பிரம ஞானப் பொற்சபை நடத்தும் “பிரம்மஞான கிரியா தீக்ஷை” நிகழ்வில் எங்களுடன் இணையுங்கள் 09 மார்ச் 2025 விடுதலை மற்றும் உள்ளார்ந்த அமைதி பெறும் பாதையை ஆராயுங்கள். மேலும் விவரங்களுக்கு, பிரம்மஞான கிரியா தீக்ஷை . குருகுலக் கல்வியுடன் ஆன்மிக வெளிச்சத்தை காணுங்கள். நிலை 5

சாகாக் கல்வி

தமது தூலம் பிணி, மூப்புகளால் பழுதடைந்து பிணமாகாதவாறு சாதக யோகங்களால் அதனை மறுத்த அதாவது மாற்றிய அப்பர் பெருமானை யானை கொல்ல வந்தபோது, அந்த யானை அப்பரைப் பார்த்ததும் அவரை வணங்கி வலம் வந்து நீங்கிப் போனது.  அவரை சுண்ணாம்புக் களவாயில் தூக்கிப் போட்டும் அவர் மேனி எரிந்து போகாமல் குளிர்ச்சியாகவே இருந்தது. கடலில் தூக்கிப் போட்டும் அவர் தேகம் அழியவேயில்லை. இவையெல்லாம் அப்பர் பெருமான் உண்மை முத்தி நிலையை அடைந்திருந்தார் என்பதையே காட்டுகிறது.

சத்தும் சித்துமாகிய உடலுயிர்கள் ஒன்றோடு ஒன்று சத்துருத்துவம் அமைந்து பிரிந்து போகாமல், சற்குருவின் அருளால் காட்டிக் கொடுக்கப்படும் பிரமஞானத் தவங்களால் அஞ்ஞானத் தத்துவங்கள் இருள்நீங்கி, ஞானத் தவத்தால் உயிருக்குள் ஒளி பெருகி, உடலும் உயிரும் ஒன்றோடு ஒன்று மித்துருத்துவம் அடைந்து சூரிய, சந்திரக் கலைகள் கூடிக் குழைந்து, அள்ளூராக்கையாகிச் சூக்குமமாய், அருளாய் சிவமாகவே மாறுவதற்கு தேவையான அனுட்டானங்களைக் கூறுகின்ற, வேத நூல்களோ, உபநிடதங்களோ இவ்வுலகில் இதுவரையிலும் எந்த மொழியிலும் சொல்லப்படவில்லை.  நம் ஆருயிராம் தமிழ் மொழியில் மட்டுமே இதுபற்றி எண்ணற்ற ஞானக் குறிப்புகளும், ரகசியங்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. “பத்தியால் அடையும் அங்கலிங்க ஐக்கியம் பகர்ந்திடும் உபநிடம் இன்றாம்” என்று சுத்தசாதகத்தில் நான்காம் பாட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. சுத்தசாதகத்தைப் பாடியவர் குமாரதேவர் ஆவார்.

“தூலம் தோன்றிய முறையே சூக்குமமாய் அருளாய் ஒடுங்கிச் சிவாங்கமாதலே உண்மை முத்திநிலை” ஆகும்.

“தூலம் பழுதடைந்து பிணமாகப் பூமியில் விழப்படுமாயின் அது பிறவி நெறியே அன்றி, முத்தி நெறி அன்று”. தூல, சூக்கும, காரணங்கள் தம்மில் பிரிந்து வெவ்வேறாக நிற்கமாட்டாது.  முத்தியடைவோர் உலகினர் காணும்படியே தூலத்தோடு மறைவார்கள் என்று சுத்த சாதகத்தில் மிகவும் வற்புறுத்திக் கூறப்பட்டிருக்கிறது.

