
ஓ…………ம் ஓ……………ம் ஓ……………ம்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகாதலில் சிவவல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு
நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தான்அந்தமிலாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதலாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே (அகவல் : 1255-1290)
அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி
வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !
குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !
நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு வள்ளற்பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருளிய திருவருட்பேறு என்ற பதிகத்தின் ஞானத்தைத்தான் உரையாட இருக்கின்றோம். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.
திருவருட்பேறு
அஃதாவது, இறைவன் திருவருளைப் பெறுதல் பொருட்டு, விண்ணப்பம் செய்வதாம்.
எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும்
பதியை அடைவித்தீர் அப்பதி நடுவே விளங்கும்
கொடிகள் நிறை மணிமாடக் கோயிலையும் காட்டிக்
கொடுத்தீர் அக்கோயிலிலே கோபுர வாயிலிலே
செடிகள் இலாத் திருக்கதவம் திறப்பித்துக் காட்டித்
திரும்பவும் நீர்மூடுவித்தீர் திறந்திடுதல் வேண்டும்
அடிகள் இதுதருணம் இனி அரைக்கணமும் தரியேன்
அம்பலத்தே நடம்புரிவீர் அளித்தருள்வீர் விரைந்தே. (3780)
அம்பலத்தில் ஞான நடனத்தை நிகழ்த்திக் கொண்டிருக்கும் பெருமானே; நீ இருக்கக் கூடிய சுத்த ஞானசபையை அடைவதற்கான அத்தனை ஞானப் படிகளை எல்லாம் நான் ஒவ்வொன்றாக ஏறிக் கடந்து உன்னை வந்தடையும்படியாக எனக்கு அருள் புரிந்திருக்கின்றாய். அப்படி உன் வாழ்விடமான சுத்த ஞானசபையை அடைந்த எனக்கு, அவ்வருள் நிலையமாகிய இறைவனின் நடுவில் அற்புதமான ஞானக் கொடிகள் எல்லாம் சிறந்து விளக்கிக் கொண்டிருக்கிறது. அந்த கொடிகளின் இடத்தில் ஒரு மணி மாடம் இருக்கிறது. அந்த மணி மாடம் உன் திருக்கோயிலுக்குள்ளாக இருப்பதைக் கண்டேன். அக்கோயிலின் கோபுர வாசலில் மாசற்ற அழகிய திருக்கதவினைத் திறந்து காட்டினாய். பின் உடனே அக்கதவினை மூடியும் விட்டாய். அப்படி உடனே கதவை மூடிவிட்டால் என்னால் எப்படி தொடர்ந்து தரிசித்துக் கொண்டிருக்க முடியும்? முடியாதல்லவா. அதனால் இறைவா, நீ உன் திருக்கோயிலின் வாசற்கதவைத் திறப்பித்துக் காட்டி எனக்கு அருள் புரியத்தான் வேண்டும். அதற்கான சரியான நேரம், தருணம், வேளை இதுதான். அதனால் ஒருகணம்கூட நீ தாமதித்தல் கூடாது இறைவா. அப்படி செய்தால் நான் உயிர் வாழ மாட்டேன். அதனால் இறைவா, உன் சுத்த ஞானசபைக் கோயிலின் வாசற்கதவைத் திறப்பித்து உன் திருவருளை விரைந்து எனக்கு அருளிட வேண்டும்.
இப்பாடலில் வள்ளற்பெருமான் சொல்ல வரும் ஞானம் என்னவென்றால், இறைவன் சுத்த ஞானசபை திருக்கோயிலில் வாழ்கிறான். அந்தக் கோயில் எப்படிக் கட்டப்பட்டிருக்கிறது என்றால், மணி மாடங்களால் கட்டப்பட்டிருக்கிறது என்கிறார். மணி என்றால் மெய்ப்பொருள். மாடம் என்றால் திருவடி. ஆக திருவடிகளின் மெய்ப்பொருள் இருக்கும் இடம்தான் இறைவனின் சுத்த ஞானசபைக் கோயில் இருக்கும் வாழ்விடமாகும். தேகத்தின் புறத்தில் இருக்கும் திருவடிகளல்ல. உள்ளே அகத்தில் நம் பேருயிர் இருக்கும் இடத்தில் இருக்கும் சுத்த ஞானத் திருவடியின் மெய்ப்பொருள்தான் இறைவனின் மணிமாடக் கோயிலாகும். இதை நோக்கியப் பயணத்தைத்தான் அத்தனை பிரமஞானத் தவயோகிகள் அவர்களின் பிரமஞானத் தவத்தில் மேற்கொண்டு வருகிறார்கள். பிரமஞானிகளின் பார்வை எப்போதுமே, இந்த இறை மணிமாடக் கோயிலைப் பார்த்தபடிதான் சதா விளங்கிக் கொண்டிருக்கும்.
அவனை அடைந்து நமது திருவடிகளால் தரிசனம் செய்ய வேண்டுமென்றால், நாம் அக்கோயிலின் ஒவ்வொரு படிகளையும் ஒவ்வொன்றாகத்தான் கடந்து ஏறிப் போக வேண்டியிருக்கிறது. அது எத்தனைப் படிகள் என்றால், தொன்னூற்றாறு படிகள். ஆன்மத் தத்துவப் படிகள் 24, வித்தியா தத்துவப் படிகள் 7 மற்றும் சிவத் தத்துவப் படிகள் 5 ஆக மொத்தம் 36 படிகள் உள்ளன. இதனுடைய தத்துவாதீதப் படிகள் அறுபது இருக்கின்றன. இதனோடு சேர்த்து கணக்கிட்டால் 36ம் 60ம் சேர்த்து மொத்தம் 96 தத்துவப் படிகள் வரும். இந்த 96 படிகளையும் அதன் தன்மை, ஆற்றல், குணம், சித்தி, பிரயோகம் ஆகியவற்றை ஒரு தக்க ஞான குருமூலம் கண்டுணர்ந்து சித்தி பெற்றால், இந்த 96 தத்துவப் படிகளையும் நம்மால் கடந்து சுத்த ஞானசபைக் கோயிலுக்குள் நுழைந்து விட முடியும்.
இந்த 96 தத்துவப் படிகளையும் எப்படி தனித்தனியே கடந்து செல்வது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினால், பிரமஞானப் பொற்சபை குருகுலம் நடத்தும் ஜீவன்முத்தீ தாரணை ஞான முகாமில் கலந்து கொண்டு முழுமையாகத் தெரிந்து கொள்ளலாம்.
இதனால், சாக்கிராதீதத்தில் ஞானயோகக் காட்சிகள் கிடைக்கப் பெற்று, தத்துவாதீதப் பரவெளியில் விளங்கும் சுத்த ஞானசபையாகிய திருவருள் ஞானக் கோயிலைக் கண்டு திருக்கதவம் திறந்து சிவதரிசனம் பெற்று இன்புறலாம் என்பதைத்தான் வள்ளற்பெருமான் இந்த முதற்பாடலில் பதிவிட்டிருக்கும் ஞானமாகும்.
பெட்டிஇதில் உலவாத பெரும்பொருள் உண்டு இதுநீ
பெறுகஎன அது திறக்கும் பெருந்திறவுக்கோலும்
எட்டுஇரண்டும் தெரியாது ஏன் என்கையிலே கொடுத்தீர்
இதுதருணம் திறந்து அதனை எடுக்க முயல்கின்றேன்
அட்டிசெய நினையாதீர் அரைக்கணமும் தரியேன்
அரைக்கணத்துக்கு ஆயிரம் ஆயிரங்கோடி ஆக
வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவன்நும் ஆணை
மணிமன்றில் நடம்புரிவீர் வந்துஅருள்வீர் விரைந்தே. (3781)
அந்த அழகிய சிற்பம்பலத்தின்கண்ணே நித்தமும் நடமானடிக் கொண்டிருக்கும் கூத்தப் பெருமானே; என்னிடம் ஒரு பெட்டியைக் கொடுத்து, அதில் இதுநாள் வரை கெட்டுப் போகாத ஒரு பொருள் ஒன்று இருக்கிறது என்று சொல்லி அந்த ஞானப் பெட்டியை கொடுத்தும், அதைத் திறக்க என் கைகளில் இரண்டு சாவிகளையும் கொடுத்தாய். அந்த சாவிகளின் பெயர் எட்டும் இரண்டுமாகும். ஞானப் பெட்டியைத் திறக்கும் சாவிகள் என் கைகளில் இருந்தாலும்கூட, என்னால் இப்போது இப்பெட்டியை திறக்க நினைக்கிறேன். ஆனால், திறக்கவே முடியவில்லையே. என் முயற்சிகள் எல்லாம் வீணாகிப் போய்விடக் கூடாது இறைவா. அப்படி நடக்கும்பட்சத்தில் அரைநொடிகூட நான் உயிரோடு இருக்க மாட்டேன். நீ அப்படி அரைநொடிகூட தாமதிப்பது தெரிந்து விட்டால், அதை ஆயிரம் ஆயிரம் கோடியாக வட்டிபோட்டு உன்னிடமிருந்து உன் திருவருளை வாங்குவேன் பெருமான், இது உன்மீது சத்தியம்.
