இங்கே கூடியிருக்கும் அனைத்து ஆன்மீக அன்பர்களுக்கும் இனிய மாலை வணக்கம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! திருச்சிற்றம்பலம் !!
ஓம்…………………….. ஓம் …………………….. ஓம் …………………..
இன்றைக்கு விநாயகர் அகவலின் அடுத்த வரிகளுக்குள் இன்புறலாம்.
அடுத்த அகவல் வரிகள் : “அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும்
குமுத சகாயன் குணத்தையும் கூறி (46)” என்பது.
ஔவைத்தாய் தனக்கு அமுதநிலையைக் கொடுத்தருளும்படி விநாயகப் பெருமானை நோக்கிப் பிரார்த்திக்கும் ஒரு உயர்ந்த சொல்லாடல்தான் இந்த அமுத நிலை என்பது. யார்க்கு வாய்க்கும் இந்த அமுத நிலை? அவ்வளவு எளிதில் இந்த அமுதமானது நமக்கு கிடைத்துவிடக் கூடிய எளிதான பொருளா? இல்லையே. பாடுபட்டு, பாடுபட்டு, அனுபவப்பட்டு, பட்டு, உணர்ந்து, உணர்ந்து, நெகிழ்ந்து, நெகிழ்ந்து, அன்பே நிறைந்து வழியும்போது கண்ணீர்ப் பூக்கள் ஊற்றாக மாறும்போது, நம் உயிருக்குள்ளே ஒரு இரசவாதம் நிகழ ஆரம்பிக்கும் பேரின்ப நிலைப்பாடுதான் இந்த அமுத நிலை என்று சொல்லப்படக்கூடியது.
அமுதம் என்ற சொல்லைப் பதம் பிரித்து பாருங்கள்.
அமுதம் = அமுது + அ + ம்.
யானே பொய் என்நெஞ்சும் பொய் என்அன்பும் பொய்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந்து உறுமாறே. (திருச்சதகம்-90)
சிவமே, எம் இறைவா, நானே பொய்யாகத்தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன். என் இதயம்கூட பொய்யாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. என்னுடைய அன்புகூட பொய்யாகத்தான் உள்ளது. கர்மவினைகளால் பீடிக்கப்பட்டுள்ள நான் உன்னை நோக்கி அன்பு செலுத்தி, பத்தி செலுத்தி உள்ளுணர்வால் என் மனதை திருப்பிவிட்டு, இரு திருவடிகளில் உனைக் காண பெருவேட்கை கொண்டு மெய்யுணர்வில் நின்று அழ ஆரம்பித்துவிட்டால், எனக்குள்ளே உன்னை நான் பெற்றுவிடுவேனே. எம் இறைவா, சிவநேசா, என் தேனே, என் உயிரில் ஊறும் அமுதே, என் தித்திக்கும் கரும்பே, என் ஞானத் தெளிவே, என் தித்திக்கும் மானே, அருளே வடிவானவனே, அடியேனாகிய நான் உனை வந்து உன்னோடு கலந்து விடவேண்டுமே.
இதற்கு மேலும் சிவத்தை நோக்கி அன்பு பாராட்டி அழ முடியுமா நம்மால்? மாணிக்கவாசகர் மெய்யுணர்வால் அழுதார். சிவத்தைப் பெற்றார். சிவத்தை திருவாசகம் எழுதும்படி செய்தார். இல்லையில்லை, மாணிக்கவாசகரின் பிரமஞானம் கண்டு சிவமே, ‘வாதவூரா, நீ பாட, யாம் எழுத” என்று அமர்ந்து திருவாசகத்தை இறைவனே, சிவமே எழுதியதோடு மட்டுமல்லாமல் தான்தான் எழுதினோம் என்பதை பின்வரும் காலங்களில் உலக உயிர்கள் நம்பவேண்டும் என்பதற்காக, ‘அழகிய சிற்றம்பலமுடையான் எழுதியது’ என்று எழுதி கையொப்பமும் போட்டிருக்கிறார். இதைவிட வேறென்ன பெருமை திருவாசகத்திற்கு வேண்டும், சொல்லுங்கள். இப்பெருமை உலகில் உள்ள எந்த மொழிக்கும் கிடைக்காத பெருமை, சிறப்பு நம் தாய்த் தமிழுக்கு கிடைத்துள்ளது. இதிலிருந்து உலக மொழிகளுக்கெல்லாம் தாயும் தந்தையும் ஆன மொழி தமிழ்மொழி என்பதைச் சொல்லத்தான் வேண்டுமோ.
இதை ஏன் இங்கு சொல்ல வந்தோமென்றால், பத்தி, அன்பு, வழிபாடு என்பது இப்படி இருக்க வேண்டும். இறைவனை மெய்யுணர்வால் வழிபட வேண்டும். புற ஆட்டங்களால் அல்ல. புறத்தே நாம் செல்லச் செல்ல இறைவன் வெகு தொலைவில் போய்விடுவான். எப்படியென்றால், நமக்குள் இருக்கும் இறைவனைக் காணாமல், வெளியே எங்கோ தேடும்போது, நமக்கும் நாம் சென்றிருக்கும் தொலைவுக்கும் உள்ள தூரம் நமக்கும் இறைவனுக்கும் உள்ள தொலைதூரமாக அமைந்து விடும். இதனால்தான் அனைத்துச் சித்தர்களும் ஞானிகளும் இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடத்தில் இறைவனைத் தேடாதீர்கள் என்றார்கள்.
சிவத்தை அடைய பிரமஞானத் தவம் ஒன்றுதான் மிக எளிமையான, வலிமையான, ஆத்மார்த்தமான ஞான வழி. மற்ற வழிகள் எல்லாம் தொலைதூர சுற்று வழிகள். இருக்கும் இடத்திலேயே இறைவனைக் காணலாம். நம் உயிருக்கும் இடத்திலேயே சிவத்தைக் காணலாம். உயிரைத் தேடி கண்டடைந்தால், சிவத்தைக் காண்பது எளிது. உயிரைக் காணாது சிவத்தைக் காணவே இயலாது. உயிரும் சிவமும் ஒன்றுக்குள் ஒன்றாக இருக்கின்றன. உயிரிலிருந்து சிவத்தையோ, சிவத்திலிருந்து உயிரையோ யாராலும் பிரித்தறிய முடியாது. இரண்டுமே ஒன்றுதான், அது சிவம்தான்.
இந்த சிவத்தை மெய்யுணர்வால் வழிபட வேண்டுமே ஒழிய, புறவழி ஆட்டங்களால் அல்ல என்பதைத்தான் இங்கு நாம் சொல்ல வந்தது. சிவம் நடனம் ஆடுகின்றார் என்பது உண்மைதான். அது என்ன சிவநடனம் என்றால், மெய்யுணர்வுகளை திருவடிகளின் வழியாக அமுதக்காற்றின்மூலம் மெய்ப்பொருளாகிய கண்மணியின் ஊடாக அனுப்ப வேண்டும். ஆனால், அங்கிருக்கும் மூன்று கோட்டைகள் அமுதக்காற்றின் மூலம் வரும் மெய்யுணர்வுகளை தடுத்து நிறுத்திவிடும். இந்த கோட்டைகளை சுடராழித் தவத்தின் ஆயுதம்கொண்டு கடுமையாகத் தாக்க வேண்டும். அப்போதும் இந்தக் கோட்டைகள் அசைந்து கொடுக்காது. அப்போது சிவத்தின் அருளால் நமக்குள் ஒரு யுக்தி ஒன்று உருவாகும். அதுதான் முருகப்பெருமானின் யுத்த யுக்தி.
சுடராழித் தவத்தில் நாம் இரண்டு திருவடிகளில் இருக்கும் ஆயுதத்தைக் கொண்டு அக்கோட்டைகளைத் தாக்கிக் கொண்டிருப்போம். கோட்டை அசைந்து கொடுக்காது. அப்போது முருகப்பெருமானின் வேல் நமக்கு ஆயுதமாகக் கிடைக்கும். அதை அருள்வதும் சிவமே. நம் ஞானப் போருக்கு முருகனே முன்நின்று துணைபுரிவார். முருகப்பெருமானின் அருளால் அவர் கொடுத்த ஞான வேலான மூன்றாம் திருவடிகயைக் கொண்டு தாக்க முனைவோம். அப்போது முக்கோட்டைகளும் தனித்தனியாக வல்லமைகொண்டு நமக்கு போக்குக் காட்டிக் கொண்டிருக்கும்.
நன்றாக நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இந்த மூன்று கோட்டைகளும் தனித்தனியாக இருக்கும்வரை இவைகளை அழிக்கவே முடியாது. இவை மூன்றும் பிரபஞ்ச இயக்கத்தின் காரணமாக ஒரு கோணப் புள்ளியில் ஒரே நேர்க்கோட்டில் அடுக்கடுக்காக ஒன்றன்பின் ஒன்றாக சேர்ந்திருக்கும் சூழல் வரும். அந்த சூழலை கண்ணும் கருத்துமாகக் காத்திருந்தால் உற்றுப் பார்த்துக் கொண்டு வந்தோமென்றால், அந்த ஒருசேர் நேர்க்கோட்டுப் புள்ளியை நம்மால் கண்டறிந்துவிட முடியும். அப்போதும் முருகப்பெருமான் நமக்கு கொடுத்த ஞான வேலை, அக்கோட்டைகளின் கண் இருக்கும் இலக்கை நோக்கி எறிந்துத் தாக்க வேண்டும்.
