் கொள்ளப்பட்டது மற்றும் அவரது தந்தை வருணனால் கற்பிக்கப்பட்டது, இது “இதயத்தின் உச்ச குழியில்” நிறுவப்பட்டது.
உணவுடன் தொடங்கிய பயணம் இப்போது “இதயத்தின் உச்ச குழியில்” உச்ச பேரின்பத்தில் முடிகிறது. இங்கே சீடன், தேடுபவன் பிரம்மனுடன் ஒன்றாகிறான். உரையாடல் மூலம் கற்பித்தல் என்ற கருத்து, பிருகுவைப் பின்பற்றும் அதே முறையைப் பின்பற்றும் எவரும், பிருகு என்ன சாதித்தார் என்பதை உணர முடியும் என்பதை வலியுறுத்துகிறது. இது தைத்திரிய உபநிஷத்தில் புகழ்பெற்ற “பார்கவி- வருணி வித்யா” என்று அழைக்கப்படுகிறது .
அனுவகா 7 முதல் 10 வரை அறிமுகம்:
பிருகு பின்பற்றிய சுய-உணர்தல் பாதை மிகவும் நேரடியான பாதையாகக் கருதப்படுகிறது, இது தியானப் பயிற்சியாளர்களுக்கு ஏற்றது. ஆனால் பின்பற்ற முடியாத ஆர்வலர்களுக்கு, அனுவாக-7,8,9 மற்றும் 10-ன் முதல் வசனத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி மாற்று (மறைமுக) முறை கொடுக்கப்பட்டுள்ளது. குத்தகைதாரர் தகுதியுள்ள மாணவர்களைத் தயார்படுத்த, அதே பிருகுவை அடைய, ஒரு நடைமுறை அன்னம்-அன்னதானம். உபாசனா பரிந்துரைக்கப்படுகிறது. இது உணவு மற்றும் உணவை உண்பவர் பற்றிய தியானம். விவரிக்கப்பட்டுள்ளபடி பின்பற்றினால், தேடுபவர் அதே பேரின்ப நிலையை, முழுமையான பேரின்பத்தை அடைவார். ஒவ்வொரு அனுவாகமும் தர்க்க ரீதியில் கட்டமைக்கப்பட்டுள்ளது. 1. விரதம் (சபதம்), 2. உபாசனா (தியானம்) மற்றும் 3. பலா (பலன்)
அனுவாக-7: பிராணனும் உடலும் உணவாக.
7.1: சபதம்-1: உணவை மதிக்கவும்:
“அன்னம் ந நிந்த்யாத்; தத் விரதம்;”
இங்குள்ள சபதம் உணவை அவமதிக்கக்கூடாது. அதன் பொருள் என்ன? அதாவது, நிராகரிப்பது, மறுப்பது, விமர்சிப்பது, உணவின் மீது எந்த மதிப்பும் வைக்காதது. பிராணன் மற்றும் உடலில் உள்ள உபாசனாவுடன் உணவு நன்றாக இணைக்கப்பட்டுள்ளது. உணவை மதிக்க வேண்டும் மற்றும் இனிமையான மனநிலையில் எடுத்துக்கொள்ள வேண்டும். எனவே பிராணிக் அமைப்பு நன்றாக வேலை செய்கிறது.
7.2: உபாசனா-1: பிராணனும் உடலும்- ஒருவருக்கொருவர் உணவு:
பிராணன் என்பது உணவு (அன்னம்). உணவை உண்பவன் உடல் (அன்னதம்). உடல் பிராணன்; பிராணன் என்பது உடல். அவை ஒன்றுக்கொன்று உணவாகும்.
7.3: தகுதி: ஆன்மீக மற்றும் பொருள் செழிப்பு:
அவ்வாறு அறிந்தவன் பிரம்மத்தில் நன்கு நிலைத்திருப்பான். அவர் உணவை உடையவராகவும் உண்பவராகவும் மாறுகிறார். அவர் பணக்காரர் ஆகிறார், எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார், எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்; ஒரு குடும்பத்தை கண்டுபிடித்து, மந்தைகளையும் மந்தைகளையும் சேகரிக்கிறது. உண்மையான பிராமண பேட்டையின் சிறப்பைப் பெறுகிறது.
அனுவகா–8:
8.1: சபதம்-2 “உணவை நிராகரிக்காதே”
“அன்னம் ந பரிச்சக்ஷீத்; தத் விரதம்” உணவை நிராகரிக்காதே.
இங்குள்ள சபதம் பரிமாறப்பட்ட உணவை கைவிடவோ அல்லது வீணாக்கவோ கூடாது என்பதாகும். கூடுதலாக, துறவறம் என்ற பெயரில் அதிகப்படியான விரதத்தை உடலின் தேவையை நிறைவேற்றுவதையும் தவிர்க்க வேண்டும்.
8.2: உபாசனா-2: தண்ணீர் மற்றும் ஒளி- ஒருவருக்கொருவர் உணவு.
நீர் மற்றும் நெருப்பு – ஒருவருக்கொருவர் உணவு. தண்ணீர் உணவு; தண்ணீரில் ஒளி வாழ்கிறது. நீர் ஒளி; ஒளி என்பது நீர்; அவை ஒன்றுக்கொன்று உணவு.
[ சூரியன் மற்றும் சூரிய குடும்பம் பூமியில் உயிர்களை நிலைநிறுத்த வேலை செய்கிறது .]
8.3: தகுதி: ஆன்மீக மற்றும் பொருள் செழிப்பு:
அவ்வாறு அறிந்தவன் பிரம்மத்தில் நன்கு நிலைத்திருப்பான். அவர் உணவை உடையவராகவும் உண்பவராகவும் மாறுகிறார். அவர் பணக்காரர் ஆகிறார், எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார், எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்; ஒரு குடும்பத்தை கண்டுபிடித்து, மந்தைகளையும் மந்தைகளையும் சேகரிக்கிறது. உண்மையான பிராமண பேட்டையின் சிறப்பைப் பெறுகிறது.
அனுவகா-9: பூமியும் விண்வெளியும்- ஒன்றுக்கொன்று உணவு.
9.1: சபதம்-3 “உணவைக் கடை”
“அன்னம் பஹு குர்வித; தத் விரதம்” : நிறைய உணவை தயார் செய்யுங்கள். அது உங்கள் சபதமாக இருக்கட்டும்.
விருந்தினர்கள், எதிர்பாராத விருந்தினர்கள் மற்றும் தேவைப்படுபவர்களுக்கு எந்த சிரமமும் இல்லாமல் உணவளிக்கக்கூடிய ஏராளமான உணவை கடையில் ஏற்பாடு செய்வதே இங்கு சபதம். இந்த நடைமுறை பொதுவாக இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் பின்பற்றப்படுகிறது.
9.2: உபாசனா-3: பூமி மற்றும் விண்வெளி- ஒருவருக்கொருவர் உணவு.
பூமி உணவு; விண்வெளி என்பது உணவை உண்பவர். பூமி விண்வெளியில் நிறுவப்பட்டுள்ளது. விண்வெளி என்பது பூமியை நிறுவியது. அவை ஒன்றுக்கொன்று உணவு. [ சுற்றுச்சூழல், நீர் சுழற்சிகள் போன்றவற்றைக் கவனியுங்கள் .]
9.3: தகுதி: ஆன்மீக மற்றும் பொருள் செழிப்பு:
அவ்வாறு அறிந்தவன் பிரம்மத்தில் நன்கு நிலைத்திருப்பான். அவர் உணவை உடையவராகவும் உண்பவராகவும் மாறுகிறார். அவர் பணக்காரர் ஆகிறார், எல்லாவற்றையும் கட்டளையிடுகிறார், எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்; ஒரு குடும்பத்தை கண்டுபிடித்து, மந்தைகளையும் மந்தைகளையும் சேகரிக்கிறது. உண்மையான பிராமண பேட்டையின் சிறப்பைப் பெறுகிறது.
அனுவாக-7 முதல் 9 வரை விளக்கம்:
அனுவகா -10 க்குச் செல்வதற்கு முன், அனுவகா -7 முதல் 9 வரையிலான சாராம்சத்தைப் புரிந்துகொள்வோம்.
