தேவ இரகசிய பிரமவித்தை

இடம் : பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்

நாட்கள் : 17, 18, 19, 20.10.2024 – நான்குநாள் ஞானமுகாம்

தகுதி : பிரமஞானத் தீக்ஷையைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். புதியதாக வருபவர்கள் இந்த முகாம் நடக்கும் தேதிக்கு முன்பாக தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் முகாமில் கலந்து கொள்ளலாம்.

பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் முக்கியமான மைல்கல்தான் இந்த பிரமவித்தை கல்வி. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரி மலையில் பௌர்ணமியன்று அங்கு ஓடிக்கொண்டிருந்த அருவியில் வைத்து எமக்கு எம் சற்குரு போதித்த இந்த பிரபஞ்சத்தை ஒளியாகவும் ஒலியாகவும் நடத்திக் கொண்டிருக்கும் எம் உயிரில் வாழும் சிவத்தை அந்த பேருயிரை விழிப்பிக்க வைத்துக் காட்டியருளிய நமது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அற்புதமான ஞானப் பொக்கிசம்தான் இந்த ஜீவன்முத்தீ தாரணை எனும் பிரமவித்தை கல்வி.

இதில் உங்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் ஞானங்கள்

1. ஜீவன் என்றால் என்ன? முத்தீ என்றால் என்ன?
2. நம்மால் ஏன் நம் உயிரைப் பார்க்க முடியவில்லை? அதனோடு பேச முடியவில்லை?
3. உயிருக்கான உணவு எது? அதை எப்படிக் கொடுப்பது?
4. தாவர உணவுகள் கிடைக்காத போது, இந்த பிராணனனையும் ஒளியையும் எப்படி உண்பது?
5. காற்றையும் ஒளியையும் எப்படி உயிருக்குள் செலுத்துவது?
6. நாம் ஜீவன்முத்தீயை அடையாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள்?
7. ஞானம் அடைந்தால்தான் முத்தீ நிலையை அடைய முடியும் எனும்போது, ஏன் நாம் ஞானம்கூட அடையாமல் இருக்கின்றோம்?
8. காமத்தையும் கோபத்தையும் வெல்வது எப்படி?
9. மனதைக் கொல்வது எப்படி?
10. ஐம்மலங்களையும் வென்றெடுக்கவும் எரித்தொழிக்கவும் என்ன வழி?
11. மூன்றாம் கண்ணை திறந்து கொள்வது எப்படி?
12. அடுத்து ஞானக் கண்ணையும் அருட்கண்ணையும் திறப்பது எப்படி?
13. இறைவனை அடைய சித்தர்கள் சொல்லும் ஆறு வழிகள் என்னென்ன?
14. ஜீவன்முத்தீயை அடைய சித்தர்கள் சொல்லும் இரகசியங்கள் என்னென்ன?
15. புறத்தில் இருக்கும் ஈசனை வழிபடும் நாம், ஏன் அகத்தில் இருக்கும் அகத்தீசனை வழிபடாமல் இருக்கின்றோம்?
16. நம் உடலும் உயிரும் எப்போது ஒன்றிணையும்?
17. நம் உயிரும் இறையும் எப்போது ஒன்றிணைவார்கள்? அதற்கான சூக்குமம் என்ன?
18. சுத்த தேகத்தை அடைவது எப்படி?