சைவம் என்பது பிற உயிர்களை கொன்று அருந்தாமல் இருப்பதைப் போலவே, தம் உயிரையும் நரை, திரை, மூப்பு, பிணியால் கொல்லப்படாமல் சாதக யோகங்களால் நித்தியத்துவம் அடைவதுதான் உண்மையிலேயே சைவ நெறியாகும்.  நீங்களும் விலங்குகளைப் போல, பறவைகளைப் போல செத்தொழிந்தால் நீங்கள் சைவர்கள் அல்ல ; அசைவர்கள்தான்.

மனித உடல் அமலநிலை அடைவதற்கு உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பிரமஞானிகளும் சித்தர்களும் சொல்லிய வகைப்படி உணவுகளை எடுத்துக் கொண்டால், இந்த தேகம் நித்தியத்துவத்தை நோக்கித் திரும்ப ஆரம்பிக்கும்.

பிரமஞானக் கிரியா

தவப் பயிற்சி

பிரமஞானக் கிரியா

தவப் பயிற்சி

 

பிரமஞானப் பொற்சபை பீடம்

இவ்வுலகத்தில் மறைக்கப்பட்ட பிரம சத்தியத்தை முதலில் எம் குருதேவரின் ஆசிர்வாத்த்தோடும் அனுமதியோடும் உங்களுக்கு இங்கே பிரமஞானக் குருகுலத்தில் கற்றுக் கொடுக்கிறோம்.

இக்கலையைக் கற்றோர் முடிவாய் பிரம  ஞானத்தைக் கற்றிருப்பார்கள்.  பிரம ஞானமாய் உருமாறியிருப்பார்கள்.  அதுதான் இக்கலையின் அதிசயமே.  உங்கள் உயிரை நீங்களே நேருக்கு நேராக கண்டு இன்புறுவீர்கள்.  ஒவ்வொரு நாளும் உங்களுக்குக் கிடைக்கும் ஞான அனுபவங்கள் இவற்றை பறைசாற்றி வந்து கொண்டிருக்கும்.  இதற்கு எம் மாணவர்களே உங்களுக்கு சாட்சிப் பத்திரமாக இருக்கிறார்கள்.

பிறவியை அறுப்போரே இப்பிரம ஞானத்தைத் தேடி வந்து சேர்வார்கள்.  சென்ற பிறவியில் விட்டகுறை தொட்ட குறையாக இக்கலை இப்பிறவியில் அவர்களை வந்தடையும்.  இக்கலையைப் பெற்றோர் பெரும்புண்ணியமும் தவமும் செய்திருக்க வேண்டும்.  அல்லார்க்கு இக்கலை கண்ணில்கூட தென்படுவது இல்லை.  சும்மா வருமோ ஞானம்? சும்மா கிடைக்குமோ தவம்?

பிரமஞானக் கிரியாவைப் போல உங்கள் பிறப்பின் கர்மப் பதிவுகளையும் வினைப் பதிவுகளையும் பிராரப்த (முற்பிறவிகளில்) மற்றும் சஞ்சிதக் (இப்பிறவியில்) கர்மங்களையும் சுட்டறுக்கும் ஞான யோகக் கல்வி இவ்வுலகிலேயே இல்லை. ஒவ்வொரு யோகமும், ஞானமும் பல்வேறு செய்திகளையும் அனுபவங்களையும் சொல்லிச் செல்கின்றனவே அன்றி, அவை உங்கள் உயிரான பிரமத்திற்குள் சென்று தைத்து நிற்பதேயில்லை.  ஆனால், பிரமஞானக் கிரியா உங்கள் உயிரின் ஆதிமூலத்தையே அசைத்து, அசைத்து, ஊதி, ஊதி உயிரின் ஒளியைப் பெரிதாக்கி, பெரிதாக்கி மண்ணுக்கும் விண்ணுக்குமாய் பிரம ஒளியைப் பிரகாசிக்க வைத்திடும்.

