மனமற்ற பரிசுத்த நிலையில் வாழ்வியல்
குருகுலக் கல்வியின் இரண்டாம் நிலையில் மனிதர்களுக்குத் தேவையான உலகியல் தேவைகள் அனைத்தும் பூரணமாகக் கிடைத்திட வேண்டும் என்பதற்காக அவர்களின் ஆழ்மனதை எந்த அளவுக்கு, எப்படியெல்லாம் பயன்படுத்தி உலக வாழ்வை வெற்றி கொண்டு வீறுநடை போட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக மட்டும்தான் பிரமஞானத்தை சிறிது நிறுத்தி வைத்து ஆழ்மனத்தில் நடக்கக்கூடிய மாயாஜாலமான வாழ்வியல் பற்றி முடிந்தவரை தெளிவாகவும் முழுமையாகவும் கொடுக்க முயற்சிக்கின்றோம். மாணவர்கள் அனைவரும் இவ்வகுப்புகள் மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருப்பதாக ஆனந்தப்பட்டார்கள். இதைப் படிக்கும் நீங்களும் உண்மையில் மகிழ்ச்சியடைவீர்கள். சரி, பாடத்திற்குள் செல்லலாம் வாருங்கள்.
உண்மையை உணர்வதற்கு மனமற்ற பரிசுத்த நிலை கோரப்படுகிறது. மனத்தின் செயல்பாடுகள் எவ்வகையில் இருந்தாலும் உண்மையை உணர்வது இயலாது என்பது நம் ஞானச் சான்றோர்களின் கூற்றாகும். நடைப் பயிற்சியைப் போல யோகச் செயல்முறைகளும் உடம்பை பாதுகாப்பதற்காகத்தான்.
ஆனால் உண்மையை உணர்வதற்கு ‘மனமிறத்தல்’ அவசியமாகிறது. “சிந்தை இறப்போ நின்தியானம்” என்பார் தாயுமானவர். “திரையற்ற நீர்போல சிந்தை தெளிவார்க்குப் புரையற்றிருப்பான் எங்கள் புரிசடையோனே” என்பார் திருமூலர்.
“மனமும் பதைப்பறல் வேண்டுமென்றால் இராப்பகல் அற்ற இடத்தே இருக்கை எளிதல்லவே” என்பார் அருணகிரியார். இவ்வாறு இவர்கள் கூறுவதற்குக் காரணம் மனமானது நினைவுகள், அனுபவம், அறிவு இவற்றின் மொத்த உருவான நான், எனது என்னும் செருக்குகளுக்கு இடமாக இருப்பதே.
மனம் ஆடி ஓய்ந்திட்ட பம்பரம் போல் விசையற்று எப்போது வீழும்? ‘வேகம் தடுத்தாண்ட வேந்தனடியை’ எப்போது உணரும்? எல்லாவற்றிற்கும் ஆதாரமான நிராசை என்றொரு பூமியை எப்போது தெளியும்? தேடிக் காண முடியாத தேவனைத் தன்னுள்ளே தெளிந்து கண்டுகொள்ள என்ன செய்ய வேண்டும்?
இதற்கு ஒரே வழி, மனதின் செயல்பாடுகளை ஒவ்வொரு நொடியும் உற்றுப் பார்ப்பதே ஆகும். ‘உற்றுப்பார், மோனன் ஒரு சொல்லைப் பற்றிப்பார்’ என்பார் தாயுமானவர்.
மனதைத் தெளியவைக்க இதுதான் வழி. அனைத்திற்கும் ஆதாரமாக விளங்கும் நிலத்தை அடைவதற்கு அந்நிலம் சில கோரிக்கைகளை நம் முன்னர் வைக்கிறது என்கிறார் ஜே.கிருஷ்ணமூர்த்தி.
“முற்றிலும் மனம் அமைதி அடைய வேண்டியது அவசியம். முற்றிலும் மனம் யாதுமற இருத்தல் வேண்டும். இதற்குப் பொருள் என்னவெனில் எவ்வகையிலும் எவ்வடிவிலும் ‘நான்’ என்னும் அகந்தை விளங்காது இருத்தல் வேண்டும்” என்பதே. இதைத்தான் வள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலாது வாழ்தல்’ என்கிறார். மனம் திரையற்ற நீர்போலத் தெளியும்போது, சிந்தையினுள்ளே சிவனும் வெளிப்படும் என்பதே உண்மை. அப்போதும் மனம் இயங்கும்; அறிவு செயல்படும். ஆனால் அது செயல்பாட்டிற்கு மட்டுமே.