வள்ளற்பெருமான் பெட்டி என்று சொன்னது அது சிவஞானப் பெட்டி. அதிலிருக்கும் பொருள்தான் சிவபோகம் என்னும் சிவஞானாமிர்தம். அப் பெட்டியைத் திறக்கும் சாவிகள்தான் எட்டும் இரண்டுமாகிய திருவடிகள். இந்த இரண்டு சாவிகளையும் தனித்தனியே பயன்படுத்தித் திறக்க முயற்சித்தால், அது தோல்வியிலேயே முடிவடைந்து போய்விடும். இந்த இரண்டு சாவிகளையும் ஓரிடத்திலேதான் திறக்க வேண்டும். அந்த இடம்தான் எட்டும் இரண்டும் சேர்ந்திருக்கும் பத்தாகிய மகாரத் திருவடி. இந்த மகாரத் திருவடி வாசலைத்தான் ஒவ்வொருவரும் திறந்து கொண்டு உள்ளே சுத்த ஞானசபையை நோக்கிப் பயணம் செய்ய வேண்டும். அதனால்தான் எட்டும் இரண்டும் அறியாதவன் பாவி என்றார் அகத்தியப் பெருமான்.
இதை மாணிக்கவாசகரும் திருச்சதகத்தில் 5.5.கைம்மாறு கொடுத்தல் பதிகத்தில் இவ்வாறு பாடியருளியிருக்கிறார். அதை இங்கு ஒப்பு நோக்கலாம்.
கட்டறுத்து எனைஆண்டு கண்ணார நீறு
இட்ட அன்பரொடு யாவருங் காணவே
பட்டி மண்டபம் ஏற்றினை ஏற்றினை
எட்டினோடு இரண்டும் அறி யேனையே. (திருச்சதகம் – 49)
பொழிப்புரை : இடப வாகனத்தை உடைய நீ, உன்னைப் பார்ப்பதற்குத் தடையாக இருக்கும் மும்மலங்களை அறுத்து, என்னை ஆட்கொண்டு, எட்டினோடு இரண்டின் பொருளை அறியாத என்னை, அருள்நீற்றை அணிந்திருக்கும் உன்னடியார்களோடு, அனைவரும் கண்ணாரக் காணும்படி சத்தம் எழுப்பும் இடத்தில் ஏற்றி வைத்தாய்.
ஞான மெய்ப்பொருளுரை : சிவனின் வாகனம் இடபம் என்ற பரவிந்துவே ஆகும். வெண்ணை நிறம் கொண்ட காளை மாட்டின்மீது சிவன் அமர்ந்திருப்பதாக ஓவியர்கள் படம் வரைந்திருப்பார்கள். காளை மாடு பரவிந்துவின் அடையாளம்.
இறைவனைக் காண வேண்டுமென்றால், முதலில் சாதகனுக்கு அவனின் மும்மலங்கள் கட்டறுத்து அழித்திருக்க வேண்டும். இந்த மும்மலங்கள்தான் மனிதன் ஞானம் அடைவதற்குத் தடையாக இருப்பதால், சிவன் தன் பார்வையால் முப்புரங்களை எரித்தான் என்பது சூக்குமமாக நம் முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள். பார்வையினால்தான் மும்மலங்களை அழிக்க முடியும் அதாவது சுடராழித் தவத்தில் செய்யப்படும் பார்வைத் தவத்தால்தான் மும்மலங்களை எரித்து அழிக்க முடியும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதைத்தான், “கட்டறுத்து எனை ஆண்டு” என்றார்.
எட்டும் இரண்டும் என்பது இரண்டு திருவடிகளைக் குறிக்கிறது. எட்டு என்பது வலது திருவடி ; இரண்டு என்பது இடது திருவடி. பிரமஞானத் தவசிகள் இந்த எட்டையும் இரண்டையும் கொண்டுதான் அவர்களின் பிரமஞானத் தவத்தைச் செய்து வருவார்கள். இந்த எட்டு, இரண்டின் சூக்குமங்கள் தெரியாவிட்டால், அவர்களால் தவத்தில் முன்னேறிச் செல்லவே முடியாது. இதைத்தான், “எட்டினோடு இரண்டும் அறியேனையே” என்றார்.
இவற்றின் அருமைகளை திருமந்திரத்திலிருந்து சிறிது அறிந்து கொள்ளலாம்.
கூடிய எட்டும் இரண்டும் குவிந்தறி
நாடிய நந்தியை ஞானத்துளே வைத்து
ஆடிய ஐவரும் அங்குஉறவு ஆவார்கள்
தேடி அதனைத் தெளிந்து அறியீரே (தி.ம.985)
எட்டும் இரண்டும் இனிது அறிகின்றிலர்
எட்டும் இரண்டும் அறியாத ஏழையர்
எட்டும் இரண்டும் இருமூன்று நான்குஎனப்
பட்டது சித்தாந்த சன்மார்க்க பாதமே (தி.ம.986)
மெய்கண்ட சாத்திரமான உண்மை விளக்கத்தில், மனவாசகம் கடந்த தேவநாயனார் அவர்கள்,
எட்டும் இரண்டும் உருவான லிங்கத்தே
நட்டம் புதல்வா நவிலக்கேள் – சிட்டன்
சிவாயநம என்னும் திருவெழுத்து அஞ்சாலே
அவாயம்அற நின்று ஆடுவான் (பாடல்.31)
என்கின்றார்.
வள்ளற்பெருமான் மெய்யருள் வியப்பு பதிகத்தில் “எட்டும் இரண்டும் இதுவென்று எனக்குச் சுட்டிக் காட்டியே” என்றும், அந்த எட்டும் இரண்டும் தமக்கு எட்டியது (அகவல்) என்பதை,
எட்டிரண்டு என்பன வியலும் உற்படியென
அட்ட நின்று அருளிய அருட்பெருஞ் ஜோதி
என்கிறார்.
பிரணவம் எப்போதுமே நாத விந்துக்களால்தான் உருவாகியிருக்கிறது. இது நாதமும் ஒளியும் தன்னகத்தே மெய்ப்பொருளாகக் கொண்ட பரம்பொருளாக விளங்குகிறது. அகரத்தோடும் உகரத்தோடும் எப்போது மகர மெய் எழுத்து சேர்ந்து ஒலிக்குமோ, அப்போதுதான் பிரணவம் நம் உயிரில் எழும். இந்த பிரணவ நாதம்தான் நமது தேகத்தில் நாத, விந்துக்களாக காணப்படுகிறது.
இதைத்தான் அருணகிரிநாதரும், “நாதவிந்துக் கலாதீ நமோநம” என்றும்,
“விந்துவும் நாதமும் மேவி உடன்கூடிச் சந்திரனோடே தலைப்படும் ஆயிடில்” என்று திருமூலர் அவர்களும்,
“விந்தோ நாத வெளியுங் கடந்து மேலு நீளுதே” (மெய்யருள் வியப்பு – 5019) என்று வள்ளற்பெருமானும் பாடியிருக்கின்றார்கள்.
அகத்தியர்கூட அவருடைய ஞான சைதன்யத்திலே,
காட்டுகிறேன் சத்திசிவம் ஒளியே ஆகும்
கருணைதரும் நாதவிந்து ஒளியே ஆகும்
மாட்டுகிறேன் பூரணமும் அமுதம் ரெண்டும்
மயமான ரவிமதியும் ஒளியே ஆகும்
பூட்டுகிறேன் சந்திர சூரியனும் ஆகும்
புலம்பாதே சுழினை ஏகாச்சரமும் தோணும்
அடங்காத எட்டெழுத்தும் ஒளியும் ஆமே
என்கிறார்.
இங்கே இந்த திருவருட்பேறு என்ற பதிகத்தை நாம் ஏன் எடுத்துக் கொண்டு பேசி வருகின்றோம் என்றால், ஒரு சத்தியத்தை உங்கள் முன்னே கடைவிரித்துச் சொல்லி விடலாம் என்றேதான். அதாவது வள்ளலாரும் சரி, மாணிக்கவாசகரும் சரி இந்த உலகத்திற்கு சொல்லிவிட்டு சென்ற விசயம் என்ன தெரியுமா? அது உங்கள் உயிரை – அவ்வுயிரின் ஒளியை ஒளியாக எண்ணியே வழிபட்டு, இறைவனோடு ஒளியாகக் கலந்து விட வேண்டும் என்ற பிரமஞான வித்தையைத்தான் அருட்பா நெடுகிலும், திருவாசகம் முழுக்கமும் சொல்லப்பட்டிருக்கும் மறைபொருள் இரகசியமாகும்.
உங்கள் உடலை மாசுபடுத்திவிடலாம் ; மனதை மாசுபடுத்திவிடலாம் ; எண்ணங்களை மாசுபடுத்திவிடலாம் ; உங்கள் கொள்கைகளை, இலட்சியங்களை, ஆற்றல்களை, நோக்கங்களை, இலக்குகளை என்று இவை அனைத்தையும் மாசுபடுத்தி இல்லாது ஆக்கிவிடலாம். ஆனால், உங்கள் உயிரை எந்த சக்தியால் மாசுபடுத்திவிட முடியும்? சற்றே சிந்தித்துப் பாருங்கள். உண்மை உங்களுக்கே புரிந்து விடும். இறைவனே நினைத்தால்கூட நம் உயிரை மாசுபடுத்திவிடவோ அழித்துவிடவோ முடியாது. காரணம் நம் உயிரே இறைவனின் ஒரு துளிதானே. அப்படியிருக்க இறைவன் தன்னைத் தானே அழித்துக் கொள்ள சம்மதிப்பானா? நாம் அனைவரும் இதை நன்றாக சிந்தித்துப் பார்த்து சிந்தை தெளிய வேண்டும்.
