ஜீவன்முத்தீ தாரணையின் ஞானப் பூரண ஒளி வித்தை

இடம்  : பிரமஞானப் பொற்சபை பீடம், சேலம்

நாட்கள் : 02, 03, 04.05.2025 – 3 நாள் ஞான முகாம்

நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை

தகுதி  : பிரமஞானத் தீக்ஷையைப் பெற்ற மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். புதியதாக வருபவர்கள் இந்த முகாம் நடக்கும் தேதிக்கு முன்பாக தீக்ஷை பெற்றுக் கொள்ள வேண்டும். அதன்பின் முகாமில் கலந்து கொள்ளலாம்.

பிரமஞானப் பொற்சபை குருகுலத்தின் முக்கியமான மைல்கல்தான் இந்த பிரமவித்தை கல்வி.  கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு சதுரகிரி மலையில் பௌர்ணமியன்று அங்கு ஓடிக்கொண்டிருந்த அருவியில் வைத்து எமக்கு எம் சற்குரு போதித்த இந்த பிரபஞ்சத்தை ஒளியாகவும் ஒலியாகவும் நடத்திக் கொண்டிருக்கும் எம் உயிரில் வாழும் சிவத்தை அந்த பேருயிரை விழிப்பிக்க வைத்துக் காட்டியருளிய நமது ஆதித் தமிழ்ச் சித்தர்களின் அற்புதமான ஞானப் பொக்கிசம்தான் இந்த ஜீவன்முத்தீ தாரணை எனும் பிரமவித்தை கல்வி.

ஜீவன்முத்தீ தாரணையின் பரிபூரண வித்தை இது. இக்கலையை ஞானப்பூரண ஒளி வித்தை என்கிறார்கள் பிரமஞானிகளும் சித்தர் பெருமக்களும்.  இதுவரை கண்டிராத அதி அற்புதமான இரகசிய மந்திர நாதங்களோடு உங்கள் உயிரை – உயிர் ஒளியை இணைத்து பேரின்பப் பரவசத்தை அடையப் போகிறீர்கள். உலக ஆன்மாக்கள் பரிபூரண பிரமஞானத்தை அடைந்து உயிரோடு, உயிரொளியோடு இணைந்து இறையொளியோடு கலந்து இன்புற்று ஒளியாகப் பிரகாசித்திடவே இந்த ஆதித் தமிழ்ச் சித்தர்களின் பிரமஞானப் பூரண ஒளி வித்தையை கற்றுக் கொடுக்க முன்வந்துள்ளோம்.

அமுதக் கல்லின் ரகசியம்

நம் சிரநடுவுள்ளே அமுதக்குடமானது திரவ நிலையில் இல்லாமல் ஒரு கல்லைப் போல இறுகிப்போய் கிடக்கிறது.  இதை ஞானிகளின் கல் என்றும் ஆங்கிலத்தில் Philosopher stone என்றும் சொல்வார்கள். இந்த அமுதக் கல்லை கனியாக முதலில் மாற்றும் நுட்பத்தைத் தெரிந்து கொண்டாக வேண்டும். அதுதான் நம் வாழ்வை நீட்டித்துத் தரும் (Elixir of life). சரி, கல்லை எப்படி கனியாக்குவது? அதை இந்த ஞானமுகாமில் தெரிந்து கொள்ளலாம், வாருங்கள்.

இந்த கல் கனியாக மாறும்போது, நமது தேகத்தில் ஓரிடத்தில் விசம் (விடம்) ஒன்று உருவாகி வளர ஆரம்பிக்கும். எது அந்த விசம்? அந்த விசத்தை இல்லாமல் செய்வது எப்படி என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா?

நமது தேகத்தில் சத்தும் சித்தும் ஆனந்தமும் தனித்தனியாகத்தான் பிளவுபட்டு காணப்படுகின்றன.  இம்மூன்றையும் ஒன்றிணைத்தால் தானே சச்சினாந்தம் கிடைத்து, இறைவனைக் காண முடியும். பிளவுபட்ட நிலையை எவ்வாறு ஒன்றிணைப்பது? நீங்கள் எப்போது உங்களுக்கு உள்ளே இருக்கும் இறைவனைக் கண்டு உணர்வது? அதற்கான ஞான வழிகளைத் தெரிந்து கொள்ளாது இருக்கலாமா?

