மூக பஞ்சசதீ

காஞ்சி காமாக்ஷி தேவியின் பேரில் 500 ஸ்லோகங்களை கொண்ட அழகான ஸ்தோத்திரம் மூக பஞ்சசதீ. இது 5 சதகங்களை கொண்டது.

  1. ஆர்யா சதகம்
  2. பாதாரவிந்த சதகம்
  3. ஸ்துதி சதகம்
  4. கடாக்ஷ சதகம்
  5. மந்தஸ்மித சதகம்

இதை இயற்றியவர் மூக கவி. ‘மூகன்’ என்றால் ஊமை என்று அர்த்தம். ஊமையாக இருந்த ஒரு பரம பக்தர், காஞ்சீபுரத்தில் குடி கொண்டுள்ள ஜகன்மாதா காமாக்ஷியின் கிருபா கடாக்ஷத்தையும், அவளுடைய தாம்பூல உச்சிஷ்டத்தையும் பெற்று, உடனே அமிருத சாகரம் மாதிரி ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து தள்ளி விட்டார். அதைத்தான் மூக பஞ்ச சதீ என்கிறோம். ‘பஞ்ச’ என்றால் ஐந்து; ‘சதம்’ என்பது நூறு. நூறு சுலோகங்கள் கொண்ட தொகுப்புக்கு ‘சதகம்’ என்று பெயர்.

காமாக்ஷி அம்பாளின் பொதுவான மகிமை பற்றி ‘ஆர்யா’ என்ற விருத்தத்தில் நூறு சுலோகங்கள் (ஆர்யா சதகம்). அவளுடைய பாதார விந்தங்களின் பெருமையைப் பற்றி மட்டும் நூறு சுலோகங்கள் (பாதாரவிந்த சதகம்), ஸ்துதிக்கு உகந்த அவளது குணங்களைப் பற்றி நூறு சுலோகங்கள் (ஸ்துதி சதகம்), அம்பாளின் கடாக்ஷ வீக்ஷண்யத்தைப் பற்றி மாத்திரம் நூறு சுலோகங்கள் (கடாக்ஷ சதகம்), தேவியின் புன்சிரிப்பின் ஸெளந்தர்யத்தைப் பற்றியே நூறு சுலோகங்கள் (மந்தஸ்மித சதகம்) என்றிப்படி மொத்தம் ஐந்நூறு சுலோகங்களைப் பொழிந்து விட்டார் மூகர் என்று சிலாகித்து சொல்கிறார் மஹா பெரியவா.

இது மஹா பெரியவாளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்தோத்திரம். அம்பாளைப் பற்றிய ஸ்தோத்திர கிரந்தங்களுக்குள் மிகவும் சிறந்தது என்று புகழ்கிறார். அவர் காமகோடி கோக்ஷஸ்தானம் மூலமாக இந்த ஸ்தோத்திரத்தை புஸ்தகமாக வெளியிட்டு, பல பக்தர்களிடம், இஹ பர சௌபாக்யத்துக்காக தினமும் இதை படிக்கும்படி பரிந்துரை செய்திருக்கிறார். ஸ்தோத்திர வடிவமாக இருப்பதால், நேரம், இடம், தகுதி, பாராமல் எவரும் எவ்விடத்திலும் எந்நேரத்திலும் பக்தியோடு இதை பாராயணம் செய்யலாம்.  சிறு வயதில் திக்குவாய் இருந்த ஒருத்தர், மஹா பெரியவா சொல்லி மூக பஞ்ச சதீ படித்து சங்கர பாஷ்யத்துக்கு வாக்யார்த்தம் சொல்லுகிற அளவுக்குப் பெரிய பண்டிதர் ஆகி விட்டார்.