போதனை மறைக்கப்பட்டுள்ளது மற்றும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒன்று. இங்குள்ள போதனை ஐந்து உறைகளின் மாதிரிக்கு மாற்றாக உள்ளது, அங்கு அனைத்து கோஷங்களையும் நிராகரித்த பிறகு நாம் பிரம்மனை அடைய வேண்டும். மகரிஷி பிருகு ஒரு சிறந்த முனிவர். அனுவகா-7 முதல் 9 வரை சாதனாவின் மூன்று முதன்மை நிலைகள் உள்ளன.
- தர்மத்தின் சட்டத்தை கடைபிடித்தல்:
சாதனாவின் முதல் நிலை, விரும்பத்தகாத நடைமுறைகளிலிருந்து விரும்பத்தக்க உன்னதமான நடைமுறைகளை ஒழிப்பதற்கான சபதம் ஆகும். இதன் பொருள் அநீதியானவர்களை நீதியான குணங்களுடன் மாற்றுவதாகும். ஆர்வமுள்ளவர் தர்மத்தின் சட்டங்களுடன் ஒத்துப்போக வேண்டும். உணவை மதித்து, உணவைப் பாதுகாத்து, தேவைப்படுவோருக்கு உணவைப் பரிமாறும் மனப்பான்மை உருவாக வேண்டும். முக்கிய யோசனை, தன்னலமற்ற குணத்துடன் இணைந்த ஒரு தன்னலத்தை வளர்ப்பதாகும்.
2.கர்மாவின் சட்டத்தை கடைபிடித்தல்:
இந்த உபாசனாவில் ஒரு செயலும் எதிர்வினையும் பரிந்துரைக்கப்படுகிறது. நாம் உணவை உண்ணுகிறோம், உணவு நம்மை உண்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஒரு கணத்தில் நாம் உண்பவர்கள்; மற்றொன்றில் நாம் சாப்பிடுகிறோம்! இந்த மாய முறையில், உபாசனாக்கள் கர்மாவின் விதிக்கு நம் கவனத்தை ஈர்க்கிறார்கள்.
அனுவகா- -10: “தர்மம் & கர்மா”வின் பாதை
10.1: சபதம்-4 : “விருந்தினர்களுக்கு விருந்தோம்பல்.”
ந கஞ்சன் வஸதௌ ப்ரத்யாசக்ஷீத । தத்வ்ரதம். தங்குமிடம் மற்றும் தங்குமிடம் தேடும் எவரையும் திருப்ப வேண்டாம். போதுமான உணவை சேகரிக்கவும்.
10.2-5: உபாசனா-4: உங்கள் விருந்தினரை மகிழ்வித்து கெளரவிக்கவும்.
அந்நியரிடம் சொல்லுங்கள்; “சார், உங்களுக்காக உணவு தயாராக உள்ளது”. உணவு நன்கு தயாரிக்கப்பட்டு பரிமாறப்படுகிறது. தூய்மையுடன் சேவை செய்பவர், பதிலுக்கு தூய்மை பெறுகிறார். அறியாமையுடன் சேவை செய்பவனுக்குப் பதில் அறியாமையே கிடைக்கிறது.
உடலில் உபாசனா.
அறிபவன், பேச்சில் அருள் புரியும் பிரம்மனை தியானம் செய்; பிராணனாகவும் அபானனாகவும் பெறுபவராகவும் பாதுகாப்பவராகவும்; கைகளின் செயல்பாடு, கால்களின் இயக்கம், குடல் வெளியேற்றம் என. இவை அனைத்தும் உடலைப் பற்றிய தியானம்.
இயற்கை பற்றிய உபாசனா.
பிரம்மனை மழையில் ஊட்டமாகவும், மின்னலில் சக்தியாகவும், கால்நடைகளில் மிகுதியாகவும், நட்சத்திரங்களில் ஒளியாகவும், சந்ததியாகவும், பிறக்கும் உறுப்புகளில் அழியாமை மற்றும் மகிழ்ச்சியாகவும், விண்வெளியில் அனைத்தையும் நிரப்புவதாகவும், அனைத்தும் காற்றில் உள்ளதாகவும் வணங்குங்கள். இவை இயற்கை பற்றிய தியானங்கள்.
உச்சத்தில் உபாசனா. ஒருவன் எப்படி நினைக்கிறானோ, அப்படியே ஆகிறான்.
பிரம்மனைத் துணையாக வணங்குங்கள், துணையாக இருங்கள். பிரம்மனைப் பெரியவனாக வணங்கி, பெரியவனாக, மனமாக, மனமாக மாறு. ஆசையின் ஒரே பொருளாக பிரம்மனைச் சரணடையுங்கள், எல்லா ஆசைகளுக்கும் இலக்காக இருங்கள். பிரம்மனை அனைத்திற்கும் எஜமானனாக வணங்கி, அனைத்திற்கும் அதிபதி ஆகுங்கள். பிரம்மனை அழிப்பவராக வழிபடுங்கள், உங்கள் எதிரிகள் பகிரங்கமாக இருந்தாலும் அல்லது வீட்டில் இருந்தாலும் அழிக்கப்படுவார்கள்.
“மனிதனின் மையத்தில் உள்ள உண்மையும் சூரியனில் உள்ள யதார்த்தமும் ஒன்றே”
இதை அறிந்தவர், உலகிற்கு விடைபெறுகிறார், அன்னமாய கோஷம் (உறுப்பு சுயம்), பிரணமய கோஷம் (சுயமாக வாழும்), மனோமய கோஷா (தன்னை நினைத்துக்கொள்வது), விஜ்னமாய கோஷா (தன்னை அறிவது) மற்றும் ஆனந்தமய கோஷா (மகிழ்ச்சியான சுயம்) ஆகியவற்றை தாண்டி செல்கிறார்.
10.6 பிருகுவின் பாடல்:
அவர் தொடர்ந்து மகிழ்ச்சியின் பின்வரும் பாடலைப் பாடிக்கொண்டே இருக்கிறார்….. ஓ! ஓ! ஓ!
அவர் உலகம் முழுவதும் விருப்பப்படி நகர்கிறார், அவர் விரும்பியதை அனுபவித்து, அவர் விரும்பும் வடிவத்தை உருவாக்குகிறார், பிரம்மன்-அதிசயம், அதிசயம், அதிசயம் ஆகியவற்றின் ஒற்றுமையைப் போற்றுகிறார். நான் உணவு, நான் உணவு, நான் உணவு; நான் உண்பவன், நான் உண்பவன், நான் உண்பவன். நான் இடையே இணைப்பு, நான் இடையே இணைப்பு நான், இடையே இணைப்பு நான். நித்தியத்திலும் அழியாதிலும் நான் முதன்மையானவன். நான் தெய்வங்களுக்கு முன் இருந்தேன். நான் அழியாமையின் தொப்புள். யார் எனக்குக் கொடுக்கிறார்கள், என்னைப் பாதுகாக்கிறார்கள். நான் உணவு; எனக்கு கொடுக்க மறுப்பவர், நான் உணவாக உண்கிறேன். நான் இந்த உலகம் மற்றும் நான் இந்த உலகம் சாப்பிடுகிறேன். நான் சூரியனைப் போல சுயமாக ஒளிர்பவன்.
இதை அறிந்தவன் பிரம்மனை அறிவான்.
முடிவுரை:
மேலே உள்ள உரை தைத்திரீய உபநிஷத்தின் இரண்டாம் பாகமான பிரம்மானந்த வல்லியில் உள்ள உரையை நினைவூட்டுகிறது. பிரம்மானந்த வல்லியில் நாம் இந்த வாழ்க்கையில் ஐந்து கோஷங்களை (உறைகளை) கடந்து அறிவைப் பெறுகிறோம், அது இன்னும் வாழும்போதே ஜீவன்முக்தியாகும். மேலும் மேற்கூறிய உரையில், க்ரமமுக்தி என்பது சுயத்திற்கும் மனித குலத்திற்கும் தூய்மை மற்றும் தன்னலமற்ற செயல்களின் மூலம் விரும்பிய பலன்களை அடையச் செய்யும் செயல்களாக முன்னிறுத்தப்பட்டுள்ளது. பிருகுவின் போதனையைப் பின்பற்றுபவர், உயர்ந்த அறிவில் தேர்ச்சி பெறுகிறார். அறிவைப் பெற்ற பிறகு, இறுதி இலக்கான பிரம்மத்தை உணர்கிறான்.