18. சுத்த தேகத்தை அடைவது எப்படி?
19. வள்ளலார் அடைந்த ஒளிதேகத்தை நம்மால் அடைய முடியுமா?
20. சைவ சித்தாந்தம் சொல்லும் ஞானத்தில் சரியை, ஞானத்தில் கிரியை,
ஞானத்தில் யோகம், ஞானத்தில் ஞானம் என்ற நிலைகளை அடைவது எப்படி?
21. 36 தத்துவங்களுக்கும் ஜீவன்முத்தீக்கும் என்ன தொடர்பு?
22. சைவ சித்தாந்தம் சொல்லும் 36 தத்துவங்களை வென்றெடுப்பது எப்படி?
23. அஷ்டாங்க யோகம் சொல்லும் மெய்ப்பொருள் இரகசியம் என்ன?
24. சைவ சித்தாந்தம் சொல்லும் தசகாரியங்கள் என்றால் என்ன? அதற்கும்
ஜீவன்முத்தீக்கும் என்ன தொடர்பு?
25. விந்துவையும் நாதத்தையும் எப்படி பரவிந்துவாகவும் பரநாதமாகவும் ஆக்கிக்
கொள்வது? அதற்கான ஞான வழி என்ன?
26. பரவிந்து, பரநாதங்களை எப்படி அபர விந்து, அபர நாதங்களாக மாற்றிக்
கொள்வது?
27. அறிவுகள் மொத்தம் பத்துவகை. ஆறாம் அறிவு கொண்ட நாம் மற்ற 7, 8, 9,
10 ஆம் அறிவுநிலைகளை எவ்வாறு அடைவது? அதற்கான வழிகள் என்ன?
28. சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் சொல்லும் ஞான இரகசியங்கள்
என்ன? அவைகளை அடைவது எப்படி?
29. அந்தக்கரணங்களையும் ஐம்புலன்களையும் ஐம்பொறிகளையும் காமக்
குரோதாதிகளையும் வெல்வது எப்படி?
30. சிரசிற்குள் அகார, உகார, மகாரங்கள் எங்கே இருக்கின்றன? அவைகளை
எப்படி ஒன்று சேர்ப்பது? அகத்தில் இருக்கும் அகார, உகார, மகாரங்கள்
விளைவிக்கும் விளைவுகள் என்னென்ன?

கண்ணுடைய நுதற்கரும்பே

இப்படி எவ்வளவோ வினாக்களுக்கு இந்த பிரமஞான முகாமில் விடைகள் சொல்லப்பட உள்ளன.

இறைவனை ‘கண்ணுடைய நுதற்கரும்பே’ என்கிறார்கள் பிரமஞானிகள். நுதல் என்றால் நெற்றி. நமது நெற்றியில் இருக்கும் கரும்பூ எது என்று தெரிந்து கொள்ள வேண்டாமா? சொல்லுங்கள். கரும்பு என்றால் இனிக்கும். கரும்பூ என்றால் அதுதான் தேவ இரகசியம்.  அதை இவ்வகுப்பில் அனுபவமாகவே தெரிந்து கொள்ளலாம்.

நமது தேகம் முழுக்கவே 1 சதவிகிதம்தான் அறிவு இருக்கின்றது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதை ஞானிகளும் ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  மீதி 99 சதவிகிதம் என்னவாயிற்று? அது ஜடமாகவேதான் இருக்கிறது.  நமது தேகம் ஜடமாக இருப்பதால்தான் நோய்கள் வருகிறது ; அழுகிப் போகிறது ; முதுமை வந்து கதவை தட்டுகிறது. இறுதியில் மரணமடைகிறது.  இந்த 1 சதவிகித அறிவை நம் மூளைக்குள் இருக்கும் ஒற்றை ஒளிஅணுவை வைத்தே 100 சதவிகித அறிவாக மாற்ற வேண்டும். அதன்பின் ஞான ஒளி தேகமாக மாற்ற வேண்டும். ஊன உடலை ஞான ஒளியுடலாக மாற்றிக் காட்ட வேண்டும்.  ஏனென்றால், இறைவன் அவ்வாறு ஞான ஒளியுடலாகத்தான் இருக்கின்றான். இந்த கல்வியைத்தான் இவ்வகுப்பில் முழுமையாகத் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள், திண்ணமாக.

நாம் செய்யக்கூடிய பிரமஞானத் தவத்தையும் தாண்டிய அதிசூக்குமத் தவங்கள் உள்ளன.  அத்தவங்களைச் செய்யும்போது, உங்கள் உயிரைப் பிடித்து வைத்திருக்கும் ஆணவ மலம் தானாக அழிவதைப் பார்ப்பீர்கள்.  ஆணவ மலம் சிரசிற்குள் அழியும்போதுதான், உயிரும் ஆன்மாவும் தன்னை அடையாளமே காணும். எதன் உதவியுமின்றி ஆன்மா தன்னை உங்கள் முகத்தின்முன்னே அதிபிரகாசமாய் காட்டும். அப்போது அங்கே பரவிந்து, பரநாதம் தானாகவே உங்கள் சிரசிற்குள் உற்பத்தியாகும். அதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா? உங்கள் நெற்றிக் கண்ணால் காண வேண்டாமா?