ஏனென்றால், அக்கோட்டைகளின் உயிர் அதன் கண்களில்தான் அமைந்திருக்கும். அக்கோட்டைகளின் கண்ணைத் தாக்கி அழிக்கும்போது, அங்கே ஞானத்திற்கு தடையாக இருக்கும் திரைகள் மளமளவென்று விலக ஆரம்பிக்கும். அந்த ஒவ்வொரு விலகலின்போது, திரைக்குப் பின்னால் இருக்கும் உயிரின் ஒளியையும் அதற்குள் இருக்கும் சிவத்தின் ஒளியையும் கண்ணாரக் காண முடியும். அவ்வாறு திரை விலகலின்போது, பார்க்கப்படும் ஒளியானது விலகல் பெரிதாக, பெரிதாக அந்த ஒளியும் பெரிதாகிக் கொண்டே வருவதைக் காண முடியும்.
அப்போது அந்த உயிரொளியானது அமுதக்காற்று படப்பட அசைந்து கொடுத்து அழகாக வளைந்து கொண்டு காட்சியளிக்கும். இதைப் பார்ப்பதற்கு யாரோ ஒளிதேகத்தோடு ஆடுவதைப் போல இருக்கும். சிவம் எப்போதும் செம்மை நிறத்தோடுதான் இருப்பார். காரணம் அவர் ஒளியாக இருப்பதினால். ஒளியின் நிறம் செம்மை என்பதால், சிவமும் செம்மேனியாகத் தான் காட்சியளிப்பார். இந்த சிவயொளியோடு அமுதக்காற்று ஒன்றிணையும்போது, சிவயொளி மேலும் மேலும் வளைந்து, நெளிந்து, கீழ் மேலாக ஆடிக் கொண்டே இருக்கும்.
இதைத்தான் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானிகளும் ரிஷிகளும் முனிவர்களும் கண்டு, கண்டு பேரின்பத்தில் திளைக்க ஆரம்பித்தார்கள். இந்த சிவயொளியை கண்ணாரப் பார்க்கும்போது, பேரின்ப மெய்யுணர்வுகள் நம் தேகத்தை – ஐம்புலன்களை உச்சக்கட்ட மயிர்க்கூச்செறியும் பரவசத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும். இதை எழுத்துக்களாலோ வார்த்தைகளாலோ சொல்லிவிட முடியாது. இந்த சிவானுபவ மெய்யுணர்வுகளை அனுபவத்தால் மட்டுமே உள்ளது உள்ளபடி உணர்ந்திட முடியும். எம் பிரமஞானப் பொற்சபை மாணவர்கள் இதை நித்தமும் அனுபவித்துக் கொண்டு தவத்தில் இருந்து வருகிறார்கள்.
இந்த ஒளியின் அசைவுகள்தான் நடனம், செவ்வொளி அசைவுகள்தான் சிவநடனம். இவ்வாறு பிரமஞானத் தவத்தால் சுடராழி யுக்தியைக் கொண்டு சிவத்தைக் கண்டு மெய்யுணர்வுகளால் உயிருக்குள் ஆடித் திளைக்க வேண்டுமே தவிர, புறவெளியில் புறவழிபாட்டில் ஆடி தேகத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கக் கூடாது. இது சிவனை வழிபடும் முறையல்ல, இதுவெல்லாம் புறமார்க்கம். அக மார்க்கம் ஒன்றே அகத்தில் இருக்கும் ஈசனைக் காண வழி. அகத்தில் ஈசன் இருப்பதால்தான் அவனுக்கு அகத்தீசன் என்று பெயர். புறஈசன் என்று இறைவன் அழைக்கப்படுவதில்லை.
எந்தவித உணர்வுகளையும் மெய்யால் உணரப்பட வேண்டும் என்பதுதான் ஞானத்தை அடைவதற்காக சத்திய வழி. மெய் என்பது உடலல்ல, அது நம் உயிர். உயிர்தான் மெய். மற்றெல்லாம் பொய். உயிராகிய மெய் இருப்பதால்தான் இந்த உடலுக்கு மெய்யுடம்பு என்ற பெயர். உடலை விட்டு உயிர் போன பின்பு, இது பொய்யுடம்பு என்ற பெயரெடுக்கிறது. இதிலிருந்தே மெய் எது? பொய் எது? என்பதை நாம் பகுத்துணர வேண்டும்.
எனவே, இனிவரும் ஒவ்வொரு சிவராத்திரி காலங்களில் நம் ஆதித் தமிழ்ச் சித்தர்களும் பிரமஞானிகளும் மாணிக்கவாசகரும் சொன்னதைப் போல, நாம் அனைவரும் பிரமஞானத் தவத்தை சிவத்தைப் போல செய்து, திருவடிகளின் மெய்ப்பொருளால் சிவப் பரம்பொருளைக் கண்டடைந்து பரிபூரண பிரமஞானம் பெற்று சிவத்தோடு ஒளியாக கலந்துவிட வேண்டும் என்று பணிவோடு விண்ணப்பித்துக் கொள்கின்றேன்.
பிரமஞானத் தவம் என்பது எமக்கோ ஒரு சாராருக்கோ உரிமையுடைத்து அல்ல. நம் தமிழ்இனங்கள் அனைவருக்கும் சொந்தமான, உரிமையுடையதான நம் முப்பாட்டன்களின் சொத்துதான் இந்த பிரமஞானத் தவம். அனைவரும் கற்றுக் கொள்ளுங்கள். பரிபூரண பிரம ஞானத்தை அடைந்திடுங்கள். சிவமாகவே மாறிடுங்கள். இதுவல்லால் யாம் வேறொன்றும் உங்களிடம் யாசிக்கவில்லை. நம் தமிழ் இறைநெறி இதுவொன்றே. நம் தமிழைக் காக்க, தமிழ் நெறியைக் காட்ட, இத் தவநெறியை உலகெங்கும் பறைசாற்ற நீங்கள் எல்லோரும் இத்தவத்திற்குள் வரவேண்டும் என்றும் வெற்றிநிலையைப் பெறவேண்டும் என்றும் உலக மக்களுக்கு சிறந்த ஞான வழிகாட்டியாக இருக்க வேண்டும் இங்கே உங்கள்முன் சிரந்தாழ்த்தி திருவடிகளால் வணங்கிக் கேட்டுக் கொள்கின்றோம். குருவருளும் திருவருளும் இதற்கு துணைபுரிவதாக !
இந்த அமுதம் என்ற சொல்லை மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பல இடங்களில் பலவிதக் காரணங்களுக்காகப் பயன்படுத்தியிருக்கிறார். அதில் சிலவற்றைப் பார்க்கலாம்.
மாறிநின்று என்னை மயக்கிடும் வஞ்சப்
புலன்ஐந்தின் வழி அடைத்து அமுதே
ஊறிநின்று என்னுள் எழுபரஞ் சோதி
உள்ளவா காணவந்து அருளாய் (கோயில் திருப்பதிகம்-1)
குறைவிலா நிறைவே கோதிலா அமுதே
ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே (கோயில் திருப்பதிகம்-5)
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரனே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெட (65)
பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே (70)
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே (சிவபுராணம்)
பொழிப்புரை : குற்றம் இல்லாத மலர்ந்திருக்கும் மலர்ச் சுடரே ! ஒளிப் பிரகாசத்தை உடையவனே ! தேன்போன்ற இனிக்கும் அமுதமே ! சிவபுர மாகிய கயிலை மலையில் இருப்பவனே ! என்னைப் பற்றிக் கொண்டிருக்கும் பாசமாகிய மும்மல முடிச்சுகளை அறுத்து ஒழித்து என்னில் வெளிப்பட்டு நிற்கும் ஆரிய குருவே ! மனத்தில் இருக்கும் வஞ்சக எண்ணங்கள் ஓயும்படி உன் அருளைக் கொடுத்து அன்புக்காக ஏங்கிக் கொண்டிருக்கும் என்னில் நீங்காது நின்ற பெரிய அருளோடு கூடிய பெரும் வெள்ளப்பெருக்கே ! தணியாத அமுத வெள்ளமே ! அளவிட முடியாத பெருமானே ! பிரம ஞானக் கர்மத்தை அறியாத பாமரர்களின் உள்ளத்தில் மறைந்திருக்கக் கூடிய ஒளி வடிவானவனே ! என் உயிரை நீராக உருக்கி அதில் அமுதமாய் கலந்து ஆருயிராய் நிற்பவனே ! இன்பமும் துன்பமும் இல்லாது சமச்சீர் நிலையில் உள்ளவனே, இல்லாதும் இருப்பவனே ! அன்பைக் கொடுப்பவர் களிடம் அருளைக் கொடுக்கும் இறைவனே ! அனைத்துமாகவும் அல்லாத தாகவும் உள்ள சோதி சொரூபத்தைக் கொண்டவனே ! திருவடிகளில் பொருந்தி யிருக்கும் இருளை மீண்டும் மீண்டும் தோன்றாமல் செய்யக்கூடிய பெருமையாளனே !