ஒரு சமயம் ஒரு புலவர் அம்பாள் மீது புதிய சுப்ரபாதம் இயற்றி பேராசிரியர் வீழிநாதன் மாமா மூலமாக மஹாபெரியவாளுக்கு சமர்ப்பித்தார். அன்றைய தினம் மஹாபெரியவா மௌன விரதம். அடுத்த முறை மஹாபெரியவாளை வீழிநாதன் மாமா சந்தித்து அந்த புதிய சுப்ரபாதம் பற்றி கேட்ட போது, பெரியவா “மூக பஞ்ச சதி இருக்கும் போது அம்பாள் மீது இன்னொரு ஸ்தோத்ரம் இயற்ற வேண்டிய அவசியம் என்ன?” என்று கேட்டிருக்கிறார். பெரியவாளுக்கு மூக பஞ்ச சதியின் மேல் அத்தனை அபிமானம். அத்தனை பக்தி.

மூக பஞ்ச சதி புஸ்தகத்தின் ஸ்ரீமுகத்திலும் மஹாபெரியவா, ”அம்பாள் வாக்கிலிருந்து மூக கவி வாக்கிற்கும் மூக கவி வாக்கிலிருந்து நமக்கும் அனுக்ரஹம் செய்ய வந்திருக்கும் அற்புத ஸ்துதி இது” என்று சொல்லியிருக்கிறார். மேலும் “உலகத்திலே மிகச் சிறந்ததாக விளங்கும் இந்த ஸ்துதி நூலை படிப்பதால் மட்டுமே, அந்த க்ஷணத்திலேயே இந்த மஹாகவியோடும், இறுதியிலே பரதேவதையோடுமே ஒன்றாகும் நிலையை ஸாதகன் அடைகின்றான்” என்று ஆசீர்வாதம் பண்ணி இருக்கார்.

மூகபஞ்சசதீ

மஹா பெரியவா கல்யாணத்திற்கு பிள்ளை / பெண் தேடுபவர்களுக்கு ஆர்யா சதகத்திலிருந்து 91வது ஸ்லோகத்தையும். வறுமை நீங்க ஸ்துதி சதகத்திலிருந்து 74வது ஸ்லோகமும், உடல் உபாதைகள் நீங்க மந்தஸ்மித சதகத்திலிருந்து 94வது ஸ்லோகமும், ஞானம் சித்திக்க ஸ்தோத்திரம் முழுவதும் 5 முறை திரும்ப திரும்ப பாராயணம் பண்ண வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார்.

என்னுடைய சத்குருநாதர் ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னுடைய பத்தாவது வயதிலிருந்து தன்னுடைய 75வது வயதில் கடைசி நாள் வரை ஒரு நாள் தவறாமல் மூக பஞ்ச சதீ பாராயணம் செய்து வந்தார். அம்பிகையின் மேல் அமைந்த பக்தி கிரந்தங்களில் முக்கியமானதாக இந்த கிரந்தத்தை நினைத்தார். ஸ்வாமிகள் எனக்கு ஒவ்வொரு முறை பாராயணம் செய்யும் போதும், “மஹா பெரியவா தான் காமாக்ஷி! நீ இந்த ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்தால், மஹா பெரியவாளோட பரிபூரண அனுக்ரஹம் கிடைக்கும். உனக்கு லௌகீகத்திலும் ஆன்மீகத்திலும் நன்மைகள் உண்டாகும்” என்று கூறுவார்.

சம்ஸ்க்ருதத்தில் பெரிய எழுத்துக்களில் பாராயணத்திற்கு ஏற்றவாறு 500 ஸ்லோகங்களையும் புஸ்தக வடிவில் தொகுத்து வழங்கியுள்ளேன். பாட பேதம் இருந்தால் இது ஸ்வாமிகளின் பாடம்

அம்பாள் வாக்கிலிருந்து மூக கவி வாக்கிற்கும் மூக கவி வாக்கிலிருந்து நமக்கும் அனுக்ரஹம் செய்ய வந்திருக்கும் அற்புத ஸ்துதி இது.”

500 ஸ்லோகங்களையும் படிப்பதே சிறந்தது. ஆனாலும் மகான்கள் இதில் ருசி ஏற்படுவதற்காக சில ஸ்லோகங்களை குறிப்பட்டு சொல்லியுள்ளார்கள். கார்ய சித்தி அளிக்கும் சில ஸ்லோகங்களைப் பார்ப்போம்.