இதனை ஒருவன் அறிந்துவிட்டால் அவனுக்கு என்ன பயன் கிடைக்கும்? அவன் வீடுபேற்றை அடைந்து விடுவானா? ஒருபோதும் முடியாது. திருவாசகம், திருமந்திரம், திருவாய்மொழி, ஔவை குறள் முதலிய பிரமஞானிகளின் அருநூல்களும் சுத்த சாதக நூலும் உண்மை முத்தி இலக்கணம் இதுதான் என்று வலியுறுத்தி கூறியுள்ளன. இந்த மெய்ஞ்ஞான நூல்களைக் கற்றதினால் – படிப்பதினால் மாத்திரம் ஒருவன் வீடுபேற்றை அடைந்துவிட முடியுமா? முடியவே முடியாதல்லவா. வீடுபேற்றின் பயனை அடைய முயல்பவன் கைக்கொண்டு ஒழுகவேண்டிய ஆறுகள் வேறு, வேறு – பலப்பல. இவை சீவர் எவராலும் கண்டுபிடிக்கப்பட முடியாதன என்பது சத்தியம் – வேத உண்மை.
உலகத்திலே வாசா கைங்கரியங்களே பெரும்பாலும் இருந்து வருகின்றன. அவைகளுக்கு ஏற்பப் பயனற்ற அறத்தாறுகள் பலப்பல உள்ளன. ஒருவன் பலருக்கும் அன்னம் கொடுப்பான் ; தன் பொருளில் பெரும்பாகத்தை தர்மத்திற்கென்று தியாகம் செய்வான் ; கோயில், குளங்கள், மடங்கள், சத்திரங்கள், பாடசாலைகள் அமைப்பான் ; சபைகள், சங்கங்கள், சமரசங்கள் நிறுவுவான் ; செய்யுள் நூல்கள் உரை நூல்களை உழற்றுவான் ; உலக கீர்த்திகளைத் தருவனவாகிய இப்படிப்பட்ட பல கருமங்களைப் புரிவான் ; வேடம் பூண்டு பூசை முதலியவைவும் புரிவான் ; இவற்றோடு அமைதி பெற்று அடைய வேண்டியவை அனைத்தும் தன் புண்ணியச் செயல்களால் அடைந்து விட்டதாகத் துணிந்து செத்துப் போனதும் நேராக மோட்சம் அடைவது நிச்சயம் என உறுதிகொண்டு தனது செயல்களை எல்லாம் பலரும் அறியும்படி தந்திரமாகப் பிரசாரம் செய்வான்.
இத்தனை அரிய பெரிய செயல்களைச் செய்தவனை குரு வந்து நேரில் கண்டு, “அப்பா ! உனக்கு உண்மையை உபதேசிக்கின்றேன். நான் சொல்கிறபடி நீ நடக்க வேண்டும்” என்று சொன்னால், “ஆ ஆ இதென்ன பெரிய காரியமா?” இவ்வளவு தருமங்களைச் செய்த எனக்குத் தங்கள் சொற்படி நடக்கிறது கடினமான செயலல்லவே” என்றுதான் கூறுவான். இவன் சொல்லைக் கேட்டு குரு சிரிக்க மாட்டாரா?
ஏன்? சீவர்கள் எத்தனையோ பெரிய காரியங்களையெல்லாம் செய்யத் துணிவார்கள். ஆனால், தங்களுக்கென்று வைத்திருக்கும் சுதந்திரத்தை – தற்சுதந்திரம் என்னும் இயற்கைத் தத்துவத்தை ஒருபோதும் விடமாட்டார்கள் – விடத்துணிய மாட்டார்கள் – விடவும் முடியாது. முடியாது என்றால் விடுவது அரிதினும் அரிது, மா கடினம் என்பது பொருளாகும். இது சீவ இயலுக்கு ஐ சீவ இயற்கை. சீவ தத்துவம் இதுவே ஆகும். இது ஒழிந்த இடமே சீவன்முத்தி நிலை எனப்படும். எனவே, இது வாய்ப்பேச்சால் ஆவதில்லை. சீவர்களால் கண்டுபிடிக்கப்படும் எவ்வகையான தந்திர மந்திர யோக சமாதிகளாலும் குட்டிக்கரணங்களாலும் ஆவதில்லை.
ஐந்து இந்திரியங்கள் உள்ளன. ஒன்றே ஐந்து துவாரங்கள் – ஓட்டைகள் வழியாக ஐந்து உணர்ச்சிகளை அறிகிறது. இவ்வழிகளில் நான்கு வகையான வழிகளையும் நீ வைத்துக் கொள். ஒரு வழியை மாத்திரம் என்னிடம் விட்டுவிடு. அந்த வழி எது? என்றால், அதுதான் ரஸ இந்திரியம் ஆகும். அதாவது அருந்தல் என்னும் செயல். அதை மாத்திரம் என்வசம் விட்டுவிடு” என்று குரு கேட்டால், உடனே “இதுதானா பெரிய காரியம். அப்படியே செய்கிறேன்” என்பான்.
எத்தனை நாள் பட்டினி கிடந்து சாகச் சொன்னாலும் சாகத் துணிவான். ஆனால், இவன் தற்சுதந்திரம் என்னும் நிறை அறியா அவாவினால் பழகிக் கொண்டுத் தனக்கென அமைத்துக் கொண்ட ருசி (சுவை) என்னும் உணர்ச்சி பேதிக்குங்கால் இவன் சரீரமும் பேதிக்குமல்லவா. பேதித்து ரொம்பவும் சோர்வை அடைந்துவிடுமல்லவா. அப்படி இவன் அனுபவிக்கும்படி அளவிலடங்காது என்பது அதிகமல்லவா. எனவே, இந்நிலைமையைச் சகிக்க மாட்டாதவனாய், குருவை வசைமொழிகளால் தோத்திரம் செய்து, தேவைப்பட்டால் அவனை அடித்து – நையப்புடைத்து, “போடா மடையா! நீ தானோ குரு! இதலே தானா மோட்சம் இருக்கிறது? என் நாவுக்கு இணங்காதவற்றை தின்னச் சொல்லுகிறாய். இந்த அவஸ்தையிலும் சாதல் மிகச் சுகமானது. என் நாவுக்குச் சுவையானவற்றை உண்டு நான் செத்துப் போகிறேன். எனக்கு முத்தியும் வேண்டாம், சித்தியும் வேண்டாம்” என்று கூறி அக்குருவை விட்டு ஓட்டிவிடுவான்.
சித்தர் நூல்கள் அனைத்தும் இத்தகைய அனுட்டானங்களையே பலப்பல வகைகளாக முறையிடுகிறது. இச்சாதனங்களால் உண்டாகும் துன்பங்களை அறிந்தே வித்துவப் பெரியார் அனைவரும் பண்டைக் காலந்தொட்டே அந்நூல்களில் இலக்கணக் குற்றம் கண்டு அவற்றைப் புறக்கணித்து வந்தார்கள். இவர்கள் இன்மையை – நபும்ஸகத் தன்மையை மறைப்பதற்கு இலக்கணம் குற்றம் ஒரு சாக்கு.
மெய்யடியார்களெல்லாம் முன்னிலைக் கோரணியால் ஆக்கமுறும் அவச்சலனங்களைப் பொருட்படுத்தாது திருவருள் நாட்டம் வகித்துச் சற்குருநாதன் அருளிய சாதக யோகங்களை வழுவறத் தாங்கி ஒழுகி மாயையை அடிப்படுத்தித் தமது தூலத்தை விமலமாக்குவதற்காகத் தமது தூலத்தை விமலமாக்குவதற்கு அடைந்த துன்பங்கள் நம்மனோர் சிந்தனை சொற் பெயல்களுக்கு அளவுபடுவனவாகுமா?
முன்னிலைகளால் அவர்கள் அடைந்த துன்பம் சிறிதாகிடுமா? அகிலமே மாயா சொரூபம் அல்லவா? சரீரமும் அதுதான் என்பதைக் கூறவும் வேண்டுமா? இம்மாயையை அடிப்படுத்துவதற்கே – தன் வசப்படுத்துவதற்கே குருவால் அருளப்படும் – அளிக்கப்படும் நிறையை நிறை என்னும் பயில்வைக் கைக்கொண்டு அசைய வேண்டும் – இயங்க வேண்டும் – ஒழுக வேண்டும் அல்லவா? அவ்வாறு மாயா சொரூபமாகிய இச்சரீரம் அணுஅணுவாக பிரிந்து, பிரிந்த அளவு திரியும் அல்லவா? மாற்றமடையும் அல்லவா? அகிய மேன்மையும் தன்மையும் க்ஷீணமடையும் அல்லவா? இத்துன்பங்களின் அளவினை எண்ணவும் வேண்டுமோ? கூறவும் போதுமோ? அகில மேன்மையின் அழகு கெட்டுத் திரியுங்கால் அதனால் அனுபவிக்கப்படும் ஆற்றொணாத் துன்பங்களை, குருமீது வைத்த பூரண அன்பினால் – பூரண நம்பிக்கையினால், சகித்துத் தன் காரியமே கண்ணாகப் பயின்று ஆரோகணம் பெற வேண்டுமல்லவா?