தான் யார் என்பது எப்போது மனிதனுக்கு தெரிய வரும் என்றால், அவன் செய்யும் பிரமஞானத் தவத்தால் தன்னை அறியும் அறிவை அறிந்திடும்போது. தவம் ஒன்றுதான் நம்மை யார் என்று அறியும் ஒரு சிறந்த உபாயம், தந்திரமாகும். அவ்வாறு தவத்தால் தன்னை அறியும் ஞான சாதனை ஆற்றப்படும்போது, அவனுக்குள் சிந்தனையானது இறைவனை நோக்கியே போய்க் கொண்டிருக்கும். அப்போது ஒரு மடைமாற்றம் சாதகனுக்குள் நிகழ ஆரம்பிக்கும். அப்போது சாதகன் ஆற்றிய தவத்தின் அக்கினியால் சந்திரக் கலசம் உருகி உண்ணாமுலையில் அமுதத்தைக் கொடுக்க ஆரம்பிக்கும் என்பதைத்தான், “என் சிந்தனையுள் ஊற்றான உண்ணார் அமுதே உடையானே” என்றார் மாணிக்கவாசகர் திருவாசகத்தில்.
தேவரும் அறியாச் சிவனே காண்க
பெண்ஆண் அலி எனும் பெற்றியன் காண்க
கண்ணால் யானும் கண்டேன் காண்க
அருள்நனி சுரக்கும் அமுதே காண்க
கருணையின் பெருமை கண்டேன் காண்க (60)
புவனியல் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க
அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க
குவளைக் கண்ணி கூறன் காண்க
அவளுந் தானும் உடனே காண்க (65)
பொழிப்புரை : தேவர்களாக இருந்தாலும் திருவடிகளைப் பிடிக்கா விட்டால் காண முடியாத இறைவனைக் காண வேண்டும். பெண் என்றும் ஆண் என்றும் திருநங்கை என்றும் இருப்பவனாகிய இறைவனைக் காண வேண்டும். எனது இரு கண்களால் இறைவனைக் காண வேண்டும். அருட்கலையாக இறை அமுதம் சுரக்கும் இறைவனைக் காண வேண்டும். கருணையின் பெருமைகளை ஞான அனுபவத்தால் கண்டதால், அந்த இறைவனைக் காண வேண்டும். பூமியின்மீதே இறைவன் செவ்வரி ஓடிய திருவடிகளைப் பிடித்து, அந்த இறைவனைக் காண வேண்டும். அப்போது அந்த சிவன் வெளிப்பட்டதால், அவனை சிவன் என கண்டு தெளிந்து கொண்டேன். அந்த சிவனைக் காண வேண்டும். சிவனைக் கண்டு தெளிந்து கொண்டதால், சிவனவன் என்னை ஆட்கொண்டு அருட்கலையை வீசினான். அவனைக் காண வேண்டும். திருவடிகளின் கடைப்பக்கம் இருக்கும் குவளைக் கண்ணில் சத்திக்கு இடம்கொடுத்த இறைவனைக் காண வேண்டும். அந்தப் பார்வதி தேவியையும் சிவத்தையும் நான் உடனே காண வேண்டும்.
ஞான மெய்ப்பொருளுரை : பிரம்மாவும் திருமாலும் அறிய முடியாத சிவத்தை தேவர்கள் நினைத்தாலும், சிந்தித்தாலும், தவம் செய்தாலும் காண முடியாது. அதைத்தான், “தேவரும் அறியாச் சிவனே காண்க” என்றார்.
இப்பூமியில் இறைவனே எல்லா உயிர்களும் நீக்கமற நிறைந்திருக்கிறான். அதில் எந்தவித பேதத்தையும் இறைவன் காட்டுவதில்லை. அவன் புல், பூண்டு, செடி, கொடி, மரம், மலை, பாறை, அருவி, நீர், நதி, கடல், மேகம், வானம், நெருப்பு, காற்று, ஆண், பெண், அலி என அனைத்து உயிர்களிலும் சீவனாகவே இருந்து கொண்டிருக்கிறான். எல்லாம் அவன் கொடுத்தது. இதைத்தான், “பெண் ஆண் அலி எனும் பெற்றியன் காண்க” என்றார்.
இறைவனை எதனால், எவ்வாறு காண முடியும் என்றால், அவனை திருவடிகளின் துணைகொண்டுதான் காண இயலும். வேறு எந்த பொருட்களாலோ, ஆயுதங்களாலோ, உபகரணங்களாலோ காண இயலாது என்பதைத்தான், “கண்ணால் யானும் கண்டேன் காண்க” என்றார்.
எண்ணாயிரத்தாண்டு யோகம் இருக்கினும்
கண்ணார் அமுதினைக் கண்டறிவார் இல்லை
உள்நாடிக்கு உள்ளே ஒளிபெற நோக்கினால்
கண்நாடி போலக் கலந்து நின்றானே (தி.ம.603)
நாட்டம் இரண்டும் நடுமூக்கில் வைத்திடில்
வாட்டமும் இல்லை மனைக்கும் அழிவில்லை
ஓட்டமும் இல்லை உணர்வில்லை தானில்லை
தேட்டமும் இல்லை சிவனவன் நாமே (தி.ம.604)
நயனம் இரண்டும் நாசிமேல் வைத்திட்டு
உயர்வு எழா வாயுவை உள்ளே அடக்கித்
துயரற நாடியே தூங்க வல்லார்க்குப்
பயனிது காயம் பயமில்லை தானே (தி.ம.605)
பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை காணப் படும். (திருக்குறள் – 349)
ஒண்ணா நயனத்தில் உற்ற ஒளிதன்னைக்
கண்ணாரப் பார்த்துக் கலந்துஅங்கு இருந்திடில்
விண்ணாறு வந்து வெளிகண்டிட ஓடிப்
பண்ணாமல் நின்றது பார்க்கலும் ஆமே (தி.ம.600)
திருவடித் தவங்களை செய்யும்போது, இறைவனின் அருள் மிகுதியாக வரும். இறைவனின் அருள் எங்கேயிருக்கிறது அது அமுதக் கலசத்தில் இருக்கிறது. சிவக்கலை வெளிப்படும்போது, அங்கே பிரமநாடியானது அமுதக் கலசத்தைத் தீண்டிக் கொண்டிருக்கும். அப்போது பிரமநாடியின் வெப்பத்தால் இறுகிப் போயிருக்கும் அமுதமானது உருகி ஓடிவரும். இதைத்தான், “அருள்நனி சுரக்கும் அமுதே காண்க” என்றார்.
நமது தேகத்தில் சிரசிற்கு நடுவுள்ளே மையத்தில் உயிரானது ஒரு கூடு போன்று அமைந்திருக்கிறது. அது மாங்காயின் வடிவத்தை ஒத்திருக்கும். அந்த உயிர்க் கூட்டுக்குள் இறைவன் ஒளியாக வீற்றிருக்கிறான். இறைவன் கூட்டுக்குள் நம் உயிர் இல்லை. நம் உயிர்க்கூட்டுக்குள்தான் இறைவன் அருளாக, ஒளியாக அமர்ந்திருக்கிறான். இது இறைவன் நம்மீது காட்டும் அன்பு, பாசம், கருணை, தயாநிதி. இத்தகைய கருணையாளனாகிய இறைவனைப் பார்த்துத்தான், “கருணையின் பெருமையைக் கண்டேன் காண்க” என்றார்.
சேவடி என்றால் செம்மை நிற அடி எனப் பொருள். இந்த உலகத்தில் இறைவன் எங்கேயிருக்கிறான் என்பதை முன்னரே கண்டோம். இந்த திருவடிகளைக் கொண்டுதான் இறைவன் இருக்கும் இடத்தை நம்மால் தொட முடியும். அங்கேதான் இறைவன் செம்மை நிறத்தில், பொன்னிறத்தில் ஒளியாக வீற்றிருக்கிறான். அதற்காகத்தான் பிரமஞானத் தவத்தைச் செய்வது. இதைத்தான், “புவனியல் சேவடி தீண்டினன் காண்க” என்றார்.
அவ்வாறு பிரமஞானத் தவத்தால் இறைவனின் சேவடிகளைக் கண்டபோது, பிரம்மாவும் திருமாலும் காணாத சிவம்தான் அவன் என்பதைக் கண்டு தேறினேன் என்பதைத்தான், “சிவன் என யானும் தேறினன் காண்க” என்றார்.
சிவத்தின் சேவடிகளை நான் கண்ணுற்றபோது, எம் சிந்தை மகிழ்ந்து அந்த சிவானுபவத்தில் திளைத்திருந்தபோது, சிவன் அருள்தந்தையாகவும் தாயுமான வனாகவும் வந்து என்னை மகிழ்வித்தான் என்பதைத்தான், “அவன் எனை ஆட்கொண்டு அருளினன் காண்க” என்றார்.
கண்களில் கடைக்கண் என்றும் நடுக்கண் என்றும் குவளைக் கண் என்றும் மூன்று பார்வை நிலைகள் உள்ளன. குவளைக் கண் என்பது மூக்கின் ஓரத்தில் இருக்கும் கண்ணின் பகுதி. குவளைக் கண்ணில் இருந்து பார்வையை குருமூலம் உபதேசமாக பெற்று கன்னிமூலையில் இருக்கும் பார்வையின் சத்தியால் இறைவனைக் காணும் ஞானக் கர்மத்தை செய்து பார்த்தால், அங்கே ஒரு ஒளி உருவம் தோன்றி காட்சியளிக்கும். அது நாத சத்தியின் வடிவம். இதைத்தான், “குவளைக்கண்ணி கூறன் காண்க” என்றார்.