சத்தியத்தை, மூதறிவை, தரிசிப்பதற்கு மனதின் மாசுகள் களையப்பட்டு மனம் யாதுமற்று இன்றியமையாததாகும். இதற்கு ஒரே சாதனம் நாம் நமக்குள்ளே பயணிப்பதுதான். காண்பவன், காட்சி, காட்சிப் பொருள் இவை மூன்றும் ஒன்று என்ற தெளிவுதான்.
இத்தெளிவில் மனமற்ற பரிசுத்த நிலை வாய்க்கும். அந்நிலையில் சத்தியச் சுடரொளி நித்தியமாய் நம்முள் ஒளிர்வதை உணர முடியும். மனம் இறக்கக் கற்றல் மூலம் மனம் கடந்த வாய்மையை உணர்ந்து வாழ்வாங்கு வாழ்தலே வாழ்வின் நோக்கம்.
மனதின் தத்துவம்: கண்ணோட்டம்
தற்கால தத்துவத்தில் மனம் தொடர்பான பிரச்சினைகள் ஒரு முக்கிய அங்கமாகும். உளவியல், நரம்பியல் மற்றும் அறிவாற்றல் நெறிமுறை ஆகியவற்றில் உள்ள சக ஊழியர்கள் மனதைப் பற்றிய அனுபவ அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்ளும்போது, தத்துவவாதிகள் பொதுவான கேள்விகளில் கவனம் செலுத்த முனைகிறார்கள்: மனதின் இயல்பு என்ன, அது எந்த உயிரினத்திலும் அல்லது பொருளிலும் காணப்படலாம்? தத்துவவாதிகள் போன்ற கேள்விகளில் கவனம் செலுத்துகின்றனர்: மனம் உடலுடன் எவ்வாறு தொடர்புடையது? மற்றும் நம்புதல், அறிதல், உணருதல், சிந்தித்தல், விருப்பம், புரிந்து கொள்ளுதல் மற்றும் பல போன்ற மனதின் செயல்பாடுகளின் தன்மையை நாம் எவ்வாறு புரிந்து கொள்வது? தத்துவவாதிகள் சுயத்தின் தன்மை, நனவின் தன்மை மற்றும் மொழியின் திறனுடன் இவற்றின் தொடர்பைப் பற்றியும் கேட்கிறார்கள்.
மனம் என்றால் என்ன என்ற கேள்வி பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. அதன் அனைத்து நவீன அர்த்தங்களுடனும் – பண்டைய நூல்களில் காணப்படவில்லை. கேள்வி முதலில் ரென் டெஸ்கார்டெஸின் (1596 – 1650) தத்துவப் படைப்பில் தெளிவாக வெளிப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக, உளவியல் மற்றும் தத்துவ விசாரணை ஒன்றாக தொடர்ந்தது. உளவியல் என்ற வார்த்தையின் வேர்கள் சைக் என்ற கிரேக்க வார்த்தையில் உள்ளது, இது ஆன்மா என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆரம்பகால நூல்களில், ஆன்மாவானது சுவாசத்துடன் தொடர்புடையது, அதன் இழப்பு மயக்கம் அல்லது மரணம் என்று கருதப்படுகிறது. பிளாட்டோவின் வேலையில் (c.428 – 348 அல்லது 347 bce), ஆன்மா எளிமையானதாகவும் அழியாததாகவும் கருதப்படுகிறது. இது ஆன்மா – மற்றும் குறிப்பாக ஆன்மாவின் பகுத்தறிவு பகுதி, nous – வடிவங்களைப் பிடிக்கிறது, மேலும், வாழ்க்கையில், உடலின் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துகிறது. அரிஸ்டாட்டில் (கிமு.384 – 322) மற்றும் அவரது உயிரியல் நோக்குநிலையுடன் உளவியல் ஆய்வு தொடங்கப்பட்டது (பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி வரை ஒழுக்கம் முழுமையாக வரையறுக்கப்படவில்லை என்றாலும்). அரிஸ்டாட்டில் “ஆன்மா என்பது ஒரு உயிருள்ள உடலின் வடிவமாக இருப்பதைக் காண்கிறோம், இது தாவரங்கள், பகுத்தறிவற்ற விலங்குகள் மற்றும் மனித விலங்குகளில் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது”.