மனிதனிடத்தில் இருக்கும் அறியாமை என்ற இருளைப் போக்கினால்தான் அவன் ஞானம் அடைவான். அதற்கு மனிதனைப் பிடித்து பேயாக ஆட்டுவிக்கும் காமம், குரோதம், மதம், மாற்சரியம், லோபம், சினம், மோகம் என்ற பேய்களை அழித்தாக வேண்டும். அப்போதுதான் அவனுக்குள் ஒளி பிறக்கும். இந்த ஒளி எங்கு பிறக்கிறதோ, அங்குதான் இறைவன் தன் அருளொளியை வெளிப்படுத்தி நடனம் செய்ய ஆரம்பிப்பான். எவனொருவன் தன்னை ஆன்மாவாக, உயிரொளியாக உணர்கின்றானோ, அவனிடத்தில் தான் அருட்பெருஞ்சோதி ஆண்டவரும் வந்து அமர்ந்து அவனை சாகா நிலைக்கு கைதூக்கி விடுவார். அதனால் நாம் அனைவரும் என்ன செய்ய வேண்டும் என்றால், இன்றிலிருந்து நாம் நம் சிரசிற்குள் ஒளியாக இருக்கும் உயிரை இறையொளியாக நினைத்து வழிபட ஆரம்பிக்க வேண்டும். இதைத்தான் திருஅருட்பாவிலும் திருவாசகத்திலும் அவ்வளவு ஆழமாக ஞானச்செறிவுகளோடு பாடப்பட்டிருக்கிறது.
ஓம் எனும் நாதமானது சூரியனின் வளிமண்டலத்தின் வெளிப்புறத்திலிருந்துதான் சதா வெளி வந்துகொண்டே இருக்கிறது என்று அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவானது அண்மை ஆய்வில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடித்து இவ்வுலகிற்கு சொன்னது. இதனை அடுத்து ஓம் எனும் பிரணவ மந்திரத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்க அறிஞர்கள் தற்போது ஈடுபட்டு ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று கடந்த 16.02.2016 ஆண்டு தின இதழ் என்ற நாளேட்டில் 16ஆம் பக்கத்தில் விரிவாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. தேவைப்படுவோர் அந்நாளிட்ட நாளிதழை வாங்கி படித்துப் பயன்பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், இந்த ஓம் என்ற பிரணவத்திலிருந்துதான் அண்ட சராசரமே, இந்தப் பிரபஞ்சமே பிறந்தது என்று 10,000 ஆண்டுகளுக்கு முன்னே நம் திருமூலர் அவர்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்து உள்ளே உதித்த சராசரம்
ஓங்காரதீதத்து உயிர் மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே (திருமந்திரம் 2628)
என்று பாடியிருக்கிறார்.
இறைவனை அம்மையப்பராக – மாதொரு பாகனாக – நாதவிந்து வடிவாக – ஒளி, நாதமாக இருப்பதைக் கண்டு களித்து, வழிபட்டு, அனுபவித்துப் பாடியவர் மணிவாசகப் பெருமான் ஒருவர்தான். வேறு யாருமில்லை. மேலும், “என்னை ஓர் வார்த்தை உட்படுத்துப் பற்றினாய்” (செத்திலாப் பத்து) என்றும், “உய்யும் நெறி காட்டுவித்திட்டு ஓங்காரத்து உட்பொருளை ஐயன் எனக்கு அருளியவாறு” (அச்சோப் பதிகம்) என்றும் பாடியவர்தான் மணிவாசகப் பெருமான். அந்த ஒரு வார்த்தைதான் ஓம் என்ற பிரணவம். உய்யும் நெறியாவது எது தெரியுமா அன்பர்களே? அதுதான் ஓங்கார நாதம். எனவே, இறைவனின் வரி வடிவம் ஓங்காரம் ; ஒலி வடிவம் நாதம் என்பதை நாம் இங்கே நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
இரு திருவடிகளையும் அறிந்து கொண்டால், அங்கே முறையாக சுடராழித் தவம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும். இரு திருவடிகளும் ஒளியையும் ஒலியையும் குறிக்கின்றன. இவ்விரண்டையும் சுடராழித் தவத்தில் ஒன்றிணைக்கும்போது, ஒளியும் நாதமும் மெய்ப்பொருளின் மையப்புள்ளியில் இருக்கும் சுழிமுனை நாடியில் இணைந்து கொண்டு நம் உயிர் இருக்கும் சுத்த ஞானசபையை நோக்கிச் செல்ல ஆரம்பிக்கும். ஒளியும் நாதமும் இணையும்போது உராய்தல் நிகழுமல்லவா. அந்த உராய்தலில் பலவித நாதங்கள் கனன்று கொண்டு மேலெழ ஆரம்பிக்கும். அந்த நாதங்களை சாதகன் தவத்தின்போது அவன் சிரநடுவுள்ளே நன்றாகக் கேட்க ஆரம்பிப்பான். அந்த நாதங்கள் எழும்பும் இடத்தைத்தான், “பட்டி மண்டபம் ஏற்றினை” என்றார் மாணிக்கவாசகர்.
இந்த பட்டி மண்டபத்தைத்தான் வள்ளற்பெருமான் “படிகள்எலாம் ஏற்றுவித்தீர் பரமநடம் புரியும் பதியை அடைவித்தீர்” என்றார்.
நமது தேகத்தில் சிவபோகத் தேன் இருக்கும் ஒரு பெட்டி இருக்கிறது. அதனுள்ளே தான் சிவத்தைக் கண்டு அவனோடு ஒன்று கலந்திடும் சாவா மருந்து – மூவா மருந்தொன்று இருக்கிறது. அதைத் திறப்பதற்கு இரண்டு சாவிகளும் இருக்கிறது. அந்த இரு சாவிகளையும் இரண்டிடத்தில் திறக்காமல், ஓரிடத்தில் திறந்து கொள்ள வேண்டும். அப்படி திறந்து கொள்ளும் வல்லமை கிடைக்கப் பெற்று விட்டால், அதன்பின் சிவானுபவம் தானே உயிரில் நிரம்பி வழியும். இதுதான் இப்பாடல் சொல்ல வரும் ஞான மெய்ப்பொருளாகும். ஒரு ஞான சற்குருவிடம் சிவஞான அருள் உபதேசத்தை எப்படியாவது ஒருவர் அவர் வாழ்நாளில் பெற்றுக் கொண்டு விடவேண்டும். அதன்பின் எல்லாமே சித்திதான் – அதுவும் சிவஞான சித்திதான்.
(16.01.2025 – விதைக்குள் விதை டெலிகிராம்)
திருவருட்பேறு
(திருவருட்பா – 6ஆம் திருமுறை)
(பாடல் எண். 3780 முதல் 3789 வரை)
ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்
Dr.ருத்ர ஷிவதா,
பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாஅழ்க !
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !
ஓ…………ம் ஓ……………ம் ஓ……………ம்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகாதலில் சிவவல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு
நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தான்அந்தமிலாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதலாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே (அகவல் : 1255-1290)
அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி
வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !
குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !
நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு வள்ளற்பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருளிய திருவருட்பேறு என்ற பதிகத்தின் ஞானத்தைத்தான் உரையாட இருக்கின்றோம். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.
கைக்குஇசைந்த பொருள்எனக்கு வாய்க்குஇசைந்து உண்பதற்கே
காலம்என்ன கணக்குஎன்ன கருதும் இடம்என்ன
மெய்க்குஇசைந்து அன்று உரைத்ததுநீர் சத்தியம் சத்தியமே
விடுவேனோ இன்றுஅடியேன் விழற்கு இறைத்தேன் அலவே
செய்க்குஇசைந்த சிவபோகம் விளைத்துணவே இறைத்தேன்
தினந்தோறும் காத்திருந்தேன் திருவுளமே அறியும்
மைக்குஇசைந்த விழிஅம்மை சிவகாம வல்லி
மகிழ நடம்புரிகின்றீர் வந்துஅருள்வீர் விரைந்தே. (3782)
கண்களில் மை தீட்டிய அம்மையாகிய சிவகாம வல்லியைக் கண்டு கண்டு ஆனந்தப் பரவசம் கொள்ளுமாறு சுத்த ஞான சபையிலேயே திருக்கூத்தாடுகின்ற பெருமானே; ஒரு பொருள் என் கைகளுக்கு கிடைத்தது. ஆனால், அப்பொருளை உண்பதற்குத்தான் எனக்கு இன்னும் வாய்ப்பே கிடைக்கவில்லை. கைக்குக் கிடைத்தப் பொருளை உண்பதற்கு காலம், நேரம், இடமெல்லாம் பார்க்க வேண்டுமா? என்ன? இப்படி அந்த ஞானப் பொருளை உண்பதற்கு எந்தக் காலத்தையும் கணக்கையும் இடத்தையும் பார்க்க வேண்டாம் என்று அன்றே எனக்கு உண்மையான சத்தியத்தை – மெய்ம்மையை எடுத்துச் சொல்லியிருக்கின்றாய். அதனால் அந்த சத்தியப் பாதையில் – மெய்வழிப் பாதையில் நான் இருந்து கொண்டு, அந்த கைக்குக் கிடைத்தப் பொருளை சாப்பிடாமல் இருக்க மாட்டேன். இதற்காக நான் இந்நாள் வரை சிறிதும் முயற்சி செய்யவே இல்லைதான். அப்பொருளை உண்பதற்கான தக்க ஞானச் செயலான தவத்தை மேற்கொண்டு, சிவபோகத்தை உண்டாக்கிக் கொண்டு, அந்த சிவப்பொருளை உண்ணவே செய்வேன். இதற்காகத்தான் நான் ஒவ்வொரு நாளும் காத்துக் கொண்டே இருக்கின்றேன். இந்த எனது ஞானத் தவத்திற்கான முயற்சியை சிவபெருமானே, உன் திருவுள்ளம் நன்றாக அறிந்துதான் இருக்கும். நீ சுத்த ஞான சபையிலே சிவகாம வல்லியோடு ஆனந்தத் தாண்டவம் ஆடியதெல்லாம் போதும், விரைந்து வந்து எனக்கு உன் திருவருளைக் கொடுத்துவிடு சிவபெருமானே.