ஞானம் சித்திக்க: (to attain gnanam)

ஸ்தோத்திரம் முழுவதும் 5 முறை திரும்ப திரும்ப பாராயணம் பண்ண வேண்டும்.

அமிருதம் போன்ற வாக்கு சித்திக்க: (to get ambrosia like speech)

ஆர்யா சதக முடிவில் அம்பாளை ஆராதிக்கிறவனுக்கு அமிருதம் போன்ற வாக்கு சித்திக்கிறது என்று சொல்லியிருக்கிறது. அதனால் முதல் 100 ஸ்லோகங்களைப் பாராயணம் செய்கிறவர்களுக்கு நல்ல வாக்கு சித்திக்கும்.

 

திருமண வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்க: (for happiness in married life)

ஸ்தோத்திரம் முழுவதும் ஒரு பௌர்ணமியிலிருந்து இன்னோர் பௌர்ணமிக்கும் 5 தடவை பாராயணம் செய்ய வேண்டும்

கீர்த்தியோடு விளங்க: (to get fame)

மூகோऽபி ஜடிலது³ர்க³திசோகோऽபி ஸ்மரதி ய: க்ஷணம் ப⁴வதீம் ।
ஏகோ ப⁴வதி ஸ ஜந்துர்லோகோத்தரகீர்திரேவ காமாக்ஷி ॥

(ஆர்யா சதகம் 57)

படிப்பில் சிறக்க: (to excel in education)

வித்³யே விதா⁴த்ருʼவிஷயே காத்யாயனி காலி காமகோடிகலே |
பா⁴ரதி பை⁴ரவி ப⁴த்³ரே ஶாகினி ஶாம்ப⁴வி ஶிவே ஸ்துவே ப⁴வதீம் ||

(ஆர்யா சதகம் 78)

கல்யாணத்திற்கு பிள்ளை/பெண் தேடுபவர்களுக்கு: (to get a good husband / wife)

ஸ்மரமத²னவரணலோலா மன்மத²ஹேலாவிலாஸமணிஶாலா |
கனகருசிசௌர்யஶீலா த்வமம்ப³ பா³லா கராப்³ஜத்⁴ருʼதமாலா || (ஆர்யா சதகம் 91)

மனக்கவலைகள் நீங்க: (to get rid of worries)

கதா³ தூ³ரீகர்த்தும் கடுது³ரித காகோல ஜனிதம்
மஹாந்தம் சந்தாபம் மத³னபரிபந்தி²ப்ரியதமே |
க்ஷணாத்தே காமாக்ஷி த்ரிபு⁴வனபரீதாப ஹரணே
படீயாம்ஸம் லப்ஸ்யே பத³கமலசேவாம்ருதரஸம் ||

(பாதாரவிந்த சதகம் 22)

அம்பாளின் சரணங்களில் மனது லயிக்க: (to get paada bhakthi)
நகா²ங்கூரஸ்மேரத்³யுதிவிமலக³ங்கா³ம்ப⁴ஸி ஸுக²ம்
க்ருʼதஸ்னானம் ஜ்ஞாநாம்ருʼதமமலமாஸ்வாத்³ய நியதம் ।
உத³ஞ்சன்மஞ்ஜீரஸ்பு²ரணமணிதீ³பே மம மனோ
மனோஜ்ஞே காமாக்ஷ்யாஶ்சரணமணிஹர்ம்யே விஹரதாம் ॥ (பாதாரவிந்த சதகம் 48)

நவக்ரஹங்களின் அநுக்ரஹம் பெற: (to get blessings of navagraha)

த³தா⁴நோ  பா⁴ஸ்வத்வாம்  அம்ருதநிலயோ லோஹித வபுஹு
வினம்ராணாம் சௌம்யஹ குருரபி கவித்வம் ச கலயன் |
க³தோ மந்த³: க³ங்காத⁴ரமஹிஷி காமாக்ஷி ப⁴ஜதாம்
தம: கேதுர் மாத:  தவசரண பத்மௌ  விஜயதே ||

(பாதாரவிந்த சதகம் 59)