ஆதலால் இத்தனைக் கஷ்டங்களை விளைவிக்கும் மார்க்கத்தை – வழியை – அறத்தாற்றைக் கடைப்பிடித்து, சகிப்பென்னும் வச்சிர கவசத்தைப் பூண்டு ஒழுக வேண்டும் என்றால், ஓ ஓ ஓ மீசையுள்ள ஆண்பிள்ளையாக – ஆண்மையுடைய பிள்ளையாக – ஆண் தன்மையுடைய சிங்கமாக அல்லவா இருக்க வேண்டும்? வாய்ப்பேச்சால் ஆகும் காரியம் அல்ல இது.
வாய் வேதாந்தம் திண்ணைச் சித்தாந்தம் பேசி, அது இது, அப்படி இப்படி என்று கைசாடை, கண்சாடை காட்டி வாளா பிதற்றித் திரிவதனால் நித்தியானந்த சுகப்பேறு கிட்டுமா? இல்லை எட்டுமா? ஒருபோதும் கிட்டாதல்லவா. முட்டித் தள்ளிடுமே. குரு சொன்னபடி உணவுகளை நிறைகண்டு பஞ்சீகரணிப்பதற்கு மெய்யடியார்களெல்லாம் அடைந்த துன்பம் சிறியதல்ல. காராப்பூந்தி, லட்டு, ஜாங்கிரி, போளி, ஆமை வடை, பாயாசம், பாதுஷா, டில்லி தர்பார், பதாம்பெடா, பதர்பேணி, பாணிப்பனாட்டு முதலிய பக்ஷணங்களை உண்டு சுவைப்பதற்கு ஒப்பானதா அம்மார்க்கத்தின் பண்பு? குருமா கறி, புலவு, கோளா, பிரிஞ்சி, பரோட்டா, பிரியாணி, சேமியா முதலிய மாமிச பதார்த்த வகைகளை உண்டு உவகை கொள்வதற்கு ஒப்பான அழகுடையதா முத்தி நெறி? அல்ல அல்லவா.
அமல முதற்படி கண்டு தம்முள்ளே குரு தரிசனம் பெறுவதற்காக மாயையை அடிப்படுத்துதற்கண் – படிற்றாக்கையாகிய செடி சேருடலைச் செலநீக்கி எம்பெருமானைப் பூணுதற்காக மெய்யடியார்களெல்லாம் அடைந்த துன்பம் நினைக்கவும் முடியுமா? சொல்லவும்படுமா? பிரமனின் கையெழுத்தைக் கிழித்துக் காலனை உதைப்பது என்றால் உதைப்பவனுக்குக் கால் வேண்டாமா? அக்காலைப் பெறுவது எளிதான காரியமா? “ஆட்டுக்காலைத் தாரும்” என இறைவனை வேண்டி அதனைப் பெற்றுக் காலனை உதைத்து நித்தியத்துவம் பெற்றவன் முத்துத்தாண்டவன் அல்லவா? தூலத்தை அமலமாக்குவதற்காக – சூக்குமாக்குவதற்காக உள்ள அருமை – துன்பம் சீவர்கள் சிந்தனை சொற் செயல்களுக்கு அளவுபடுவதாகுமா?
இவ் அனுபவ உண்மைகளெல்லாம் ஆடவர் சிங்கமாகிய மணிவாசகன் அருளிய திருவாசகத் திருமறையில் கௌணமாகக் கூறப்பட்டுள்ளன என்பார்கள். எவர் இதை அறிவார்? இறந்தபின் எளிதில் முத்தியடைந்து விடலாம் எனக் குருட்டுத்தனமாக நம்பி வாழ்க்கை நடத்தும் மாக்கள், ஆறறிவு பூரணம் பெற்ற மானிடனாய்த் தனது தூலத்தை அமலமாக்கி அதனோடு வானிற்கலந்த மணிவாசகன் அருளிய மறைகளை அறிவது எப்படி? இதென்ன? ஒன்றும் விளங்கவில்லையே, அர்த்தமற்ற பொருள்” எனக் கூறித் தங்கள் அறிவின்மையை மறைக்கவே முயல்வார்கள். மறைத்து விட்டதாக நினைந்து அமைவார்கள். ஞானிகளின் பாடல்களை – வேதங்களைக் கற்று அவற்றுள் புதைந்து கிடக்கும் – மறைந்து கிடக்கும் மகத்தான உண்மைகளை அகில சீவர்கள் அறிந்து கொள்வது முற்றாக அசாத்தியமே என்பதைச் சொல்லவும் வேண்டுமா? இதுபற்றியே வேதம் எல்லோரும் ஓதக்கூடாது என்ற விதி ஏற்பட்டது என அறிதல் வேண்டும். ஓதிப் பயனடைய முடியாது என்பதே இதன் பொருளாகும்.
உண்மை முத்தியடையும் பக்குவமுடையவர் முதலில் பவரோக வைத்தியனாகிய குரு அருளும் விதிப்படியே தூலக் கற்பம் உண்டு பௌதிகத் தூய்மை அடைதல் வேண்டும். தூலக் கற்பம் அசித்துப் பொருள் – அன்னம், உணவு (அருந்தல், பொருந்தல், அனந்தல்) மூலிகை வர்க்கம், பாஷாண வர்க்கம், லோக வர்க்கம், உப்பாதி உபரச வர்க்கங்கள் என்பனவே அவை. தூல கற்பம் உண்டு பௌதிகத் தூய்மை அடைந்தவரே ஆறறிவு பூரணம் பெற்ற மானிடராவர் – மக்களாவர். “மக்கள் தாமே ஆறறிவுயிரே” என்பது தொல்காப்பியம். இவ்வாறு தொல்காப்பியம் கூறியும், இருகாற் பசுக்களையே – படிட்பபு, வேடம், அதிகாரம் முதலியவற்றால் இலௌகீக உன்னத நிலையில் வீற்றிருப்பவரையே – வீற்றிருந்து மாண்டு போனவரையே மக்கள் எனக் கருதினார் உலகோர்.
உலகில் ஒழுங்காக தமது பௌதிக நிறை அறிந்து உணவு கொள்பவரைக் காண்பதே மிகவும் அரிதாக இருக்கிறது. அதி தீவிர பக்குவமுடையவர்களைத் தவிர மற்றோர்களால் இது அனுஷ்டிக்க முடியாத காரியமாகத்தான் இருக்கிறது. தன் சரீர இயல்பினை அறிந்து கொண்டு நீராடுவதும், எண்ணைய் போன்ற வேறு கற்கங்களை ஒன்றுசேர்த்து முடிக்கப் பட்டவற்றையாவது உரிய காலங்க்ளில் தலையில் தேய்த்து குளியல் செய்வது, இனமான உணவுகளை நிறை அறிந்து உண்பது, மூலிகை பாஷாண லோக உப்பு உபரச வர்க்கங்களில் தன் சரீரத்திற்குப் பொருத்தமானவகைகளை – இனமானவகைகளைக் கொண்டு பூத பௌதிக பஞ்சீகரண பேதங்களைச் (திணை மயக்கம்) சமப்படுத்த வேண்டிய நிறையையும் கண்டு அதற்கேற்பப் பக்குவத்தைச் செய்து உண்டு பத்தியங் கொண்டு ஒழுகி வருதலே வாய்மையான இயமம், நியமம் என அறிந்து கொள்ள வேண்டும். இந்த பேச்சுரை மிக மிக அத்தியாவசியமான காலத்திற்கேற்ற பேச்சுரை என்பதில் சற்று நீளமாகச் சொல்லும்படி ஆயிற்று. பொறுமையாக உள்வாங்கிக் கேட்டுக் கொள்ளும்படி அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
இவ்வாறு ஒழுகிவந்தால், நிலையாமையை உடைய உடலுயிர்க்கு அணுஅணுவாக நிலைத்த தன்மை உண்டாகிவிடும் – நிலைக்கும் தன்மையும் உண்டாகிவிடும். மன ஒடுக்கமும் தியானமும் தாரணையும் தவமும் சிறிது சிறிதாக நிறை கொண்டு வரும். ஒவ்வொன்றாக அனுஷ்டித்து ஒவ்வொன்றாகத் தாண்டுவது என்பது அறியாமையுடையார்கள் பேசும் பேச்சாகும். “துற்றவை துறந்த வெற்றுயிர் ஆக்கை” யராய் உடலுயிரை வாட்டி வருத்தித் தவம் புரிவோர்கள் இந்த உண்மைகளை அறிந்து கொள்ள இயலாது. நூல்களில் சொல்லப்பட்டவையெல்லாம் வாய்மை நெறி ஒன்று இருக்கிறது என அதனை அறிந்து கொள்ளும் ஆற்றல் உடையதாவற்குச் சாதகமே அன்றி அவைகளே நேரே முத்திவாயிலில் சேர்ப்பிக்க மாட்டா என்பது வெள்ளிடை. நெறியல்லா நெறிகளைக் கொண்டே உண்மை நெறி ஒன்று உண்டு என அதனை அறிதல் முடியும் என்றுணர்க.