நாம் ஓங்காரத் தவத்தில் ஓம் என்று உச்சரிக்கிறோம் அல்லவா. அப்போது அந்த நாதவொலியில் ஐந்து மெய்ப்பொருள்கள் சூக்குமமாக உங்கள் சிரசிற்குள் ஒன்று சேரும். அகாரம், உகாரம், மகாரம், விந்து, நாதம் ஆகிய இந்த ஐந்தும் ஒரு புள்ளியில் குவிக்கப்பட வேண்டும். அப்போது அங்கே உயிரில் ஒரு மௌனவொலி ஒலிக்க ஆரம்பிக்கும். உயிரில் மௌனம் ஆலிங்கனம் செய்யும்போது, அங்கே ஒரு சிறு வெளிச்சம் உண்டாகி, ஆன்மா கூடு முழுக்க பரவ ஆரம்பிக்கும். அப்போது சுத்த நாதம் கேட்க ஆரம்பிக்கும். சுத்த நாதம்தான் உங்கள் உயிர்க்கூட்டை சுத்தப்படுத்தி, சுத்தப்படுத்தி உங்கள் தேகத்தை சுத்த தேகமாக மாற்றும். இதைத் தெரிந்து கொள்ள வேண்டாமா? இவ்வகுப்பு உங்களுக்கு அவ்வளவு தெளிவைக் கொடுத்துவிடும்.

சைவ சித்தாந்தத்தின் பிரதான இலக்கே இந்த ஜீவன்முத்தீ எனப்படும் சீவன்முத்தீதான். சைவத்தின் நோக்கமே மனித தேகம் சீவன்முத்தீ நிலையை அடைவதுதான். ஜீவன்முத்தியைப் பற்றி எண்ணற்ற பேர் இதுவரை பலவாறு பேசியிருக்கிறார்கள். ஒலிப்பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார்கள். இதைச் சொல்லாத சைவர்களும், வைணவர்களும் யாரும் இல்லை என்றே சொல்லும் அளவுக்கு இந்த ஜீவன்முத்தீ என்ற சொல் அவ்வளவு மகா சத்தி வாய்ந்ததாகும். ஆனால், யாருமே ஞான மெய்ப்பொருளோடு, உண்மையான தேவ இரகசியத்தை உடைத்து, மக்களுக்கு வழிகாட்டிச் செல்லவில்லை எனும்போதுதான் அவ்வளவு வேதனையாக இருக்கிறது.

நம் சிரநடுவுள்ளே அமுதக்குடமானது திரவ நிலையில் இல்லாமல் ஒரு கல்லைப் போல இறுகிப்போய் கிடக்கிறது. இதை ஞானிகளின் கல் என்றும் ஆங்கிலத்தில் Philosopher stone என்றும் சொல்வார்கள். இந்த அமுதக் கல்லை கனியாக முதலில் மாற்றும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டாக வேண்டும். அதுதான் நம் வாழ்வை நீட்டித்துத் தரும் (Elixir of life). சரி, கல்லை எப்படி கனியாக்குவது? அதை இந்த ஞானமுகாமில் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.

இந்த கல் கனியாக மாறும்போது, நமது தேகத்தில் ஓரிடத்தில் விசம் (விடம்) ஒன்று உருவாகி வளர ஆரம்பிக்கும். எது அந்த விசம்? அந்த விசத்தை இல்லாமல் செய்வது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நான்கு நாள் ஞான முகாம்

நமது தேகத்தில் சத்தும் சித்தும் ஆனந்தமும் தனித்தனியாகத்தான் பிளவுபட்டு காணப்படுகின்றன.  இம்மூன்றையும் ஒன்றிணைத்தால் தானே சச்சினாந்தம் கிடைத்து, இறைவனைக் காண முடியும். பிளவுபட்ட நிலையை எவ்வாறு ஒன்றிணைப்பது? நீங்கள் எப்போது உங்களுக்கு உள்ளே இருக்கும் இறைவனைக் கண்டு உணர்வது? அதற்கான ஞான வழிகளைத் தெரிந்து கொள்ளாது இருக்கலாமா?