அவ்வாறு நாத சத்தி இருக்கும் இடத்தில் சிவம் ஒளியாக இருந்து பிரகாசித்துக் கொண்டிருப்பார். நாதம் ஒளிர ஒளி சத்தி தேவை. அந்த ஒளியாக சிவமே இருப்பதால், “அவளும் தானும் உடனே காண்க” என்றார்.
அமுதே அமுதாய் அறிவாய் அருளே
அமுதாய் நிலைக்கும் அடியார் தமக்கே
அமுதே உலகுயிர் அல்லால் மறையாய்
அமுதே பரமாயி அமர்ந்து அருளே. (திருமந்திரம்)
இப்படியாக இருக்கக்கூடிய அமுதநிலையைத்தான் தனக்கு அருளிட வேண்டும் என்று ஔவைத்தாய் பாடுகிறார்.
உன்னை மிகவும் விரும்பி நிற்கின்ற மெய்யடியார்கள் கூட்டத்திற்குள் என்னையும் ஒரு ஆளாக நிறுத்தி வைக்க விரும்பிக் கருணையால் என்னை ஆட்கொண்ட பரமேசுவரனே! அடியேனுடைய ஞானத்திற்குத் தடையாக இருக்கக் கூடிய பிறவித் துன்பத்தை நீக்கிய அமுதாகவும், அருமருந்தாகவும் கிடைப்பதற்கரிய மாணிக்கமாகவும் முத்தாகவும் தூண்டா மணி விளக்கின் சுடர் போன்ற நிறத்தை உடையவனாகவும் நீ விரும்பாத எந்தப் பொருளையும் நானும் விரும்பாமல் உன்மீது மிகுதியான அன்பு கொள்ளும் நிலையை எனக்குக் கொடுத்து அருள் செய்ய வேண்டும் சிவமே என்கிறார் மாணிக்கவாசர் பிரார்த்தனைப் பத்தில். அப்பாடல்
வேண்டும் வேண்டும் மெய்அடியார்
உள்ளே விரும்பி எனைஅருளால்
ஆண்டாய் அடியேன் இடர்களைந்த
அமுதே அருமா மணிமுத்தே
தூண்டா விளக்கின் சுடரனையாய்
தொண்ட னேற்கும் உண்டாங்கொல்
வேண்டாது ஒன்றும் வேண்டாது
மிக்க அன்பே மேவுதலே. (பிரார்த்தனைப் பத்து-4)
இந்தப் பதிகத்தில் மாணிக்கவாசகர் எந்த ஞானத்தைப் பதிவு செய்திருக்கிறார் என்றால், மனித உயிர்களின் தேகத்திற்குள் இறைவன் இருப்பதை பிரமஞானத் தவத்தின்மூலம் காட்டிக் கொடுத்து, அந்த இறையை எவ்வாறெல்லாம் அடைந்து இறையோடு கூடிக் குழைந்து எப்பொழுதும் சிவானந்தத்தை அடைந்து கொண்டிருக்கலாம் என்பதைத்தான் பதிவு செய்திருக்கிறார்கள். அனைவரும் பிரார்த்தனைப் பத்து பதிகத்தைப் படித்துப் பாருங்கள். அதிலும் யாம் ஞான மெய்ப்பொருளுரை உரையை எழுதியிருக்கிறோமே, அந்த ஞான நூலை வாங்கிப் படித்துப் பாருங்கள். உங்கள் உள்ளம் உருகும் ; உயிர் கரையும் ; அமுதம் பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடிவரும் அழகினை, பேரின்பத்தை நிச்சயம் பெறுவீர்கள் என்பதை உறுதியோடு சொல்லிக் கொள்கிறோம்.
அடுத்தபடியாக அமுத நிலை வேண்டுமென்றால், அதற்காக ஆதித்தனின் இயக்கமும் குமுத சகாயனின் குணமும் தேவை என்கிறார் ஔவைத்தாய்.
ஆதித்தன் என்றால் சூரியன் என்று பொருள். ஔவைத்தாய் வலது திருவடியைத்தான் ஆதித்தன் இயக்கம் என்பதை மறைபொருளாக உள்ளே வைத்துச் சொல்கிறார். நமது வலது திருவடியில் சூரியனின் இயக்கம் நடக்கிறது. இங்கே சூரியனின் 12 கலைகள் உயிரின் இயக்கத்திற்குத் தக்கபடி இயங்கிக் கொண்டிருக்கும். சூரியன் எப்போதுமே அவரின் கலைகளின் எண்ணிக்கையை மாற்றிக் கொள்வதே இல்லை. அவர் எப்போதுமே 12 கலைகளோடே இயங்கிக் கொண்டிருப்பார். பிரமஞானத்திற்கும் இந்த சூரியக் கலைகளின் இயக்கங்களுக்கும் அப்படியொரு நெருங்கிய பந்தம் உறவு இருக்கிறது. சூரியக் கலைகள் உள்ளே நுழைந்து சென்று சந்திரக் கலசத்தில் இணையாவிட்டால், அமுதக்குடமானது உருகவே உருகாது. அமுதம் வேண்டுமென்றால், சூரியக் கலைகள் அமுதக் கலசத்தை அடைந்தே ஆகவேண்டும். இந்த ஞானத் தவத்தின் செயல்பாடுகளை, இயக்கங்களைத்தான் ஔவைத்தாய் ஆதித்தனின் இயக்கம் என்றார்.
அடுத்தபடியாக குமுத சகாயனின் குணம். இரவும் பகலும் அற்ற இடத்தில் மலர்கின்ற பூக்களைத்தான் ஔவை குமுதம் என்றழைக்கிறார். வெள்ளை ஆம்பல் பூக்களை குமுதம் என்றழைப்பது உண்டு.
“குமுதம்” என்பது பொதுவாக தாமரைப்பூவைக் குறிக்கும் சொல். தாமரை ஆழ்ந்த ஆன்மிக அர்த்தத்தைக் கொண்டது, குறிப்பாக தூய்மையை, பேரொளியை, அறிவை, அல்லது ஞானத்தை குறிக்கிறது.
குமுதத்தை உற்றுநோக்கினால், இரவில் மலரும் தாமரைப்பூவான நீலோற்பல மலர்களைக் குறிக்கிறது. இது இருளில்கூட இறைவனின் அறிவால் ஒளியூட்டப்படும் நிலையைச் சொல்கிறது.
குமுதம் வெண்தாமரையின் வடிவம் என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம். குமுத மலர் என்பது இடது திருவடியின் மறைபொருள் சொல்லாகும். இந்த இடது திருவடியின் குணங்களை நன்றாகத் தெரிந்து கொண்டால்தான், நம்மால் உயிர்க்கூட்டிலிருந்து அமுதக் கலசத்தை உருக்கி, அமுதத்தேனை சாப்பிட முடியும்.
அதனால்தான் ஔவைத்தாய் விநாயகப் பெருமானை நோக்கி தனக்கு அமுதநிலை எதுவென்பதைக் காட்டிக் கொடுத்து, அதற்காகப் பயன்படக் கூடியவைகளாக இருக்கும் சூரியக் கலைகளின் இயக்கங்களையும் சந்திரக் கலைகளின் குணங்களையும் எடுத்துக் கூறி பிரமஞானத்தை வழங்கிட வேண்டும் என்பதைத்தான், “அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் குமுத சகாயன் குணத்தையும் கூறி” என்றார்.
அடுத்த அகவல் வரிகள் : “இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி (48)” என்பது.
திருவடிகளின் இடையில் அதாவது மத்தியப் புள்ளியில் இருக்கக்கூடிய சக்கரத்தைத்தான் ஔவைத்தாய் இடைச்சக்கரம் என்றார். அந்த இடைச்சக்கரத்தில் ஈரெட்டு (2X8=16) கலைகள் இருப்பதாக ஔவைத்தாய் சொல்வதால், கண்டிப்பாக அவர் இடது திருவடியைத் தான் சொல்ல வருகிறார்.
தேகத்தின் இடப்பக்கமானது சந்திரக் கலைகள் இருக்கும் இடமாகும். சந்திரக் கலைகள் இடது திருவடியில் பரிபூரணமாக பிரகாசித்துக் கொண்டிருக்கும். ஒலிக்கலைகளால் நிரம்பி இருப்பதே இடது திருவடிகள்தான். பௌர்ணமி தினத்தன்று குளிர்நிலவில் பதினாறு கலைகள் ஒளிவீசிக் கொண்டிருக்கும். இந்த திருவடியின் கன்னிமூலையில்தான் உமாதேவி குடியிருக்கிறாள்.
இந்த சந்திரக் கலையின் குளிர்க்கலைகளால் சாதகன் சதா பிரமானுபவத் திலேயே திளைத்துக் கொண்டிருப்பான். அவனின் மெய்யுணர்வுகள் ஆனந்தப் பரவசத்தை தேகமெங்கும் பரவிக் கொண்டிருக்கும். இந்த மெய்யுணர்வுகளை பிரமஞானத் தவத்தாலன்றி உணர்வுகளாக யாரும் பெற இயலாது.
நமது இரு திருவடிகளில்தான் இடைச்சக்கரமாக மெய்ப்பொருள்கள் இருக்கின்றன. இந்தத் திருவடிகள் உடலின் ஒரு உறுப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைத்தான், “இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும் உடற்சக்கரத்தின் உறுப்பையும் காட்டி” என்றார்.