ஆன்மா ஆசை வடிவினது; ஆதலால் தொட்டவுடன் இனிக்கும்படியான – தன் நாவுக்குச் சுவையான பொருள்களையே நிறையும் இனமும் அறியாது உண்டு பின்பு வருந்தும் இயல்புடையது. குரு விதிக்கும் நிறையோ என்னவென்றால், தொட்டவுடன் எட்டிக் கசப்பும் நாவுணர்ச்சிக்கு மாறானதும் பின் அழியாத பேரின்பச் சுகத்தைத் தரவல்லதுமாகும். இந்த உண்மைகளை எல்லாம் கௌணமாக அமைத்து – மறைபொருளாக வைத்து அருளியதே மாணிக்கவாசகப் பெருமான் அருளிய திருவாசகம் என்னும் அமுதத் தேன். அந்த தெய்வீகப் பாடலையும் அது சொல்லவரும் மெய்ப் பொருளையும் காணலாமா, வாருங்கள்.
நீக்கி முன்எனைத் தன்னொடு நிலாவகை
குரம்பையிற் புகப்பெய்து
நோக்கி நுண்ணிய நொடியன சொற்செய்து
நுகமின்றி விளாக்கைத்துத்
தூக்கி முன்செய்த பொய்யறத் துகளறுத்து
எழுதரு சுடர்ச்சோதி
ஆக்கி ஆண்டுதன் அடியரிற் கூட்டிய
அதிசயம் கண்டாமே. (அதிசயப்பத்து – 8)
பொழிப்புரை: பரமேசுவரனே! என்னை ஆதியில் உன்னுடைய வீட்டிலிருந்து பிரித்தெடுத்து, அவ்வாறு பிரிந்தபின் பிறவி எடுக்கும்படி செய்வித்தாய். இந்த உடம்பினுள் புகுந்த பின்னர் நான் ஐம்பொறிகளின் உதவியோடு புலன்களை ஆசைதீர அனுபவித்து போகமே பெரிதென எண்ணி, பிறவிப் பெருங்கடலை நீந்தத் தெரியாது தவித்துக் கொண்டிருந்தேன். என் அறியாமைக்கு நீ அறிந்துகொண்டு, எம்மீது மனம் இரங்கி என்னை உனது திருவடியில் சேர்க்கத் திருவுளங் கொண்டு குருவாக வந்து திருவருள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு, நுண்மையாகவும், கை விரல்களில் அமைந்த சின்முத்திரையைச் சொல்லாகச் சொல்லி அருள் செய்தாய். இருமாடுகளை ஏர்பூட்டி உழுவதற்கு இரு மாடுகளையும் இணைக்கக் கூடிய நுகத்தடி வேண்டும். இவையெல்லாம் இல்லாமல் என்னை உன் திருவடியில் சேர்த்துக் கொண்டுவிட்டாய். அதனால் நான் பிறவிக்கடலிலிருந்து மேலேறி வந்துவிட்டேன். இவ்வாறு என்னைத் தூக்கி விடப்படுவதற்கு முன், நான் செய்த, உபயோகமில்லாத பொய்யானச் செயல்பாடுகள் ஒழிந்து போகும்படிப் பாசமாகிய குற்றத்தைத் தொலைத்து, உன் வீட்டிற்கு உரியவன் ஆக்கி, உன் திருவடிகளைக் கொண்டு, பிரமஞானத் தவத்தைச் செய்யும் மெய்ஞ்ஞானிகளிடம் என்னை கூட்டி வைத்த அதிசயத்தைக் கண்டேன்.
(மாணிக்கவாசகர் முற்காலத்தில் திருக்கயிலை மலையில் உள்ள சிவகணநாதர்களுள் ஒருவராய் இருந்து இறைவனது உத்திரவினால், இவ்வுலகில் அவதரித்தவர் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் கூறுகின்றது. இதை ‘முன் என்னைத் தன்னொடு நில்லாவகை நீக்கி’ என்பது வார்த்தைகளிலிருந்து தெளிந்து கொள்ளலாம்).
ஞான மெய்ப்பொருளுரை: நீக்கி = பிளவு உண்டாகச் செய்து. நிலாவகை = கலக்கும் விதம். குரம்பை = சிற்றில் அல்லது சிறு வீட்டில். நுண்ணிய = நுட்பமான. நொடியன = நொடிப்பவை. சொல் = ஆசாரியன் சொல். நுகம் = ஏர் ஓட்டுவதற்கு மாடுகளைப் பிணைக்கும் நுகத்தடி. இந்த இடத்தில் சூரியச் சந்திரர்கள் என்ற இரு மாடுகளை பிரம்மாஸ்திரத் தவம் என்ற திருவடியில் பூட்டி சற்குரு காட்டும் சுடராழித் தவத்தைக் கைக்கொள்ள வேண்டும். விளாக்கைத்து = சேர்த்து, பூட்டி, கலக்கச் செய்து. விளாக்கை = விளாவுதல், கலத்தல். பொய் = பயனில்லாத சொல். துகள் = குற்றம், மாசு.
திருவடியின் மையப்புள்ளியான சிறுவீட்டில் துவாரத்தை உண்டுபண்ணி, அதன் உள்ளே பிராணனோடு அமுதக்காற்றை உள்ளே செலுத்தி, நுட்பமாக சற்குரு காட்டியபடி நொடித்தல் செய்து உள்ளே நோக்கி, சூரியச் சந்திரர்களாகிய இரு திருவடிகளையும் கட்டுவதற்கு நுகத்தடி இல்லாததால், நவகண்டத்தில் ஒன்றாகச் சொல்லப்படும் இளாவிருதம் என்னும் இடத்தில் இருக்கும் நீர் மண்டலமாகிய இருதயக் கமலத்தில், நீரினை இளகச் செய்து, திருவடிகளில் அதோமுகத்தில் இருக்கும் அபானனை மேலே பிரணவத்திடம் கொண்டு போய்ச் செலுத்திடும்படி சுடராழித் தவத்தை செய்யும்போது, மாயா மலங்களாகிய கிரந்தித் திரயங்களை அழித்தொழித்து, குற்றங்களை நீக்கி, பிராணனின் மேல் எழும்பி நிற்கும் சுடரோடு கூடிய சோதியை மேலும் பிரகாசப்படுத்தி விட்டால், சிவம் அவன் திருவடிகளை வெளிப்படுத்திக் கொண்டு நமக்கு தரிசனம் கொடுத்து, இவ்வாறு சுடராழித் தவங்களைச் செய்து கொண்டிருக்கும் மெய்ஞ்ஞானிகளுடன் தன்னை சேர்த்து வைத்த அதிசயத்தைக் காணும்படி சிவபெருமான் செய்வித்து அருள் புரிந்த அதிசயத்தை கண்டுவிட்டேன் என்கிறார் இப்பாடலில் மாணிக்கவாசகர்.
அடுத்து அச்சோப் பதிகத்தில் என்ன சொல்கிறார் பாருங்கள்.
