நமது குருஜி அவர்களின் ஆலோசனையின் பேரில் நான் எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்.
நான் சில ஆண்டுகளாக தவம் செய்து வருகிறேன்.
எனது அனுபவம்:
– எனது மூன்றாவது கண் செயல்பாட்டில் உள்ளது
– எனது மூன்றாவது கண்ணில் நீல நிற ஒளியை பொன் வட்டத்தால் சூழப்பட்டு பார்க்கிறேன்
– தியானத்திற்கு பிறகு நான் அதிகமாக அமைதியும் ஆற்றலும் பெறுகிறேன்
– பிரம்ம முகூர்த்தத்தில் தியானம் செய்வது மிகவும் ஆற்றல் பெறும்படியாக இருக்கிறது மற்றும் நாள் முழுவதும் நன்றாக இருக்கும்
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற திருமூலரின் திருமந்திர வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு குரு பிரான் Dr.ருத்ர ஷிவதா ஐயா அவர்கள் பிரம்ம ஞான தீட்சை அளித்து நூற்றுக்கணக்கான சீடர்களை உண்மையான ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபடுத்தி சித்தர்களால் இலைமறை காயாக இருந்த அரிய ஞான ரகசியங்களை தெளிவு படுத்தி வருகிறார்.விட்டகுறை தொட்ட குறை அடியேனுக்கும் இருந்த காரணத்தால் இச்சிறியேனும் ஐயாவை சென்ற வருடம் அண்டி பிரம்ம ஞான தீட்சை பெற்று தவப்பயிற்சி புரிந்து பல்வேறு ஞான அனுபவங்களையும் பெற்று எனது நீண்ட கால ஆன்மீக தேடலுக்கு வேடந்தாங்கலாக இருந்து வருகிறார்.குருகுலப்பயிற்சி யும் தோற்றுவித்து ஆதித்தமிழ்ச்சித்தர்களின் ஆசியுடன் சற்குரு பரமஹம்ச சுந்தரானந்த மகரிஷியின் வழிகாட்டுதலோடு சீடர்களை ஞானப் பாதையில் செலுத்தி வருகிறார் . குரு ஐயாவையும் சற்குரு ஐயாவையும்
எங்களுக்கு அறிமுகப்படுத்திய பிரபஞ்ச பேராற்றலுக்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் நன்றிகள் கோடி.🙏🙏🙏
குரு வாழ்க குருவே துணை
சற்குரு ஸ்ரீ ஸ்ரீ பரமஹமன்ச சுந்தரானந்த மகரிஷியின் சீடரும் எம் குருநாதர் Dr. ருத்ர ஷிவதா அவர்களால் பிரம்ம ஞான தீட்சை பெற்றேன்.
என் உயிருக்கு உணவளிப்பது எப்படி என்று உணர்ந்து கொண்டேன்.
பிரம்ம ஞான அனுபவங்களையும் அனுதினம் அனுபவித்து ஆனந்தம் கொள்கிறேன் என் குருவின் திருவடிகளை தொட்டுவணங்கிகோடி நன்றி நன்றி நன்றி
Dr. ருத்ர ஷிவதா ஐயாவிடமிருந்து பிரம்ம ஞான தீட்சை பெற்ற தினம் முதல் மனநிறைவு மன அமைதி மனதெளிவு இவற்றினை உணர்கின்றேன். என் உயிருக்கு உணவளிப்பது எப்படி என்று உணர்ந்து கொண்டேன். குரு அருளாலும் திரு அருளாலும் நான்கே நாட்களில் மூன்றாம் திருவடியை கண்டேன். என் உயிரை காண்பித்து அதனை வளர்ப்பது எப்படி என்று கற்பித்த என் குருவிற்கும் சத்குருவிற்கும் குலகுருமார்களுக்கும் எம் குருநாதரை எனக்கு காண்பித்த பிரபஞ்ச பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள்.
நன்றி நன்றி நன்றி
சற்குரு ஸ்ரீ ஸ்ரீ பரமஹமன்ச சுந்தரானந்த மகரிஷியின் சீடரும் எம் குருநாதர் Dr. ருத்ர ஷிவதா அவர்களால் பிரம்ம ஞான தீட்சை பெற்றேன். பல தியானங்களுக்கு சென்று கிடைக்காத விளக்கமும் தெளிவும் ஐயாவிடம் கிடைக்கப்பெற்றேன்.
என் உயிருக்கு உணவளித்து,
அமுத காற்றை சுவாசிக்க வைத்து,
என் உயிரை மலர வைத்து, சூட்சும தேகத்தை உணர வைத்து, நாத ஒலியை கேட்க வைத்து, என் உயிரை எனக்கு காண்பித்து தந்து சுடராழி தவத்தை கற்பித்த என் குருநாதருக்கு
நன்றி நன்றி நன்றி.🙏🙏🙏 இந்த குருநாதரை காண்பித்து தந்த குரு அருளுக்கும் திருவருளுக்கும் பேரருளுக்கும் குல குருமார்களுக்கும் பிரபஞ்ச பேராற்றலுக்கும் அருட்பேராற்றலுக்கும் கோடான கோடி நன்றிகள்.