கைக்கு இசைந்த பொருள் என்பது ஞானகுரு உபதேசித்தருளும் சிவஞானம்.
மெய்க்கு இசைந்தது அதாவது உயிருக்கு இசைந்தது உன் சிவ அருள்.
செய்கைகளுக்கு இசைந்தது உன் சிவபோகம்.
மைக்கு இசைந்தது சிவகாமவல்லியோடு திருநடம்.
அதாவது நம் கைககளில் வந்து வசமாகிய ஒரு பொருளான சிவப்பொருளை – சிவஞானத்தை, குருவருளால் நம் மெய்யாகிய உயிரில் வசமாக வைத்தும் அந்த ஈசனின் சிவஅருளைப் பெற்றும், அந்த சிவ அருளை நம் பிரமஞானத் தவத்தினால் சிவபோகமாக விளைவித்து, அதனால் உண்டாகக்கூடிய சிவப்பழம்பொருளான சிவ ஞானாமிர்தத்தை அவன் அருளான சிவ அருளால் உண்ண வேண்டும் என்பதுதான் இப்பாடல் சொல்ல வரும் ஞான மெய்ப்பொருள். இப்போது உங்களுக்கு நன்றாக விளங்கியிருக்கும் என்றே எண்ணுகிறோம்.
முதல் விசயமான சிவப்பொருள் நம் கைவசம் வந்தால்தான் மற்ற விசயங்கள் ஒவ்வொன்றாக குருவின் கருணையினாலும், ஈசனின் திருவருளாலும் நடந்தேறிக் கொண்டு வரும். நமக்குள்ளே என்றைக்கும் நித்திய ஜீவனாக இருந்து கொண்டிருக்கக்கூடியதுதான் அந்த சிவப்பழம்பொருள். அது ஞானம் அடைந்த ஒரு சற்குரு தொட்டுக் காட்டி ஞான உபதேசம் வழங்கினாலன்றி, நம்மால் அந்த கைப்பொருளை – சிவப்பொருளை – சிவப் பழம்பொருளை உணரவே முடியும். உணராத விசயம் என்றைக்குமே சித்தியாவதில்லை. எதுவாகயிருந்தாலும் அது உணர்வாக மாறினாலன்றி நம் ஆழ்மனம் அவ்வுணர்வை மெய்ப்பிக்க எந்தவித முயற்சியும் செய்வதேயில்லை. நல்லது, அடுத்த பாடலுக்குள் செல்லலாம்.
பரிகலத்தே திருஅமுதம் படைத்து உணவே பணித்தீர்
பணித்தபின்னோ என்னுடைய பக்குவம் பார்க்கின்றீர்
இருநிலத்தே பசித்தவர்க்குப் பசிநீக்க வல்லார்
இவர்பெரியர் இவர்சிறியர் என்னல் வழக்கு அலவே
உரிமையுற்றேன் உமக்கே என்உள்ளம் அன்றே அறிந்தீர்
உடல்பொருள் ஆவிகளை எலாம் உம்மது எனக் கொண்டீர்
திரிவகத்தே நான்வருந்தப் பார்த்திருத்தல் அழகோ
சிவகாம வல்லி மகிழ் திருநட நாயகரே. (3783)
சிவகாமவல்லியைக் கண்டு அவள் மனம் மகிழ ஆனந்த நடனம் புரிகின்ற ஆடல்புரி வல்லானே; சாப்பிடக்கூடிய உணவுத் தட்டில் (பரிகலம்) உணவைப் பரிமாறி விட்டு, சாப்பிடு என்றும் சொல்லிய பிறகும் அந்த சாப்பாட்டை உண்பதற்கான தகுதி – அருகதை – பக்குவம் எனக்கு உண்டா என்று பார்க்கின்றாயே இறைவா, இது உனக்கு அழகுடைத்தா? சொல். இந்த உலகத்தில் மற்றவர்களின் பசியை ஆற்றுவதற்காக அன்னதானத்தை நிறைய பேர் செய்விக்கின்றார்களே, அவர்களெல்லாம் இவர் பெரியவர், இவர் சிறியவர் என்றா பார்த்துப் பார்த்து அன்னத்தை தானமாக வழங்குகின்றார்கள்? அப்படி சாப்பிட வருபவர்களை தகுதி இருக்கா என்றெல்லாம் ஆராய்ந்தால் அது அன்னதானத்தின் சிறப்பான செயலாக இருக்குமா, இறைவா? நீயே சொல் பார்க்கலாம். இறைவா, இந்த உலகத்திலேயே சாப்பிடுவதற்கு அரிதான உணவை நீ மட்டும்தான் வைத்திருக்கின்றாய். அந்த உணவின் பெயர்தான் அருளுணவு. இந்த அருள் உணவு ஒன்றுதான் எங்களையெல்லாம் இறவா நிலைக்கு கொண்டு செல்லக் கூடிய மூவா மருந்து – சாவா மருந்து. இந்த அருளுணவை உண்பதற்கு எனக்குத் தகுதி இருக்கத்தான் செய்கிறது. இதை நீயே அறிந்தும் வைத்துள்ளாய். எனது உடல், பொருள், உயிர் அனைத்தும் உனக்கே சரணாகதியாகக் கொடுத்துவிட்டேன். அப்படியிருக்க உன் அருளுணவை உண்ண எனக்குத் தகுதியிருக்கா? இல்லையா? என்று நீ மனம் பேதலிக்கலாமா? அது உமக்கு அழகுடையச் செயலாகுமா?
அதனால் எனக்கு இப்போது ஞானப் பசி உண்டாகியிருக்கிறது. இந்த ஞானத்தைத் தணிப்பதற்கான உணவு (திருஅமுதம்) உன்னிடத்தில்தான் இருக்கிறது. அதுதான் உன்னுடைய அருளுணவு. அதை எனக்குக் கொடுத்து என்னை இறவா நிலைக்கு கூட்டிச் செல்ல வேண்டும் என்பதுதான் இப்பாடல் சொல்ல வரும் ஞானப்பொருளாகும்.
அந்த இறைவனின் அருளுணவை உண்பதற்கான என்ன தகுதி என்பதை இப்பாடலில் வள்ளற்பெருமான் தெளிவுபடவே கூறியிருக்கிறார். அதன்பெயர்தான் சரணாகதி. இந்த சரணாகதி என்றால் என்ன? அதை எப்படி அடைய வேண்டும்? அதன் தாத்பரியம் என்ன? யாரிடம் சரணாகதி கொண்டிருக்க வேண்டும்? என்பதைப் பற்றியெல்லாம் மிக விரிவாக கடந்த 14.11.2024 ஆம் தேதியன்று இதே தளத்தில் பேச்சுரை ஆற்றியிருக்கிறோம். அது நமது காணொளி தளத்திலும் பதிவேற்றப்பட்டிருக்கிறது. இந்த பேச்சுரையை மீண்டும் ஒருமுறை காணொளி தளத்தில் சென்று கேட்டு நினைவுபடுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். சரணாகதியை பற்றி ஒரு சிறு சுருக்கமாகச் சொல்லிவிட்டு அடுத்தப் பாடலுக்குள் செல்லலாம்.
நிகழ்காலம் ஒன்றுதான் எப்போதுமே விழிப்புணர்விலேயே இருந்து கொண்டிருக்கும். அதுதான் மெய்யும்கூட. மெய்யும் பொய்யும் எப்போது சந்தித்துக் கொள்வதேயில்லை. கடந்தகாலம் பொய்யானதே. அது மீண்டும் வரப்போவதில்லை. காரணம் கடந்த காலம் என்பது ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், இப்போது அது இல்லையே. போய்விட்டதே, கடந்து விட்டதே. போனதும், கடந்ததும் மெய்யோ, பொய்யோ அது நமக்குத் தேவையில்லை.
கடந்த காலத்தைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தால், நிகழ்காலம் பொய்யாகவே போய்விடும். இந்த ‘நான்’ உணர்வு எப்போதும் உயிரற்ற விசயங்களை எண்ணிக் கொண்டு, கடந்த காலத்திலேயே வாழ்வதால், அது கல்லறைத் தோட்டமாகவே இருக்க வேண்டிவரும். அங்கு பிணங்களும், உயிரற்ற எலும்புகளும் மட்டுமே இருக்கும். இதை மறந்து விடாதீர்கள்.