கெட்ட வினைகள் நீங்க: (to get rid of bad karma)

வினம்ராணாம் சேதோப⁴வனவலபீ⁴ஸீம்னி சரண-
ப்ரதீ³பே ப்ராகாச்யம் த³த⁴தி தவ நிர்தூ⁴ததமஸி ।
அஸீமா காமாக்ஷி ஸ்வயமலகு⁴து³ஷ்கர்மலஹரீ
விகூ⁴ர்ணந்தீ சாந்திம் சலப⁴பரிபாடீவ ப⁴ஜதே ॥ (பாதாரவிந்த சதகம் 79)

அஞ்ஞான இருள் நீங்க: (to get rid of ignorance)
நித்யம் நிஸ்ச்சலதாம் உபேத்ய மருதாம் ரக்ஷாவிதி⁴ம் புஷ்ணதீ
தேஜசஞ்சய பாடவேன கிரணான் உஷ்ணத்³யுதேர் முஷ்ணதீ |
காஞ்சீமத்⁴யகதாபி தீ³ப்தி ஜனனீ விஷ்வாந்தரே ஜ்ரும்ப⁴தே
காசித்சித்ரமஹோ ஸ்ம்ருதாபி தமஸாம் நிர்வாபிகா தீ³பிகா ||

(ஸ்துதி சதகம் 9)

பெண்ணைப் பெற்றவர்கள் பெருமை அடைய:

(to get good name through daughters)

ஐக்யம் யேன விரச்யதே ஹரதனௌ த³ம்பா⁴வபும்பா⁴வுகே
ரேகா² யத்கசஸீம்னி ஶேக²ரத³ஶாம் நைஶாகரீ கா³ஹதே |
ஔன்னத்யம் முஹுரேதி யேன ஸ மஹான்மேனாஸக²: ஸானுமான்
கம்பாதீரவிஹாரிணா ஸஶரணாஸ்தேனைவ தா⁴ம்னா வயம் ||13 (ஸ்துதி சதகம் 13)

மனக் கவலை நீங்க: (to give up worries)

க்ருபா தா⁴ரா து³ரோணீ கிருபண தி⁴ஷணானாம் ப்ரணமதாம்
நிஹந்த்ரீசந்தாபம் நிக³ம முகுடோத்தம்ஸ கலிகா |
பரா காஞ்சீ லீலா பரிசயவதீ பர்வத ஸுதா
கி³ராம் நீவீ தேவீ கி³ரிஷ பரதந்த்ரா விஜயதே || (ஸ்துதி சதகம் 45)

சர்வக்ஞனாகி உலகத்தில் கீர்த்தியோடு விளங்க:

(to become omniscient and get fame)
ஆரம்ப⁴லேஷஸமயே தவ வீக்ஷணஸ்ய
காமாக்ஷி மூகமபி வீக்ஷணமாத்ரநம்ரம் |
ஸர்வஜ்ஞதா ஸகலலோகஸமக்ஷமேவ
கீர்திஸ்வயம்வரணமால்யவதீ வ்ருணீதே || (ஸ்துதி சதகம் 38)

வினைகள் நீங்கி எல்லா பேறுகளும் பெற: (to get all blessings)
மாத: க்ஷணம் ஸ்னபய மாம் தவ வீக்ஷிதேன
மந்தா³க்ஷிதேன ஸுஜனைரபரோக்ஷிதேன |
காமாக்ஷி கர்மதிமிரோத்கரபா⁴ஸ்கரேண
ச்ரேயஸ்கரேண மது⁴பத்³யுதிதஸ்கரேண || (ஸ்துதி சதகம் 45)

வறுமை நீங்க: (to get rid of poverty)

க²ண்டீ³க்ருத்ய ப்ரக்ருதிகுடிலம் கல்மஷம் ப்ராதிப⁴ஶ்ரீ-
ஶுண்டீ³ரத்வம் நிஜபத³ஜுஷாம் ஶூன்யதந்த்³ரம் தி³ஶன்தீ |
துண்டீ³ராக்²யை மஹதி விஷயே ஸ்வர்ணவ்ருஷ்டிப்ரதா³த்ரீ
சண்டீ³ தே³வீ கலயதி ரதிம் சந்த்³ரசூடா³லசூடே³ || (ஸ்துதி சதகம் 74)