இக்கலை உங்கள் உயிரைத் தூண்டி சுயம்பிரகாசமாய் சுடர்விட்டுப் பிரகாசிக்க வைத்திடும்.  உயிரைத் தூண்டும்போதே உங்கள் ஒலியாற்றல்களும் தூண்டப்படுவதை தசவித நாதங்களாய் உங்கள் காதுகளினாலேயே கேட்பீர்கள்.  உங்கள் உயிரின் ஒளியை ஒளிப் பிரகாசத்தை உங்கள் ஊனக்கண் கொண்டே காண்பீர்கள்.  இங்கே மறைப்பு ஏதும் இல்லை.  சத்தியத்தை நேருக்கு நேராக சந்திப்பீர்கள்.  சந்தித்தப்பின் அதில் கரைந்தே போய்விடுவீர்கள்.

அனைவருக்கும் தனித்தனி சத்தியம் என்றெல்லாம் இவ்வுலகில் இறைவனால் படைக்கப்படவில்லை.  அனைவருக்கும் ஒரே ஒரு சத்தியம்தான்.  இறைவனுக்கும் அதே நியதிதான்.  அதுதான் திருவடி மெய்ப்பொருள்.  உங்கள் வாழ்வின் மெய்மையை, உண்மையை, சத்தியத்தைச் சொல்லும் ஒரே வித்தை, ஒரே கலை இந்த பிரமஞானக் கிரியா மட்டுமே.

இயற்கை கொடுத்த ஞானப் பொக்கிஷம்

அவதாரங்கள் மானிட சமுதாயத்திற்கு அரிதாக நிகழும் இயற்கையின் கொடைகள் ஆகும்.  அப்படி அரிதான ஒரு பரிமளம் கமழும் ஞானப்பூதான் பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்கள். தமிழை சங்கம் வைத்து வளர்த்தெடுத்து வரும் மதுரை மாநகரில் பிறப்பெடுத்தவர்தான் எம்முடைய சற்குருவான ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி.

இவரின் குழந்தைப் பருவம் இறைவியால் ஆட்கொள்ளப்பட்டிருந்த்து.  கருவிலேயே திருவால் ஆட்கொள்ளப்  பட்டவர் இவர் என்று எம் குருவின் தாயார் சொல்வதைக் கேட்டிருக்கின்றோம்.  அடிக்கடி இவர் முன்னால் ஒளி வட்டமாக தெரிவதாகத் தாயாரிடம் கூறுவாராம்.  உறங்கும்போதும் இவர் முகம் பௌர்ணமி நிலவின் ஒளியினைப் போல பிரகாசிப்பதைக் கண்டு தாய் பிரமித்துப் போவாராம். உறங்கும்போது இவர் முகம் பௌர்ணமி நிலவின் ஒளியினைப் போல பிரகாசிப்பதைக் கண்டு குருவின் தாய் பிரமித்துப் போவாராம்.

ஸ்ரீவித்யை மார்க்கத்தில் உச்சத்தைத் தொட்டவர்.  ஸ்ரீசக்கரத்தையே உடலில் கண்டு விண்டு ஞானம் அடைந்த ஞானி.  தன்னை அறிந்து, தனக்குள் இருக்கும் இறையை அறிந்து, இறைக்கும் இருக்கும் உயிரெனும் ஒளியாற்றலை அறிந்து, ஒளியாற்றலை நல்கும் ஈசனின் ஆற்றலை அறிந்து, ஈசனுக்கு ஆற்றலை வழங்கிக் கொண்டிருக்கும் ஆதிசக்தியின் ஒளி, ஒலியாற்றல்களை அறிந்து, சதுரகிரி மலையில் தவஞான யோகியாய் வாழ்ந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் ஐம்பதுக்கும் மேற்பட்ட மூலிகை கற்பங்களை உட்கொண்டு, தேகத்தை வைரமாக்கிக் கொண்டு வாழும்போது, அகத்தியர் மற்றும் போகர் சித்தர்களால் கட்டளையிடப்பட்டு மகா அவதார் பாபாஜி அவர்கள் எம் குருவை ஆட்கொண்டு இமயமலைக்கு அழைக்கப்பட்டார்.  அங்கே மகா அவதாரின் ஞான ஒளியால் தூண்டப்பட்டும் வழிகாட்டப்பட்டும் பிரமஞானக் கிரியா எனும் ஒளி மற்றும் ஒலி ஆற்றல்களைக் கொண்ட சுடராழி ஞானத் தவத்தை தொடர்ந்து இருபது ஆண்டுகள் கடைப்பிடித்து ஈசனின் ஆசிர்வாதத்தால் சித்தர்களின் முன்னிலையில் மகா அவதார் பாபாஜியால் எம் குருவுக்கு வழங்கப்பட்டு, ஞான ஒளியுடல் பெற்று வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