தையலார் மையலிலே தாழ்ந்துவிழக் கடவேனைப்
பையவே கொடுபோந்து பாசம்எனும் தாழ்உருவி
உய்யும்நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை
ஐயன்எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார் அச்சோவே. (அச்சோப்பதிகம்-7)
பொழிப்புரை: பெண்களின் காம மயக்கத்தில் அமிழ்ந்து, கீழ்நோக்கி விழும்படியான என்னை ஐயன் மெதுவாகக் கொண்டு பிரணவக் குகைக்குச் சென்று, அக்குகையை மூடியிருக்கும் மும்மலங்களாகிய கதவின் தாளினைத் திறந்து பிரணவத்தின் உட்பொருளாகிய ஞானச்செல்வங்களைக் காட்டுவித்து, அங்கே ஓங்காரத்தின் உட்பொருள் உரைத்து, அருள் செய்த வல்லபத்தை யார் அறியப் போகின்றார்கள்? அறிந்தால் அது அதிசயமே !
ஞான மெய்ப்பொருளுரை : திருவடியின் மெய்ப்பொருளில் அமைந்திருக்கும் பரவிந்துவிலிருந்து அதன் ஒளிக்கலைகளைப் பிரித்தெடுத்து, அதை நாதக் கலையோடு சேர்த்து வைத்துவிட்டால், முத்தி எனும் பதம் கிடைத்துவிடும். அப்படியில்லாது, சாதகனின் தேகத்தில் நிலைத்துக் காணப்படும் விந்துவை பெண்களின் மீதான மோகத்தினாலும் காமத்தினாலும் இழந்துவிடக்கூடாது. இதைத்தான், “தையலார் மையலிலே தாழ்ந்து விழக்கடவேனை” என்றார்.
பிரணவக் குகைக்குள்ளே இருக்கும் ஞானச் செல்வங்களை மூடி வைத்துக் கொண்டிருக்கும் மும்மலங்களை ஒழிப்பதற்காகப் பாசத்தை கதவாக்கி, அதைத் திறப்பதற்காக, “தாழுருவி” என்றார். தாழ் = தாட்பாள். உருவி = இழுத்து.
அவ்வாறு சுடராழித் தவத்தினால் பிரணவக் குகையைத் திறந்து, உள்ளே தோன்றும் பிரணவத்தையும், பிரணவக் குகையையும், அதன் மையப்புள்ளியில் இருக்கும் தெய்வத் தத்துவங்களையும் காட்டியதால் அது ஒரு ஞான மெய்வழியாகும். இதைக்காட்டத்தான், “உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை” என்றார். ஐ என்னும் பீசத்தால் குறிக்கும் இடம் நமது திருவடிகள்தான்.
இந்த அதிசயப்பத்து, அச்சோப் பதிகத்தில் வரும் பாடல்கள் சொல்லும் மெய்ப் பொருளை நன்றாக உள்வாங்கிக் கொண்டால் நீங்கள் மெய்யடியார் ஆவதை யாராலும் தடுக்கவே இயலாது. புத்தியுள்ளோர் பிழைத்துக் கொள்க.
அறிவதும் எளிதுதான். உணர்வதும் எளிதுதான். உணர்ந்ததைப் பிறர்க்கு உரைப்பதும் மிகவும் எளிதுதான். உணர்ந்தவாறே ஒழுகுவதென்பதோ – வினையில் ஏறி இயங்குவதுதான் அரிதினும் அரிதானச் செயலாகும்.
இதைத்தான் நம் வள்ளுவப் பெருந்தகை,
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல்
என்றார். அதனால் உண்மை முத்தியடைவது எளிது என எண்ணி இருப்பது மிக மிகத் தவறான செயற்பாடாகும். அது முடியாத காரியம் என நினைந்து சோம்புவதும் இழுக்கானச் செயலாகும்.
தூலக் கற்பத்தை உண்டு ஆறறிவு பூரணம் பெற்ற மானிடரே சூக்கும கற்பம் உண்பதற்கு அரிதாக இருக்கிறார்கள். சூக்கும கற்பம் என்பது அதுவொரு சித்துப் பொருளாகும். அமல ஐகார ஒலி எனப்படும் வேதம் இதுவே. குருவின் அருளால் சூக்குமக் கற்பத்தைப் பெற்று உண்டு உண்டு பதியாகிய மதியை – மதியாகிய குருவை – குருவாகிய பெருந்துறையானைப் பற்றிக் கொள்ள வேண்டும் – பற்றிப் படியேற்றம் பெற வேண்டுமே. படியேற்றம் பெறும்பட்சத்தில் அசுத்த நிறையாகிய பாசம் அணுஅணுவாக நீற்றுப்போய்விடுமே. படி, அணி, வரை, அங்கம், ஆதாரம் என்பனவெல்லாம் ஒருபொருட் கிளவியாகும். இவை கீழ் ஆறு மேல் ஆறு எனப் பன்னிரெண்டாக நம் சரீரத்தில் அமைந்திருக்கின்றன. இந்த ஆதாரங்களைத்தான் வேத அந்தத்தையும் சித்தின் அந்தத்தையும் சமரசமாகக் கண்ட சித்தர் பெருமக்கள், வேதாந்த சித்தாந்த சமரச நிலை பெற்ற வித்தகச் சித்தர்கள் வரைகள் எனக் கூறினார்கள்.
உலகில் நூல்களாய் முன்னிலையில் விளங்கும் அங்கம் வேதம் முதலியன இடுகுறிகளாகும். வாய்மையான வேதம் முதலியவற்றின் உண்மைகளை பிரமஞானிகள் திருவாக்குகளாகிய வேத நூல்களில் கண்டு நாம் தெளிந்து கொள்ளலாம்.
வேதத்தை விட்ட அறமில்லை வேதத்தின்
ஓதத் தகும்அறம் எல்லாம் உளதர்க்க
வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற
வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே (தி.ம.51)
வரும்ஆதி ஈரெட்டுடன் வந்த தியானம்
பொருவாத புந்தி புலன்போக மேவல்
உருவாய சத்தி பரத்தியானம் உன்னும்
குருவார் சிவத்தியானம் யோகத்தின் கூறே (தி.ம.598)
கண்ணாக்கு மூக்குச் செவிஞானக் கூட்டத்துள்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்டு
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளிகாட்டிப்
புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே (தி.ம.599)
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே (தி.ம.600)
ஐஐந்து மத்திமை யானது சாக்கிரம்
கைகண்ட பன்னான்கில் கண்டம் கனாஎன்பர்
பொய் கண்டிலாத புருடன் இதயம்சுழுனை
மெய் கண்டவன் உந்தியாகும் துரியமே (தி.ம.2142)
“நாதப்பிரம்மம்” என்ற தலைப்பில் பேசிய பேச்சுரையை இங்கே நீங்கள் அனைவரும் மறுபடியும் உங்கள் மூளைக்குள் கொண்டுவந்து சிந்தித்திடுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.
ஏழாவது படிதான் சப்த ஸ்தானம். ஒலியாகிய நாதம் தசநாதம் கிண்கிணி நாதம், வீரகண்டாமணிச் சிலம்பொலி நாதம் (தியாகராசர் பாதத்தல் ஒலிக்கும் நாதம்), பஞ்சநாதம், சங்க நாதம் (பஞ்சநதம் – இடுகுறி ஐயாறு என்னும் திருஅடித்தலம்), பறை நாதம் முதலிய நாதங்களைக் கடக்க வேண்டும். சங்க நாதம், பறை நாதம் என்பன கடப்பது மிக அரிதான விசயமாகும். இந்தக் காலத்தில் பலவித கர்மங்களின் போராட்டம் மிக அதிகமாகவே இருந்து வருகிறது.
இந்தச் சூக்குமக் கற்பத்தை ஒருவன் குருவருளால் உண்பான் என்றால், அவனுக்குச் சாதல் என்பதேது? இறப்பென்பதேது? உடம்பை வாட்டி வருத்தித் தவம் புரிந்து அசுத்த நாதங்களையே சுத்த நாதங்கள் என அமையும் சவிகற்ப நிர்விகற்ப நிட்டையாளர் இவற்றை அனுபவமாக அறிதல் முடியாத காரியம்தான். சுத்த நாதமாகிய சூக்குமக் கற்பம் ஒன்றுதான் நமது தூலத் தேகத்தை அமலமாக்கும். இது நான்மறைகளும் பிரமஞானிகளும் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் சமயக் குரவர்களும் சொல்லும் சத்தியத்திலும் சத்தியமாகும்.