மனித வாழ்க்கையில் மனம் என்னும் மர்மம் முக்கிய பங்கை வகிக்கிறது.
கண் முன்னால் நண்பர் ஒருவர் வந்து நிற்கிறார். மனம் எதையோ பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறது. அவர் தன் கைகளை கண்களின் முன்னால் ஆட்டி என்ன, என்னைத் தெரியவில்லையா என்று சத்தம் போடுகிறார். திடீரென கண் “பார்வையை அடைந்து, அட, நீயா, எப்ப வந்தே” என்று கேட்கிறோம். அவரோ, நான் வந்து ஐந்து நிமிடம் ஆயிற்று. என்கிறார்,
நல்ல பார்வையுள்ள கண்கள் தான், ஆனால் மனம் அத்துடன் சேராததால் ‘பார்க்கவில்லை’. மனம் சேர்ந்தவுடன் பார்வை வந்து விடுகிறது.
இனிய சங்கீதம் ஒலிக்கிறது. ஆனால் மனம் அதில் லயிக்கவில்லை. ஒரே கரகோஷம். திடுக்கிட்டு “விழித்த” நாம் பக்கத்திலிருந்தவரை, “என்ன, பாட்டு பாடினார்?” என்கிறோம். அடுத்தவர் நம்மை முறைக்கிறார். ‘சங்கீத ரஸனை இல்லாத இந்த பைத்தியத்திற்குப் பக்கத்தில் நான் வந்து சேர்ந்தேனே, கிரகசாரம்’ என்று அவர் நொந்து கொள்கிறார். மனம் செவிப் புலனுடன் சேரவில்லை. சங்கீதம் கேட்கவில்லை.
சாப்பாடு பரிமாறப்படுகிறது. சாப்பிட்டு முடித்துவிட்டோம். “என்னடா, சாப்பிட்டே, அதாவது தெரியுமா?” தாயின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் முழிக்கிறோம். மனம் சாப்பாட்டில் லயிக்காத போது சுவை தெரியவில்லை, சாப்பிட்டது என்ன என்பது புரியவில்லை. மனம் சாப்பாட்டு ருசியோடு ஒன்றவில்லை.
இதோ போல ஒவ்வொரு புலனின் செயலையும் கவனித்துப் பார்த்தால் மனமே சுவையைத் தருகிறது; பார்வையைத் தருகிறது; செவிப் புலனைக் கேட்க வைக்கிறது என்பதை அறிய முடிகிறது.
மஹாயான புத்த மதத்தில் மனம் மட்டுமே – மைண்ட் ஒன்லி – MIND ONLY – என்று ஒரு தத்துவம் உண்டு.
இப்போது பாகிஸ்தானில் உள்ள இடத்தில் – வடமேற்கு இந்தியாவில் பிறந்த சகோதரர்களான ஆஸங்கா மற்றும் வசுபந்து இந்தத் தத்துவத்தைப் பிரபலப் படுத்தியவர்கள். அவர்களின் தர்க்கம் எளிதானது.
எந்த ஒரு பொருளும் மனதாலேயே உருவாக்கப்படுகிறது பார்க்கின்ற அனைத்துமே மனதின் ப்ரொஜக் ஷன் தான்!
எந்த ஒரு பொருளையும் எடுத்துக் கொள்ளுங்கள், அது பார்ப்பவரின் பார்வையைப் பொறுத்து மாறுபடுகிறது.
மனதின் மந்திரம்: ஒரு கண்ணோட்டம்
உதாரணமாக பாலை எடுத்துக் கொள்வோம், அது மனிதருக்கு அருமையான உணவாகத் தோன்றுகிறது. அதுவே தேவர்களுக்கு அமிர்தமாக் ஆகிறது. நரகத்தில் இருப்பவருக்கோ அது கொதிக்கும் இரும்பாக இருக்கிறது. சாந்தி அடையாத ஆவிகளுக்கோ அது சீழ் அல்லது இரத்தமாக ஆகிறது. ஒரே பொருள், பல நிலைகளில் உள்ளவர்களின் மனதிற்குப் பலவிதமாக அது காட்சி தருகிறது.