உண்மையான ஞானப்பால் எங்கே இருக்கிறது? அதை ஏன் அக அருளமுதம் என்கிறார்கள் சித்தர்களும் ஞானிகளும். சிரசின் நடுப்புள்ளியில்தான் இந்த ஞானப்பால் குடமாக இருப்பதாகவும், இந்தக் குடத்தை உருக வைத்தால், அதற்குள் இருக்கும் அருட்பாலை – ஞானப்பாலை நம்மால் உண்ண முடியும். அமுதப்பாலை உண்ணாமல் ஜீவன்முத்தீ நிலை கிட்டாது.  அப்பாலை எப்படி உண்பது? அதற்கான வழிகள் என்னென்ன என்பதை நாம் தெரிந்து அறிந்து உணர்ந்து உண்ண வேண்டாமா?

இந்த மூன்று நாள் ஞானப்பூரண ஒளித்தாரணை முகாமில் நீங்கள் உங்களை முதலில் யார் என்பதை தெரிந்து கொள்வீர்கள். உங்கள் பிறப்பின் இரகசியத்தைத் தெரிந்து கொள்வீர்கள். தன்னை அறிவதையும் தனக்குள் இருக்கும் உயிரை, இறைவனைக் காணவும் வழிகளை கண்டடைவீர்கள். நாம் இறை நிலை அடைவதற்கு எவையெல்லாம் தடைக்கற்களாக இருக்கின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அவற்றை களைந்து இறைப்பாதையில் நீங்கள் பயணிக்க ஆரம்பித்து விடுவீர்கள். உங்கள் உயிருக்குத் தேவையான பிரபஞ்ச உணவை 24 மணி நேரமும் கொடுப்பது எப்படி என்பதைத் தெரிந்து கொள்வீர்கள்.

உங்கள் வாழ்நாளில் இதுநாள்வரை எதை நோக்கி இந்த ஆன்மீகத்தில் பயணம் செய்கிறோம் என்பதை அறியாமல் ஏதோ குருட்டுத்தனமான நம்பிக்கைகளால் உங்களை இழந்து போயிருப்பது அதிகமாக இருக்கிறது.  இப்போது அவையெல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிந்து, உங்கள் உயிரை ஜீவன்முத்தீ பக்கம் கொண்டு செல்ல போகிறீர்கள்.  அதற்கு உங்களுக்கு வழிகாட்டி, உயிர்காட்டி, இறைகாட்டி என்று ஒருவர் தேவையல்லவா.  நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடியிலும் யாம் ஒளிப்பிரகாசமாய் இருப்போம். அதனால் நீங்கள் தாராளமாக இந்த ஜீவன்முத்தீ பாதையில் எவ்வித சந்தேகமும் கலக்கமும் பயமுமின்றி ஆனந்தமாக நடை பயிலலாம். உங்களுக்கு முன்னே யாம் ஒளியாகச் சென்று கொண்டிருப்போம். இந்த ஒளிப்பாதையை நீங்கள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டீர்கள் என்றால், நீங்கள் அடையும் இலக்கான ஜீவன்முத்தீ வெகுதொலைவில் இல்லை ; உங்களுக்கு மிக அருகாமையிலேயே இருப்பதை உணர்ந்து மகிழ்ச்சி கொள்வீர்கள். எம் விழிகள் உங்கள் வழியாக இனி இருக்கும்.

இந்த ஜீவன்முத்தீ நிலையில் நீங்கள் வெற்றி கொள்ளும்போது, அங்கே உங்கள் உயிரானது ஒளிப்பிழம்பில் சொல்லொணா ஆனந்தக் கூத்தாடுவதைக் கண்டு விண்டு பேரானந்தம் கொள்ளப் போவது உறுதி. தாயின் கருவில் பிறந்த நீங்கள், இனி இறைவனின் கருவில் புதிதாகப் பிறப்பெடுப்பீர்கள். இறைவன் கருவே, ஜீவன்முத்தீக்கான ஞான விதை. இறைவனின் கருவில் நுழைந்தோர், மீண்டும் பிரபஞ்சத்தில் பிறப்பதில்லை. இது சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், தேவர்கள், மஹரிஷிகள் மற்றும் பிரமஞானிகளின் வாக்காகும்.