கெட்ட புத்தி நீங்கி காமாக்ஷியின் அநுக்கிரஹம் பெற:

(to get rid of perversions)
மஹாமுனிமனோனடீ மஹிதரம்யகம்பாதடீ-
குடீரகவிஹாரிணீ குடிலபோ³த⁴ஸம்ஹாரிணீ ।
ஸதா³ ப⁴வது காமினீ ஸகலதே³ஹிநாம் ஸ்வாமினீ
க்ருʼபாதிஶயகிங்கரீ மம விபூ⁴தயே ஶாங்கரீ ॥ 81

படிப்பையும் பணத்தையும் சேர்ந்தே அருளும் காமாக்ஷி:

(to get knowledge and prosperity)
க்ஷீராப்³தே⁴ரபி ஷைலராஜதனயே த்வன்மந்த³ஹாஸஸ்ய ச
ஸ்ரீகாமாக்ஷி வலக்ஷிமோதயநிதே⁴: கிம்சித்³பி⁴தா³ம் ப்³ரூமஹே |
ஏகஸ்மை புருஷாய தே³வி ஸ த³தௌ³ லக்ஷ்மீம் கதாசித்புரா
ஸர்வேப்⁴யோ‌sபி த³தா³த்யஸௌ து ஸததம் லக்ஷ்மீம் ச வாகீஷ்வரீம் ||

பாசத்திலிருந்து விடுபட (தினம் மூன்று ஆவர்த்தி):

(to get rid of three bonds)
நீலோத்பல பிரஸவகாந்தி நித³ர்சநேன
காருண்யா விப்ரமஜூஷா தவ வீக்ஷணேன |
காமாக்ஷி கர்மஜலதே⁴: கலஷீஸுதேன
பாஶத்ரயாத்³ வயமமீ பரிமோசனியா: || (கடாக்ஷ சதகம் 82)

 

 

ஞானம் பெற (தினம் மூன்று ஆவர்த்தி): (to attain wisdom)
யாவத்கடாக்ஷ ரஜநீ ஸமயாக³மஸ்தே
காமாக்ஷி தாவத³சிராந்நமதாம் நராணாம் |
ஆவிர்ப⁴வத்யம்ரு’ததீ³தி⁴தி பி³ம்ப³மம்ப³
ஸம்வின்மயம் ஹிருத³ய பூர்வ கி³ரீந்த்³ர ஶ்ரு’ங்கே³ ||

(கடாக்ஷ சதகம் 97)

நல்ல நண்பர்கள் கிடைத்து கீர்த்தியோடு விளங்க: (to get good friends)
பும்பி⁴ர்நிர்மலமானஸைர்வித³த⁴தே மைத்ரீம் த்³ருʼட⁴ம் நிர்மலாம்
லப்³த்⁴வா கர்மலயம் ச நிர்மலதராம் கீர்திம் லப⁴ந்தேதராம் ।
ஸூக்திம் பக்ஷ்மலயந்தி நிர்மலதமாம் யத்தாவகா: ஸேவகா:
தத்காமாக்ஷி தவ ஸ்மிதஸ்ய கலயா நைர்மல்யஸீமாநிதே:⁴

(மந்தஸ்மித சதகம் 89)

வியாதி நீங்க: (to get rid of ailments)

இந்தா⁴னே ப⁴வவீதிஹோத்ரநிவஹே கர்மௌக⁴சண்டா³னில-
ப்ரௌடி⁴ம்னா ப³ஹுலீக்ரு’தே நிபதிதம் ஸந்தாபசிந்தாகுலம் |
மாதர்மாம் பரிஷிஞ்ச கிம்சித³மலை: பீயூஷவர்ஷைரிவ
ஶ்ரீகாமாக்ஷி தவ ஸ்மிதத்³யுதிகணை: ஶைஶிர்யலீலாகரை: ||

(மந்தஸ்மித சதகம் 94)