உண்மையான ஞானப்பால் எங்கே இருக்கிறது? அதை ஏன் அக அருளமுதம் என்கிறார்கள் சித்தர்களும் ஞானிகளும். சிரசின் நடுப்புள்ளியில்தான் இந்த ஞானப்பால் குடமாக இருப்பதாகவும், இந்தக் குடத்தை உருக வைத்தால், அதற்குள் இருக்கும் அருட்பாலை – ஞானப்பாலை நம்மால் உண்ண முடியும். அமுதப்பாலை உண்ணாமல் ஜீவன்முத்தீ நிலை கிட்டாது.  அப்பாலை எப்படி உண்பது? அதற்கான வழிகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து அறிந்து உணர்ந்து உண்ண வேண்டாமா?

இந்த நான்கு நாள் ஞான முகாமில் நீங்கள் உங்களை முதலில் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். உங்கள் பிறப்பின் இரகசியத்தைத் தெரிந்து கொள்வீர்கள். தன்னை அறிவதையும் தனக்குள் இருக்கும் உயிரை, இறைவனைக் காணவும் வழிகளை கண்டடைவீர்கள். நாம் இறை நிலை அடைவதற்கு எவையெல்லாம் தடைக்கற்களாக இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றை களைந்து இறைப்பாதையில் நீங்கள் பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் உயிருக்குத் தேவையான பிரபஞ்ச உணவை 24 மணி நேரமும் கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

உங்கள் வாழ்நாளில் இதுநாள்வரை எதை நோக்கி இந்த ஆன்மீகத்தில் பயணம் செய்கிறோம் என்பதை அறியாமல் ஏதோ குருட்டுத்தனமான நம்பிக்கைகளால் உங்களை இழந்து போயிருப்பது அதிகமாக இருக்கிறது.  இப்போது அவையெல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிந்து, உங்கள் உயிரை ஜீவன்முத்தீ பக்கம் கொண்டு செல்ல போகிறீர்கள்.  அதற்கு உங்களுக்கு வழிகாட்டி, உயிர்காட்டி, இறைகாட்டி என்று ஒருவர் தேவையல்லவா.  நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் யாம் ஒளிப்பிரகாசமாய் இருப்போம். அதனால் நீங்கள் தாராளமாக இந்த ஜீவன்முத்தீ பாதையில் எவ்வித சந்தேகமும் கலக்கமும் பயமுமின்றி ஆனந்தமாக நடை பயிலலாம். உங்களுக்கு முன்னே யாம் ஒளியாகச் சென்று கொண்டிருப்போம். இந்த ஒளிப்பாதையை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் அடையும் இலக்கான ஜீவன்முத்தீ வெகுதொலைவில் இல்லை ; உங்களுக்கு மிக அருகாமையிலேயே இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சி கொள்வீர்கள். எம் விழிகள் உங்கள் வழியாக இனி இருக்கும்.

இந்த ஜீவன்முத்தீ நிலையில் நீங்கள் வெற்றி கொள்ளும்போது, அங்கே உங்கள் உயிரானது ஒளிப்பிழம்பில் சொல்லொணா ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டு விண்டு பேரானந்தம் கொள்ளப் போவது உறுதி. தாயின் கருவில் பிறந்த நீங்கள், இனி இறைவனின் கருவில் புதிதாகப் பிறப்பெடுப்பீர்கள். இறைவன் கருவே, ஜீவன்முத்தீக்கான ஞான விதை. இறைவனின் கருவில் நுழைந்தோர், மீண்டும் பிரபஞ்சத்தில் பிறப்பதில்லை. இது சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், மஹரிஷிகள் மற்றும் பிரமஞானிகளின் வாக்காகும்.