நீங்கள் ஜீவன்முத்தீ நிலையைப் பெற்று, என்றும் பிறவா, இறவா நெறியாம் மருவா நெறியைப் பெற்று என்றும் அருளமுதத்தை உண்டு ஞான ஒளி தேகத்தைப் பெற்றிட இந்த ஞானப்பூரண ஒளித்தாரணை முகாம் உங்களுக்கு மிகப்பெரிய ஊன்றுகோலாகவும் ஒளிவிளக்காகவும் வழிகாட்டியாகவும் சத்திய நெறியாகவும் உங்கள் உயிரோடு பேச வைத்துவிடும்.

ஆகவே, உங்கள் அனைவரையும் என்றும் ஜீவன் முத்தீ நிலை பெற்றிட கிடைத்தற்கரிய இந்த ஜீவன்முத்தீ ஞானப்பூரண ஒளித்தாரணை என்ற பிரம ஞானவொளி வித்தையைக் கற்றுத் தரும் ஞானப்பூரண முகாமிற்கு முழு அன்போடும் ஆர்வத்தோடும் உண்மைத் தன்மையோடும் ஞான வைராக்கியத்தோடும் வந்திணையுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

இது ஒரு பிரமஞான உயர்நிலை வகுப்பாகும். உச்ச வகுப்பாகவும் இது செயல்படும்.

இம்முகாமை வெற்றியோடு முடித்தவர்கள் ஜீவன்முத்தர்களாகவே கருதப்படுவார்கள்.  அவர்களை சித்தர்களும் நம் குருகுல ஆதிக் குருக்களும் ஆசிர்வதித்து, உங்களை ஜீவன்முத்தர்களாக்குவார்கள்.  அவர்களின் உத்திரவுப்படியே, இந்த ஞான முகாமை நடத்த முன் வந்துள்ளோம்.

நன்கொடை : ரூ.10,000/- (3 நாட்களுக்கு)

முகாம் நடக்கும் மூன்று நாட்களுக்கும் மூன்று வேளை உணவு மற்றும் காலை, மாலை தேநீர் உட்பட வழங்கப்படும். குருகுலத்தில் இலவசமாக தங்கிக் கொள்ளலாம். தங்குமிடத்திற்கு கட்டணம் பெறப்படவில்லை.

நன்கொடை கல்விக்கும் உணவுக்கும் மட்டும்தான். தங்குமிடத்திற்கல்ல.  நேரில் வந்து நன்கொடையை வழங்கிக் கொள்ளவும்.  ஆன்லைனில் கூடாது.

புதிதாக வருகின்ற மாணவர்கள் முதல்நிலை தீக்ஷை பெற நன்கொடை ரூ.5000/- ஐயும் சேர்த்து ரூ.15,000/- கட்ட வேண்டும்.  ஆனால், அவர்களுக்காக ரூ.3000/-ஐ தள்ளுபடி செய்கிறோம்.  புது மாணவர்கள் தீக்ஷைக்கும் ஞானப்பூரண முகாமிற்கும் சேர்த்து ரூ.12,000/- கட்டினால் போதுமானது.  இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

வரும் மாணவர்கள் தலையணையும் போர்வையும் எடுத்துக் கொண்டு வரவும். குழந்தைகளை அழைத்துக் கொண்டு வரவேண்டாமென்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம். வகுப்பு நடக்கும்போதும், தவம் செய்யும்போதும் உங்களுக்கு ரொம்ப தடையாக அது இருந்துவிடக்கூடும். மற்றவர்களுக்கும் அது தொந்திரவாக இருந்துவிடக்கூடாது.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

திருச்சிற்றம்பலம் !!