அதனால் ‘நான்’ உணர்வானது எதிர்காலத்தில் வாழ முயற்சிக்கும். எதிர்காலம் தான் இன்னும் வரவில்லையே. அது ஒரு கனவாக இருக்கலாம் ; கற்பனையாகவும் இருக்கலாம் ; ஆச்சரியமாகவும் இருக்கலாம். காரணம், இந்த ‘நான்’ கடந்த காலத்திலும் சரி, நிகழ்காலத்திலும் சரி நன்றாக ஒத்துப்போய்விடும். ஏன் அப்படியென்றால், நான் என்பதே பொய்யென்று ஆகும்போது, பொய்யான கடந்த காலமும், எதிர்காலமும் ஏன் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாது. சிறிது சிந்தித்துப் பாருங்கள். ‘நான்’ என்ற உணர்வை இருப்பில் இருக்க வைத்தோமென்றால், இந்த ‘நான்’ உடனே மறைந்து போய்விடும். இருப்பு என்பது நிகழ்காலம். அதனால்தான் யாம் வலியுறுத்திச் சொல்கிறோம், நீங்கள் எப்போதுமே இங்கேயே இந்த நொடிப்பொழுதிலேயே இருந்து கொண்டிருங்கள் என்று. வெறுமனே இந்த நொடிப் பொழுதில் நீங்கள் இருந்தால், நீங்கள் அறிவுடையோர் என்றும் சான்றோன் என்றும் சொல்லுவேன். இந்த நொடிப்பொழுதில் நீங்கள் உங்களுக்குள் இல்லாமல் இருக்க வேண்டும், அவ்வளவுதான்.
‘நான்’ என்ற தன்முனைப்பு எங்கில்லையோ, அங்கே கடந்த காலமும் இல்லை ; எதிர்காலமும் இல்லை. நிகழ்காலம் மட்டுமே மலர்ந்திருக்கும்.
அதனால் இந்த நொடிப்பொழுது மட்டுமே எப்போது இருந்து கொண்டிருக் கட்டும். அப்போதுதான் நீ அங்கு இல்லாமல் இருப்பாய். மேலும் நீ இல்லாமல் இருந்து கொண்டே இரு. அப்போது திடுமென ஒரு பூரண அமைதி உனக்குள் பாய ஆரம்பிக்கும். இது நிகழ்ந்தபின், உனக்கு உள்ளேயும் வெளியேயும் ஆழ்ந்த அமைதி மட்டுமே இருந்து கொண்டிருக்கும். அதன்பின் நீ சரணாகதி என்ற ஒரு விசயத்தைப் பற்றி எண்ணவே தேவையில்லை. அப்போது சரணாகதியை நீ அடையவே தேவையிருக்காது. அந்நிலைப்பாடுதான் உன்னில் உருவாகும் ‘நான்’ உணர்வு உனக்குள் இல்லாமல் போய் விட்டிருப்பதைத் தெளிவாகக் காண்பாய். ‘நான்’ உணர்வு இல்லாமல் இருப்பதே பூரண சரணாகதி. இதுதான் மெய்யியல் கோட்பாடு சொல்லும் பூரண சத்தியம்.
அதனால் ஒருவன் சரணாகதி அடைய வேண்டும் என்ற கேள்விக்கு இடமில்லாமல் போய்விடுகிறதல்லவா. இறைவனிடமோ, குருவிடமோ நீ சரணாகதி அடைய வேண்டும் என்ற கேள்வியும் அங்கே இல்லாமல் போய்விடுகிறது. “நான்” எனக்குள் இல்லை என்ற அந்தப் புரிதல்தான் உங்களின் சிறந்த அகப்பார்வையான சரணாகதி.
“நான் இல்லை”, “நான் ஒரு வெறுமை”, “நான் ஒரு வெற்றிடம்”, “நான் ஒரு வெற்றுக் கோப்பை”, “நான் ஏழு துளைகொண்ட ஒரு வெற்றுப் புல்லாங்குழல்” என்பதை எப்போது நாம் நமக்குள் கண்டுகொள்கிறோமோ, அப்போது நமக்குள் சரணாகதி வளர ஆரம்பிக்கிறது என்று பொருள். வெறுமை என்ற மரத்தில்தான் சரணாகதி என்ற தேன்மலர் பூக்கும். மரத்தை நட வேண்டியதுதான் நம் செயல். அம்மரத்தில் உண்டாகும் பூவையோ, காயையோ, கனியையோ நாம் உருவாக்குவதுமில்லை, செய்வதுமில்லை. வெறுமை என்ற மரத்தை வைத்தால் போதும். சரணாகதி என்ற பூ, காய், கனி தானே வளர்ந்து பூத்துக் கனிந்துவிடும்.
இந்த சரணாகதி நிலைப்பாட்டைத்தான் தான் கொண்டிருப்பதாக வள்ளற்பெருமான் அருட்பெருஞ்சோதி ஆண்டவரிடம் சமர்ப்பித்து, தனக்கு அவரின் அருளுணவு ஒன்று மட்டுமே வேண்டும் ; அது ஒன்றே போதுமானது என்றே வேண்டுகிறார். நாமும் அப்படி இறைவனிடம், குருவிடம் பூரண சரணாகதியை கைக்கொண்டால், நம் கைவசம் அந்த சிவப்பொருள் உணவு கைவல்யமாகாதா? என்ன? நீங்களே சற்று சிந்தித்துப் பாருங்கள்.
பிரமஞானத் தவத்தைப் பயின்றுவரும் சீடர்கள் அனைவரும் இந்த இறைவனின் அருளுணவான அமுதத்தை நித்தமும் உண்டு வருகிறார்கள். இந்த அருளுணவைத் தான் தீக்ஷையின்போது நாங்கள் வழங்கி, ஒவ்வொரு சீடனின் உயிரினைக் காத்து வருகின்றோம். அதுதான் எங்கள் பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் தொலைநோக்கமாகும்.
திருவருட்பேறு
(திருவருட்பா – 6ஆம் திருமுறை)
(பாடல் எண். 3780 முதல் 3789 வரை)
(23.01.2025 – விதைக்குள் விதை டெலிகிராம்)
ஸ்ரீஸ்ரீ பரமஹன்ச சுந்தரானந்த மஹரிஷியின் சீடன்
Dr.ருத்ர ஷிவதா,
பிரமஞானப் பொற்சபை குருகுலம், சேலம்
நமச்சிவாய வாஅழ்க நாதன்தாள் வாஅழ்க !
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க !
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி !
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
திருச்சிற்றம்பலம் !
ஓ…………ம் ஓ……………ம் ஓ……………ம்
சாகா வரமும் தனித்த பேரறிவும்
மாகாதலில் சிவவல்லப சத்தியும்
செயற்கரும் அனந்த சித்தியும் இன்பமும்
மயக்கறத்து அரும்திறல் வன்மையதாகிப்
பூரண வடிவாய்ப் பொங்கி மேல் ததும்பி
ஆரண முடியுடன் ஆகம முடியும்
கடந்து எனது அறிவாங் கனமேல் சபைநடு
நடம்திகழ்கின்ற மெய்ஞ்ஞான ஆரமுதே
சச்சிதானந்தத் தனிமுதல் அமுதே
மெய்ச்சிதாகாச விளைவருள் அமுதே
ஆனந்த அமுதே அருளொளி அமுதே
தான்அந்தமிலாத் தத்துவ அமுதே
நவநிலை தரும்ஓர் நல்ல தெள்ளமுதே
சிவநிலைதனிலே திரண்ட உள்ளமுதே
பொய்படாக் கருணைப் புண்ணிய அமுதே
கைபடாப் பெருஞ்சீர்க் கடவுள் வானமுதே
அகம் புறம் அகப்புறம் ஆகிய புறப்புறம்
உகந்த நான்கு இடத்தும் ஓங்கிய அமுதே
பனிமுதல் நீக்கிய பரம்பர அமுதே
தனிமுதலாய சிதம்பர அமுதே
உலகெலாம் கொள்ளினும் உலப்பிலா அமுதே
அலகிலாப் பெருந்திரள் அற்புத அமுதே (அகவல் : 1255-1290)
அனைத்து உயிர்களும் சிவஅமுதம் பெற்று சிவமாதல் வேண்டுவதன்றி
வேறொன்றும் வேண்டேன் எம் பரசிவ குருவே !
குருவே சரணம்…. குரு வாழ்க …….. குருவே துணை !
நமது விதைக்குள் விதை தளத்தில் இணைந்து ஞானத்தைச் சுவைப்பதற்காகக் காத்துக் கொண்டிருக்கும் அத்தனை ஞானப் பறவைகளுக்கும் எமது பணிவான வணக்கத்தையும் ஆசிர்வாதத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இன்றைக்கு நாம பேச இருக்கும் தலைப்பு வள்ளற்பெருமான் திருவருட்பா ஆறாம் திருமுறையில் அருளிய திருவருட்பேறு என்ற பதிகத்தின் ஞானத்தைத்தான் உரையாட இருக்கின்றோம். வாருங்கள் இனிமையாக உரையாடுவோம்.