கட்டணம்

நீங்கள் ஜீவன்முத்தீ நிலையைப் பெற்று, என்றும் பிறவா, இறவா நெறியாம் மருவா நெறியைப் பெற்று என்றும் அருளமுதத்தை உண்டு ஞான ஒளி தேகத்தைப் பெற்றிட இந்த ஞான முகாம் உங்களுக்கு மிகப்பெரிய ஊன்றுகோலாகவும் ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் சத்திய நெறியாகவும் உங்கள் உயிரோடு பேச வைத்துவிடும்.

ஆகவே, உங்கள் அனைவரையும் என்றும் ஜீவன் முத்தீ நிலை பெற்றிட கிடைத்தற்கரிய இந்த ஜீவன்முத்தீ தாரணை என்ற பிரம வித்தையைக் கற்றுத் தரும் ஞான முகாமிற்கு முழு அன்போடும் ஆர்வத்தோடும் உண்மைத்தன்மையோடும் ஞான வைராக்கியத்தோடும் வந்திணையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

பிரமஞானத் தீக்ஷை பெற்ற மாணவர்கள் மற்றும் குருகுல மாணவர்கள் தகுதி வாய்ந்தவர்களே. இவர்களும் இந்த ஞான முகாமிற்கு புதியவர்கள்தான். வாழ்நாள் மாணவர்களும் இம்முகாமில் புது மாணவர்களாகவே கருதப்படுவார்கள். குருகுல வகுப்பு ஆன்லைனில் நடத்தப்படுவது. அங்கு மட்டும்தான் வாழ்நாள் மாணவர்களுக்கு சலுகைகள் உண்டு. இந்த ஞான முகாமில் சலுகை கிடையாது. இது ஒரு பிரமஞான உயர்நிலை வகுப்பாகும். உச்ச வகுப்பாகவும் இது செயல்படும்.

இம்முகாமை வெற்றியோடு முடித்தவர்கள் ஜீவன்முத்தர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களை சித்தர்களும் நம் குருகுல ஆதிக் குருக்களும் ஆசிர்வதித்து, உங்களை ஜீவன்முத்தர்களாக்குவார்கள். அவர்களின் உத்திரவுப்படியே, இந்த ஞான முகாமை நடத்த முன் வந்துள்ளோம். வகுப்பில் யாம் பேச மாட்டோம் ; அவர்கள்தான் பேசுவார்கள். உடல்தான் எம்முடையது ; உடலிலிருந்து வெளிவரும் ஞானப் பேச்சுக்கள், உரைகள் எல்லாம் அவர்களுடையது. யாம் சங்காக இருப்போம். அவர்கள் சங்கொலியாக இருப்பார்கள்.

கட்டணம் : தொடர்பு கொள்ளவும் /- (4 நாட்களுக்கு)

முகாம் நடக்கும் நான்கு நாட்களுக்கும் மூன்று வேளை உணவு வழங்கப்படும். தங்குமிடம் குருகுலத்தில்தான். வசதிகளை எதிர்பார்க்கும் மாணவர்கள் உங்கள் விருப்பம்போல வெளியில் தங்கிக் கொள்ளலாம். அனைத்து மாணவர்களும் குருகுலத்தில் இலவசமாகத் தங்கிக் கொள்ளலாம். இதற்குக் கட்டணம் பெறப்படாது.

25 மாணவர்கள் வரை குருகுலத்தில் தங்கி முகாமில் கலந்து கொள்ளலாம். அதற்கு மேல் மாணவர்கள் வருகை தந்தால், வேறிடத்தில் முகாம் நடத்தப்படும்.

வரும் மாணவர்கள் தலையணையும் போர்வையும் எடுத்துக் கொண்டு வரவும்.

குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரவேண்டாமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். வகுப்பு நடக்கும்போதும், தவம் செய்யும்போதும் உங்களுக்கு ரொம்ப தடையாக அது இருந்துவிடக்கூடும். மற்றவர்களுக்கும் அது தொந்திரவாக இருந்துவிடக்கூடாது.