எம் குருவான Dr. ருத்ர ஷிவதா அவர்களால் பிரம்ம ஞான தவத்தின் மூலமாக திருவடி தீட்சை பெற்றேன். சுடராழி தவத்தின் மூலமாக என்னுள் என் உயிரை காண்பித்து என் உயிருக்கு உணவளித்து என் உயிரின் மணத்தையும் உணர வைத்த இந்த பிரம்ம ஞான தவத்திற்கு நன்றி. பிரம்ம ஞான தவத்தை எனக்கு தந்த என் குருவிற்கும் என் சத்குருவிற்கும் கோடான கோடி நன்றிகள்.
நான் கடந்த 16.2.2022ந்தேதிஎன்குரு
ருத்ர ஷிவிதாவின்கருணயினால்பிரம்மஞானதீட்சைபெற்றேன்அதுமுதல்ஐந்துகிரியா
தவம் செய்து கொண்டு வருகிறேன் அதுமுதல் எனக்கு பலமான
அனுபவங்கள்வாய்க்கப்பெற்றேன். மனம்அடங்கும்விதம்சுழிமுனைநாடியில்பிரவேசிக்கும்
தந்திரம் உயிருக்கு உணவு
கொடுக்கும் தந்திரம் போன்றஞானரகசியங்களைஅறிந்துதவம்சேய்து
வருகிறேன். அத்துடன்
நாதவிந்துகலைகளையும்
பிரபஞ்ச சக்தியை தொடர்பு
கொள்ளும் வழியையும்
அறிந்து வருகிறேன்
அத்துடன் பிரம்ம ஞான
அனுபவங்களையும்
அனுதினம் அனுபவித்து
ஆனந்தம் கொள்கிறேன்
ஆதி தமிழ் சித்தர்களின் குருகுலமான பிரம்ம ஞான பொற்சபை நிறுவனர் ..குருநாதர் டாக்டர். ருத்ர சிவேதா ஐயா அவர்களிடம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு திருவடி ஞான தீட்சை பெற்றேன்..
கடந்த 20 வருடங்களாக கடவுளை பற்றிய தேடலாக தொடங்கிய எனது ஆன்மீக பயணம் என்னை பற்றிய தேடலாக மலர்ந்தது..
பல குருமார்கள் என் ஆன்மீக தேடலுக்கு எனக்குள் விடை தெரிய, ஞானம் என்னும் செடி முளைத்து, தவமாகிய பூ மலர தங்கள் ஞானத்தை என் தகுதிக்கேற்ப கருணையுடன் விதைத்தார்கள்… அத்தனை குருமார்களையும் ஆத்மார்த்த நன்றி உணர்வுகளால் என்றும் வணங்குகின்றேன்..
இன்று ஆதி தமிழ் சித்தர்களின் குருகுலமான பிரம்ம ஞான பொற்சபையில் எனது தேடல் நிறைவடைந்ததாகவே நினைக்கின்றேன்..
இங்கு என் தேடல் அனைத்திற்கும் விடை தெரிந்தது.. நான் தேடாத கேள்விகளுக்கும் விடைகள் தந்து, ஆன்மீக பயணத்தின் உச்சத்திற்கு வழியும் தந்து, இனி கேள்வியே எழா வண்ணம் அனைத்து சூட்சுமங்களையும் எளிதாக விளங்கிக் கொள்ளுமாறு தவ முறை உளவுகளையும் தந்து அருளியமைக்கு குருநாதர் அவர்களுக்கு என்றென்றும் நன்றி உடையவனாகின்றேன்..,
திருவடி தீட்சை தந்து, பிரம்ம ஞான தவம் பயிற்சி தந்து, மூன்றாவது திருவடி தரிசனம் குருவருளால் அடியேனுக்கும் கிடைக்க செய்வித்தது இப்பிறவியில் சிறியேன் செய்த பெரும் பாக்கியம் என குருநாதர் திருவடிகளை பணிந்து வணங்குகின்றேன்..
யான் பெற்ற இப்பாக்கியத்தின் பலமடங்கு உலக உயிர்கள் யாவர்க்கும் கிடைக்க குருவருள், திருவருள், பேரருள், பெருங்கருணை அன்னையை வணங்கி பணிகின்றேன்..