பொய்கொடுத்த மனமாயைச் சேற்றில் விழாது எனக்கே
பொன்மணி மேடையில் ஏறிப் புந்தி மகிழ்ந்து இருக்கக்
கைகொடுத்தீர் உலகம்எலாம் களிக்க உலவாத
கால்இரண்டும் கொடுத்தீர் எக்காலும் அழியாத
மெய்கொடுக்க வேண்டும் உமை விடமாட்டேன் கண்டீர்
மேல்ஏறினேன் இனிக்கீழ் விழைந்து இறங்கேன் என்றும்
மைகொடுத்த விழிஅம்மை சிவகாமவல்லி
மகிழ நடம்புரிகின்றீர் வந்து அருள்வீர் விரைந்தே. (3784)
மை தீட்டிய கண்களையுடைய தேவியாகிய சிவகாமவல்லி கண்டு மகிழும்படியாக தன் ஒளியுடம்பால் ஆனந்தக் கூத்தாடுகின்ற சிவபெருமானே; வாழ்க்கை முழுக்கவே பொய்கள்தான் மனிதனை ஆளுமை செய்து வருகின்றன. அப்படிப்பட்ட கேடுகெட்ட பொய்களால்தான் இன்றைக்கு மனித மனம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த பொய்ச் சேற்றில் – சாக்கடையில் வாழ்ந்து கொண்டிருக்கும் மனமென்னும் மாயைச் சேற்றில் நான் விழுந்து விடாதபடி இறைவா நீதான் என்னைக் காத்தருள் செய்திட வேண்டும். அதோடு என்னை அந்த மாயைச் சேற்றிலிருந்து வெளியே அழைத்து வந்து ஒரு பொன்னால் ஆன மேடையில் ஏற்றிவிட வேண்டும் ஐயனே, சிவகாமவல்லி சுந்தரனே. அந்த பொன்மேடை எப்படி இருக்கிறது தெரியுமா? அது பொன்மணி மேடையாக இருக்கிறது. பொன்மணி என்றால் என்ன பொருள் என்றால், அதுதான் சூரிய ஒளிக்கதிரலைகளால் நிரம்பிக் காணப்படும் மெய்ப்பொருள் கனகமணி மேடையாகும்.
மெய்ப்பொருள் எப்படி இருக்கிறது என்றால், அது பொன் கதிர்களால் பட்டொளி வீசிக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட பொன்னொளிகளால் மணிக்கதிர்களால் நிரம்பியதுதான் நமது திருவடிகளாகும். அந்த திருவடிகள் பார்ப்பதற்கு ஒளிச்சுடர்களால் நிரம்பிய ஒளிக்கலைகளாக காணப்படுகின்றன. புந்தி என்றால் முந்திக் கொண்டிருக்கும் திருவடி என்று பொருள். அது பொன்மணி மேடையாக நமக்கெல்லாம் இருக்கிறது. அந்த திருவடியின் மெய்ப்பொருளான புந்தி என்ற இடத்திலே நான் தவத்தால் மகிழ்ந்து கொண்டிருக்க வேண்டும். அதற்கு இறைவா நீ எனக்கு உன் திருவருள் ஞானம் என்ற கை கொடுத்து உதவினீர்கள். இப்படிப்பட்ட உன் திருவருள் ஞானத்தைப் பெறுவதற்காக பிரமஞானத் தவசிகள் எல்லாம் பிரமஞானத் தவத்தைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்களிடம் யான் சென்று சேர்வதற்காக எனக்கு கால்கள் இரண்டையும் கொடுத்து அருள் செய்தீர்கள். இரண்டு கால்கள் என்பது பிரமஞானத் தவத்தில் அமுதக் காற்றோடு செல்லக்கூடிய பிராண, அபானக் காற்றாகும். இதுதான் இருகால்களாகும். இந்த இரு கால்களைக் கொண்டுதான் எந்தக் காலத்திலும் அழியமாட்டாத மெய்யான உயிரொளியைக் கொடுத்து அருள்செய்திட வேண்டும். அந்த உயிரொளியால் ஆன மெய் உடலை – மெய்த் தவத்தைக் கொடுக்கும்வரை உன்னை என்னால் விட்டுவிடவே முடியாது இறைவா. என்னை நன்றாகப் பார் இறைவா, நான் அந்த இரு கால்களான பிராண, அபானன்களைக் கொண்டு அமுதக்காற்றால் சுழிமுனை நாடியின் வழியே மேலேறி என் உயிரை நோக்கி பயணிக்க ஆரம்பித்துவிட்டேன். அதுதான் மெய்ப்பாதை என்பதை முற்றாக அறிந்து கொண்டுவிட்டேன். இனி அந்த சுழிமுனை நாடியிலிருந்து கீழிறங்கவே மாட்டேன். இது உன்மீது சத்தியம்.
நாம் சேற்றில் இறங்கிவிட்டதுதும் அதிலேயே பன்றியைப் போல மூக்கை நுழைத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருப்பதும் தெரியாமல் அறியாமையிலேயேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதை யாராலும் மறுக்க முடியாதல்லவா. சேற்றிலிருந்து நாம் கரையேறி மேட்டுப் பகுதிக்குச் சென்றுவிட வேண்டுமல்லவா. அந்த மேட்டைத்தான் வள்ளற்பெருமான் பொன்மணி மேடை என்றார். நாம் எல்லோரும் இந்த மேடையில் ஏறிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பொய்யென்னும் மனமாயைச் சேற்றில் அழுந்திப் போகாது இருக்க வேண்டும். என்ன, இனியாவது பொன்மணி மேடையில் ஏறிக் கொள்வீர்களா, அன்பர்களே. இந்தப் பொன்மணி மேடையில் எப்போதுமே மெல்லிய பூங்காற்றுதான் வீசிக் கொண்டிருக்கும். அது அவ்வளவு சுகந்தமானது – அமுதமானது – அற்புதமானது – காணவும் உணரவும் கிடைக்காதது. அப்புறம் உங்கள் விருப்பம்.
இப்படித்தான் வள்ளற்பெருமான் சிவஞானப் பேற்றை அடைந்தார் என்பதுதான் இப்பாடல் சொல்லவரும் ஞானப் பொருளாகும்.
மின்போலே வயங்குகின்ற விரிசடையீர் அடியேன்
விளங்கும் உமதுஇணைஅடிகள் மெய்அழுந்தப் பிடித்தேன்
முன்போலே ஏமாந்து விடமாட்டேன் கண்டீர்
முனிவறியீர் இனிஒளிக்க முடியாது நுமக்கே
என்போலே இரக்கம்விட்டுப் பிடித்தவர்கள் இலையே
என்பிடிக்குள் இசைந்ததுபோல் இசைந்ததிலை பிறர்க்கே
பொன்போலே முயல்கின்ற மெய்த்தவர்க்கும் அரிதே
பொய்தவனேன் செய்தவம்வான் வையகத்திற் பெரிதே. (3785)
மின்னலைப் போல் ஒளி வீசுகின்ற விரிந்த சடையையுடைய சிவபெருமானே; சடை என்றால் அது நமது திருவடிகளைக் குறிக்க வரும் சிவஇரகசிய மறைபொருட் சொல்லாகும். இதைத்தான் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
சடை உள்ள இடம் நம் சிரசு. சிரசின் இடையில் சிவபெருமான் கங்கையை அணிந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஏன் இந்த கங்கையை கழுத்திலோ மார்பிலோ வயிற்றிலோ மற்ற உடற்பாகங்களிலோ அணிந்திருக்கலாமே? ஏன் சிரசில் மட்டும் சிவம் தரித்திருக்கிறார்? இதுதான் நம்முன்னே உள்ள கேள்வி. அமுதம் இருக்கும் இடம் சிர நடுவுள்ளே இருக்கும் பிணியல் சுரப்பியாகிய அமுதக் கலசமாகும். சடை இருக்கும் தலையின் இடைப்பாகமான நடுவுள்ளாக அமுதத்தை பிரமஞானத் தவத்தால் உருக வைத்து நம்மால் உண்ண முடியும் என்பதைத்தான், “சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி” என்றார்.
சடை என்பது நேத்திரங்களைக் குறிக்கிறது என்று ஏற்கனவே வேறொரு இடத்தில் விரிவாகச் சொல்லியிருக்கிறோம். அந்த நேத்திரத்தில் கங்கை என்ற அமுதம் இருக்கிறது. அதாவது நேத்திரத்தைப் பிடித்துக் கொள்ளாவிட்டால், உள்ளிருந்து சந்திரக் கலசத்திலிருந்து பொங்கி வரும் கங்கை என்ற அமுதத்தைப் பருகவே முடியாது. நேத்திரத்தைப் பிடித்தால், சிவனின் சடையையே பிடித்துக் கொண்ட அற்புதம் நடக்க ஆரம்பிக்கும். அது மனித சடையல்ல ; பிரமஞானச் சடை அது.
சிவபெருமானுக்கு சடை இருப்பதாக சாத்திரம் படித்தோரும், வேத விற்பன்னர்களும் கூறுகிறார்கள். ஆனால், பிரமஞானிகளோ சடை என்பது சிவனின் கண்கள்தான் என்றும் அக்கண்களில் இருந்துதான் கண்ணீர் என்ற கங்கை பொங்கி வருகின்றது என்றும் கூறுகிறார்கள். நமது கண்ணீர் உப்புநீராகும். சிவத்தின் கண்ணீர் அமுத வெள்ளமாகும். இனிப்பாக இருக்கும். மனிதர்களைப் போன்று தலைப்பகுதியில் சடை வளர்ந்து வருகிறது என்றால், கண்டிப்பாக இறைவனும் மனிதனாக பிறப்பெடுத்து வந்து கொண்டிருக்க வேண்டும். அமுதத்தை தினமும் அருந்திக் கொண்டிருப்பதால் சிவனுக்கு ஏது பிறவி என்பதை இங்கே வேத, சாத்திர விற்பன்னர்கள், சிவாச்சாரியார்கள், ஆசாரியார்கள் உணர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
சிவனின் சடையில் அப்படி என்னதான் ரகசியம் ஒளிந்திருக்கிறது என்று சிறிது ஆராயலாம். பிரமஞானிகள் நேத்திரம்தான் சடை என்கிறார்கள். இது உண்மையா? கற்பனையா? பார்க்கலாம் வாருங்கள். நேத்திரத்திலிருந்து கண்ணீர் வெளியே வருகிறது. அது கடல்நீரைப் போல உப்பாக இருக்கிறது. ஆக, நேத்திரம் கடலைப் போன்றே நம் தேகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கடல் எதற்காக இறைவனால் படைக்கப்பட்டிருக்கிறது என்றால், அது இவ்வுலகத்திலுள்ள அனைத்து உயிர்களையும் காப்பாற்றுவதற்காகத்தான். எப்படியென்றால், கடல்நீர் உப்பாக இருக்கும்போது அது நமக்கு உப்பைக் கொடுக்கிறது. அவ்வுப்பை சமையலுக்கும் சில வேதியியல் காரணங்களுக்கும் பயன்படுத்துகிறோம். அவ்வளவே.
