புத்தகங்கள் விற்பனைக்கு

திருவடிகளில் உள்ள பிராண, அபான வாயுக்களை ரேசித்தும் பூரித்தும் கடைசியாக கும்பித்தும் பிரமஞானத் தவம் செய்து வந்தால், இந்த ஞான வினைகளின் காரணமாக சாதகனின் தேகத்தில் உள்ள பஞ்சேந்திரியச் சக்திகளும் எழுபத்து இரண்டாயிரம் நாடிகளும் ஒன்றாகி நினைக்கவே முடியாத பல அற்புதங்களும் நடைபெற ஆரம்பித்துவிடும்.  ஞானச் சாதகன் உவப்பிலா ஆனந்தத்தில் என்றும் இளமையோடும் புத்துணர்ச்சியோடும் மகிழ்ந்து கொண்டிருப்பான்.

ஒரு புத்தகத்தின் விலை: 500.00

பிரணவம் என்பது வில் ; ஆத்மா என்பது அம்பு ; பிரம்மம் என்பது குறி.  கவனக்குறைவில்லாமல் நம்முடைய பிரம்மம் என்ற குறியை (இலக்கை) நோக்கி பாய்ந்து செல்லும்படி பிரம்ம ஞானக் கிரியா தவம் இருக்க வேண்டும்.  அம்பினைப் போல (ஆன்மாவைப் போல) தன்மயமாக இருக்க வேண்டும்.

ஆத்மாவை அரணியின் அடியாகச் செய்து பிரணவத்தைக் கடையும் மேற்பாகமாகச் செய்து தவத்தால் தொடர்ந்து கடைந்து, மறைந்திருக்கும் பிரம்மத்தைக் காண வேண்டும்.  அதுவே பிரம்ம ஞானக் கிரியா யோகியின் இலக்காகும்.

ஒரு புத்தகத்தின் விலை: 1600.00

பிரமஞானக் கிரியாவுக்கான ஆதாரங்களாக நம் சித்தர்கள் பாடியிருக்கும் எண்ணற்ற நூல்களிலிருந்து ஆதாரங்களையும் ஆவணங்களையும் மெய்ப்பதிவுகளையும் ஞான இரகசியங்களையும் மாணவர்கள் புரிந்து கொள்வதற்காக தொகுத்து கொடுத்திருக்கிறோம். உலகின் அனைத்துச் சித்தர்களும் இந்த பிரமஞானத் தவத்தைத்தான் திறவுகோலாகப் பயன்படுத்தி மரணமிலாப் பெருவாழ்வை அடைந்திருக்கிறார்கள் என்பதை ஆணித்தரமாக இந்நூல் சொல்கிறது.

ஒரு புத்தகத்தின் விலை: 600.00

பிரமஞானப் பொற்சபை குருகுலத்தில் ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பாரம்பரிய கலையான ஐவகை பிரமஞானத் தவங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. மனிதனை பிரமஞானம் அடையவிடாமல் தடைக்கற்களாக இருக்கும் மும்மலங்களை எவ்வாறு வெல்வது? என்பதும் இறைவனோடு எவ்வாறு புணர்ந்து திருக்கல்யாணம் செய்து இறையொளியோடு நம் உயிரொளியை எவ்வாறு இணைக்கலாம்? என்பதைப் பற்றியும் விரிவாக ஆராய்கிறது இந்நூல்.

ஒரு புத்தகத்தின் விலை: 100.00

திருவாசகத்தை இதுநாள்வரை நாம் பக்தி நூலாகத்தான் பார்த்து வருகிறோம். அப்படி பழக்கப்படுத்தியிருக்கிறோம். ஆனால், திருவாசத்தை ஓதும் மக்களின் உயிர்களை, உயிர் மலரை மலர வைக்கும் ஞான நூலாகத்தான் இருக்க வேண்டும் என்று கருதியே, இத்திருவாசகம் பாடப்பெற்ற ஞானமெய்ப்பொருள் இரகசியத்தை எம் சற்குருவின் அனுமதியோடு உடைத்து வெளிப்படுத்தி இங்கே உங்கள்முன் சமர்ப்பித்திருக்கின்றோம், இனிமேல் திருவாசகம் பத்திப் பனுவல்ல ; அது முக்காலத்தையும் கடந்து நிற்கும் பிரமஞானப் பனுவல். நம் உயிர்களை மலர வைக்கும் ஆனந்தத் தடாகம் என்று இந்நூல் நெடுகிலும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல எடுத்தாளப்பட்டுள்ளது.