அடுத்த அகவல் வரிகள் : “சண்முகத் தூலமும் சதுர்முகச் சூக்கமும்
எண்முகமாக இனிது எனக்கருளி (50)” என்பது.
இந்த வரிகள் அனைத்தும் அவ்வளவு சத்தியமான இரகசிய பரிபாசை சொற்களாகும்.
முதற்சொல் : சண்முகத் தூலம். சண்முகம் – ஆறு முகம். தூலவடிவில் இருக்கும் ஆறுமுகங்கள். பிரமஞானத் தவத்தில் இரு திருவடிகளும் ஒருபுள்ளியில் ஒன்றிணையும்போது அங்கே தந்தைக்கு முன்னே மகன் பிறந்தானே என்ற திருமந்திரச் சொல்லிற்கிணங்க சண்முகனாகிய முருகன் தோன்றுவான் என்பதைத்தான் சண்முகத் தூலம் என்றார் ஔவை. நம்முடைய புறக்கண்களாலே இந்த ஆறுமுகங்களைப் பார்க்க முடியும் என்பதைத்தான் ஔவை, “சண்முகத் தூலமும்” என்றார்.
இரண்டாம் சொல் : சதுர்முகச் சூக்குமம். சதுர் – நான்கு. சதுர்முகம் – நான்கு முகம்தான் சூக்குமமாக இருக்கிறது. இந்த நான்கு முகங்கள் தூல வடிவிற்குள் இல்லாமல் சூக்குமத் தேகத்தில் அமைந்திருக்கின்றன. இதெல்லாம் தேவ இரகசியச் சொற்களாகும். இருந்தும் சில அடிப்படை புரிதல்களை மட்டும் இங்கே சொல்கிறோம்.
சதுர்முகச் சூக்குமம் என்பது நான்கு பரிமாணங்களின் மூலம் ஆழ்ந்த ஆன்மிக உணர்வைக் கொண்டுள்ளது. இது தத்துவ மற்றும் ஆன்மீக சாதனைக்கான உச்ச நிலையாக விளங்குகிறது.
- திருவடி சூக்குமம்,
- ஜீவச் சூக்குமம் (உயிர் சூக்குமம்),
- இறை சூக்குமம்,
- பிரம சூக்குமம்.
சூக்குமம் என்பது மறை இரகசியமாகும். எதைப் பற்றிய சூக்குமம் காண விரும்புகிறோமோ, அதன் இரகசிய செயல்பாடுகளை அறிவதற்காகவும், உணர்வதற்காகவும் ஒரு ஞானத் தந்திர முறையை நம் ஆதித் தமிழ்ச் சித்தர்கள் உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, திருவடி சூக்குமம் என்றால், திருவடிகளைப் பற்றிய ஞானத் தந்திர முறை.
ஜீவச் சூக்குமம் என்றால், அது நம் உயிர்களை அடைவதற்காகவும் அறிவதற்காகவும் இருக்கக்கூடிய அதி இரகசிய ஞானத் தந்திரம்.
இறை சூக்குமம் என்பது, நம் உயிருக்குள் இருக்கும் இறைவனை – பேருயிரை எப்படி அறிந்து அவனோடு ஒன்று கலக்கலாம் என்பதைப் பற்றிய இரகசியத்திலும் இரகசியமான ஞானத் தந்திரம்.
பிரம சூக்குமம் என்பது, இறைவனின் உயிர் எத்தன்மை கொண்டது? அதன் ஆற்றல் எத்தன்மையுடைத்து? அவனின் அருளாற்றல் எத்தன்மையுடைத்து? அந்த அருளாற்றலை, அருட்கலைகளை எவ்வாறு நம் உயிருக்குள் பெற்றுக் கொள்வது என்பதைப் பற்றிய பரப்பிரம இரகசிய ஞானத் தந்திரம்.
இந்த நால்வகை சூக்குமங்களைத்தான் ஔவைத்தாய், “சதுர்முகச் சூக்கமும்” என்றார்.
மூன்றாம் சொல் : எண்முகம் – எட்டு முகம்.
மனிதனுக்குள் எட்டுவகையான குணநலன்கள் இருக்கின்றன. அவற்றின் விளக்கங்கள் விளக்கம்
சமுதாயமும் தனி மனித வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான எட்டுக் குணங்களைப் பின்வருமாறு விவரிக்கலாம்:
- அருள் (Compassion)
பிறருக்கு கருணை காட்டுவது, எல்லா உயிர்களுக்கும் உதவ முனைவது.
பிறரின் துயரை அகற்றும் எண்ணம்.
- நேர்மை (Integrity)
சீர்மையுடனும் சத்தியத்துடனும் நடப்பது.
பொய்மையற்ற வாழ்க்கை வாழ்தல்.
- அமைதி (Peace)
மன அமைதியுடன் செயல்படுதல்.
கோபம், பொறாமை, கயமை ஆகியவற்றைத் தவிர்த்தல்.
- பொறுமை (Patience)
துன்பங்களில் மனத்துடிப்பு இல்லாமல் சகிப்புத்தன்மையுடன் இருக்கக் கற்றுக்கொள்வது.
காலத்தையும் சூழ்நிலையையும் எதிர்கொண்டு செயல்படுதல்.
- அறிவுடைமை (Wisdom)
அறிவைத் தேடி பெறுவதும் அதைச் சரியான முறையில் பயன்படுத்துவதும்.
தீர்க்கமான, நியாயமான முடிவுகளை எடுப்பது.
- தன்னம்பிக்கை (Self-confidence)
தன் திறமைகளிலும், முயற்சிகளிலும் நம்பிக்கையுடன் செயல்படுவது.
பயம், தயக்கம் ஆகியவற்றைக் கடக்க முயற்சி செய்வது.
- கருணை (Empathy)
பிறரின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப நடத்துவது.
மனிதநேயம் கொண்டிருத்தல்.
- வாழ்க்கை ஒழுக்கம் (Discipline)
ஒரு ஒழுங்கான, நியாயமான வாழ்க்கை முறையை பின்பற்றுதல்.
சீர்தரமான வழிமுறைகளை உருவாக்கி அவற்றை கடைப்பிடித்தல்.
புத்த மதத்தில் (Buddhism) குறிப்பாக எட்டு உன்னத குணங்கள் அல்லது பண்புகள் (Eight Virtues) முக்கியமாகச் சொல்லப்படுகின்றன. இவை ஒருவரின் வாழ்வில் நல்ல ஒழுக்கம், மன அமைதி மற்றும் ஆன்மிக முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகின்றன. பொதுவாக, இவை அரியடைகளின் மார்க்கத்தில் (Noble Eightfold Path) அல்லது புத்தர் தத்துவத்தின் அடிப்படையில் விளக்கப்படுகின்றன.
புத்த மதத்தின் எட்டு குணங்கள்
1.சம்யக் தர்சனம் (Right View)
வாழ்க்கையின் நியாயமான பார்வையைப் பெற்றல்.
நான்கு அரிய சத்தியங்களை (Four Noble Truths) புரிந்துகொள்வது.
2.சம்யக் சிந்தனை (Right Intention)
நல்ல எண்ணங்களைக் கொண்டிருத்தல்.
தீய எண்ணங்களைத் தவிர்த்து கருணை, அன்பு, மற்றும் அஹிங்க்சையை வளர்த்தல்.
3.சம்யக் வாசனம் (Right Speech)
உண்மை பேசுதல் மற்றும் நயமிக்க வார்த்தைகளை உபயோகித்தல்.
பொய், மோசம், மற்றும் கஷ்டத்தை விளைவிக்கும் சொற்களை தவிர்த்தல்.
4.சம்யக் கர்மம் (Right Action)
ஒழுக்கமான மற்றும் நற்பண்புடைய செயல்களை செய்யுதல்.
கொலை, திருட்டு, மற்றும் அசுத்தமான செயல்களைக் கைவிடுதல்.
5.சம்யக் ஆஜீவம் (Right Livelihood)
நியாயமான மற்றும் தர்மத்திற்குச் சீரான வாழ்க்கைமுறையைத் தேர்வு செய்தல்.
பிறருக்கு துன்பம் ஏற்படுத்தும் தொழில்களைத் தவிர்த்தல்.
6.சம்யக் வாய்யாமம் (Right Effort)
நற்பண்புகளை வளர்க்க முயற்சித்தல்.
தீய சிந்தனைகள் மற்றும் செயல்களை தவிர்க்க மனவுறுதியுடன் இருக்குதல்.
7.சம்யக் ஸ்ம்ருதி (Right Mindfulness)
தன்னுடைய சிந்தனை, சொல், மற்றும் செயல்களை விழிப்புணர்வுடன் கடைப்பிடித்தல்.
தன்னுடைய உள்ளுணர்வை மேம்படுத்துதல்.
8.சம்யக் சமாதி (Right Concentration)
மனதை ஒருநிலை ஆக்குதல் மற்றும் தியானத்தில் மூழ்குதல்.
சத்துவகமான மனநிலையை அடைந்து ஆன்மிக முன்னேற்றத்தை அடைய உதவுதல்.
வாழ்க்கையை சரியான வழியில் வாழ்ந்து, அறமும் அன்பும் நிறைந்த மனிதனாக உருவாகுதல்.
தீய செயல்களைத் தவிர்த்து மனதையும் வாழ்க்கையையும் சுத்தமாக வைத்தல்.