ஆனால், அதே கடல்நீர் சூரிய வெப்பத்தால் ஆவியாகி, மேகமாகி, ஆகாயத்தின் உதவியோடு மழையாகப் பூமியின்மீது பெய்யும்போது, அனைத்து சீவராசிகளும் செழித்து வளருகின்றன. இந்த கடல்நீர் இல்லாவிட்டால் நமக்கு மழையை யார் கொடுப்பார்கள்? ஆகவே, கடல்நீர் இப்பிரபஞ்சத்தின் உயிர்களைக் காப்பாற்றுவதற்காகத் தான் படைக்கப்பட்டிருக்கிறது என்ற உறுதிப்பாட்டிற்கு வரவேண்டியிருக்கிறது.
அதைப்போலத்தான் நேத்திரத்தில் அமைந்திருக்கும் கண்ணீரும். கண்ணீரை நாம் சூரிய ஒளியினைக் கொண்டு கடல்நீரை ஆவியாக்குவதைப் போல, வலது திருவடியில் இருக்கும் கண்ணீர் என்ற உப்புநீரை, கண்மணிக்குள் இருக்கும் பிராண நீரை சுடராழித் தவத்தால் ஒளியைக் கொண்டு சூடாக்கி, கொதிக்க வைத்து, ஆவியாக்கி பிரணவக் குகைக்குள் இருக்கும் சுழிமுனை நாடியின் வழியே செலுத்தும்போது, அந்த ஆவியாக்கப்பட்ட பிராண நீர், அமுதக்காற்றாக மாறி, நம் உயிரை அடைந்து, அதற்குள் இருக்கும் சிவத்தை அடைந்து, அவனின் அருட்கலைகளை பிரகாசிக்கும்படி செய்து, அங்கே இருக்கும் சந்திரக் கலசத்தின் அமுதக்குடத்தை இளக்கி, உருக்கி, அமுதத்தை வெள்ளமாகப் பெருக்கி, பிரம்மரந்திரத்தின் வழியே வழிய வைத்து, சாதகனுக்கு சாவா மருந்தாக – இறவா நிலையான – பசி, தாகம், உறக்கம் அற்ற மரணமிலாப் பெருவாழ்வை வழங்கிவிடும். இதுதான் கடல் நீருக்கும் கண் நீருக்கும் உள்ள ஒற்றுமை. அதனால்தான் பிரமஞானிகள் நம் நேத்திரத்தை சிவத்தின் சடைப்பகுதி என்று சொல்லி சத்தியத்தை மறைத்து வைத்தார்கள்.
உணர்வும் அவனே உயிரும் அவனே
புணர்வும் அவனே புனலும் அவனே
இணரும் அவன்தன்னை எண்ணலும் ஆகான்
துணரின் மலர்க்கந்தம் உன்னி நின்றானே (தி.ம.3035)
மண்ணும்நீ விண்ணும்நீ மறிகடல்கள் ஏழும்நீ
எண்ணும்நீ எழுத்தும்நீ இசைந்த பண் எழுத்தும்நீ
கண்ணும்நீ மணியும்நீ கண்ணுள் ஆடும்பாவைநீ
நண்ணும் நீர்மை நின்றபாதம் நண்ணுமாறு அருளிடாய் (சிவவாக்கியார் – 8)
அப்பு அணி செஞ்சடை ஆதிபுராதனன்
முப்புரஞ் செற்றனன் என்பர்கள்
மூடர்கள் முப்புரமாவது மும்மல காரியம்
அப்புரம் எய்தமை யார் அறிவாரோ (தி.ம.343)
நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி
உடையாய் போற்றி உணர்வே போற்றி (110)
பிரமஞானத் தவம் என்ற பகீரதத் தவத்தை சாதகன் மேற்கொண்டு வரும்போது, ஞானம் பூத்துக் குலுங்கும் சமயம் வாய்க்கும். அப்போது திடீரென சாதகனின் சிரநடுவுள்ளாக இருக்கக் கூடிய அமுதக் கலசமானது பிரமஞானத் தவத்தின் ஞானாக்னியால் இளகி, உருகி வழிந்தோடி நதியைப் போல தொண்டைக்குள் இறங்க ஆரம்பிக்கும். இதைத்தான், “நதிசேர் செஞ்சடை நம்பா போற்றி” என்றார். செஞ்சடை என்பது சிவக்கலையின் நிறத்தைக் குறிக்கிறது மற்றும் சிவனின் நேத்திரங்களைக் குறிக்கிறது. சிவந்த சடை என்று பிரமஞானத் தவத்தால் அது சிவந்த நிறம் கொண்ட சிவனின் கண்கள்தான் என்பதை அனுபவத்தால் உணர்ந்து கொள்ளலாம். அது நமது சிரசிற்குள் நடுவே அமைந்துள்ளது. நதி என்பது அமுதம்.
சடை உள்ள இடம் நம் சிரசு. சிரசின் இடையில் சிவபெருமான் கங்கையை அணிந்திருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மைதான். ஏன் இந்த கங்கையை கழுத்திலோ மார்பிலோ வயிற்றிலோ மற்ற உடற்பாகங்களிலோ அணிந்திருக்கலாமே? ஏன் சிரசில் மட்டும் சிவம் தரித்திருக்கிறார்? இதுதான் நம்முன்னே உள்ள கேள்வி. அமுதம் இருக்கும் இடம் சிர நடுவுள்ளே இருக்கும் பிணியல் சுரப்பியாகிய அமுதக் கலசமாகும். சடை இருக்கும் தலையின் இடைப்பாகமான நடுவுள்ளாக அமுதத்தை பிரமஞானத் தவத்தால் உருக வைத்து நம்மால் உண்ண முடியும் என்பதைத்தான், “சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி” என்றார்.
கண்டுகொண்டோம் இரண்டும் தொடர்ந்தாங்கு ஒளி
பண்டுபண்டு ஓயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண்டாடும் அலர் வார்சடை அண்ணல்
நின்றுகண்டார்க்கு இருள் நீங்கி நின்றானே (தி.ம.1522)
மாயம் புணர்க்கும் வளர்ச்சடையான் அடி
தாயம் புணர்க்கும் சலநதி அமலனைக்
காயம் புணர்க்கும் கலவியுள் மாசத்தி
ஆயம் புணர்க்கும் அவ்வியோனியும் ஆமே (தி.ம.1249)
வெள்ளந்தாழ் விரிசடையாய் விடையாய் விண்ணோர்
பெருமானே எனக்கேட்டு வெட்ட நெஞ்சாய் (திருச்சதகம் – சுட்டறுத்தல்-1)
சிவபெருமானுக்குச் சொல்லப்படும் சடையும் விடையும் மிகப்பெரிய ரகசியங்களாகும். பிரமஞானத் தவத்தில் ஆழ்ந்து செல்வோர்களுக்கே இதன் உண்மைப் பொருள் விளக்கப்படுகிறது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் ஒரு தவ ஒழுக்கமாகும். சிவபெருமானின் சடைப் பகுதி திருவடிகளாகிய கண்களைக் குறிக்கிறது. அவர் வாகனம் எருதானது விடை என்றும் அது பரவிந்துவின் கலை என்றும் ஆதித் தமிழ்ச் சித்தர்களால் சொல்லப்பட்டுள்ளது. சிவன் சடையில் கங்கையை வைத்துள்ளான் என்பது, அவனின் கண்களில் கண்ணீராகிய கங்கையை வைத்துள்ளான் எனப் புரிகிறதல்லவா. சிவத்தின் வாகனம் பரவிந்துக் கலை என்பதால், விந்துவின் சூக்கும ஒளிநிலையில் அதாவது ஆவி நிலையில் ஒளியாக இருக்கும் விந்துவாகவே சிவம் இருக்கிறார் எனப் பொருளாகிறது. நீங்கள் பிரமஞானத் தவத்தைச் செய்யும்போது, கங்கையானது கண்களிலிருந்து தாரை தாரையாகப் பொங்கிக் கொண்டு உடம்பு முழுக்க நனைத்துக் கொண்டு ஓடும்.