பிரம்ம ஞான பொற்சபை குருகுல உபதேச நெறிமுறைகள், பிரணவ கிரியா, பிராண கிரியா, மகா மந்திர கிரியா, சுடராழிக்கிரியா கொண்ட பிரம்ம ஞான தவம் என்பது நமது உயிருக்கான தவம்… கோடான கோடி பிறவிகளாக நம் உயிர் நம்மிடம் வேண்டி ஏங்கும் தவம்… இத்தவத்தால் நம் உயிர் மலரும்.. இவ்வனுபவத்தை யான் என் உடல் மன ஆரோக்கியத்தால் உணர்கின்றேன்… தவத்தில் ஆனந்த நிலையை அனுபவிக்கின்றேன்…
இவ் அனுபவங்கள் எல்லாம் பிரம்ம ஞான தவத்தின் தொடக்க அனுபவங்களே என்றும் இதைவிட மேலான அனுபவங்களை மூத்த சீடர்கள் பலர் இத்தவத்தால் அடைந்து மகிழ்கின்றனர் என்பதை நினைத்தால் பிரமிப்பாக இருக்கின்றது… இதுவே பிரம்ம ஞான தவத்தின் அனுபவ வெற்றி என்பது புரிகின்றது..
இந்த பிரம்ம ஞான தவம் முறை பயிற்சி என்பது குருநாதர் டாக்டர். ருத்ர சிவேதா ஐயா அவர்கள்
மகா அவதார் பாபாஜி அவர்களின் நேரடி சீடரான தன் சற்குருநாதர் சுந்தரானந்த மகரிஷி அவர்களிடம் தவமாய் தவமிருந்து இறையருளால் பெற்ற ஞான பொக்கிஷம் என்பது குறிப்பிடத்தக்கது…தனது 37 கால வருட தவ உழைப்பை.. அனுபவத்தை எடுத்துச் சென்று, தான் மட்டுமே பயனடைந்து விட நினைக்காமல்…இதுவரை யாரும் வெளிப்படுத்த துணியாத பிரம்ம ஞான தவ சூட்சுமங்களை இரகசியங்களை.. ஆன்ம தேடல் உள்ள சக உயிர்களுக்கு உள்ளங்கை நெல்லிக்கையென புரியவைத்து, பிரம்ம ஞான தவசிகளாய் மாற்ற திருவுளம் கொண்டு ஆன்மீக தளத்தில் விதைத்து செல்வது என்னும் இப்புண்ணிய செயல் மிகவும் மேன்மையான ஒன்று.. பெறுவதற்கு அரியது..
இக்கலியுகத்தில் நாம் அனைவரும் அடைந்த பாக்கியம் என்றே கருத வேண்டியது…“உலகுயிர் திரளெல்லாம் ஒளி நெறி பெற்றிட” என்று வள்ளல் பெருமானார் விரும்பியது போல்.. உலக உயிர்கள் யாவரும் ஒளி நெறி பெற …திரு நெறி இதுவே என உறுதியுடன் எனது சிற்றறிவால் தெளிகின்றேன்… வணங்குகின்றேன்… வாழ்த்துகின்றேன் ..ஆன்ம நேய சகோதரர்கள் அனைவரும் இவ்வரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்…
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
குருவே சரணம்🙏
அடியேன் குமார் சின்னத் திருப்பதி 21.12.2024 இன்றைய அனுபவம் அய்யா. இன்று அதிகாலை 3 மணிக்கு தவம் தொடங்கியது. அடியேனுக்கு மகாரதிருவடியில் உள்ள ஒளியினை உற்று நோக்கி கொண்டு இருக்கும் போது அவ்ஒளியானது விரிவடையும் அற்புதமான காட்சிகளைக் கண்டேன். இக்காட்சியானது ருத்ராட்சத்தினை பார்ப்பது போன்று தோன்றியது.
பிறகு அந்த ருத்ராட்சத்தின் மையப்பகுதியில் உள்ள துளை போன்று மகாரதிருவடியின் மையத்தில் ஒரு இருளும் வெளிச்சமும் கலந்த துளை பகுதியை ஒளியின் மையத்தில் கண்டேன். இவ்வாறு கண்ட நுழைவு வாயிலை கடந்து செல்ல முடியவில்லை அந்த இடத்தில் நின்றுகொண்டு அடியேன் இறைவனாகிய குருவிடம் பிரார்த்தனை செய்ய தொடங்கினேன்.
மேலும் அவ்விடத்தில் குளிர்ச்சியாகவும் வெப்பமாகவும். உடல், மனம், உணர்வு, சுவாசம் இமைகள் ஆகிய அனைத்தும் அசைவுகளும் இல்லை.சிறு அசைவு ஏற்பட்டால் கூட எனது சக்திகள் விரையம் ஆகுவது போன்றுதான் இருந்தன. இந்த நேரத்தில் எனது உணர்வு மட்டுமே அந்த ஒளியாக இருந்தன அப்போது எனது உடல் முழுவதும் வியர்வை முத்துகள் வெளிவந்தன பின்னர் உணர்வு உடலுக்கு வந்து சேர்ந்த நேரம் 4.30 மணிகள். அடியேன் அவ் ஒளியில் ஒளியாக கரைந்து நின்று அதனை விட்டு வெளியே வர மனம் இல்லை சந்தோஷமும் இல்லா,கவலையும் இல்லா நிலையினை உணர்ந்தேன் தற்போது அவ்வாறு தான் உள்ளேன் அய்யா 🙏🙏🙏