குருகுலக் கல்வியின் மூலம் அறிவொளி

அன்பு மாணவர்களுக்கு நமது குருகுலத்தில் வரும் 31.01.2025 ஆம் தேதி இரவு 07.30 மணிக்கு ஐந்தாம் நிலை வகுப்புகள் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

இந்த வகுப்பிலிருந்து தொடர்ந்து நமது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞானத் தந்திர முறைகள் பற்றியும் அதன் பிரயோக முறைகள் பற்றியும் மிக விரிவாக ஆய்வுப் பாடங்களாக (Ph.D lessons) கற்றுக் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த அரிய பொன்னான சித்தர்களின் அரிய கலைகளைக் கற்றுக் கொள்வதால் நீங்கள் அதிவிரைவில் பரிபூரண பிரமஞானத்தை உங்கள் உயிரில் பெற்றுக் கொள்ளலாம்.

புதிய மாணவர்களும் இக்குருகுலக் கல்வியில் இணைந்து கொள்ளலாம். 

இது முழுக்க முழுக்க சித்தர்களின்

மகா சிவ இரகசியக் கலையாகும்.

அனைத்து சித்தர்களின் பிரமஞானங்களை முழுமையாக உணர்ந்து அனுபவித்து மகிழ்ந்திட இருக்கின்றீர்கள்…….

இக்குருகுலக் கல்வி எம் சற்குருவால் எமக்கு வழங்கப்பட்ட அரிய பிரமஞானப் பொக்கிசக் கலையாகும்.

தயவுசெய்து நீங்கள் அனைவரும் மறந்தும்கூட இக்கல்வியை கற்காமல் இருந்துவிடக்கூடாது என்றெண்ணியே நடத்தி வருகிறோம்.

இக்கல்வி உங்கள் உயிரின் விழிப்புணர்வு ஆற்றலை பன்மடங்கு பெருக்கி, இறைவனோடு ஒளியாக கலக்க வைக்கும் சற்குருவின் ஆசிர்வாதத்தை பரிபூரணமாகக் கொண்டிருக்கிறது.

 அதனால் வரும் 26.01.2025 ஆம் தேதிக்குள் மாணவர்கள் இக்கல்விக்கான நன்கொடையினை குருகுலத்தில் செலுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

மேலும், குருகுலக் கல்வி நான்காம் நிலை முடித்த மாணவர்கள் உங்கள் புத்தகத்திற்கான நன்கொடை தொகை ரூ.1000/- செலுத்தி உங்கள் குருகுலக் கல்வி 4ஆம் நிலை புத்தகத்தினைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம். 20.01.2025 ஆம் தேதிக்குள் இத்தொகையை செலுத்திவிட்டால், புத்தகங்களை அச்சிட்டு பைண்டிங் செய்ய ஏதுவாக இருக்கும்.  காலதாமதம் செய்ய வேண்டாம். 

ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்

  Dr.ருத்ர ஷிவதா

பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்

தொடர்புக்கு : Admin : 770 800 7559 (GPay)

திருச்சிற்றம்பலம் !