சிவனொடு ஒக்கும்தெய்வம் தேடினும் இல்லை
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்துஅன்று பொன்னொளி மின்னும்
தவனச் சடைமுடித் தாமரை யானே. (தி.ம.5)
மலைமகளை ஒருபாகம் வைத்தலுமே மற்றொருத்தி
சலமுகத்தால் அவன்சடையிற் பாயுமது என்னேடீ
சலமுகத்தால் அவன்சடையிற் பாய்ந்திலளேல் தரணியெல்லாம்
பிலமுகத்தே புகப்பாய்ந்து பெருங்கேடாம் சாழலோ. (7)
இப்படியாக மணிவாசகப் பெருமான் திருவாசகத்தில் 156 இடங்களில் சடை என்ற வார்த்தையை நேத்திரம் என்ற பொருளிலேயே பாடிச் சென்றிருக்கிறார். இதை நாம் நன்றாக உள்வாங்கிக் கொண்டுவிட வேண்டும்.
சரி, இனி திருவருட்பா பாடலுக்குள் நுழையலாம் வாருங்கள்.
ஒளி விளங்கும் உன்னுடைய இரண்டு திருவடிகளை அடியவனாகிய யான் மெய்யுணர்வு ஆழமாக உண்டாகி உயிரில் அழுந்தும்படியாகப் பிடித்துக் கொண்டேன்; முற்காலத்தைப் போல யான் ஏமாற்றமுற்று அவற்றை விட மாட்டேன் காண்; வெறுப்புணர்வில்லாத பரமனாகிய நீர் இனி என்னிடமிருந்து உம்மை மறைத்துக் கொள்ள முடியாது; என்னைப் போல் இரக்கமின்றி உம்முடைய திருவடிகளைப் பற்றிக் கொண்ட அடியவர்கள் உமக்கு யாருமில்லை; என் பிடிக்குள் இசைந்து அகப்பட்டது போல் நீரும் பிறர் பிடித்துக் கொள்ள இசைந்ததில்லை; பொன் பெறுவாரைப் போல முயற்சி செய்கின்ற மெய்த்தவமுடையவர்களுக்கும் இதுபோல் நீ அகப்படுவது அரிதாகும்; பொய்ந்நெறியை உடையவனாகிய யான் செய்த தவம் வையத்திலும் வானத்திலும் பெரிதாகும்.
வள்ளற்பெருமான் பொய் நெறிகளைப் பின்பற்றி வந்ததாகவும், இருப்பினும் இறைவனின் திருவடிகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டதாகவும் அதனால் தான் பேரின்பம் அடைந்து வந்ததாகவும், அதற்காக அவர் செய்த தவம் வானகத்தினும் வையகத்தினும் பெரிதாகும் என்பதைத்தான், “பொய் தவனேன் செய்தவம் வான் வையகத்திற் பெரிது” என உரைக்கின்றார். பொய்தவன் என்றது மெய்ந்நெறியாகிய பிரமஞானத் தவத்தைச் செய்து வரும் மெய்யடியார்களைப் போல அத்துணைச் சிறப்புடையவனல்லன் எனத் தனது தாழ்மையைப் புலப்படுத்துகிறார். எளிய நெறியான பிரமஞானத் தவத்தில் ஆழ்ந்து வரும் பிரமஞானத் தவசிகளுக்கும் கிடைக்காத திருவடிப் பெரும்பேறு தமக்கு கிடைத்த அருமையை விளக்க வேண்டி, “வான் வையகத்திற் பெரிதே” என வியந்துரைக்கின்றார்.
இதனால், தமக்கு எய்திய திருவடிப் பேற்றை நினைந்து வியந்து வடலூர் வள்ளல் இறைவனைப் பாராட்டியவாறாம்.
எதுதருணம் அதுதெரியேன் என்னினும் எம்மானே
எல்லாஞ்செய் வல்லவனே என்தனி நாயகனே
இதுதருணம் தவறும்எனில் என்உயிர்போய் விடும் இவ்
எளியேன்மேல் கருணைபுரிந்து எழுந்தருளல் வேண்டும்
மதுதருண வாரிசமும் மலர்ந்துஅருள் உதயம்
வாய்த்தது சிற்சபை விளக்கம் வயங்குகின்றது உலகில்
விதுதருண அமுதளித்து என் எண்ணம்எலாம் முடிக்கும்
வேலைஇது காலைஎன விளம்பவும் வேண்டுவதோ. (3786)
உரை: எங்கள் தலைவனே! எல்லாம் செய்ய வல்ல பெருமானே; எனக்கு அமைந்த ஒப்பற்ற தலைவனே; நீ எனக்குள் எழுந்தருளி ஞானானந்தம் தருதற்குரிய சமயம் யாதோ அதனை யான் அறிகிலேன்; ஆயினும் இச்சமயம் நினது திருவருள் இன்பம் எய்தத் தவறுமாயின் என் உயிர் நீங்கி விடும்; ஆதலால் எளியவனாகிய என் மேல் அருள் கூர்ந்து என் முன் எழுந்தருளுதல் வேண்டும்; தேன் பொருந்திய புதிது மலரும் தாமரையும் மலர்ந்து விட்டது; திருவருள் தோன்றுதற்குரிய காலமும் வாய்த்துளது; ஞானச் சபையினுடைய ஒளியும் உலகில் விளக்க முறுகிறது; அமுத சந்திரனிடத்து ஒழுகும் யோக ஞானவமுதத்தைத் தந்து என் எண்ணத்தை முடித்து வைக்கும் காலம் இதுவாகும் என்பதை நான் விளம்ப வேண்டுமோ? வேண்டாவன்றோ!
எம்மான் – எம்முடைய பெரிய தலைவன்; எம்மை யுடையவன் என்றலும் உண்டு. வரம்பில் ஆற்றலுடையவன் எனச் சிவபெருமானை ஆகமங்கள் பாராட்டுதலால், “எல்லாம் செய் வல்லவனே” என்றும், ஒப்பற்ற தலைவன் என்பது பற்றி, “என் தனி நாயகனே” என்றும் போற்றுகின்றார்.
சிவபெருமானுடைய திருவருள் எய்தும் காலம் இதுவென முன்னுணர்ந்து கொள்ளும் மதிமை தமக்கில்லை என்பதைத் தெரிவித்தற்கு, “எது தருணம் அது தெரியேன்” என்றும், என்றாலும் திருவருள் ஞானப் பேற்றிற்குத் தாம் சமைந்திருக்கும் தனி நிலையைப் புலப்படுத்துதற்கு, “இது தருணம் தவறும் எனில் என் உயிர் போய்விடும்” என்றும் இயம்புகின்றார்.
வேறு வகையால் இறைவன் திருவருளைப் பெறுதல் முடியாதாகையால் “எளியேன் மேல் கருணை புரிந்து எழுந்தருளல் வேண்டும்” என இறைஞ்சுகின்றார். திருவருள் ஞானம் தமக்கு எய்துதற்கேற்ற சூழ்நிலை இப்பொழுது அமைந்துளது என்பாராய். “மது தருண வாரிசம் மலர்ந்தது அருள் உதயம் வாய்த்தது சிற்சபை விளக்கம் உலகில் வயங்குகின்றது” என்று கூறுகின்றார்.
தருண வாரிசம் – அப்பொழுது மலரும் தாமரை; புதிது மலரும் தாமரை எனினும் அமையும். மது – தேன். மதுவை ம்+அது எனப் பிரிக்கலாம் அல்லவா. எது அது என்றால், ம் என்ற மகர மெய்தான் மதுவாகும். ம் ஒலி நம் உயிரின் ஜீவநாதமாகும். சதா இந்த மகர மெய்யை சிந்தித்துக் கொண்டும், உணர்வோடு புணர்ந்து கொண்டும் இருந்தால், ம் என்ற மகர மெய் நமக்கு அமுதத் தேனைக் கொடுக்க ஆரம்பித்து விடும்.
அருள் உதயம் – திருவருளைப் பெறுதற்குரிய பக்குவத்தை சாதகன் எப்போது பெறுவானோ, அப்போது அவனின் உயிரொளிக்கும் இருக்கும் இறையொளியிலிருந்து அருட்கலைகள் கங்கையைப் போல பிரவாகம் எடுத்து ஓடி வர ஆரம்பிக்கும். இது எல்லாம் சுத்த ஞான சபையின்கண்ணே நடக்கும் ஞான நிகழ்வுகளாகும். இதைத்தான், உலகத்தார்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காக, “சிற்சபை விளக்கம் உலகில் வயங்குகின்றது” என்றார் வள்ளற்பெருமான்.
அருள் ஞானத்தால் ஞான சபையின்கண் ஒளிர்கின்ற கூத்தப் பெருமானை யோக நெறியில் துவாத சாந்தத்தில் தரிசிக்கின்ற பொழுது அமுத சந்திரன் தோன்றி ஞான வமுதத்தைச் சொரியும் என யோக நூலார் கூறுதலால், அதனை எடுத்தோதி, அந்தச் சந்திராமுதத்தை உண்டு தேக்கறியும் பேற்றினை நல்கி மகிழ்விக்கும் காலம் இதுவேயாம் என உரைப்பாராய், “விது தருண அமுதளித்து என் எண்ணமெலாம் முடிக்கும் வேலை இதுகாலை” என்றும், இது தேவரீர் இனிதறிந்த செய்தியாதலின் யான் மீள எடுத்துரைத்தல் வேண்டாவாம் என்பாராய், “இதுகாலை என விளம்பவும் வேண்டுவதோ” என்றும் இயம்புகின்றார்.
இதனால், யோக நெறியில் துவாத சாந்தத்தில் சந்திராமுதத்தைப் பெற்றுத் திருவருள் காட்சி பெறும் திறத்தைப் பற்றி கூறுகிறார்.