இறுதியில் நிர்வாணம் (Nirvana) எனும் உயர் நிலையைக் கோருதல்.
புத்த மதத்தின் இந்த எட்டு குணங்களும் ஒழுக்கம் (Sila), மனச்சாந்தி (Samadhi), மற்றும் அறிவு (Prajna) எனும் மூன்று அடிப்படைகளின் சாரமாகக் கருதப்படுகின்றன.
இவையெல்லாம் சாத்திரங்களில் காணப்படும் நிலைப்பாடுகளாகும். ஆனால், ஔவை சொல்லும் ஞானம் என்ன தெரியுமா அன்பர்களே. எண்முகம் என்பது வலது திருவடியைக் குறிக்கும் சொல். வலது திருவடியின் எழுத்து அ. இதன் தமிழ் எண்ணிக்கை 8 என்பதாகும். இந்த “அகாரத் திருவடியான சூரியக் கலைகளை எனக்கு நன்கு பிடிபடும்படியாகவும் உணரும்படியாகவும் அருளாக எம் உயிரில் நிறைந்திடும்படியாகவும் இந்த சண்முகத் தூலத்தையும் சதுர்முகச் சூக்குமத்தையும் என் எண்முகமான அகாரத் திருவடியில் திருவாக, உருவாக, அருளாக விளங்கும்படி செய்தருள்வாய் விநாயகப் பெருமானே” என்று பிரார்பதைத்தான் ஔவை, “சண்முகத் தூலமும் சதுர்முகச் சூக்கமும் எண்முகமாக இனிதெனக்கு அருளி” என்றார்.
அடுத்த அகவல் வரிகள் : “புரியட்ட காயம் புலப்பட எனக்குத்
தெரிஎட்டு நிலையும் தெரிசனப்படுத்தி (52)” என்பது.
புரியட்ட காயம் புலப்பட வேண்டும் என்று கணபதியைப் பிரார்த்திக்கிறார் ஔவை.
புரியட்ட காயம் என்ற சொல் ஞானத்தின் ஒளியில் எடுத்துக்கொள்ளப்படும் போது, அது மனித மனம் மற்றும் ஆன்மா அனுபவிக்கும் ஆழமான மாற்றங்களை அல்லது உளவியல் வேதனைகளை குறிக்கலாம். இவை ஒருவரை ஒரு புதிய உண்மையை அல்லது உயர்ந்த அறிவை உணர்த்தி முன்னேற வைக்கும் ஒரு கட்டமாகவும் பார்க்கலாம்.
புரியட்ட காயத்தின் ஞான விளக்கம்:
மனித உடலில் காணப்படும் எண் வகையான ஆற்றல்கள் பலவிதம் ஆழமான பார்வையிலும், தத்துவமானதிலும், அறிவியல் நோக்கிலும் விவரிக்கப்படுகின்றன. சித்த மருத்துவம், யோகா, மற்றும் பண்டைய தத்துவங்களின் அடிப்படையில், மனித உடலில் எண்ணற்ற ஆற்றல் மையங்கள் மற்றும் வடிவங்கள் உள்ளன. இவற்றை எண்வகைப்படுத்தும் போது, பின்வரும் முக்கிய ஆற்றல்கள் குறிப்பிடப்படுகின்றன:
- பிராண ஆற்றல் (Prana Shakti):
இது வாழ்வின் அடிப்படையான ஆற்றல்.
மூச்சு மற்றும் சுவாசத்தின் மூலம் உடலில் பிராண ஆற்றல் பரவுகிறது.
யோகா மற்றும் தியான வழிமுறைகள் மூலம் இதை கட்டுப்படுத்த முடியும்.
- அக்னி ஆற்றல் (Agni Shakti):
உடலின் உள்வெப்ப ஆற்றல் அல்லது ஜீரண ஆற்றல்.
உணவை சத்தாக மாற்றுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இது உடல் மற்றும் மனதின் சக்திகளை எரிப்பாக மாற்ற உதவுகிறது.
- மன ஆற்றல் (Mana Shakti):
மனதின் எண்ணங்களை, உணர்வுகளை, மற்றும் மனோலயத்தை அடையாளப்படுத்தும் ஆற்றல்.
மனதை கட்டுப்படுத்துவதில் முக்கியமானது, தியானம் மூலம் இது உயர்த்தப்படுகிறது.
- சிந்தனை ஆற்றல் (Chaitanya Shakti):
அறிவின் ஆற்றல் அல்லது புத்தியின் இயக்கம்.
உணர்வு, விவேகம், மற்றும் தீர்மானங்கள் எடுப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.
- உயிர் ஆற்றல் (Jeeva Shakti):
மனிதனின் உயிர்மைக்கான அடிப்படை ஆற்றல்.
உயிர் செயல்பாடுகளையும் உடல் பராமரிப்பையும் ஆதரிக்கிறது.
- சூக்கும ஆற்றல் (Subtle Energy):
இதுவே “நாடி” மற்றும் “சக்ரா” மூலம் ஓடும் மெல்லிய ஆற்றல்.
சித்தர்கள் மற்றும் யோகிகள் இதை சுழற்சி ஆற்றலாகக் குறிப்பிடுகிறார்கள்.
- குண்டலினி ஆற்றல் (Kundalini Shakti):
மூலதார சக்ரத்தில் உறங்கிக்கிடக்கும் ஆற்றல்.
தியானம் மற்றும் யோகா மூலம் இதை விழிப்பூட்ட முடியும்.
குண்டலினி விழிப்பு ஆன்மீக விளக்கத்திற்கு வழிவகுக்கிறது.
- கர்ம ஆற்றல் (Karma Shakti):
செயல் மற்றும் அதன் விளைவுகளின் ஆற்றல்.
ஒருவரின் உடல், மனம், மற்றும் ஆன்மாவிற்கு நேரிடும் ஒவ்வொரு செயலின் தாக்கம் இதை குறிக்கிறது.
கூடுதல் ஆற்றல் வகைகள்:
தெய்வீக ஆற்றல் (Divine Energy): தெய்வீக சக்தியை உடலின் மூலம் அனுபவிக்கும் ஆற்றல்.
சர்வசக்தி (Universal Energy): பிரபஞ்ச சக்தியை உடல் மற்றும் மனம் புரிந்து கொள்வது.
இந்த எண் வகையான ஆற்றல்கள் மனிதன் தனது உடல், மனம் மற்றும் ஆன்மீக வாழ்க்கையின் ஒற்றுமையை அடைவதற்கான வழிகாட்டிகளாக உள்ளன. இதன் மூலம் வாழ்வின் உயர்ந்த நிலையை அடைய முடியும்.
தெரி எட்டு நிலை என்பது தமிழ் சித்தர்கள் மற்றும் ஞான மார்க்க தத்துவங்களில் முக்கியமாக பேசப்படும் ஒரு கோட்பாடு. இது மனிதன் தன்னுடைய ஆன்மீக வளர்ச்சி அல்லது ஞான மான வரலாற்றில் அடைய வேண்டிய எட்டுவித நிலைகளைக் குறிக்கிறது. இவை ஒரு பயணத்தின் அடிக்கோடுகள் போன்றவை, ஒவ்வொன்றும் ஒருவரை உயர் நிலைக்குத் தருகிறது.
தெரி எட்டு நிலைகள் மற்றும் அதன் ஞான விளக்கம்:
1.அவஸ்தை (அறியாத நிலை):
அறியாமையின் நிலை, மனிதனின் இயல்பான தொடக்கத்திலுள்ள நிலையில் இருக்கும் அறியாமை.
சத்தியத்தை மறைக்கும் மாய உலகத்தின் பிடியில் மனிதன் சிக்கி இருக்கின்றான்.
2.வாசனை (சிறு எண்ணங்களின் தாக்கம்):
மனதில் எழும் எண்ணங்களின் உறுதி, பழைய செயல்களின் நினைவுகள் மனிதனை வழிநடத்தும்.
இது புனிதமான அல்லது பாழான (வாசனைகள்) எண்ணங்களை அடங்கவைத்தல் தேவை.
3.மனோலயம் (மனம் அமைதி அடைவது):
மனதில் நிலைக்கும் எண்ணங்களும் குழப்பங்களும் கறைந்து மனம் அமைதியாகும் நிலை.
தியானத்தின் மூலம் மனத்தை கட்டுப்படுத்துதல்.
4.சுத்தி (தெளிவு):
மனதில் எழும் ஆசைகள், சினங்கள் போன்றவை அகன்று தெளிவடைதல்.
உண்மையை உணர தகுதியான நிலை.
5.அருள் நிலை (தெய்விக அனுபவம்):
தெய்வீகத்தின் பக்கம் திரும்பும் நிலை.
இந்த நிலையில், ஒருவர் தெய்வீக அருளின் மூலம் ஆன்மாவுக்கு மேலான தெளிவினை பெறுகிறார்கள்.
6.ஞானம் (உண்மையை அறிதல்):
முழுமையான ஆன்மீக விளக்கம் அடையும் நிலை.
உண்மை என்னவென்று முழுமையாக உணர்ந்த நிலை.
7.சமாதி (சார்பற்ற நிலை):
மனம் முழுமையாக அமைதியான நிலையில் நிலைத்தல்.
எந்தவித மாயக்காட்சிகளும் மனதில் பாதிக்காத நிலை.