ஒரு அழகிய பெண்ணை வாலிபன் ஒருவன் இன்பம் தரும் போகப் பொருளாகப் பார்க்கிறான். ஆனால் ஓநாய் ஒன்றுக்கோ அது மாமிசக் குவியலாக ஆகிறது.
அடுத்ததாக கனவு நிலையை எடுத்துக் கொள்வோம். புதிய உலகம் ஒன்றைக் காண்கிறோம். தெரிந்தவர், தெரியாதவருடன் புதுப் புது அனுபவங்கள். ஏற்படுகின்றன. புலன்களின் செயலின்மையை நமது கனவு நிலை காட்டுகிறது.
மூன்றாவதாக எந்த ஒரு பொருளுக்கும் தனியான ஒரு ‘இருக்கை’ – எக்ஸிஸ்டென்ஸ் – இல்லை. ஏனெனில் எந்த ஒரு பொருளும் முடிவற்ற அணுக்களால் ஆனவையே. அணுக்களின் சேர்க்கையே ஒரு மேஜையாக நாற்காலியாக ஆகிறது. ஒவ்வொரு அணுவும் ஆறு பாகங்களைக் கொண்டிருக்கிறது. மேல், கீழ், வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என இப்படி ஆறு பாகங்களைக் கொண்டு ஒன்றுடன் ஒன்று உரிய விதத்தில் இணைந்து ஒரு “பொருளாக” ஆகிறது.
இப்படி வாதங்களை முன் வைக்கிறார் வசுபந்து.
இதற்கு எதிரான வாதங்களைக் கூட ஒன்றன் பின் ஒன்றாக எடுத்து அலசி ஆராய்ந்து அவற்றிற்குத் தக்க மறுமொழி அளிக்கிறார்.
இதனால் கவரப்பட்டவர்கள் மனம் மட்டுமே தத்துவத்தைப் பெரிதும் விரும்புகின்றனர்.
ஆரம்பத்தில் சற்று சிரித்து ஒதுக்கப்பட்ட மனம் மட்டுமே தத்துவம் இப்போது அறிவியல் வளர்ந்திருக்கும் நிலையில் ஒரு புதிய அந்த்ஸ்தைப் பெறுகிறது.
இந்த தத்துவத்தின் அனைத்து நிலைப்பாடுகளையும் விஞ்ஞானம் ஆமோதிக்கிறது.
ஜான் லாக்கின் (John Locke) கொள்கை இந்த மனம் மட்டுமே தத்துவத்தைப் போலவே உள்ளது. நவீன அறிவியலில் அணுக்களைப் பற்றிய இப்போதைய கண்டுபிடிப்புகளும், கனவு பற்றிய ஆய்வுகளும் மனம் மட்டுமே கொள்கையை ஆச்சரியத்துடன் பார்த்து அதற்கு ஒரு முக்கியத்துவத்தைக் கொடுக்கிறது.
நமது உபநிடதங்களில் அம்ருதபிந்தூபநிஷத் என்று ஒன்று உண்டு.
அதன் முதல் வரி இப்படி ஆரம்பிக்கிறது:
“மன ஏவ மனுஷ்யானாம் காரணம் பந்த மோக்ஷயோ”:
இதன் பொருள் : மனம் மட்டுமே மனிதர்களின் பந்தத்திற்கும் மோக்ஷத்திற்கும் காரணம்”
இந்த உபநிடதம் மனதை அடக்க வேண்டிய வழியைக் கூறி பாலில் நெய் மறைந்திருப்பது போல ஒவ்வொரு உயிரிலும் விக்ஞானம் உறைகிறது. மனமெனும் மத்தினால் அதை இடைவிடாது கடைந்தெடுக்க வேண்டும் என்கிறது.
மனம் என்னும் மாயத்தை இந்து மதமும் புத்த மதமும் ஆராய்ந்து உரைக்கும் உண்மைகள் நவீன அறிவியலால் உரசப்பட்டு உண்மை என்று கூறப்படும் போது நமது மனம் ஆனந்தம் அடைகிறது, இல்லையா!
உங்கள் அனைவருக்கும் மனம் எனும் வசியமுள்ள அதிர்ஷ்டத் தேவதை வசமாகி வளமான மனமும் வாழ்க்கையும் கிடைக்க வாழ்த்தியும் ஆசிர்வதித்தும் அமைகின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து உங்கள் ருத்ர ஷிவதா.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!