மேலே கூறப்பட்ட உபாசக நிட்டையாளர்கள் மேலே கூறிய அசுத்த நாதங்களைக் கேட்டுக் கொண்டு எத்தனைக்காலம் தவத்தை செய்து வந்தாலும், அவர்களின் உடலகத்தில் இருக்கும் அசுத்த நிறையே ஆக்கம் பெற்று விளங்கிடும் என்பதால், வாத, பித்த, சிலேத்துமங்களின் கனமிகுதியால் தூலத் தேகம் பிணமாகி விழ இறந்து பிறப்பவர்களே ஆவர். இதன் விரிவினை நாம் ஏற்கனவே பேசிய நாதப்பிரம்மம் பேச்சுரையில் காணலாம்.
தூலக் கற்பமுண்டு பௌதிகத் தூய்மை அடையாத இன்னோர் ஆறறிவு பூரணம் பெற்ற மானிடராய்ச் சூக்குமக் கற்பத்தை உண்டு நித்தியத்துவத்தை அடைவதற்கு அருகதை அற்றவராவார். மகர வித்தையாகிய மௌன வித்தையை சற்குருவின் அருளால் தீக்கையாகப் பெற்றுக் கொண்டு, அதை உணர்ந்து நன்கு பிரமஞானத் தவத்தைச் செய்து சகச நிட்டை கைவரப் பெற்றவரே – சூக்குமக் கற்பம் உண்பவராகி தமது தூலத் தேகத்தை அள்ளூராக்கையாக்கிச் சூக்குமமாய் (ஓ வடிவம்) ஞானாகாசத்தில் மறைந்து மீண்டுவாரா பெருநெறியான மருவா நெறியினை நித்தியத்துவமான உண்மை சத்திய நிலையை அடைய வல்லவர்களாவார்கள். இது காலத்தின் கட்டாயம், சத்தியத்திலும் சத்தியமான உண்மை மெய்வழிப் பாதை.
எட்டாவது படி லலாட ஸ்தானம் என்ற இரு புருவங்களின் மத்தி. இது சுத்த நந்தி நாதம் ஒலிக்கும் இடமாகும். உபாசக நிட்டையாளர் – சவிகற்ப நிர்விகற்ப நிட்டையாளர்க்கு உரிய சுழிமுனைக்கும் இதற்கும் உள்ள இடையீடு மிகப்பெரியது. சுத்த நந்தி நாதமே “பெருந்துறைக்கோன் முன்பால் முழங்கும் முரசு” என மணிவாசகரால் பணித்தருளப்பட்டது. திருவாசகத்தின் திருத்தசாங்கத்தின் எட்டாம் செய்யுள் இதை மொழிகிறது.
புணர்ப்பது ஒக்க எந்தை என்னை
ஆண்டு பூண நோக்கினாய்
புணர்ப்பது அன்று இதுஎன்ற போது
நின்னொடு என்னொடு என்னிதாம்
புணர்ப்ப தாக அன்றி தாக
அன்பு நின்க ழற்கணே
புணர்ப்ப தாக அங்க ணாள
புங்க மான போகமே. (71)
ஞான மெய்ப்பொருளுரை : புணர்ப்பு, புணர்தல், புணர்ச்சி ஆகிய இந்த உயர்ஞானத்தைப் பற்றி மாணிக்கவாசகர் இங்கே மிக அழகாக நம் தமிழ்ச் சமுதாயத்திற்கு ஆவணப்படுத்தி ஞானச் செல்வங்களை புதையலாக்கிக் கொடுத்திருக்கிறார்.
இப்பாசுரத்தில் நான்கு இடங்களில் புணர்ப்பைப் பற்றி மாணிக்கவாசகர் எடுத்தாண்டிருக்கிறார். 1.புணர்ப்பது ஒக்க எந்தை, 2.புணர்ப்பது அன்று இது என்றபோது, 3.புணர்ப்பதாக அன்றி தாக அன்பு நின்கழற்கணே, 4.புணர்ப்பதாக அங்கண் ஆள என்ற நான்கு இடங்களில் புணர்ப்பைப் பற்றிப் பேசுகிறார்.
- என் தந்தையே, உன் திருவடிகளோடு நான் புணர வேண்டும். அந்தப் புணர்தல் நடக்கும்போது, என் திருவடிகள் இரண்டும் ஒன்றிணைந்து, உன் திருவடியோடு கலந்திட வேண்டும்.
- அவ்வாறு இறைவனோடு புணர்ந்து விட்டால், எனக்கும் அவனுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை.
- தாகம் எடுத்தவன் தண்ணீரைத் தேடுவதைப் போல, புணர்தல் நிகழும்போது மிக்க அன்பு உண்டாகியும், பரவசம் உண்டாகியும் மெய்யுணர்வுகள் இறைவனைத் தேடும். அன்புதான் தாகம், இறைவன்தான் தண்ணீர்.
- அவ்வாறு அன்பானது உன் திருவடிகளில் பொருந்தி புணர்ந்து நிற்கும்போது, கண்கள் கலைச்சரங்களை வெளிப்படுத்தி என்னை ஆளுமைப்படுத்தி தெய்வ போகத்தில் ஆழ்த்தித் திளைத்திருக்கும்.
மேற்கண்ட நான்கு ஞான மெய்நிலைகள் அனைத்தும் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்களால் மனிதர்களின் பிரமஞானத் தவங்களுக்காக கட்டமைத்துக் கொடுக்கப் பட்டவைகளாகும். இதைத்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் ‘சுடராழித் தவம்’ என்றார்கள். சுடர் – தீபம் ; ஆழி – கடல், சக்கரம். சக்கரத்தைப் பிடித்து தீபவொளியை பிரணவக் குகைக்குள் கொண்டு சென்றால், இருட்டு அகன்று உயிர்த் தீபம் நன்றாகத் துலங்கிக் கொண்டிருக்கும்.
இந்தப் பாசுரத்தில் மாணிக்கவாசகர் சொல்ல வருவது எதுவென்றால், அனைவரும் சுடராழித் தவத்தைச் செய்து வந்தால், இறைவனோடு புணரும் பேரின்ப மெய்யுணர்வு நிலைகள் நமக்குக் கிட்டும் என்பதுதான். மனிதர்களின் பாவங்களைப் போக்கி, புண்ணியங்களை அளவிலாது உயிரில் சேர்க்கும் வைபவத் திருவிழாதான் இந்த சுடராழித் தவம். இது பிரமஞானத் தவத்தின் ஒரு முக்கிய நிலை சாதனமாகும். மனிதர்களோடு புணர்ந்தால் கிடைப்பது சிற்றின்பம் ; இறைவனோடு புணர்ந்தால் கிடைப்பது பேரின்பம். முதல்நிலை மரணத்தைக் கொடுக்கும் ; இரண்டாம் நிலை இறவா நிலையைக் கொடுக்கும். விந்தும் நாதமும் திரவ நிலையில் இருக்கும்வரை மரணம் நம்மைத் துரத்திக் கொண்டுதான் இருக்கும்.
ஆனால், அதே விந்து பரவிந்துவாகவும் ; நாதம் பரநாதமாகவும் அதாவது திரவ நிலையை ஆவி நிலைக்கு மாற்றி விட்டோம் என்றால் இறக்கும் நிலை இறவா நிலைக்குச் சென்றுவிடும். விந்துவையும் நாதத்தையும் (சுரோணிதம்) ஆவியாக்க வேண்டுமென்றால், வேதியியல் ரசவாதம் நடந்தாக வேண்டும். அந்த ரசவாதத்தை முழுமையாக முடிக்கவேண்டும் என்றால், அது சுடராழித் தவத்தால் மட்டுமே முடியும். நீங்கள் பரவிந்துவாகவும் பரநாதமாகவும் மாற வேண்டும். அதுதான் பிரமஞானத்தின் தொடக்கப் புள்ளி. சுடராழி அதை உங்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது. ஏற்றுக்கொண்டு பயணிக்க நீங்கள் தயார் என்றால், உங்களுக்கும் ரசவாதம் சாத்தியமே என்று இவ்விடத்தில் அன்போடும் உங்கள்மீது கொண்ட பேரிரக்கத்திலும் கூறுகின்றோம்.