8.சித்தி (உயர்ந்த ஆற்றல்):
தன்னுடைய ஆன்மீக பயணத்தின் பூரண நிலை.
இந்த நிலை சாதகனின் மனமும் உடலும் எல்லாவித தடுக்குகளிலிருந்து விடுபட்டு தெய்வீகமயமாகிறது.
தெரி எட்டு நிலைகளின் பின்புலம்:
இவை சித்தர்கள் தத்துவங்களில் காணப்படும் மனிதனின் தன்னிறைவு பயணத்திற்கான ஒரு வரைபடமாக கொள்ளப்படலாம்.
ஒவ்வொரு நிலையும் ஆன்மீகத் தேடல், தன்னிலையறிதல், தெய்வத்துடன் ஒற்றுமை ஆகியவற்றை அடைவதற்கான ஒரு வழிகாட்டியாக செயல்படுகிறது.
தெரி எட்டு நிலைகளின் விளக்கம் ஒருவரின் ஆன்மீக வாழ்க்கையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கான வழியாக இருக்கிறது. இது மனிதனை அறியாமையிலிருந்து ஞானத்திற்கும் மாயையிலிருந்து மோக்ஷத்திற்கும் அழைத்து செல்லும் பரிபூரண பயணமாகும்.
இந்த இரண்டு நிலைகளைத்தான் ஔவைத்தாய், “புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி” என்று பாடி அருளினார்கள்.
அடுத்த அகவல் வரிகள் : “கருத்தினில் கபால வாயில் காட்டி
இருத்தி முத்தி இனிது எனக்கு அருளி (54)” என்பது.
அடுத்தபடியாக கபாலத்தின் வாசலில் எனக்கு ஞானக் கருத்தைக் கொடுத்திடுவாய் கணபதியே என்று பிரார்த்திக்கிறார் ஔவை.
கபால வாசல் என்பது சித்தர்கள், ஆன்மீக தத்துவங்கள் மற்றும் யோகியர்களின் பார்வையில் மிகவும் ஆழமான கருத்தாகும். இது மனித உடல், மனம், மற்றும் ஆன்மாவின் உள்நிலை உணர்வுகளின் உச்ச நிலை அல்லது ஆன்மீக ஒளி வெளிப்பாடிற்கான நுழைவாயில் எனக் கருதப்படுகிறது. “கபாலம்” என்பது தலை அல்லது மண்டை எலும்பை குறிக்கிறது, மற்றும் “வாசல்” என்பது நுழைவாயிலை குறிப்பிடுகிறது.
கபால வாசல் என்றது என்ன?
கபால வாசல் என்றால் உயர்ந்த ஞானம் அல்லது ஆன்மீக திறப்புக்கான வாயில் எனப்படும். இது பொதுவாக தலைக்கு மேல் உள்ள சஹஸ்ரார சக்ரா (மூன்று குலாசம்) அல்லது பிரம்ம ரந்திரம் எனப்படும் பகுதியில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது.
கபால வாசலின் முக்கிய பங்குகள்:
ஆன்மீக திறப்பு:
கபால வாசல் என்பது ஆன்மாவிற்கான இறுதிக்கட்ட வெளிச்சம்.
இது மனிதனின் தன்னை உணர்தல் (Self-Realization) மற்றும் மோக்ஷம் (Liberation) அடைய உதவுகிறது.
உயர்ந்த நிலை அடைதல்:
யோகியும் சித்தர்களும் தங்கள் தியானத்தின் மூலம் கபால வாசலைத் திறந்து கொண்டனர்.
இது தெய்வீக சக்தி மற்றும் பிரபஞ்ச சக்தியுடன் ஒருமையை உணர வழிவகுக்கிறது.
குண்டலினி சக்தியின் உச்ச நிலை:
குண்டலினி சக்தி மூலதார சக்ராவில் இருந்து மேலே சென்று, சஹஸ்ரார சக்ராவில் ஒன்றியாகும் போது கபால வாசல் திறக்கப்படும்.
பிரம்ம ரந்திரம் (Brahma Randhra):
தலைவிரும்பில் அமைந்துள்ள சஹஸ்ரார சக்ரா (தலையின் உச்சியில் உள்ள பகுதியில்) ஆன்மாவின் வெளியேறுதலுக்கான வாயிலாகக் கருதப்படுகிறது.
கபால வாசல் என்பது புறஉலகத்தின் எல்லைகளை கடந்தும், உள்ளார்ந்த உண்மையை அறியத் துணைபுரியும் ஒரு அமைப்பு.
இது மனிதனின் அறிவை (Intellect) தாண்டி உள்ள தெய்வீக அனுபவத்துக்கு வழிவகுக்கிறது.
உள்ளார்ந்த பயணம்:
இது மனம், குணம், மற்றும் பாசங்களின் எல்லைகளை உடைத்து மேலான தரத்தை அடையும் பயணமாகும்.
சித்தர்களின் கூற்றுப்படி, கபால வாசலின் வழியாக உடலிலிருந்து ஆன்மா வெளியேறி பரம்பொருளுடன் இணைகிறது.
தியானத்தில் கபால வாசல்:
தியானத்தின் உயர்ந்த நிலைகளில், சாதகர் தன் கவனத்தை கபால வாசலின் புள்ளியில் செலுத்துகிறார்.
இதனால், பரிபூரண அமைதி (Supreme Bliss) மற்றும் தெய்வீக உணர்வு (Divine Consciousness) உருவாகிறது.
கபால வாசலை அடையும் வழிகள்:
தியானம் (Meditation):
மூச்சின் கட்டுப்பாடு மற்றும் மனதின் மையத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் கபால வாசல் திறக்கப்படுகிறது.
குண்டலினி யோகா:
சக்ரா தியான முறைகள் மற்றும் ஆற்றல் ஒழுங்குகளின் மூலம் குண்டலினி சக்தி மேலே சென்று கபால வாசலின் திறப்பை ஏற்படுத்துகிறது.
ஆன்மீக அனுபவம்:
பக்தி, தத்துவ சிந்தனை, மற்றும் தெய்வீக அருளின் மூலம் கபால வாசல் அறிய முடியும்.
சித்தர்கள் பார்வையில் கபால வாசல்:
சித்தர்கள் “கபால வாசல்” என்பதை அறிவு குளத்தின் உச்சம் என்று விளக்குகிறார்கள்.
இதைத் திறக்கும்போது, சாதகருக்கு அன்பு, அமைதி, மற்றும் ஆத்ம பூரணத்துவம் வெளிப்படுகிறது.
கபால வாசல் என்பது ஒருவரின் ஆன்மீக பயணத்தில் மிக முக்கியமான கட்டமாகும். இது மனிதனின் தெய்வீக சுயத்தை உணர்வதற்கான வாயில் என்றும், பரம்பொருளுடன் இணைவதற்கான உச்சநிலை என்றும் கருதப்படுகிறது. கபால வாசலின் திறப்பு, வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை உணர்வதற்கான ஒளி வாயிலாக விளங்குகிறது.
கபால வாசல் பற்றிய முக்கிய திருமந்திரப் பாடல்கள்:
- யோகியினர் அனுபவத்தை விவரிக்கும் பாடல்:
கபால நாழி கலைபேர் விளங்கும்
கபால வாசல் கதவாய் நின்றது
கபால வாசல் கதவாய் திறந்திட
கபாலம் எங்கும் கனக்கப் படருமே.
யோகியின் தேகத்தில் கபால வாசல் ஒரு கதவாக விளங்குகிறது. அந்த கதவின் திறப்பின் மூலம், ஆன்மீக ஒளி மனித உடலின் முழுவதும் பரவுகிறது.
- சஹஸ்ரார சக்ரா பற்றி:
ஊற்றாய்த் திறந்த ஒளி வாசல் தெரிதல்
காற்றால் விளங்கும் கலையின் கடவுள்
வாயால் விளங்கும் மறையின் பெருமான்
தூயாக் கபாலம் துறக்கப் பெறுவான்.
விளக்கம்:
சஹஸ்ரார சக்ராவை கபால வாசலாக குறிப்பிடும் இந்த பாடல், தெய்வீக அனுபவம் எவ்வாறு வெளிப்படுகிறது என்பதை விளக்குகிறது.
வாயுவின் மற்றும் ஒளியின் வழியே ஆன்மா தன்னை உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறது.
- ஆன்மா மற்றும் பிரம்மம் இணைதலைச் சுட்டிக்காட்டும் பாடல்:
கபாலம் திறந்து கருணை பொழியத்
தபோத நாயன் தமி நின்று விளங்க
கபால வாசல் கதவாய் திறந்திட
உபதேசம் உள் நின்று ஒளிர்கின்றதே.
விளக்கம்:
கபால வாசல் திறப்பு ஆன்மாவிற்குள் கருணை மற்றும் தெய்வீக அறிவை கொண்டு வருகிறது. உபதேசம் மற்றும் தியானம் மூலம் யோகி தெய்வீக ஒளியை உணர்கிறார்.
- ஆன்மீக தியானம் பற்றிய பாடல்:
கபால வாசல் திறந்து காட்சி தருமே
அபயம் தருவாய் அருள் கண்டு கொள்ள
சபையில் விளங்கும் சதாசிவ மூர்த்தி
அதனுள் விளங்கும் ஆனந்த தெய்வம்.
விளக்கம்:
கபால வாசல் திறப்பின் மூலம் ஆன்மிக வெளிச்சம் மற்றும் அருள் அனுபவிக்கப்படுகிறது.