உயிரை வளர்க்கும் உபாயம்

நாம் நம் உடலுக்குத் தினமும் உணவு கொடுத்து உடலை வளர்த்து வருகிறோம்.  ஆனால், நம் உயிருக்கு உணவு ஏதும் கொடுத்து வளர்த்து வருகிறோமா? இல்லையல்லவா. அதனால்தான் மனிதன் செத்துப் போகிறான்.  உயிருக்கான உணவினை அனுதினமும் கொடுத்து வளர்த்து வந்துவிட்டால், உயிரானது நம் உடலைவிட்டு நீங்காது என்று எம் குரு ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷி அவர்களால் கற்பிக்கப்பட்டதை இக்கலியுகத்திற்கு முன்னெடுத்து கொடுத்துவிட எம் குருவால் உத்திரவிடப்பட்டுள்ளோம்.

உயிரை வளர்க்கும் உபாயத்தை, தந்திரத்தை அறிய வேண்டுமென்றால், கண்டிப்பாக நீங்கள் பிரமஞானத் தவத்தை (கலையை) கற்றே ஆக வேண்டும்.  தெய்வ நிலையில் வாழ்பவர்கள் மட்டுமே இக்கலையை கற்றுத் தேறுவார்கள்.  உங்களை தேவ நிலைக்கு உயர்த்திக் கொள்ளவும் மீண்டும் பிறவாப் பெருநிலை பெற்றிடவும் எம்முடைய 38 வருட அனுபவத்தில் பிரமஞானத் தவத்தினைப் போன்ற ஒரு அற்புதமான ஞானக்கலை இவ்வுலகில் இல்லை என்றே கருதுகிறோம்.

காகபுசண்டர், திருமூலர், அகத்தியர், போகர், மகா அவதார் பாபாஜி அவர்களால் வாழையடி வாழையாக தமிழ்த் திருக்கூட்ட மரபில் வரும் கையாலப் பரம்பரையில் எம் சற்குருவுக்கு வழங்கப்பட்டதே இந்த பிரமஞானத் தவம்.  மகா அவதார் பாபாஜி அவர்களின் கிரியா யோகத்தையும் தாண்டிய கலை இது. இக்கலை நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தில் மட்டுமே போதிக்கப் படுகிறது. 1000 ஆண்டுகள் தவம் செய்தாலும் கிடைக்காத ஒளிதேகத்தை எம் சற்குரு இப்பிறவியிலேயே பிரமஞானத் தவத்தால் பெற்றார்.  இதுதான் பிரமஞானத் தவத்தின் உச்சம்.  வாழ்வின் எச்சங்களை விட்டுவிட்டால், ஞானத்தின் உச்சங்களைத் தொடலாம் என்பார் எம் குரு.  இயற்கையில் வாழக் கற்றுக் கொள்ள பிரம ஞானத் தவத்தை உங்களை மிகச் சரியாக வழிநடத்தும்.

ஞான ஒளிதேகத்தில் இருக்கக்கூடிய எம் சற்குரு இந்த உலக ஆன்மாக்கள் அனைவரும் பிரமஞானம் அடைந்திட வேண்டுமென்ற தாயுள்ளத்தினால் உங்களுக்கு இப்போது நூல்கள் வடிவில் பிரமஞானங்களைப் பற்றியும் அவற்றின் ஞான மெய்ப்பொருள்களைப் பற்றியும் விரிவாக எழுதி வருகிறோம்.

Subscribe!

Subscribe for updates on Brama Gnana Porsabai's latest events and teachings!