இந்தப் பாசுரத்தில் மாணிக்கவாசகர் மூன்றுவித பிரமஞானத் தந்திரங்களை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
- திருவடிகளின் சேர்க்கை.
- திருவடிகளில் பார்வையையும் மனத்தையும் சேர்த்து, பிராணனையும் அபானனையும் அதில் ஊன்றி நிலைப்படுத்தல்.
- திருவடிகளிலிருந்து ஒளிக்கலைகளை வெளிப்படுத்தி நிற்றல்.
திருவடிகளின் சேர்க்கைக்கு திருமந்திரம் சொல்வது :
என்நெஞ்சம் ஈசன் இணையடி தாம்சேர்ந்து
முன்னம்செய்து ஏத்த முழுதும் பிறப்பறும்
தன்நெஞ்சம் இல்லாத தலைவன் தலைவிதி
பின்னம்செய்து என்னைப் பிணக்கு அறுத்தானே (தி.ம.2973)
எந்த இடத்தில் பார்வையும் மனமும் பிராணனும் ஒன்றுபட்டு நிற்குமோ, அந்த இடத்தில்தான் அன்பு பொங்கிக் கொண்டு வரும். எல்லா உயிர்களிடமும் இரக்கமும் உண்டாகும். பார்வை, மனம், பிராணன் ஒன்றுபட்டு நிற்கும்போது தோன்றும் அன்புதான் நீடித்த, நிலைத்த அன்பாகும். இந்த அன்பு தோன்றும்போதுதான் இறைவன் நம்முள் வெளிப்பட்டு நிற்பான். இந்த அன்பு தோன்றாவிட்டால், இறைவனை எங்கும் காண இயலாது.
என்பே விறகா இறைச்சி அறுத்திட்டுப்
பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும்
அன்போடு உருகிஅகம் குழைவார்க்கு அன்றி
என்போல் மணியினை எய்தஒண் ணாதே (தி.ம.272)
இன்பப் பிறவிக்கு இயல்வது செய்தவன்
துன்பப் பிறவிக்குத் தொழில்பல எண்ணினும்
அன்பில் கலவிசெய்து ஆதிப்பிரான் வைத்த
முன்புஇப் பிறவி முடிவது தானே (தி.ம.281)
நேத்திரங்களிலிருந்து கலைகள் வெளித்தோன்றி வருகிறதா? இல்லையா? என்பதற்கு ஆதாரமான திருமந்திரப் பாடல்கள் :
விண்ணின்று இழிந்து வினைக்குஈடாய் மெய்கொண்டு
தண்நின்ற தாளைத் தலைக்காவல் முன்வைத்து
உண்நின்று உருக்கிஓர் ஒப்பிலா ஆனந்தக்
கண்நின்று காட்டிக் களிம்பு அறுத்தானே. (தி.ம.113)
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்தங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே (தி.ம.600)
எண்ணாயிரத்து ஆண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டுஅறிவார் இல்லை
உள்நாடி உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்நாடி போலக் கலந்து நின்றானே (தி.ம.603)
நெற்றிக்கு நேரே புருவத்து இடைவெளி
உற்றுஉற்றுப் பார்க்க ஒளிவிடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றுஆய பரமன் இருந்திடம்
சிற்றம் பலம்என்று சேர்ந்துகொண் டேனே (தி.ம. 2770)
கண்ணுள் நின்ற ஒளியைக் கருத்தினை
விண்ணுள் நின்று விளங்கிய மெய்யினை
எண்ணி எண்ணி இரவும் பகலுமே
நண்ணு கின்றவர் நான்தொழுந் தெய்வமே (தாயுமானவர்)
இதனைத்தான் அருளமுதம் எனவும், இதனை அருந்துபவர்களைத்தான் – அனுபவிப்பவர்களைத்தான் தமது தூலம் கரைந்து அருவமாகப் பெறுவார்கள் எனவும் வேதங்கள் முழங்குகின்றது. இவ் ஒலியே சிவம் – சிவ வடிவம், “மறையுமாய் மறையின் பொருளுமாய் வந்து என் மனத்திடை மன்னிய மன்னே” என்று திருவாசகம் சொல்கிறது.
“ஓசையும் ஈசன் உணர வல்லார்க்கே” (திருமந்திரம்) எனவும், “அரவொலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள், விரவிய வேத ஒலி விண்ணெலாம் வந்து எதிர்ந்திசைப்ப” (சுந்தரர் தேவாரம்) எனவும் அருளப்பட்டனவற்றையும் நாம் இங்கே ஆராய வேண்டும். வேதம் சிவ சந்நிதானத்தில் ஒலிப்பது என்பதன் உண்மையும் இதுதான். அமல ஐகார ஒலி – எழுதாமறை என்பதும் இதுதான்.
சூக்குமக் கற்பமாகிய இந்த நாதங்கள் நமது சரீரமாகிய ஆலயத்துள் – பூமியுள் ஓயாது ஒலித்துக் கொண்டே இருக்கின்றன. அங்கங்களாகிய வரைகளையும் அவற்றின் இரகசியங்களையும் சற்குருநாதன் வாயிலாக உணர்ந்து, அவற்றை ஒவ்வொன்றாகக் கடந்து, அப்பால் சப்த சுரங்களாய், ஆரோகண அவரோகணமாய், ஆதி நடு அந்தமாய், அந்தம் நடு ஆதியாய்க் கெதி மாறி மெய்யடியார்களாகிய தமிழர்கள் மணிடற்றும் அதாவது நெஞ்சமாகிய கண்டத்தும் சகல சீவராசிகளிடத்தும் அங்கும் இங்கும் எங்குமாய் ஓவாது ஒலித்துக் கொண்டிருக்கும் வேதங்களை ஓதி உணர்ந்து அவற்றைக் கண்டு கண்டு கடந்து, அவ்வேதங்கள் ஒலிக்கும் இடமாகிய – உற்பத்தி ஸ்தானமாகிய நாதபீடம் என்னும் உத்தரகோசமாகிய வடபாகத்தையும் தெரிந்து, அவ் உத்தரதேசம் என்னும் உத்தரகோசத்தில் – கயிலையங்கிரியாகிய மேரு அந்தத்தில் – வேத அந்தத்தில் (அந்தம் – ஒலியின் ஈறு ; அந்தம் அடி முடி என்பன ஒன்றே) ஏறி, அம்மேரு உச்சியில் விளங்காது நின்ற திருவருட் சோதிப் பிழம்பாகிய ஆரியனைக் கண்டு கலப்பதுதான் – ஆரியனாவது தான் சித்தின் அந்தம். அதாவது சித்தாகிய ஆவி – உயிர் – சீவன் – அந்தமாகிய ஈற்றில் – சிவத்தில் கலப்பதென்பது.
இந்த இடத்தில்தான் இச்சீவன் தொண்டனாகிய தமிழன் என்னும் பெயர் மாறி அந்தணனாய் ஆரியன் என்னும் சீரிய திருநாமம் பூண்டனன் என்பார்கள். இவ்விடத்தில் வேதாந்தம், சித்தாந்தம் என்னும் இரண்டும் சமரசம் அடையும். வாய்மையான வேதாந்த, சித்தாந்த சமரசம் இதுவே என நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
உலகில் வழங்கும் சில நூல்களின் சாரமாகிய முடிபையே வேதாந்த, சித்தாந்த சமரசம் என்பது உலகியலாகிய போலி வழக்கேயாகும்.
மேலே சொல்லப்பட்ட வாய்மையான வேதாந்த, சித்தாந்த சமரச நிலை பெற்ற வித்தகச் சித்தராகிய மெய்யடியார்கள்தான் உண்மையிலேயே சீவன்முத்தர்கள் ஆவார்கள். தமது தூலத் தேகம் பூரண அமலமடைந்து சூக்குமமாய் – ஓங்கார வடிவமாய் அருளாகிக் கரைய மறைந்து உண்மைச் சைவமுத்தி அடைவோர் இந்த மெய்யடியார்களே என்று சொல்லி, நமது உடலுயிரை அமலமாக்கி நாம் அடையும் நித்தியத்துவமாகிய உண்மை முத்தியை இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு தூல ஆன்மாவும் அடைந்திட வேண்டும் என்று ஆசிர்வதித்து வாழ்த்தி இப்பேச்சுரையை இனிதே முடித்து மகிழ்கின்றோம், பிரமஞானப் பொற்சபைக் குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!