ஆனந்த நிலை மற்றும் தெய்வீக சாட்சியை காணும் நிலை.
கபால வாசல் என்றால்:
தலைகீழ் நிலையில் உள்ள ஆன்மீக அனுபவத்திற்கான வாயிலாக விளக்கப்படுகிறது.
இது சஹஸ்ரார சக்ராவை அடையும் யோக வழிமுறையை உணர்த்துகிறது.
யோக அனுபவம்:
மூலதார சக்ராவிலிருந்து குண்டலினி சக்தி உயர்ந்து கபால வாசலைத் தாண்டி ஆன்மாவுடன் இணைகிறது.
தெய்வீக அருளின் வெளிப்பாடு:
கபால வாசல் திறப்பின் மூலம் பரம பொருளின் அனுபவம் காணப்படுகிறது.
திருமந்திரம் கபால வாசல் பற்றிய பாடல்கள் யோகத்தின் மூலம் ஆன்மீக மேலான நிலையை அடைவதற்கான வழியை தெளிவாகக் காட்டுகின்றன. கபால வாசல் மனித உடல், மனம், மற்றும் ஆன்மாவின் இணைப்பையும், தெய்வீக ஒளியையும் சுட்டிக்காட்டும் முக்கிய அடிப்படையாக உள்ளது.
மனிதனின் உடலில் ஒன்பது ஓட்டைகள். மனிதனின் உயிர் ஏதேனும் ஒரு ஓட்டை வழியே மரணத்தின் போது வெளியேறும். இந்த ஓட்டைகள் எப்போதும் திறந்துள்ளவையே. எந்த நொடியிலும் மரணம் நேரலாம். அதனால் உயிருடனிருப்பதுதான் ஆச்சரியமே தவிர, இறப்பது ஆச்சரியமல்ல. மனிதனின் வேகத்தையும், புத்தியின் கூர்மையையும் ஆராய்ந்து பார்க்க முடியாது.
மனிதர்களின் உடலை விட்டு உயிர் பிரியும் போது, ஏதாவது உறுப்புகள் மூலமாகவே பிரியும். அவ்வாறு உடலை விட்டு உயிர் பிரியும் வாசல்கள் பதினொன்று இருக்கின்றது என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லைதான். அவரவர் செய்த பாப புண்ணியத்திற்கு ஏற்பவே, உயிர் அந்தந்த வாசல் வழியாக பிரியும் என அகத்தியர் தனது கர்ம காண்டம் நூலில் விளக்கமாக விவரித்துள்ளார். அதைப்பற்றி நாமும் இங்கே தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
- முதலாம் வாசல் – மலவாசல் (1) – பழி பாவம் செய்தவர்களுக்கு மலத்துடன் மல வாசல் வழியாக பிரியும். இவை நேரே நரகத்திற்கு செல்லும். திரும்பி வருவதற்கு நாளாகும்… அவ்வாறு வந்தாலும் நல்ல பிறவி கிடையாது.
- இரண்டாம் வாசல் – பிறப்புறுப்பு வாசல் (2) – பாவஞ் செய்தவர்களுக்கு நீர்வாயில் வழியாக உயிர் பிரியும் இந்த உயிர்கள் மறுபிறப்பில் காமியாய் திரியும்.
- மூன்றாம் வாசல் – நாபி வாசல் (3) – பாவம் நிறையவும், புண்ணியம் குறைவாகவும் செய்த உயிர்கள் நாபி வழியே பிரியும். இந்த உயிர்கள் மறுபிறப்பில் விருப்பப்பட்டதாகவும், நோயாளியாகவும், அங்ககீனமுடையதாகவும் பிறந்து வினையை கழிக்கும்.
- நான்காம் வாசல் – வாய் வாசல் (4) – பாவம் புண்ணியம் சமமாக செய்தவர்களின் உயிர்கள் வாய் வழியாகப் பிரியும். இவை மறுபிறப்பில் உணவுப் பிரியர்களாகவும், சாப்பாட்டு ராமர்களாகவும் பிறப்பார்கள்.
- ஐந்து மற்றும் ஆறாம் வாசல்கள் – நாசி வாசல் (5,6) – இடது, வலது நாசிகள் வழிய தனித்தனியாக பிரிந்த உயிர்கள் அதிக பாவம் செய்யாத உயிர்கள். இவை மறுபிறப்பில் நற்மணத்தையே விரும்பும்.
- ஏழு மற்றும் எட்டாம் வாசல்கள் – செவி வாசல் (7,8) – இடது, வலது செவிகள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் சிறிதளவே பாவம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கேள்விச் செல்வம் உடையதாக பிறக்கும். முக்தி தேடி முயற்சிக்கும்.
- ஒன்பது மற்றும் பத்தாம் வாசல்கள் – கண் வாசல் (9,10) – இடது, வலது கண்கள் வழியாக பிரிந்த உயிர்கள் மிகவும் புண்ணியம் செய்த உயிர்கள். இவை மறுபிறப்பில் கல்வி-செல்வம் முதலியன பெற்று உயர்வுடன் வாழும். இவைகளும் முக்தி தேடி முயற்சிக்கும். பழி பாவத்தைக் கண்டு அஞ்சி வாழும். குருபக்தி கடவுள் பக்தியுடன் வாழும்.
- பதினொன்றாம் வாசல் – கபால வாசல் (11) – சிவயோக நெறியில் இருக்கும் உயிர்கள் பிராரப்த கர்மங்களை தனக்கு கொடுக்கப்பட்ட உடல் கொண்டு கழித்து, பல காலங்கலாகப் பழகிய பிரமஞானத் தவப்பயிற்சியின் துணை கொண்டு சுழிமுனை நாடி வழியாக பிராணனை அபானனைக் கொண்டு மேலெழுப்பி, பிரமரந்திர வழியை திறந்து கபால வழியாக ஒளிமயமாக உச்சி வாசலூடாக செல்லும். அவ்வாறு சென்ற உயிர் மீண்டும் பிறவாது.
பத்து வாசல் மூடிப் படுத்த பாவியை
சித்தம் ஓங்கச் சிகரம் உளந்தொடும்
முத்தி தந்தான் முகமாய் விளங்கிட
அத்தன் அருளால் அருள் பெற்றேனே.
விளக்கம்:
பத்து வாசல்களை யோகியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர வேண்டும்.
பத்து வாசல்கள் மூடப்பட்டால், ஆன்மீக சக்தி உயர்ந்த சிகரத்தைக் கடக்கும்.
- உயிரின் பாய்ச்சல் பத்து வாசல்களிலும்
ஓங்கி ஓங்கி ஓடும் உயிர்பதி
பாங்கு தன்னைப் பத்து வாசல் புரிவதே
வேங்கை யாகிய வேதத்தின் பாணியில்
தாங்கி ஓங்கும் சக்தி தானே.
உயிரின் ஆற்றல் பத்து வாசல்களிலும் ஓடுகிறது.
யோகி அந்த சக்தியை மையப்படுத்தி தன்னை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வார்.
- பிரம்ம ரந்திரம் வழியாக பத்து வாசல்களின் ஒளி:
பத்து வாசல் விளங்கப் படைக்கின்ற
அத்தன் அருளால் அகலொளி தோன்றின
முத்தி தரும் வாயில் மூடி விளங்கின
சத்தி உள் நின்று சாந்தியாய் நின்றதே.
விளக்கம்:
பத்து வாசல்களின் ஒளி இறுதியில் பிரம்ம ரந்திரம் வழியாக வெளிப்படுகிறது.
அந்த வாயிலை மூடி, மனம் அமைதியான நிலையை அடையும்.
- வாக்கிய ஒளி பத்து வாசல்களிலிருந்து புறப்படும்
கண்ணால் காணும் சக்தி கலைந்திடும்
காதால் கேட்கும் ஞானம் விளங்கிடும்
நாசி மூடின நன்மை உளந்தொடும்
வாசல் திறந்தே வானுறும் ஆணையே.
பத்து வாசல்கள் மூடிய போது உணர்வுகள் உள்நோக்கமாக மாறி ஆன்மீக உயர்வு அடைகின்றன.
பிரம்ம ரந்திரம் திறந்து பரமபதத்தை அடைய முடியும்.
இவ்வாறு தேகத்தில் காணப்படும் உடலின் இரகசியங்களை தனக்கு நன்றாகத் தெளிவுபடுத்தி தரிசனமாக கொடுக்க வேண்டுமென்கிறார் ஔவை, “புரியட்ட காயம் புலப்பட எனக்குத் தெரியெட்டு நிலையும் தெரிசனப்படுத்தி” என்றார்.
நல்லது. இதைப்போன்ற நிறைய ஞானங்களைப் பற்றிய பேச்சுரைகளாகவும் எழுத்து வடிவங்களாகவும்
@DrRudrashivadha & Vidhaikkul_Vidhai என்ற வலையொளி தளத்திலும்
www.bramagnanaporsabai.com என்ற வலைப்பூத் தளத்திலும்
கொடுத்து வருகின்றோம். நமது பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் செயல்பாடுகள் அனைத்தையும் தெரிந்து கொள்ள வாருங்கள் என்று அன்போடு அழைக்கின்றோம்.
பிரமஞானப் பொற்சபை குருகுலத்திலிருந்து
உங்கள் ருத்ர ஷிவதா, சேலம்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !!